WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Wednesday 14 August 2013

ஆதிசங்கரர் அருளிய ஸௌந்தரிய லஹரி 71 To 80



ஸௌந்தரிய லஹரி
சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது.
71. தேவதைகள் (யக்ஷிணீ) வசியமாக
பீஜம் ஓம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் க்லீம் ஹ்ரீம்
நகாநா-முத்யோதைர் நவநலிந-ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதம் உமே
கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீ சரண-தல-லாக்ஷா-ரஸ-சணம்
கையின் வர்ணனை-திருமகள் அருள்
திருமகள் தன் சீறடியால் துவண்டும் அதில் செம்பஞ்சால் செங்கேழ் பெற்றும்
மருமுளரி எழில் படைத்தது இதுவோ நம் இயற்கை எதிர் அலர்வது என்றே
இருகரமும் நகைத்த நகை ஒளியை உனது எழிலுகிர் என்றிறைஞ்சி நாளும்
அருமறைகள் வழுத்துகின்றது அதிசயமோ பேதைமையோ அன்போ அம்மே.
பொருள்: பார்வதி தாயே! சிறந்த ஒளி சிந்தும் உன் கை நகங்களில் அன்றலர்ந்த தாமரையின் சிவப்பையும் மிஞ்சும் பிரகாசம் மின்னுகிறது. அத்தகைய அழகிய உன் கர ங்களை நான் எப்படி வர்ணிப்பேன்  சொல். செந்தாமரை மலரில் உறைகின்ற மஹாலக்ஷ்மியின் உள்ளங்காலில் பூசப்பட்ட மருதோன்றியினாலல்லவா அவ்வளவு ஒளி  வந்துள்ளது. அந்தச் செயற்கையொளியும் பதினாறில் ஒரு பங்குதான் உன் கை நகங்களின் அழகுக்கு ஈடாக முடியும் எனத் தோன்றுகிறது.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 12,000 தடவை ஆலமரத்தடியில் உட்கார்ந்து ஜபித்து வந் தால், யக்ஷிணி முதலிய தேவதைகள் வசியமாவார்கள்
72. யாத்திரையில் பயம் நீங்க பீஜம் ஓம் ஸமம் தேவி க்லீம் ஹ்ரீம்
ஸமம் தேவி ஸ்கந்த-த்விபவதந-பீதம் ஸ்தநயுகம்
தவேதம் : கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்நுத-முகம்
யதாலோக்யாஸங்காகுலித-ஹ்ருதயோ ஹாஸஜநக:
ஸ்வகும்பௌ ஹேரம்ப: பரிம்ருஸதி ஹஸ்தேந ஜடிதி
நகில்கள் அமைப்பு-இரவில் பயமின்மை
நித்தரொரு பக்கர் மயில் நிற்களிறு உன் வட்டமுலை நிற்கும் எழிலில் தனது சீர் மத்தக மெனத்தனில் அயிர்த்து ஒரு கரத்தை முடி வைத்து உறவுறத்தடவுமால் முத்தமுலை செப்புவது என்களிறு பின் குமரன் முற்புதல்வர் துய்த்த அமுதால் அத்தலைமை பெற்றனர் அதில் திவலை கிட்டினும் என் அற்ப உயிர் முத்தி பெறுமே.
பொருள்: அம்பிகையே! பால் சுரக்கும் காம்புகளுடன் கூடியதும்; கணபதி, சுப்ரமணியன் ஆகிய உன் இரு குழந்தைகளாலும் ஒரே நேரத்தில் பால் பருகக்கூடியனவும் ஆன  உன் தனங்கள் இரண்டு எங்கள் துன்பங்களையெல்லாம் அகற்றட்டும்! யானைத் தலையரான கணபதி, உன் தனங்களைப் பார்த்துவிட்டு, சந்தேகப்பட்டு, கலங்கிய  உள்ளத்துடன் தன் தலையிலுள்ள இரு குடங்களும் இருக்கின்றனவா என்று தடவிப் பார்த்துக் கொள்கிறார். (யானையின் தலையில் இருபகுதியாக, மேடான அமைப்பில்  காணப்படுவது கும்பஸ்தலம் எனப்படும்.)
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், யாத்திரையில் பேய், பிசாசுசத்ரு, சிறைவாசம் போன்ற எல்லாவிதமான பயங்களும் நீங்கும்
73. பால் பெருக, க்ஷீரஸம்ருத்தி- பீஜம்  ஓம் ஹாம் ஹரீம்
அமூ தே ஷோஜா-வம்ருதரஸ-மாணிக்ய-குதுபௌ
ஸந்தேஹஸ்பந்தோ நகபதி-பதாகே மநஸி :
பிபந்தௌ தௌ யஸ்மா-தவதித-வதூஸங்க ரஸிகௌ
குமாராவத்யாபி த்விரதவதந-க்ரௌஞ்ச-தலநௌ
நகில்கள் கலசங்கள்-ஜீவன் முக்தி
முக்கண் இறைவாக்கு மயல்முற்ற எழில் முற்றும் முலை முட்டிய சுரப்பொழுகு பால் மக்களிருவர்க்கு அருள அக்களிறும் இக்குகனும் மட்டிளமை முற்று கிலரால் அக்கடலுதித்த அமுதத்தனை எடுத்து அதில் அடைத்திருகண் முத்திரையின் வாழ் செக்கர் மணி மெய்க்கலசம் அத்தனை உன் வட்ட முலை செப்பல மலைப்புதல்வியே.
பொருள்: மலையரசனின் மகளான குலக்கொடியே! உன்னுடைய இரு தனங்களும் அமிருதம் நிரம்பிய மாணிக்கக்குடங்கள் என்பதில் எங்கள் மனத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஏனெனில் அவற்றிலிருந்து பாலைப்பருகும் காரணத்தால் தான் யானை முகத்தோனான கணபதியும், அசுரனை வதைத்த சுப்ரமண்யனும் பெண்களின்  சங்கமம் என்பதையே இன்னும் அறியாத குழந்தைகளாகவே இருக்கிறார்கள் போலும்!
ஜபமுறையும் பலனும்
8 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து, ஜலத்தில் ஒரு வட்டம் வரைந்து, அதன்  நடுவே காம் என்று எழுதி அந்த ஜலத்தை அருந்தினால், தாய்ப்பாலில்லாதவருக்குப் பாலுண்டாகும், பசுக்களுக்கும் பால் அபிவிருத்தியாகும்
74. புகழ் உண்டாக பீஜம் ஓம் ஐம் க்லீம் சௌ :
வஹத்யம்ப ஸ்தம்பேரம தநுஜ-கும்பப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தாமணிபி-ரமலாம் ஹாரலதிகாம்
குசாபோகோ பிம்பாதர-ருசிபி-ரந்த: ஸபலிதாம்
ப்ரதாப-வ்யாமிஸ்ராம் புரதமயிது: கீர்த்தி மிவதே
 முத்துமாலை-நற்கீர்த்தி (தமிழ்)
கொற்ற வாரண முகமகன் பொரு குஞ்சரானன நிருதனார்
இற்ற கோடுதிர் ஆரமாலிகை இதழ் மணிப்ரபை தழையவே
பெற்ற பாக பினாக பாணி ப்ரதாபமோடு அணை புகழெனா
உற்ற தாயினும் உனது பொற்றனம் உரை படா நிறை செல்வியே
பொருள்: தாயே! உன்னுடைய மார்பகத்தின் மத்தியப் பகுதி கஜாசுரனின் கும்பஸ்தலத்திலிருந்து தோன்றிய சிறந்த முத்துக்களால் கோர்க்கப்பட்ட முத்து மாலையைத் தா ங்கி நிற்கிறது. நிர்மலமான அந்த முத்து மாலையானது கோவைப்பழத்தைப் போல சிவந்த உன் உதட்டின் ஒளியால், உட்புறம் விந்தையான வண்ணங்களை உடைய தாயும், முப்புரத்தை எரித்த சிவபிரானின் பராக்கிரமத்தோடு கலந்து இந்த மாலையாக வந்ததோ என எண்ணும்படியும் அழகுடன் தோற்றமளிக்கின்றது.
ஜபமுறையும் பலனும்
3 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 108 தடவை தெய்வ சந்நிதியில் ஜபித்து வந்தால், நல்ல புகழ்  உண்டாகும்
75. கவிதா சக்தி உண்டாக, ஞாபக சக்கி  வளர
பீஜம் ஓம் (ஸம்) ஐம் க்லீம் சௌ : சௌ க்லீம் ஐம்
தவ ஸ்தந்யம் மந்யே தரணிதரகந்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வத மிவ
தயாவத்யா தத்தம் த்ரவிடஸிஸு-ராஸ்வாத்ய தவ யத்
கவீநாம் ப்ரௌடாநா-மஜநி கமநீய: கவயிதா
நகில்களின் வர்ணனை-கவிபாடும் திறமை (தமிழ்)
தருண மங்கலை உனது சிந்தை தழைந்த பாலமுது ஊறினால்
அருண கொங்கையில் அது பெருங்கவி அலை நெடுங் கடலாகுமோ
வருண நன்குறு கவுணியன் சிறு மதலை அம்புயல் பருகியே
பொருள் நயம்பெரு கவிதையென்றொரு புனித மாரி பொழிந்ததே.
பொருள்: மலையரசனான இமவானின் புதல்வியே! உன் ஸ்தனங்களிலிருந்து பெருகும் பால், இதயத்தில் தோன்றிய பாற்கடல் போலவும், வாக்குத் தேவதையான  சரஸ்வதியின் அருளுருவமே பொங்கி வந்தாற் போலவும் எனக்குத் தோன்றுகிறது. உன் பாலை அருந்தித் திராவிட நாட்டில் பிறந்த (சங்கரன்) என்னும் இந்தச் சிசு பெரிய  வித்வான்களுக்கிடையே எல்லோரையும் கவரக்கூடிய கவியாக ஆகிவிட்டானல்லவா!
ஜபமுறையும் பலனும்
30 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 12,000 தடவை ஜபித்து வந்தால், கவிதைகள் இயற்றும்  அபாரசக்தி உண்டாகும்
76. சர்வ வல்லமை பெற, காரிய ஸித்தி- பீஜம் ஓம் ஐம் க்லீம்
ஹரக்ரோத-ஜ்வாலாவலிபி-ரவலீடேந வபுஷா
கபீரே தே நாபீ-ஸரஸி க்ருதஸங்கோ மநஸிஜ:
ஸமுத்தஸ்தௌ தஸ்மா-தசலதநயே தூமலதிகா
ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவலிரிதி:
நாபியின் அழகு-பரம வைராக்கியம்
மூலமே நின் மகிழ் நர் கோபமுது கனல் பொறாது வேள்
கோல நாபி மடுவினில குளிப்ப வந்த வெம்மையால்
மேல வாவு தூம ரேகை வேரெழுங் கொழுந்தையோ
நீல ரோம ரேகை என்று நீணிலங்கு குறிப்பதே.
பொருள்: மலையரசனின் புதல்வியே! பரமசிவனின் கோபத்தால் தோன்றிய அக்கினி ஜ்வாலையால் சூழப்பெற்ற மன்மதன், அந்தத் தாபம் தாங்க இயலாதவனாய்உன்னுடைய தொப்புளாகிய தடாகத்தில் குதித்து மூழ்கி விட்டான். அவன் நெருப்புடன் நீரில் புகுந்ததால் மெல்லிய புகை மேலே கிளம்புகிறது. கொடி போன்று மெல்லிய தான அந்தப் புகைக் கோடு தான் உன் நாபியைச் சுற்றிலுமுள்ள ரோமங்களென மக்கள் நினைக்கிறார்கள்.
ஜபமுறையும் பலனும்
10 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், எடுத்த காரியம் எதுவாக ருந்தாலும் வெற்றி ஏற்படும்
77. ஸர்வ ஜன ராஜ்ய வச்யம் வெற்றி பெற பீஜம் ஓம் ஐம் க்லீம்
யதேதத் காலிந்தீ-தநுதர-தரங்காக்ருதி ஸிவே
க்ருஸே மத்யே கிஞ்சிஜ்ஜநநி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்தா-தந்யோந்யம் குசகலஸயோ-ரந்தரகதம்
தநூபூதம் வ்யோம ப்ரவிஸதிவ நாபிம் குஹரிணீம்
ரோம ரேகை-மக்கள் வசியம் (தமிழ்)
முளிரி மாது உன் முலையினோடு முலைநெருக்க இடையில் வான்
வெளியின் நீல மோடியுந்தி வியன் முழைக்குள் நுழையவே
தெளியும் நீரில் யமுனை நீவு சிறு தரங்கம் அனையபேர்
ஒளியின் ஞாலம் மருளும் ஈது ரோம ரேகை என்னவே.
பொருள்: அம்பிகையே! மிகவும் குறுகியதான உன் இடுப்பின்மேல், கருப்பு வர்ணமுள்ள, யமனா நதியின் சிறிய அலை போன்ற ஒரு ரோம வரிசை சாமுத்ரிக  லட்சணமறிந்த வித்வான்களுக்கு மட்டுமே காணப்படுகிறது. இது ஸ்தனங்களுக்கிடையே உள்ள குறுகிய ஆகாசந்தானோ? அந்தக் குறுகிய ஆகாசம், ஸ்தனங்களின்  உரைசலால், தான் அழிந்து விடுவோமென்று பயந்து கீழே நாபி கூபத்தில் ஒளிந்து கொள்ளச் செல்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஜபமுறையும் பலனும்
15 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 2000 தடவை ஜபித்து வந்தால், ஸகல காரிய ஜெயம்  உண்டாகும் (செந்தாமரைப் பூவைச் சுட்டுச் சாம்பலாக்கிப் பசு நெய்யில் குழைத்து, அதில் கீழ்நோக்கிய ஒரு முக்கோணத்தை எழுதி அதன் நடுவே க்லீம் என்று எழுதி ஜபம் செய்தபின் அதை நெற்றியில் தரிக்கவும்.)
78. ராஜாங்க பதவியில் ஜயம் உண்டாக பீஜம் ஓம் ஐம் ஸ்ரீம் ஹ்ரீம்
ஸ்திரோ-கங்காவர்த்த: ஸ்தந-முகுல-ரோமாவலி-லதா
கலாவாலம் குண்டம் குஸுமஸர-தேஜோ-ஹுதபுஜ:
ரதேர்-லீலாகாரம் கிமபி தவ நாபிர்-கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தேர்-கிரிஸ-நயநாநாம் விஜயதே
உந்தி வர்ணனை-உலக வசியம்
தூய கங்கை நிலை படைத்த சுழி தனத்து முகையினால்
ஆய துங்க ரோம வல்லி ஆல வாலம் விரக வேள்
தீயரும்பும் ஓமகுண்டம் இறைவர் செங்கண் இடைவிடா
மேய கஞ்ச மடுவினுந்தி வேறுரைத் தென் விமலையே.
பொருள்: பர்வதராஜனின் புதல்வியாகிய தாயே! உன்னுடைய நாபி, அசைவில்லாத கங்கையின் சுழல் போலவும், ஸ்தனங்களாகிய தாமரை மொட்டுக்களைத் தாங்கும் ரோமாவளியாகிய தாமரைத் தண்டுகளுக்குத் தண்ணீர் பாயும் பாத்தியாகவும், மன்மதனின் ஒளியாகிய அக்னிக்கு ஹோம குண்டமாகவும், அவன் பத்தினியான ரதிதேவியின் விளையாட்டு அறையாகவும், பரமசிவனின் கண்களின் தவப்பயனுக்குக் குகையின் துவாரமாகவும் விளங்குகிறது.
ஜபமுறையும் பலனும்
15 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 108 தடவை ஜபித்து வந்தால், தடைப்பட்டுள்ள அரசாங்க  அலுவல்களில் ஜயமுண்டாகும் (வாசனைச் சந்தனத்தில் முக்கோணம் எழுதி நடுவில் ஹ்ரீம் என்று எழுதி, ஜபம் ஆனபின் நெற்றியில் தரிக்கவும்).

79. மந்திரங்கள் சித்தி  ஸர்வஜனவச்சிய சித்தி ஜாலவித்யா பாரங்கத்துவம் பெற  பீஜம் ஓம் க்லீம் ஸர்வஜன மோஹனம்
நிஸர்க-க்ஷ்ணஸ்ய ஸ்தந-தட-பரேண க்லமஜுஷோ
நமந்மூர்த்தேர்-நாரீதிலக ஸநகைஸ் த்ருட்யத இவ
சிரம் தே மத்யஸ்ய த்ருடித-தடிநீ-தீர-தருணா
ஸமாவஸ்தா-ஸ்தேம்நோ பவது குஸலம் ஸைலதநயே
இடையழகு-இந்திர ஜால வித்தை
தரை மடந்தை பரவு மங்கை தனதடம் பொறாது நின்
திருமருங்குலற வளைந்து சிறுகி மூவி ரேகையாய்
வரை பிளந் தொரிடி கரைக்குள் வாழ் மரத்தோ டொத்ததால்
உரை கடந்து விடுமுன் மற்றொருறுதி தேட வெண்ணுமே.
பொருள்: பெண் குலத்தின் திலகமாகிய மலையரசனின் புதல்வியே! உன் இடை இயல்பிலேயே மெல்லிய தோற்றமுடையது. ஸ்தனங்களின் பாரத்தைத் தாங்க முடியாமல்  வருந்தி வளைந்த வடிவத்தைப் பெற்றுள்ளது. எனவே ஒடிந்து போவதைப் போல இருக்கும் இடையானது, வெள்ளப் பெருக்கால் உடைந்துபோன நதியின் கரையில் ருக்கும் மரத்துக்கு இணையான தோற்றத்தைக் கொண்டுள்ளது. உன் அத்தகைய இடைக்குப் பல்லாண்டு காலத்துக்கு ஷேமம் உண்டாகட்டும்!
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், இந்திர ஜால வித்தையில்  வல்லமையும், ஸகல ஜன மோஹனமும் உண்டாகும்
80. ஜால வித்தையில் வல்லமை பெற
பீஜம் ஓம் ஸம் லம்-ரம் ஸ்ரீம்-ஹ்ரீம் -க்லீம் யம்-ஐம் சௌ:
குசௌ ஸத்ய: ஸ்வித்யத்-தடகடித-கூர்ப்பாஸ-பிதுரௌ
கஷந்தௌ தோர்-மூலே கநக-கலஸாபௌ கலயதா
தவ த்ராதும் பங்காதலமிதி வலக்நம் தநுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீ-வல்லிபிரிவ
இடையின் வர்ணனை-அழகு பெற
வம்பைத் தொலைத்துதறி இறுகிக் கனத்திளகி வருபுடை நெருக்கி வளர்மாக்
கும்பக் கடாக் களிற்றினையனைய உனது முலை கொடிது கொடிதென்று வெருவா அம் பொற்றினக் கமல இறை பொறாதிடையென அழுத்து பூணென முனிவரோடு உம்பர்க்கும்உள மருள ஒளிகெழும்இரேகைமூன்று உலகமோ தெளிவது உமையே.
பொருள்: தேவியாகிய தாயே! சகல உலகங்களுக்கும் இறைவனாகிய ஈசனை நினைத்து, அந்தப் பூரிப்பின் காரணமாக, தங்கக் குடங்களைப் போன்ற உன் தனங்கள்ரவிக்கையைக் கிழித்துக் கொண்டு அக்குள்களில் உராய்கின்ற அளவில் வியர்த்து விளங்குகின்றதைக் கண்ட மன்மதன், தன்னால் மேலும் தூண்டப்பட்டு தனபாரங்களால்  இடைஒடிந்து விடாதிருக்கும் பொருட்டு த்ரிவளி என்னும் மும்மடிப்புக் கொண்ட வள்ளிக் கொடிகளால் இடுப்பை மூன்று சுற்றாகக் கட்டியிருக்கிறானோ என எண்ணத் ÷ தான்றுகிறது.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், மஹேந்த்ர ஜாலம் என்னும்  ஜால வித்தையில் வல்லவனாவான்
சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது. இது 71 முதல் 80 வரை உள்ளது.  இதன் தொடர்ச்சி பார்க்கவும்.
புரோகிதர், ஜோதிடர். G.V. மணிகண்ட ஷர்மா - மேற்படி விபரம் திருத்தம் வேண்டும் என்றால் உங்கள் கருத்துக்களை எழுதவும்.        
E-mail : manisharmajothidam@gmail.com என்ற முகவரியில்



No comments:

Post a Comment