WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Wednesday 14 August 2013

ஆதிசங்கரர் அருளிய ஸௌந்தரிய லஹரி 41 To 50



ஸௌந்தரிய லஹரி
சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது.
41. வயிற்று வலி நீங்க. - பீஜம் ஓம் யம் ஹ்ரீம்
தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்ய-பரயா
நவாத்மாநம் மந்யே நவரஸ-மஹாதாண்டவ-நடம்
உபாப்யா-மேதாப்யா-முதய-விதி-முத்திஸ்ய தயயா
ஸநாதாப்யாம் ஜஜ்ஞே ஜநகஜநநீமத் ஜகதிதம்
மூலாதார சக்கரத்தில் தாண்டவம் (தமிழ்)
நீ நந்து மூல ஆதாரத்தில், ஆனந்த நிர்த்தமிடும் இறைவி! நின்னோடு
ஆனந்தத் தாண்டவம் விளைத்து, நவ வடிவுபெறும் ஆதி சிவனைப் பரவுவாம்; வானம் தொடுத்து, உலகம் அடையப்படைத்து இடும், இவ்வகையின் புணர்ச்சி அலவோ ஞானங்கொள், அனை, தந்தை, என, உலகு தெளிவுற நடத்துவது, ஞான ஒளியே!
பொருள்: தாயே! உன்னுடைய மூலாதாரமென்னும் சக்கரத்தில் நர்த்தனம் புரிபவளான ஸமயா தேவியோடு சிருங்காரம் முதலிய 9 ரஸங்கள் பொருந்திய  தாண்டவமென்னும் நடனம் புரிகின்ற மஹாபைரவமென்னும் உன் ரூபத்தைத் தியானம் செய்கிறேன். பிரளயத்திற்குப் பின் மறுபடியும் தோன்றுகிற இந்த உலகத்திற்குமஹாபைரவர், மஹாபைரவி என்னும் நீங்கள் இருவரும் கருணையால் ஒன்றுகூடி இந்த உலக ஜீவர்களுக்குத் தாயும் தந்தையுமாகிறீர்கள்.
 ஜபமுறையும் பலனும்
30 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 4000 தடவை ஜபித்து வந்தால், வயிற்று வலி நீங்கும்குல்மம் என்னும் வயிற்றுக் கட்டியும் நீங்கி சௌக்கியம் உண்டாகும்
42. வயிற்றில் ஏற்படும் நோய்கள் நீங்க. ஸர்வ ஜன வச்யம்                                   பீஜம் ஓம் ரம் ரம் ரீம் ரீம்
கதைர்-மாணிக்யத்வம் ககநமணிபி: ஸாந்த்ர-கடிதம்
கிரீடம் தே ஹைமம் ஹிமகிரிஸுதே கீர்த்தயதி :
நீடேயச்சாயா-ச்சுரண-ஸபலம் சந்த்ர ஸகலம்
தநு: ஸெளநாஸீரம் கிமிதி நிபத்நாதி திஷணாம்
அழகின் அலைப்பெருக்கு(சௌந்தர்ய லஹரி) கிரீட வர்ணனை-வசியம் பெருக்க அந்தரம் மணித்தபனர் பலமணியின் வடிவெடுத்து அமரும் உனது அம்பொன் முடிமேல் இந்த கலை நவமணியின் ஒழுகு பல நிறமடைந்து இலகும் அதிசய வடிவினால், சந்திரகலை நன்று நன்று என்பர் சிலர்; அன்று அன்று சந்திர கலை இந்த நிறமே இந்திர சிலை இந்திர சிலை என்பர் சிலர் ஆதலால் யாது என வழுத்த உமையே.
பொருள்: மலையரசனின் மகளே! உனக்குச் சேவை செய்யும் பொருட்டு மாணிக்கங்களாக உருவெடுத்துள்ள பன்னிரண்டு சூரியர்களால் நன்கு இழைக்கப்பட்ட உன்  பொற்கிரீடத்தை வர்ணிக்க எவன் மனம் விரும்புகிறதோ அவன், கிரீடத்தில் பதிக்கப்பட்டுள்ள நவரத்தினங்களின் ஒளியால் விந்தையான வர்ணம் உள்ளது போலத் ÷ தாற்றமளிக்கும் சந்திரகலையை இந்திரனுடைய வில் என்று நினைத்துக் கொள்ள மாட்டானா
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், மஹோதரம் என்னும் நோய்  விலகும். மற்றும் பசு, பக்ஷி, மனிதர்கள், தேவர்கள் அனைவரையும் வசீகரிக்கும் சக்தியும் ஏற்படும்
43. ஜயம், புகழ் பெறவும், வியாதி நீங்கவும்
பீஜம் ஓம் ஸ்ரீம் ஹரீம்
துநோது த்வாந்தம் நஸ்-துலித-தலிதேந்தீவர-வநம்
கந-ஸ்நிக்த-ஸ்லக்ஷ்ணம் சிகுர-நிகுரும்பம் தவ ஸிவே
யதீயம் ஸெளரப்யம் ஸஹஜ-முபலப்தும் ஸநமநஸோ
வஸந்த்யஸ்மிந் மந்யே வலமதந-வாடீ-விடபிநாம்
கூந்தல் அழகு-சகல காரியங்களில் வெற்றி பெற (தமிழ்)
அலர்ந்த கரு நெய்தல் அங்காடு எனக் கடை குழன்று அற நெய்த்து இருண்டு செறிவோடு இலங்குறும் இயற்கை மணம் எண் திசை அளப்ப அதில் இதழ் மூழ்கு நறை விழைவினால் பொலன் கொள் முடி ஆகண்டலேசன் பொற்று உணர்விரி பொதும்பர் மது மலர் படிவதோர் சிலம்பு அளி பரந்த உனது ஓதி என் மனத்திருள் செறிவு தெற அருள் கமலையே.
பொருள்: அம்பிகையே! உன் கருங்கூந்தல் மலர்ந்த கருநெய்தல் காடு போல அடர்ந்து, வழவழப்பாயும், மிருதுவாயும் உள்ளது. அது எங்கள் அகஇருளை அகற்றட்டும்அதிலுள்ள இயற்கையான நறுமணத்தை அடைய விரும்பியே இந்திரனின் நந்தவனத்திலுள்ள கற்பக மலர்களெல்லாம் அந்தக் கேசத்தில் வாசம் செய்கின்றன என  எண்ணுகிறேன்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் எடுத்த காரியங்கள்  எல்லாவற்றிலும் வெற்றியுண்டாகும். நோய்களெல்லாம் நீங்கும்
44. ஜனங்களின் மனதைக் கவர.                                                                          ஆயுள் ஆரோக்கியம் பீஜம் ஓம் ஐம் க்லீம் சௌ
தநோது க்ஷேமம் நஸ் தவ வதந-ஸெளந்தர்யலஹரீ
பரீவாஹ-ஸ்ரோத:-ஸரணிரிவ ஸீமந்த-ஸரணி:
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபல-கபரீ-பார-திமிர-
த்விஷாம் ப்ருந்தைர்-பந்தீ-க்ருதமிவ நவீநார்க்க-கிரணம்
வகுட்டின் வர்ணனை-எல்லா நோயினின்றும் விடுதலை பெற (தமிழ்)
மோதிய வெங்கதிர் மீள வெருண்டு இருள் மூட ஒதுங்கிய வாறேயோ சோதி முகம் கவின் ஏறி வழிந்தன சோரவிடும் கவர் காலேயோ
ஓதி பிணைந்து பின் வீழ வகிர்ந்து அதன் ஊடு எழுதும் ப்ரபை யாதேயோ
கோதறு சிந்துர ரேகை வளம் பிறர் கூறுவது அன்று இது மாதாவே.
பொருள்: பராசக்தியே! உன் திருமுகத்தின் அழகு வெள்ளம் பெருகிப் பொழிவது வழிந்தோடும் வாய்க்காலைப் போலுள்ளது. அது உன் கரிய கற்றைக் கூந்தல் என்னும்  பலம்மிக்க பகைவர்களால் இருட்டறையில் அடைத்து வைக்கப்பட்ட இளஞ்சூரியனின் கிரண ஒளியைப் போன்று தெரிகிறது. குங்குமம் அப்பியதுமான அந்த வகிடு ங்களுக்கு ÷க்ஷமத்தை அளிக்கட்டும்.
ஜபமுறையும் பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், எல்லோரையும் வசீகரிக்கும்  சக்தி உண்டாகும்
45. முக்காலத்தையும் உணர வாக்ஸித்தி
பீஜம் ஓம் ஸம் ஸம் ஸம்
அராலை: ஸ்வாபாவ்யா-தலிகலப-ஸஸ்ரீபி-ரலகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ-ருசிம்
தரஸ்மேரே யஸ்மிந் தஸநருசி கிஞ்ஜல்க-ருசிரே
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மர-தஹந-சக்ஷúர்-மதுலிஹ:
குஞ்சத்தின் வர்ணனை-திருவின் நோக்கு பெற, வாக்கு பலிதத்திற்கு (தமிழ்)
கூர் எயிற்றின் அக இதழுங் கொண்கர் விழி வரி வண்டும் குழற் படிந்த மதுகரத்தின் குழாமும் கூடிப் பேரியற்கை மணம் பொதிந்து புன்மூரல் முகை அவிழப் பிறழும் உனது அருணமுக கமலம் என்றால் ஒரியற்கை வாடுமிதழ் பொறிவண்டே படிவது மற்று ஒரியற்கை செயற்கை மணம் போது செய்யும்
நீரியற்கை மலர்க்கமலம் இதற்குடைந்து பங்கமுறல் நீதியென்பது யாரறியார் நிகரில் மாதே.
பொருள்: அம்பிகையே! புன்னகையால் சிறிது மலர்ந்தாற் போலவும், அழகிய பல்வரிசைகளுடன் பிரகாசிப்பதும், தாமரை மலரின் நறுமணம் கூடியதுமான, உன்  முகமாகிய தாமரை மலரில், மன்மதனை எரித்த சிவனின் கண்கள் என்னும் தேன் வண்டுகள் மயங்குகின்றன. அத்தகைய உன் முகம் இயல்பாகவே சுருள் சுருளாகவும், சிறு  வண்டுகள் மொய்த்திருப்பன போன்ற அழகைக் கொண்டதாகவும் உள்ள முன்நெற்றி மயிர்கள் பரவியுள்ளதால் உன் முகம் தாமரை மலரைப் பரிகாசம் செய்வது போல்  இருக்கிறது.
ஜபமுறையும் பலனும்
12 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் வருங்காலத்தை உணரும்  சக்தியுண்டாகி சொன்னதெல்லாம் பலிக்கும்
46. புத்ர பாக்கியம் பெற. தாம்பத்தியம் நிலை பெற                                                பீஜம் ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம்
லலாடம் லாவண்ய-த்யுதி-விமல-மாபாதி தவ யத்
த்விதீயம் தந்மந்யே மகுட-கடிதம் சந்த்ரஸகலம்
விபர்யாஸ-ந்யாஸா துபயமபி ஸம்பூய மித:
ஸுதாலேப-ஸ்யூதி: பரிணமதி ராகா-ஹிமகர:
நுதல் தோற்றம்-புத்திரப் பேற்றுக்கு
கோதை நீண்டமுடி கொண்டொளிர் திங்கள் சேர்
பாதி வாள் நுதல் என்று படிந்ததோ
வீது கூடி இரண்டு நிறைந்ததோ
சீத பூரணத் திங்கள் சிறந்ததே.
பொருள்: ஹே பகவதி! உன்னுடைய நெற்றியானது உன் கிரீடத்தில் கீழ்நோக்கி தொங்கவிடப்பட்ட மற்றொரு சந்திரகலை போல் காட்சி தருகிறது. ஏற்கனவே மேல் நோக்கிக் கிரீடத்திலுள்ள சந்திரகலையையும் உன் நெற்றியாகிய சந்திர கலையையும் மாற்றி வைத்தால் இரண்டும் சேர்ந்து பூர்ணசந்திரனாகக் காட்சி தரும். (தேவியின்  நெற்றி, மனத்தின் அதிஷ்டான தேவதை என்பதால், அதைச் சந்திர கலையாகத் தியானம் செய்தால் மனஜயம் உண்டாகும்.) இவ்வாறு மனத்தில் எண்ணி அமாவாசையன்று  வானில் முழுநிலவைக் கொணர்ந்து காட்டிய அபிராம பட்டரின் சாதனை வியக்கத்தக்கது.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் பிள்ளையில்லாதவருக்குக்  குணமுள்ள பிள்ளை உண்டாகும். தவிர, கோரிய பலன்களெல்லாம் வெற்றியடையும்
47. இறை அருள் பெற. ஸர்வ வேத்தா வச்யம்
பீஜம் ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ப்ருவெள புக்நே கிஞ்சித்புவந-பய-பங்க வ்யஸநிநி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகர-ருசிப்யாம் த்ருத-குணம்
தநுர்-மந்யே ஸவ்யேதர கர-க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்டே முஷ்டௌ ஸ்தகயதி நிகூடாந்தர-முமே:
புருவ அழகு-எல்லா காரியங்களில் வெற்றி பெற (தமிழ்)
கருவிழிச் சுருப்பு நாண் உன் கண்மலர் அம்பு, கன்னல்
புருவவில், நடுவொழித்தல் போன்றது வளைத்துப் போர்மேல்
வருமதன் பிடித்த கைக்குள் மறைந்தது போலும் என்றால்
திருமகள் பரவும் அம்மே சிலை இது புருவம் அன்றே.
பொருள்: தாயே! உலக மக்கள் அனைவரின் அச்சத்தை அகற்றுவதிலேயே மிகுந்த அக்கறை கொண்டவளே! சற்று வளைந்து காணப்படும் உன் புருவங்கள், வண்டுகள்  போன்ற நாண் பூட்டப்பட்டும், இடக்கையில் பிடிக்கப்பட்டு, முழங்கையாலும் மணிக்கட்டாலும் மறைக்கப்பட்டு அதன் நடுப்பாகத் தோற்றம் தெரியாமலும் உள்ளதால்அது மன்மதனின் வில் என்றே எண்ணுகிறேன்.
ஜபமுறையும் பலனும்
25 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், சகல தேவதைகளும் வசிய மாவார்கள். அதன் மூலம் விரும்பிய காரியங்களிலெல்லாம் வெற்றி உண்டாகும்
48. சகல நவக்கிரஹ தோஷங்களும் விலக
பீஜம் மாத்ருக்கா ந்யாசம்
அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயந-மர்க்காத்மகதயா
த்ரியாமாம் வாமம் தே ஸ்ருஜதி ரஜநீ-நாயகதயா
த்ருதீயா தே த்ருஷ்டிர்-தரதலித-ஹேமாம்புஜ-ருசி:
ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ-நிஸயோ-ரந்தரசரீம்
கண்களின் எழில்-நவகோள்களினின்று விடுபெற (தமிழ்)
ஒரு மலர்க்கண் இரவி வலத்துதித்து அருளு நண்பகலும்
ஒரு மலர்க்கண் மதியம் இடத்து உதித்து அருளும் பேரிரவும்
திருநுதற்கண் பொற் கமலச் செந்நிறத்தீ விளைத்தருளும்
விரவு செக்கர் மாலையும் உன் விழை வகலா விழுப்பொருளே.
பொருள்: தாயே! உன் வலது கண் சூரியனாக இருப்பதால் அது பகலையும், உன் இடது கண் சந்திரனாக இருப்பதால் இரவையும் தோற்றுவிக்கிறது. உன்னுடைய மூ ன்றாவது கண் சற்று மலர்ந்த தங்கத் தாமரை மலர் போலிருப்பதால், இரவுக்கும் பகலுக்கும் இடையேயுள்ள காலை மாலைச் சந்தியா காலங்களை அமைக்கிறது.
ஜபமுறையும் பலனும்
9 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், நவக்ரஹங்களால் உண்டாகும்  தோஷங்களும், சிரமங்களும் நீங்கி சுகம், சம்பத்து உண்டாகும்
49. வியாபாரம் விருத்தியாக புதையல் நிதி தர்சனம் -
பீஜம் ஓம் ஸ்ரீம் மஹா
விஸாலா கல்யாணீ ஸ்புடருசி-ரயோத்யா குவலயை:
க்ருபாதாரா தாரா கிமபி மதுரா போக-வதிகா
அவந்தீ த்ருஷ்டிஸ்தே பஹுநகர-விஸ்தார-விஜயா
த்ருவம் தத்தந்-நாம-வ்யவஹரண-யோக்யா விஜயதே
எண்வித கண்ணோட்டம்-நிறைந்த வெற்றி பெற (தமிழ்)
கோல நகர் விசாலையாய் நிரந்தர கல்யாணியாய்க் குவலயத்தால் அயோத்தியாய்க் குல மதுரை தானாய்ச் சால ஒளிர் போகவதியாய் அமுததாரையாய்த் தண்ணளியால் அவந்தியாய்ச் சகவிசயை எனலாய்
நீல விழி புடைபரந்து நெடுநகரப் பெயர் கவர்ந்து நீண்டு சேந்து அரிபரந்து நிக ரொழிக்கும் என்றால் ஆலவிடம் அமுதமெனக் கொண்டு அருந்திய உன்மத்தர்புரம் அதனில் ஒரு புறங்கவர்தல் அதிசியமோ தாயே!
பொருள்: அம்பிகையே! உன் கண்ணோட்டம் பரந்து விரிந்ததாகும். அது மங்களகரமாகவும், மலர்ந்து ஒளி வீசுவதாகவும், கருநெய்தல் மலர்களையும் மிஞ்சும் அழகு  வாய்ந்ததாகவும், கருணைப் பெருக்கிற்கு ஆதாரமாகவும், வர்ணிக்க முடியாத அழகுமிக்கதாகவும், ஆழங்காண முடியாத அளவுக்கு நீண்டதாகவும், அடியவர்களைக்  காப்பதாகவும், பல நகரங்களிலும் பார்வையின் பிரவாகம் வெளியாகியுள்ளதாக இருப்பதால் அந்தந்த நகரங்களில் குறிப்பிடத்தக்கதாகவும் அனைத்தையுமே  வெல்லக்கூடியதாகும்.
ஜபமுறையும் பலனும்
10 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால், புதையல் உள்ள இடத்தைக்  காணலாம். இதற்குரிய யந்திரத்தை மஞ்சளில் எழுதி, அந்த மஞ்சளைச் சுட்டு, நல்லெண்ணெயில் உறைத்து மையாக்கி, பூனைக் கண்ணுள்ள பெண் கையால் மை தீட்டிக்  கொண்டால் புதையல் உள்ள இடம் காணப்படும்
50. அம்மை நோய் நீங்க - பீஜம் ஓம் கம் க்ளொம்
யாகவீநாம் ஸந்தர்ப-ஸ்தபக-மகரந்தைக-ரஸிகம்
கடாக்ஷ-வ்யாக்ஷே-ப்ரமர-கலபௌ-கர்ணயுகலம்
அமுஞ்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவரஸாஸ்வாத-தரலௌ
அஸூயா-ஸம்ஸர்கா-தலிக-நயநம்-சிஞ்சிதருணம்
மூன்றாவது கண்-தூரபார்வைக்கு, வைசூரி நோய் நீங்க (தமிழ்)
இரு செவியுண் பலகவிதை இணரொழுகு பசுந்தேனில்
பெருகும் நவரசமருந்திப் பிறழ்ந்திடும் உன் பிணை விழியாம்
கருநிற வண்டு இணைகளிப்பக் கண்டு பொறாது என்னேயோ
வரி நுதல்கண் அளி சிவந்த வளம்பாராய் மலர்க்கொடியே.
பொருள்: தாயே! உன்னுடைய இரண்ட காதுகளும் கவிகளின் காவியப் படைப்பாகிய புஷ்பக் கொத்திலுள்ள தேனைப் பருகும் ஆவலுடன் கூடியவை. அந்தக் காதுகளைச்  சற்றும் பிரியாமல் உள்ள உன் கண்கள் இரண்டும் குட்டி வண்டுகளைப் போலத் துள்ளித் திரிந்து கவிதைகளிலுள்ள நவரசங்களையும் அனுபவித்து மகிழும் ஆவல்  கொண்டவை. எனவே, உன் இரண்டு கண்களையும் பார்த்துப் பொறாமையினால் தான் உன்னுடைய நெற்றிக்கண் சற்றே சிவந்து காணப்படுகிறது என்பது நம்பிக்கை.
ஜபமுறையும் பலனும்
5 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு அல்லது வடக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் வைசூரியனால் உடலெரிச்சல்கை கால்கள் முடமாதல், கண்பார்வை இழத்தல் போன்ற சிரமங்களெல்லாம் நீங்கிச் சுகம் உண்டாகும்
சவுந்தரிய லஹரி ஆதிசங்கரர் அருளியது. இது 41 முதல் 50 வரை உள்ளது.  இதன் தொடர்ச்சி பார்க்கவும்.
புரோகிதர், ஜோதிடர். G.V. மணிகண்ட ஷர்மா - மேற்படி விபரம் திருத்தம் வேண்டும் என்றால் உங்கள் கருத்துக்களை எழுதவும்.        
E-mail : manisharmajothidam@gmail.com என்ற முகவரியில்



No comments:

Post a Comment