WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Saturday, 11 May 2019

வானாகி மண்ணாகி


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே.

பாடல் விளக்கம்:
ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர் முதலாகிய எல்லாப் பொருள்களாகியும், அவற்றின் உண்மை இன்மைகளாகியும் அவற்றை இயங்குவிப்போன் ஆகியும் யான், எனது என்று அவரவர்களையும் கூத்தாட்டுவானாகியும் இருக்கின்ற உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன்?.

ஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா?

ஆய கலைகள் அறுபத்து நான்கு எவை தெரியுமா?
ஒன்பதின் மகத்துவம் தெரியுமா?

1. அக்கரவிலக்கணம்
2. இலிகிதம்
3. கணிதம்
4. வேதம்
5. புராணம்
6. வியாகரணம்
7. நீதி சாத்திரம்
8. சோதிட சாத்திரம்
9. தர்ம சாத்திரம்
10. யோக சாத்திரம்
11. மந்திர சாத்திரம்
12. சகுன சாத்திரம்
13. சிற்ப சாத்திரம்
14. வைத்திய சாத்திரம்
15. உருவ சாத்திரம்
16. இதிகாசம்
17. காவியம்
18. அலங்காரம்
19. மதுரபாடனம்
20. நாடகம்
21. நிருத்தம்
22. சத்தப்பிரமம்
23. வீணை
24. வேணு
25. மிருதங்கம்
26. தாளம்
27. அத்திரப்பரீட்சை
28. கனகபரீட்சை
29. ரத பரீட்சை
30. கசபரீட்சை
31. அசுவபரீட்சை
32. ரத்திரனப்பரீட்சை
33. பூமிபரீட்சை
34. சங்ககிராம இலக்கணம்
35. மல்யுத்தம்
36. ஆகரூடணம்
37. உச்சாடணம்
38. விந்து வேடணம்
39. மதன சாத்திரம்
40. மோகனம்
41. வசீகரணம்
42. ரசவாதம்
43. காந்தருவவாதம்
44. பைபீலவாதம்
45. கவுத்துக வாதம்
46. தாது வாதம்
47. காருடம்
48. நட்டம்
49. முட்டி
50. ஆகாயப் பிரவேசம்
51. ஆகாய கமணம்
52. பரகாயப் பிரவேசம்
53. அதிரிசயம்
54. இந்திரசாபம்
55. மகேந்திரசாபம்
56. அக்கினித்தம்பம்
57. சலத்தம்பம்
58. வாயுத்தம்பம்
59. நிட்டித்தம்பம்
60. வாக்குத்தம்பம்
61. சுக்கிலத்தம்பம்
62. கன்னத்தம்பம்
63. கட்கத் தம்பம்
64. அவத்தைப் பிரயோகம்

்்
***********************************************
9ன் சிறப்பு தெரியுமா?
எண்களில் விசேஷமான
எண்ணாக கருதப்படுவது
ஒன்பது.
அந்த எண்ணில்
நீண்ட வாழ்வு எனும்
அர்த்தம் பொதிந்திருப்பதாகச்
சொல்கின்றனர்,

சீனர்களின் சொர்க்க கோபுரம்,
ஒன்பது வளையங்களால்
சூழப்பட்டுள்ளது.
எகிப்து, ஐரோப்பா, கிரீக்
முதலான நாடுகளும்
9-ஆம் எண்ணை
விசேஷமாகப் பயன்படுத்திப்
போற்றுகின்றன.
புத்த மதத்தில்,
மிக முக்கியமான
சடங்குகள் யாவும்
ஒன்பது துறவிகளைக் கொண்டே
நடைபெறும்.
தங்கம், வெள்ளி மற்றும்
பிளாட்டினத்தின்
சுத்தத்தை 999 என்று
மதிப்பிடுவார்கள்.

பெண்களின் கர்ப்பம்,
பூரணமாவது ஒன்பதாம் மாத
நிறைவில்தான்!
ஒன்பது எனும் எண்
இன்னும் மகத்துவங்கள்
கொண்டது.
ஒன்பது என்ற எண்ணுக்கு
வடமொழியில் நவம்
என்று பெயர்.
நவ என்ற சொல்
புதிய, புதுமை எனும்
பொருள் உடையது.

நவ சக்திகள்:
1,வாமை,
2,ஜேஷ்டை,
3,ரவுத்ரி,
4,காளி,
5,கலவிகரணி,
6,பலவிகரணி,
7,பலப்பிரமதனி,
8,சர்வபூததமனி,
9,மனோன்மணி,

நவ தீர்த்தங்கள்:
1,கங்கை,
2,யமுனை,
3,சரஸ்வதி,
4,கோதாவரி,
5,சரயு,
6.நர்மதை,
7,காவிரி,
8,பாலாறு,
9,குமரி

நவ வீரர்கள்:
1,வீரவாகுதேவர்,
2,வீரகேசரி,
3,வீரமகேந்திரன்,
4,வீரமகேசன்,
5,வீரபுரந்திரன்,
6,வீரராக்ஷசன்,
7,வீரமார்த்தாண்டன்,
8,வீரராந்தகன்,
9,வீரதீரன்

நவ அபிஷேகங்கள்:
1,மஞ்சள்,
2,பஞ்சாமிர்தம்,
3,பால்,
4,நெய்,
5,தேன்,
6,தயிர்,
7,சர்க்கரை,
8,சந்தனம்,
9,விபூதி.

நவ ரசம்:
1,இன்பம்,
2,நகை,
3,கருணை,
4,கோபம்,
5,வீரம்,
6,பயம்,
7,அருவருப்பு,
8,அற்புதம்,
9,சாந்தம் ,
ஆகியன நவரசங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள்:
1,சூரியன்,
2,சந்திரன்,
3,செவ்வாய்,
4,புதன்,
5,குரு,
6,சுக்கிரன்,
7,சனி,
8,ராகு,
9.கேது

நவமணிகள்:-

நவரத்தினங்கள்:
1,கோமேதகம்,
2,நீலம்,
3,வைரம்,
4,பவளம்,
5,புஸ்பராகம்,
6,மரகதம்,
7,மாணிக்கம்,
8,முத்து,
9,வைடூரியம்

நவ திரவியங்கள்:
1,பிருதிவி,
2,அப்பு,
3,தேயு,
4,வாயு,
5,ஆகாயம்,
6,காலம்,
7, திக்கு,
8,ஆன்மா,
9,மனம்

நவலோகம் (தாது):
1,பொன்,
2,வெள்ளி,
3,செம்பு,
4,பித்தளை,
5,ஈயம்,
6,வெண்கலம்,
7,இரும்பு,
8,தரா,
9,துத்தநாகம்

நவ தானியங்கள்:
1,நெல்,
2,கோதுமை,
3,பாசிப்பயறு,
4,துவரை,
5,மொச்சை,
6,எள்,
7,கொள்ளு,
8,உளுந்து,
9,வேர்க்கடலை

சிவ விரதங்கள் ஒன்பது:
1,சோமவார விரதம்,
2,திருவாதிரை விரதம்,
3,உமாகேச்வர விரதம்,
4,சிவராத்ரி விரதம்,
5,பிரதோஷ விரதம்,
6,கேதார விரதம்,
7,ரிஷப விரதம்,
8,கல்யாணசுந்தர விரதம்,
9,சூல விரதம்

நவசந்தி தாளங்கள்:
1,அரிதாளம்,
2,அருமதாளம்,
3,சமதாளம்,
4,சயதாளம்,
5,சித்திரதாளம்,
6,துருவதாளம்,
7,நிவர்த்திதாளம்,
8,படிமதாளம்,
9,விடதாளம்

அடியார்களின் பண்புகள்:
1,எதிர்கொள்ளல்,
2,பணிதல்,
3,ஆசனம் (இருக்கை) தருதல்,
4,கால் கழுவுதல்,
5,அருச்சித்தல்,
6,தூபம் இடல்,
7,தீபம் சாட்டல்,
8,புகழ்தல்,
9,அமுது அளித்தல்,

(விக்ரமார்க்கனின்
சபையிலிருந்த 9 புலவர்கள்; நவரத்னங்கள் எனச் சிறப்பிக்கப்படுவர்)
1,நவரத்னங்கள் (முனிவர்கள்)தன்வந்த்ரி,
2,க்ஷணபகர்,
3,அமரஸிம்ஹர்,
4,சங்கு,
5,வேதாலபட்டர்,
6,கடகர்ப்பரர்,
7,காளிதாசர்,
8,வராகமிஹிரர்,
9,வரருசி

அடியார்களின் நவகுணங்கள்:
1,அன்பு,
2,இனிமை,
3,உண்மை,
4,நன்மை,
5,மென்மை,
6,சிந்தனை,
7,காலம்,
8,சபை,
9,மவுனம்.

நவ நிதிகள்:
1,சங்கம்,
2,பதுமம்,
3,மகாபதுமம்,
4,மகரம்,
5,கச்சபம்,
6,முகுந்தம்,
7,குந்தம்,
8.நீலம்,
9.வரம்

நவ குண்டங்கள்:
யாகசாலையில் அமைக்கப்படும்
ஒன்பது வகையிலான
யாக குண்ட அமைப்புக்கள்:
1,சதுரம்,
2,யோனி,
3,அர்த்த சந்திரன்,
4,திரிகோணம்,
5,விருத்தம் (வட்டம்),
6.அறுகோணம்,
பத்மம்,
எண்கோணம்,

பிரதான விருத்தம்.
1,நவவித பக்தி :
2,சிரவணம்,
3,கீர்த்தனம்,
4,ஸ்மரணம்,
5,பாத சேவனம்அர்ச்சனம்,
6,வந்தனம்,
7,தாஸ்யம்,
8,சக்கியம்,
9,ஆத்ம நிவேதனம்

நவ பிரம்மாக்கள் :
1,குமார பிரம்மன்,
2,அர்க்க பிரம்மன்,
3,வீர பிரம்மன்,
4,பால பிரம்மன்,
5,சுவர்க்க பிரம்மன்,
6,கருட பிரம்மன்,
7,விஸ்வ பிரம்மன்,
8,பத்ம பிரம்மன்,
9,தராக பிரம்மன்

நவக்கிரக தலங்கள் -
1,சூரியனார் கோயிவில்,
2,திங்களூர்,
3,வைத்தீஸ்வரன் கோவில்,
4,திருவெண்காடு,
5,ஆலங்குடி,
6,கஞ்சனூர்,
7,திருநள்ளாறு,
8,திருநாகேஸ்வரம், 9,கீழ்ப்பெரும்பள்ளம்

நவபாஷாணம் -
1,வீரம்,
2, பூரம்,
3, ரசம்,
4,ஜாதிலிங்கம்,
5,கண்டகம்,
6,கவுரி பாஷாணம்,
7,வெள்ளை பாஷாணம்,
8,ம்ருதர்சிங்,
9,சிலாஷத்

நவதுர்க்கா -
1,ஸித்திதத்ரி,
2,கஷ்முந்தா,
3,பிரம்மாச்சாரினி,
5,ஷைலபுத்ரி,
7,மகா கவுரி,
8,சந்திரகாந்தா,
9,ஸ்கந்தமாதா,
6.மகிஷாசுரமர்த்தினி, -,காளராத்ரி

நவ சக்கரங்கள் -
1,த்ரைலோக்ய மோகன சக்கரம்,
2,சர்வசாபுரக சக்கரம்,
3,சர்வ சம்மோகன சக்கரம்,
4,சர்வ சவுபாக்ய சக்கரம்,
5,சர்வார்த்த சாதக சக்கரம்,
6,சர்வ ரக்ஷõகர சக்கரம்,
7,சர்வ ரோஹ ஹர சக்கரம்,
8,சர்வ ஸித்தி ப்ரத சக்கரம்,
9,சர்வனந்தமைய சக்கரம்.

நவநாதர்கள் -
1,ஆதிநாதர்,
2,உதய நாதர்,
3,சத்ய நாதர்,
4,சந்தோஷ நாதர்,
5,ஆச்சாள் அசாம்பயநாதர்,
6,கஜ்வேலி கஜ்கண்டர் நாதர்,
7,சித்த சொவ்றங்கி
8,நாதர், மச்சேந்திர நாதர்,
9,குரு கோரக்க நாதர்

உடலின் நவ துவாரங்கள் :
இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள்,
இரண்டு மூக்குத் துவாரங்கள்,
ஒரு வாய்,
இரண்டு மலஜல துவாரங்கள்

உடலின் ஒன்பது சக்கரங்கள் :
1,தோல்,
2,ரத்தம்,
3,மாமிசம்,
4,மேதஸ்,
5,எலும்பு,
6,மஜ்ஜை,
7,சுக்கிலம்,
8,தேஜஸ்,
9,ரோமம்

18 புராணங்கள்,
18 படிகள் என அனைத்தும்
9-ன் மூலமாக தான் உள்ளன.

காயத்ரி மந்திரத்தை
108 முறை ஜபிக்க வேண்டும்.
எல்லா தெய்வத்தின்
நாமாவளியும் ஜப மாலையின்
எண்ணிக்கையும்
இதை அடிப்படையாகக் கொண்டதுதான்!
புத்த மதத்தினர்
108 முறை மணியடித்து,
புது வருடத்தை வரவேற்றுக்
கொண்டாடுகின்றனர்.
சீனாவில்,
36 மணிகளை
மூன்று பிரிவாகக் கொண்டு,
சு ஸூ எனப்படும்
மாலையைக் கொண்டு
ஜபம் செய்வார்கள்.

ஸ்ரீகிருஷ்ணருக்குப்
பிரியமான மாதம்... மார்கழி.
இது வருடத்தின் 9-வது மாதம்!
மனிதராகப் பிறந்தவன்
எப்படி வாழ வேண்டும் என
வாழ்ந்து காட்டிய
ஸ்ரீராமபிரான் பிறந்தது,
9-ஆம் திதியான
நவமி நாளில்தான்.
9 என்ற எண்ணை
கேளிக்கையாக எண்ணாமல்
புராணங்களிலும்,
நடைமுறையிலும் சிறப்பிடம் பெற்றுள்ளது என்பதை
போற்றுவோம்

Thursday, 9 May 2019

மஹா பெரியவாவின் 100 முத்தான பொன்மொழிகள்:

மஹா பெரியவாவின் 100 முத்தான பொன்மொழிகள்:

1. நம் தாயாகிய பூமி, நமது விருப்பங்கள் அனைத்தையும் நமக்கு அளிக்க தயாராக இருக்கிறாள். அவளைப் பாதுகாத்து போற்றுங்கள்…

2. நம் தந்தையாகிய கடவுள் சகலரிடமும் கருணை காட்டுகிறார். ஆகவே, அவரை வணங்குங்கள்…

3. பெண்கள் சமையலுக்காக வீட்டில் அரிசி எடுக்கும் போது, ஒரு கைப்பிடியை ஏழைகளுக்கு தர்மம் செய்ய எடுத்து வைக்க வேண்டும்.

4. எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்திக் கொண்டிருந்தால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த மனநிலை உண்டாகும்.

5. எடுத்துச் சொல்வதைவிட மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கதாகும்.

6. வாழ்க்கையை லாப நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதுவது கூடாது. பிறர் நலனுக்காக உதவி செய்ய வேண்டும்.

8. அன்பினால் பிறருடைய குற்றத்தை திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.

9. தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் அதற்கேற்ப வாழ்வில் பிரச்னைகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.

10. நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தால் மனம் பளிங்கு போல துாய்மையாக இருக்கும்.

12. பொருளாதார நிலைக்கேற்ப தினமும் தர்மம் செய்யுங்கள். குறைந்தபட்சம் ஒரு ஏழைக்காவது கைப்பிடியளவு அரிசி கொடுங்கள்.

13. இரவு துாங்கும் முன் அன்றன்று நடந்த நன்மை, தீமைகளை மனதில் அலசி ஆராய்ச்சி செய்யுங்கள்.

14. காலையில் எழுந்தவுடன் இரண்டு நிமிடமாவது கடவுளை பக்தியுடன் வழிபடுங்கள்.

15. அக்கம்பக்கத்தினரோடு நட்புடன் பழகுங்கள். பறவை, விலங்கு என எல்லா உயிர்களையும் நேசியுங்கள்.

16. அனைவரும் அன்றாடம் அரைமணி நேரமாவது மவுனமாக இருக்கப் பழகுவது அவசியம்.

17. எண்ணம், பேச்சு, செயல் மூன்றாலும் பிறருக்கு நன்மை தரும் செயல்களில் மட்டும் ஈடுபட வேண்டும்.

18. பேசுவதில் கணக்காக இருந்தால் குடும்பத்தில் சண்டை சச்சரவு வராது. நம் சக்தியும் வீணாகாமல் இருக்கும்.

19. அன்பினால் பிறரை திருத்துவதுதான் பெருமைக்குரியது. அதுவே நிலைத்த பலனளிக்கும்.

20. நமக்குரிய பணிகளை நாமே செய்வதே உண்மையான கவுரவம். பிறர் மூலம் செய்து முடிப்பது கவுரவக் குறைவானதே.

21. தியாகம் செய்வது உயர்ந்த குணம். அதிலும் 'தியாகம் செய்தேன்' என்ற எண்ணத்தையும் தியாகம் செய்வது சிறந்தது.

22. ஒழுக்கம் உயிர் போன்றது. குழந்தைகளை ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.

23. கடவுளிடம் இருந்து நாம் பிரிந்து வந்திருக்கிறோம். பக்தி மூலம் மீண்டும் அவரிடம் ஒட்டிக்கொள்வோம்.

24. கோபத்தால் பிறருக்கு மட்டுமில்லாமல் நமக்கும் தீமையே உண்டாகிறது.

25. அலட்சியத்துடன் பணியாற்றுவது கூடாது… யாரையும் இழிவாகக் கருதுவதும் கூடாது.

26. உயிர்கள் மீது அன்பு காட்டுங்கள்... செடிக்கு நீர் விடுவதும், விலங்கிற்கு உணவு அளிப்பதும் சிறந்த தர்மம்.

27. பக்தி உணர்வு இல்லாமல் மனிதன் கடமையில் மட்டும் கவனம் செலுத்துவது வறட்டுத்தனமானது.

28. பேச்சில் பெருந்தன்மையை வெளிப்படுத்தும் பலர், செயலில் சுயநலம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

29. நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை ஆகிய நற்குணங்களால் வாழ்க்கைத் தரம் மேம்படும்.

30. நல்ல உணவுகளால் உடல் பலம் பெறுவது போல நல்லவர்களின் நட்பால் மன நலம் காக்கப்படும்.

31. இருப்பதைக் கொண்டு திருப்தியாக வாழ்ந்தால் நிம்மதிக்கும், மகிழ்ச்சிக்கும் குறைவிருக்காது.

32. தானத்தில் சிறந்தது அன்னதானம். இதன் மூலம் மட்டுமே ஒரு மனிதனைத் திருப்திப்படுத்த முடியும்.

33. உடம்பின் அழுக்கு நீராடினால் நீங்கி விடும். உள்ளத்திலுள்ள அழுக்கை தியானப் பயிற்சியால் போக்க முடியும்.

34. கடவுள் நல்ல புத்தி கொடுத்திருக்கிறார். அதை பயன்படுத்தி நற்செயல்களில் ஈடுபடுங்கள்.

35. எதிர்பார்ப்புடன் பக்தியில் ஈடுபட்டால் அது வியாபாரமாகி விடும்.

36. பாவத்தை கணப்பொழுதில் போக்கும் சக்தி கடவுளின் திருநாமத்திற்கு மட்டுமே இருக்கிறது.

37. நல்ல விஷயங்களை நாளை என்று காலம் தாழ்த்தக் கூடாது. அவற்றைச் செய்து முடிக்க இன்றே நல்ல நாள்.

38. எல்லார் இதயங்களையும் நட்பால் வெல்லுங்கள். பிறரையும் தன்னைப் போல் நோக்குங்கள்.

39. பிறருக்கு உபதேசம் செய்யும் முன் நமக்கு தகுதி இருக்கிறதா என்று ஒரு கணம் யோசிப்பது நல்லது.

40. சேவையில் ஈடுபடுவோருக்கு மனஉறுதியோடு சாந்தமும், புன்சிரிப்பும் மிகவும் அவசியமானவை.

41. புல்லைக் கூட படைக்கும் ஆற்றல் நம்மிடமில்லை. அதனால் 'நான்' என்னும் ஆணவம் கூடாது.

42. மனமே கடவுளின் இருப்பிடம். அதை தூய்மையாக வைத்திருப்பது கடமை.

43. பிறர் நம்மை துன்பப்படுத்தும் போது அதைப் பொறுப்பது மனிதத்தன்மை. மறந்து விடுவது தெய்வத்தன்மை.

44. வாழ்வில் ஒழுக்கமும், நேர்மையும் இருந்து விட்டால் செய்யும் செயல் அனைத்திலும் அழகும், கலையுணர்வும் வந்து விடும்.

45. வெறிநாய் போல நாலா திசையிலும் மனம் தறி கெட்டு ஓடிக் கொண்டிருக்க கூடாது. தியானம் மூலம் அதை ஒருமுகப்படுத்த வேண்டும்.

46. பிறர் துன்பப்படும் போது பணம், உடல் உழைப்பு, வாக்கு ஆகியவற்றால் முடிந்த உதவியைச் செய்வது நம் கடமை.

47. சண்டையையும் போட்டியையும் தவிர்த்து விடுங்கள். பிறர் மேல் ஆதிக்கம் செலுத்தாதீர்கள். அது பெரிய தவறு என்பதை உணருங்கள்.

48. எல்லாரிடமும் அன்பு, பேச்சில் இனிமை இவையே தொண்டாற்றுவதற்குரிய அடிப்படை லட்சணம்.

49. சமூக சேவையும், கடவுள் பக்தியும் இணைந்து விட்டால் அகில உலகமும் நன்மை பெறும்.

50. ராமனுக்கு உதவிய அணில் போல தொண்டு சிறிதாக இருந்தாலும் போற்றுவதற்கு உரியதே.
                                                                      
51. நாம் நலமோடு வாழ்வதோடு, மற்றவரும் நலமாக வாழ நினைப்பவனே உத்தம குணம் கொண்டவன்.

52. தீய எண்ணம் அனைத்தும் நீங்கி விட்டால் மனம் கடவுளின் பக்கம் படிப்படியாகத் திரும்பி விடும்.

53. கடவுள் புத்தியைக் கொடுத்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் மனிதன் துன்பத்திற்கு ஆளாகிறான்.

54.எல்லாம் ஒன்று என்ற விழிப்பு வந்து விட்டால் ஆசை, கோபம், பாவம், பிறவி ஆகிய துன்பங்கள் நீங்கி விடும்.

55.ஒழுக்கம் உயிர் போன்றது. வாழ்வில் ஒழுக்கம் ஏற்பட்டு விட்டால், அதன் பின் எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் அழகும், நேர்த்தியும் உண்டாகும்.

56. ஆசை வயப்பட்ட மனிதன் கோபத்திற்கு ஆளாகிறான். கோபம் பாவம் செய்யத் தூண்டுகிறது. அதனால், உயிர்களுக்கு பிறவிச் சங்கிலி தொடர்கிறது.

                                                                                    
57. பிறரிடமுள்ள நல்ல அம்சங்களைப் பாராட்டி அவர்களை உற்சாகப் படுத்துவது அவசியம்.

58. போட்டி மனப்பான்மை இருக்கும் வரையில் மனநிறைவு உண்டாகாது. பணத்தாசையால்தான், மனிதர்கள் ஒருவரை ஒருவர் போட்டியாளராக கருதுகின்றனர்.

59. வெளியுலகத்தில் இருந்து மகிழ்ச்சி உண்டாவதாக மனிதன் தவறாக எண்ணுகிறான். உண்மையில் மனதிற்குள் தான் மகிழ்ச்சி இருக்கிறது.

60. வீண் பொழுதுபோக்கில் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து சேவையில் ஈடுபடுவது அவசியம்.

61. உள்ளத்தில் கள்ளம் இல்லாமல் குழந்தை போல இருக்க வேண்டும் என்று புராணங்கள் நமக்கு போதிக்கிறது.

62. பெரும்பாலும் மனிதன் கோபத்தினால் தனக்கும் மற்றவருக்கும் தீங்கு செய்து கொள்கிறான்.

63. எந்த விஷயத்திலும் அலட்சிய புத்தி கூடாது. அக்கறையுடன் செயல்படுவது அவசியம்.

64. யாரையும் அலட்சியப்படுத்தும் மனப்பான்மை கூடாது. அனைவரிடமும் கண்ணியத்துடன் நடக்க வேண்டும்.

65. மனதில் எழும் ஆசைகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டும். தேவைகளை அதிகப்படுத்திக் கொள்வது கூடாது.

66. குடும்பக் கடமையைச் சரிவர நிறைவேற்றாமல், பெருமைக்காக சமூக சேவையில் ஈடுபடுதல் கூடாது.

67. மனம் எதை தீவிரமாக சிந்திக்கிறதோ அதுவாகவே மாறி விடும் தன்மை கொண்டது. அதனால் நல்லதை மட்டுமே சிந்திக்க வேண்டும்.

68. கடவுளிடம் இருந்து பிரிந்ததால் மண்ணில் பிறவி எடுத்திருக்கிறோம். மீண்டும் நல்லதைச் சிந்தித்து அவரோடு சேர முயற்சிக்க வேண்டும்.

69. கபடம் சிறிதும் இல்லாத குழந்தை மனம் உள்ளவனாக வாழுங்கள்.
                                                                           
70. கடவுளுக்கு நன்றி சொல்லவே கோவில் வழிபாட்டு முறைகளை பெரியவர்கள் ஏற்படுத்தி வைத்தனர்.

71. கடவுளின் திருநாமத்தை ஜெபிப்பதே நாக்கின் பயன். இஷ்ட தெய்வத்தின் பெயரை ஜெபிப்பதால் பாவம் நீங்கி புண்ணியம் சேரும்.

72. கோபம் என்னும் எதிரிக்கு மனதில் இடம் கொடுக்காவிட்டால், எப்போதும் நிம்மதியாக வாழலாம்.

73. பந்தைச் சுவரில் எறிந்தால் அது நம்மை நோக்கித் திரும்புவது போல கோபமும் நமக்கு எதிராகத் திரும்பி விடும்.

74. ஆசையும், கோபமும் மனிதனை பாவத்தில் தள்ளும் சக்தி படைத்தவையாக இருக்கின்றன.

75. சிந்தித்துப் பார்த்தால் யார் மீதும் கோபம் கொள்ளும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர முடியும்.

76. பூமியை விட்டுச் செல்லும் முன் 'என்னிடம் பாவமே இல்லை' என்னும் உயர்நிலையை அடைய முயற்சி செய்.

77. அறியாமையால் மனிதன் மனதாலும், செயலாலும் பாவம் செய்யும் தீய சூழலுக்கு ஆளாகிறான்.

78. வாக்கு, மனம், உடல் இந்த மூன்றாலும் நற்செயலில் ஈடுபட்டால் தான் பாவத்தில் இருந்து விடுபட முடியும்.

79. உலகிலுள்ள எல்லாம் ஒன்றே என்ற தெளிவு வந்து விட்டால் தீய குணங்கள் யாவும் மறையும்.

80. துன்பத்தில் மட்டுமில்லாமல் கடவுளை இன்பத்திலும் மறப்பது கூடாது.

81. பிறரிடம் சொல்வதை விட துன்பத்தை கடவுளிடம் சொல்வதால் நிம்மதி கிடைக்கும்.

82. மனதில் உள்ளதை உள்ளபடி வெளிப்படுத்தவே கடவுள் மனிதனுக்குப் பேசும் சக்தியை கொடுத்திருக்கிறார்.

83. எதிலும் அதன் அளவு அறிந்து நடந்தால் மன அமைதியுடன் வாழலாம்.

84. நாம் நம்மால் முடிந்த நற்செயல்களைச் செய்து வந்தால் போதும். கடவுள் கைகொடுக்கத் தயாராக இருக்கிறார்.

85. எந்த செயலையும் அதற்குரிய முறையோடு தான் செய்ய வேண்டும். அதுவே நியாயமான வழியாகும்.

86. ஒவ்வொருவரின் பார்வைக்கும் நியாயம் வெவ்வேறானதாக தோன்றினாலும், பொது நியாயத்தைச் செய்வது நல்லது.

87. கடவுளைப் பூஜிப்பதால் மனம் சுத்தம் அடைவதோடு, புண்ணியமும் உண்டாகிறது.

88. பூஜை மட்டுமில்லாமல், சாப்பிடும் போது மனதிற்குள், 'கருணையால் எனக்கு அன்னம் கொடுத்த கடவுளுக்கு நன்றி' என்று சிந்திப்பது இன்னும் நல்லது.

89. உலகிலுள்ள அனைத்தும் கடவுளுக்கு சொந்தமானது. நாம் அனுபவிக்கும் எல்லாவற்றையும் அவருக்கு சமர்ப்பித்த பின்னரே பயன்படுத்த வேண்டும்.

90. பக்தியோடு உண்பதால் மனதில் நல்லெண்ணம் உண்டாகும். இந்த பழக்கம் நாம் நல்லவர்களாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.

91. உடலால் தீமை செய்வது போலவே, மனதால் தீமையைச் சிந்தித்தாலும் பாவமே ஏற்படும்.

92. மனிதன் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் விளைவு ஏற்பட்டே தீரும். சாஸ்திரம் இதை 'கர்ம கோட்பாடு' என கூறுகிறது.

93. அளந்து பேசினால் புத்தியில் தெளிவும், வாக்கில் பிரகாசமும் உண்டாகும்.

94. 'மவுனம் கலக நாஸ்தி' என்பர். மவுனமாக இருந்தால் கலகம் உண்டாகாது என்பது இதன் பொருள்.

95. பக்தி மனதில் வேரூன்றினால் பகைவன் மீதும் அன்பு செலுத்தும் பண்பு வரும்.

96. அன்றாடம் கடவுளைத் தியானம் செய்யப் பழகினால், மனம் பாவ விஷயங்களில் ஈடுபட வாய்ப்பிருக்காது.

97. மாணவன் கல்வியை பணிவுடன் கற்க வேண்டும். பணிவு இல்லாத கல்வியால் உலகிற்கு பயன் உண்டாகாது.

98. இறைவனின் இருப்பிடமான மனதைப் பாதுகாக்க தினமும் தியானம் செய்யுங்கள்.

99. எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு நன்மை செய்வது புண்ணியம். சுயநலத்துடன் ஆசையால் செய்யும் அனைத்தும் பாவம்.

100. நற்செயலில் ஈடுபடுபவர்களைக் கடவுள் ஒருபோதும் கைவிட மாட்டார்.

Monday, 6 May 2019

சிவாலயங்களில் கூட்டம்

இன்றைக் கெல்லாம் செவ்வாய், வியாழன், 
சனிக் கிழமைகளில்,

சிவாலயங்களில் கூட்டம் 
நிரம்பி வழிகிறது.

அடடே !
இத்தனை கூட்டமா 
என்று,

நம் மனதுக்கும் உற்சாகம் 
தொற்றிக் கொள்ள ஆலயத்துக்குள் நுழைந்தால்,

என்னடா
இது ?
நமக்கு முன்னே இங்கே  கோயிலில்
நுழைந்தவர்கள் என்ன ஆனார்கள் ?

இறைவன்  சன்னதியில் யாரையுமே 
காணோமே!

வந்த கூட்டம் தான் எங்கே ? மாயமாய் 
மறைந்து போனார்களா ?

கண்கள் அங்குமிங்கும் சுழலும் போது தான் தென்படுகிறது. அட....

இராகு கால துர்க்கை,,
தெற்கு கோட்டத்து 
தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சன்னதிகளில் 
எள் விழ இடமில்லை !

ஆகா…. 
நவக்கிரக சன்னதியில் தான் எத்தனை 
கூட்டம் !
கடலை மாலைகளா ! எள்ளெண்ணெய் தீபமா !
ஒன்பது தடவை பிரதட்சணமா !

நிமிடத்துக்கு ஒரு அலங்காரம், விநாடிக் கொரு அர்ச்சனை!

குரு பகவான், சனி பகவான்கள் எத்தனை அழகாகக் காட்சி அளிக்கிறார்கள் !

ஆனால்,
இங்கே , இறைவன் சன்னதி முன் ? 
சுத்தம் !
ஒரு ஈ, காக்கா கூட இல்லை ! 

என்ன தானய்யா நடக்கிறது இங்கெல்லாம் ?

நீங்கள் வழிபடும் சிவனை விட சக்தி 
வாய்ந்தவர்களா அந்த நவக்கிரகங்கள் ? எதற்காக இப்படி அஞ்சி நடுங்குகிறீர்கள் ?

"நாமார்க்கும் குடியல்லோம்"  என்று முழங்கிய 
நாவுக்கரசர் பரம்பரையில் தோன்றி விட்டு "

“ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
அடியாரவர்க்கு மிகவே” என்று 
உரத்துச் சொன்ன சம்பந்தர் மரபில் 
தோன்றி
விட்டு,

சில்லாண்டிற் சிதையும் 
சில தேவர்களை நாடிப் போய் வீழ்ந்து 
கிடக்கிறீர்களே !

உங்களைச் சொல்லிக் குற்றமில்லை ! 
நவக்கிர கங்களை,
ஏதோ அஞ்சத்தக்க 
தெய்வங்கள் போல் காட்டி, அச்சுறுத்தி, 

தோஷ பரிகாரம் செய்யணும், அது செய்யணும் இது செய்யணும் என்று வற்புறுத்தி,

உங்களை யெல்லாம் தவறாக வழி நடத்தும் சில பிரபல ஆன்மீக வியாபர பத்திரிகைகள்,

ஆன்மீக வியாபார பேச்சாளர்கள்,

விதவிதமான கலர் கலராக சால்வை பக்தி பழ வேஷத்தில், வண்ண வண்ண கலரில் கண்களே கூசும்  நிறங்களில் ஆடை அணிகலன்
களோடு, ஆளாலுக்கு ஒருவிதமாக புளுகும் ஜோதிடர்களை
சொல்ல வேண்டும் !

சோதிடம் ஒரு அருங்கலை ! மறுக்க
வில்லை!

நல்லதோ, கெட்டதோ, நடக்கப் போவதை 
அறிந்து கொள்ளும் ஆவலில், சோதிடர்களை 
நாடுவதையோ, சுப காரியங்களுக்கு நல்ல 
நாள் பார்க்க, அவர்களைத் 
துணைக் கழைப்பதையோ, தவறென்று 
கூறவில்லை.

ஆனால், திருக்கோயில் 
வழிபாடு களிலேயே சோதிட நம்பிக்கை 
மூக்கை நுழைப்பதை, எந்த வகையிலும் 
ஏற்றுக் கொள்ள முடியவே முடியாது !

ஆயிரத்து முன்னூறு வருடங்களுக்கு முன்பே 
சம்பந்தர் பாடிவிட்டார் ஐயா !

இறை
நம்பிக்கை கொண்ட எவரையுமே, நாளும் கோளும் எதுவுமே செய்யாது என்று பின்னே ? எதற்காக இத்தனை அச்சம் ?

ஆழ்ந்து பார்த்தால் ஒன்று மட்டும் 
தெளிவாகிறது. இப்படி தோஷ பரிகாரம், 
கிரகப்
பெயர்ச்சி,
என்று ஆயுளைக் கழிக்கும் 
எல்லோருமே தன்னம்பிக்கை அற்றவர்கள் ! 

எடுத்ததற்
கெல்லாம் அஞ்சி நடுங்கும் கோழைகள் !

உங்களைக் ஏளனம் செய்வதற்காக 
இதைக் கூறவில்லை!

தயவு செய்து உண்மையை உணர்ந்து 
கொள்ளுங்கள்.

இன்றைக்கும் மிகப் பழைய ஆலயங்களுக்குச் 
சென்றீர்களே
ஆனால்,

அங்கே, நவக்கிரக 
விக்ரகங்களே இருக்காது !

அப்படியும் 
இருக்கின்ற
தென்றால் அது மிக மிக அண்மையில் கட்டப்
பட்டதாகவே இருக்கும் !

சுமார் 500 வருடங்களுக்கு முன்பு எந்த 
சிவாலயங்
களிலுமே நவக்கிரக சன்னி
தானங்கள் இருந்த
தில்லை.

அந்தந்த சிவாலயங்கள் யாரால் 
வழிபடப்
பட்டதோ அந்த மூர்த்தி மட்டும் 
தனியாக பிரதிஸ்டை செய்யப்
படிருந்தது.

உதாரணமாக சனி, திருநள்ளாறில் 
சிவ பெருமானை வழிபட்டு அருள் பெற்றதனால் அந்த மூர்த்தியை மட்டும் விசேஷமாக பிரதிஷ்டை பண்ணி இருந்தனர் .

இது நம் நாயன்மார்கள் தோன்றிய தலங்களில் அவர்களின் விசேஷ சந்நிதிகள் அமைவது போல..

திருநள்ளாறு இன்று சிவன்கோயில் இல்லை !

அது சனி பகவான் கோயில், திங்களூர் 
சிவன் கோயில் இல்லை,
அது சந்திரன் 
கோயில் ! வைத்தீசுவரன் கோவில் 
சிவன் கோயில் இல்லை,
அது செவ்வாய் 
கோயில் ! இப்படித்தான் இன்றும் அவை பிரபலம் பெற்று விளங்குகின்றன.

நவக்கிரகங்கள் இறைவன் ஆணைக்குக் 
கட்டுப்பட்டவை !

இறைவனின் பரிவாரம் என்ற வகையில், அவையும் நம் வணக்கத்திற்
குறியவை !

அவை ஒரு மானிடனின் பிறப்பிலிருந்து இறப்பு வரை ஆதிக்கம் செலுத்துபவை !

உண்மை தான் !

ஆனால்,
ஆணை செலுத்து
பவனிடமே 
அடைக்கலம் புகுந்தால்,
அவை நம்மை என்ன 
தான் செய்து
விட முடியும் ?

அதை விடுத்து, 
கிரகங்களை ஆராதித்துக் கொண்டிருப்பது, 

நமக்கு அருள்வதற்காக காத்திருக்கும் 
இறைவனையே அவமதிப்பதே போலாகும்
அல்லவா ???

கோளறு பதிகம், திரு நீலகண்டப் பதிகம், 
திருத்தாண்டகம் போன்ற திருப்பதிகங்கள், நம் எத்தகைய ஆபத்துக்
களையும், 
துன்பங்களையும் நீக்கக் கூடியவை.

அவற்றை சிக்கெனப் பிடித்துக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

மேற்படி பதிகங்களையும், அந்தந்த 
நவகிரகங்கள் வழிபட்ட பரிகார தலங்களில் 
நாயன்
மார்களால் பாடப்பட்ட
தேவார 
திருப்பதிகங்களையும் பாடி மூலவரான 
சிவபெருமானை வழிபடுவதை
விட நம் இடர் 
களைவதற்கான உபாயமே வேறு இல்லை 
என்பதை நன்றாக தெளிவாக
தெரிந்து கொள்ளுங்கள்.

மூல மூர்த்தியை வழிபட்ட பின்பு தான் 
நவகிரகங்களை வழிபடுவது ஏற்புடையது.

மூலமூர்த்தி
யாகிய சிவபெருமானை 
வழிபடாமல் செய்யும் நவக்கிரக வழிபாட்டால் 
யாதொரு பலனும் என்றுமே இல்லை.

தோஷ நிவர்த்தி பரிகாரம்,
அது, இது என்று 
கொட்டும் பணத்தை,

வசதி குறைந்த  பழைய
சிவாலயங்களில் தொண்டு செய்வதற்கும், 

சிறிய சிதிலமடைந்த சிவாலயங்களை 
புனரமைப் பதிலும், சிவனடியார்
களுக்கு 
உதவுவதிலும் செலவழித்தால், 
சிவபுண்ணி
யம் பெருகி வந்து 
இம்மையிலும், மறுமையிலும் நம்மை காத்து 
இன்பம் தரும்.

ஏதாவது ஏழை எளியவர்களுக்கு 
உதவுவதிலும், முதியோர் இல்லம், 
குழந்தைகள் காப்பகம் என்று எங்காவது போய் அன்னதானம், ஆடைதானம் செய்வதிலும் செலவழியுங்கள்.

வயிறும் மனமும் நிறைந்து, நாத்தழுதழுக்க,

“நீங்க நல்லாயி ருக்கணும் ஐயா, அம்மா” என்று அவர்களில் ஒரே ஒருவர் மனதார நினைத்தாலும் போதும்.

அந்த 
வாழ்த்தே சிவன் ஆணையாய், உங்களைப் 
பற்ற வரும் சனிபகவானை ஓட ஓட 
விரட்டி விடுமே!!!

ஆலயங்களில் பெரிய பெரிய பொறுப்பில் 
இருப்பவர்கள்,

சிவாச்சாரி யார்கள் தயவு 
செய்து இதில் கூடிய கவனமெடுங்கள்!

ஏதோ 
ஆலயத்துக்கு வருமானம் வருகிறதே 
என்பதற்காக, ஈசன் முன்னிலை
யிலேயே 
சிவத்துரோகம் நிகழ்வதற்கு
ஒருபோதும் தயவு செய்து 
அனுமதிக்
காதீர்கள் !

"நமது சமய ஒழுக்கத்தை பேணாமையே 
புற சமய மதமாற்றங்
களுக்கான காரணம்.

நாமும் நலமாக வாழ்ந்து ந்ம் சமயத்தையும் 
வாழ வைப்போம்"

மேன்மை கொள் சைவ சமய நீதி விளங்குக 
உலகமெல்லாம்.
சிவாயநம,
ஓம் நமச்சிவாய.