WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Friday 15 April 2016

வாஸ்து மனையடி சாஸ்திரம்



ஜோதிடம்
வாஸ்து நாளில் பூமிபூசை செய்தால் சிறமமின்றி கட்டிட பனிகள் நிறைவடையும் பூமிபூசை செய்யும் நேரம் அந்தந்த ஊரின் சூரிய உதயத்தின்படி தேர்வு செய்வதால் உங்களுக்கு அருகிலுள்ள ஜோதிடரை அனுகி சரியான வாஸ்து பூசை நேரத்தை தெறிந்த்து கொள்ளவும்.  யோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.
.
வாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடிசாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன். இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.
விதிமுறை 1
முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனை  வாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்கு பவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடு பவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.
விதிமுறை 2
மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் எளிமையாக எழுதியுள்ளேன்.
6
-8-10-11-16-17-20-21-22-26-27-28-29-30-32-33-35-36-37-39-41-42-45-50-52-54-56-59-60-64-66-68-71-72-73-74-75-77-79-80-84-85-88-89-90-91-92-94-95-97-99-100  
இவை அனைத்தும் அறைகளின் உள் அளவுகளாக அமைக்க வேண்டும். இருந்தாலும் நம்மிடம் உள்ள இடத்திற்கு சரியாக இந்த அளவு வராத நிலையில் மூன்று அங்குலம் கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளலாம்.
விதி முறை 3
அறைகளின் நீளம் அதிகமாகவும் அகலம் குறைவாகவும் அமைக்க வேண்டும். அதில் யோகம் தரும் சில நீள அகல முறைகள், 6 அடி அகலம் 8 அடி நீளமும், 8அடி அகலம் 10 அடி நீளமும், 10 அடி அகலம் 16 அடி நீளமும், 16 அடி அகலம் 21 அடி நீளமும், 21 அடி அகலம் 30 அடி நீளமும், 30 அடி அகலம் 37 அடி நீளமும், 37 அடி அகலம் 50 அடி நீளமும், 39 அடி அகலம் 59அடி நீளமும், 42 அடி அகலம் 59 அடி நீளமும், 50 அடி அகலம் 73 அடி நீளமும், 60 அடி அகலம் 80 அடி நீளமும், இதில் காட்டியது போல் சரியான அளவில் அறைகள் அமைத்தால் மிகவும் யோகம் தரும். இந்த அளவுகள் தவீர விதிமுறை 1-ல் கூறிய மற்ற மனையடி அளவுகள் கொண்டும் அறைகள் அமைக்கலாம். அது சுமாரான பலங்களைத் தரும்.
விதிமுறை 4
6
அடிக்கு குறைவாக கழிவறை குளியலறை மட்டும் அமைத்துக் கொள்ளலாம் மற்ற அறைகள் அமைக்கக் கூடாது. கட்டிடத்திற்கும் காம்பவுண்ட் சுவருக்கும் இடைவெளி விடும் போது குறைந்த பட்சம் 3 அடியும் அதற்குமேல் போகும்போது விதிமுறை 1-ல் கூறியுள்ள படி யோகம் தரும் அடிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் .
விதிமுறை 5
போர் அல்லது கிணறு வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் மட்டும் தான் அமைக்க வேண்டும் மற்ற திசைகள் ஆகாது.நாம் கட்டிடம் கட்டும் இடத்தில் எட்டு திசையில் எந்த பாகத்தில் நீரோட்டம் இருந்தாலும் வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத் தில் போர் அல்லது கிணறு அமைக்கும் போது நீரோட்டம் பள்ளத்தை நோக்கி பாய ஆரம்பித்துவிடும். அதனால் கண்டிப்பாக வடக்கு ஈசான்யம் அல்லது கிழக்கு ஈசான்யத்தில் மட்டும் போர் அல்லது கிணறு அமைக்கவும்.எல்லாவிதமான கட்டிடத்திற்கும் இது பொது வானது. ஆனால் விவசாய நிலத்திற்கு இது பொருந்தாது.விவசாய நிலத்தில் போர் அல்லது கிணறு அமைக்கும் போது அருகில் உள்ள மனையடி சாஸ்திரம் வாஸ்து அறிந்தவரின் ஆலோசனைப்படி அமைத்துக் கொள்ளுங்கள்.
விதிமுறை 6
கழிவு அறை படுக்கை அறையில் வாயு பாகத்தில் அமைத்துக்கொள்ள வேண்டும். அதன் கழிவுத் தொட்டி மொத்த கட்டிடத்தின் வாயு பகுதியில் மட்டுமே அமைக்க வேண்டும். மற்ற திசைகள் ஆகாது. கழிவுத் தொட்டிக்கு மேலையும் கழிவறை அமைத்துக் கொள்ளலாம்.
விதிமுறை 7
எந்த திசை தலவாசல் வீடாக இருந்தாலும் சமையலறை மொத்த வீட்டின் அக்னிப் பாகத்தில் மட்டும் அமைக்க வேண்டும். மற்ற திசைகள் ஆகாது.சமையல் செய்பவர் கிழக்கு பார்த்து நின்று சமையல் செய்யுமாறு சமையல் மேடை அமைத்துக் கொள்ளவும்.மற்ற திசைகள் பார்த்து நின்று சமையல் செய்யக் கூடாது.
விதிமுறை 8
மாடிப்படிகள் மேற்குப் பாகம் அல்லது தெற்குப்பாகம் அல்லது கன்னி பாகத்தில் மட்டுமே அமைக்க வேண்டும். மற்ற திசைகளில் அமைக்கக் கூடாது. படியில் ஏறும் பொழுது மேற்குபார்த்து அல்லது தெற்கு பார்த்து ஏறும் வண்ணம் முதல் படியை அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதிமுறை 9
எந்த திசை தலவாசல் கொண்ட வீடாக இருந்தாலும் ஈசான்ய அறை பெரிய சன்னல்கள் பயன்படுத்தி கட்ட வேண்டும்.அந்த அறையில் கனம் கொண்ட பொருட்கள் வைத்து அடைத்து வைக்கக் கூடாது. படுக்கை அறையாகவும் பயன்படுத்தக் கூடாது. குழந்தைகள் பெரியவர்கள் படிக்கும் அறையாக பயன்படுத்தலாம்.நல்ல கல்வி வளம் பெருகும். அந்த அறை கோவிலைப்போல் எப்பவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அந்த அறையில் கிழக்குப் பார்த்து சாமிப் படங்கள் வைத்து பூஜை அறையாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

விதிமுறை 10
படுக்கை அறை மேற்குப் பாகம் அல்லது தெற்குப் பாகத்தில் மட்டும் அமைக்க வேண்டும். சிறிய வீடு என்றால் கன்னி பாகம் அல்லது வாயுப்பாகத்தில் அமைத்துக்கொள்ளலாம்.தெற்கு அல்லது மேற்கு மட்டுமே தலை வைத்து படுக்கும் வண்ணம் படுக்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
விதிமுறை 11
பலமாடிகள் கட்ட வேண்டும் என்றால் கீழ் தளத்தின் உயரத்தைவிட மேல் தள உயரம் குறைந்தப்பட்சம் ஒரு அடியாவது குறைவாக உள்ளவாறு அமைக்க வேண்டும்.
விதிமுறை 12
தண்ணீர்த் தொட்டி தரையில் அல்லது தரைக்குக் கீழ் அமைக்க வேண்டும் என்றால் வடக்கு பாகம் ஈசான்ய பாகம் கிழக்கு பாகம் ஆகியவற்றில் மட்டுமே அமைக்க வேண்டும். மற்ற பாகங்களில் அமைக்கக் கூடாது. வீட்டின் மேல் அமைக்க வேண்டும் என்றால் மேற்குப்பாகம் அல்லது தெற்குப்பாகத்தில் மட்டுமே அமைக்க வேண்டும். மற்ற பாகங்களில் அமைக்க கூடாது. கண்டிப்பாக கன்னி பாகத்தில் அமைக்கக் கூடாது.
விமுறை 13
எந்த திசையில் தல வாசல் அமைந்தாலும் தல வாசல் அமைக்கும் அறையில் சரியாக நடுப்பாகத்தில் வாசல் நிலை அமையுமாறு அமைக்க வேண்டும். நிலைக்கு இரு புறமும் சன்னல்கள் கண்டிப்பாக அமைக்க வேண்டும். வீட்டின் உள்ளே உள்ள அறைகளில் வசதிக்கு தகுந்தவாறு வாசல் அமைத்துக் கொள்ளலாம். கதவு நிலை இல்லாமல் எந்த அறையும் அமைக்கக் கூடாது.
விதிமுறை 14
வீட்டின் நிலை, சன்னல்,  கதவுகள் ஒரே ஜாதி மரத்தில் அமைத்துக் கொள்வது மிகவும் யோகம் தரும்.இரு ஜாதி மரங்களில் அமைத்துக் கொள்வதும் மிகவும் யோகம் தரும்.கண்டிப்பாக இரு ஜாதி மரங்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது. அது மிகப்பெரிய கெடுதல் செய்யும் . கவனம் தேவை.
விதிமுறை 15
வீட்டிற்கு எந்த பாகத்திலும் பொதுச்சுவர் வரக்கூடாது. காம்பவுண்ட் சுவராக இருந்தால் தெற்கு அல்லது மேற்குப் பாகத்தில் மட்டும் பொதுச் சுவர் வரலாம். கண்டிப்பாக வடக்கு அல்லது கிழக்கு பாகத்தில் பொதுச் சுவர் அமையக்கூடாது. தொழிற்கூடம், வியாபார இடங்களுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
விதிமுறை 16
வியாபார ஸ்தலம் தொழிற்கூடத்திற்கு தலவாசல் மேற்கு அல்லது தெற்கு பார்த்து அமைத்தல் மிகவும் யோகம் தரும். மற்ற திசைகள் சுமாரான யோகம் தரும்.வீடு என்றால் வடக்கு அல்லது தெற்கு பார்த்து தலவாசல் அமைத்தால் மிகவும் யோகம் தரும். கிழக்குப் பார்த்து தலவாசல் அமைத்தால் சுமாரான யோகம் தரும். மேற்குப் பார்த்து வீடுகளுக்கு தலவாசல் அமைக்கக் கூடாது.
விதிமுறை 17
கிழக்கு பார்த்த கோவிலும், மேற்கு பார்த்த அன்னதானக் கூடமும், வடக்கு பார்த்த பொது சத்திரங்களும், மேற்கு தெற்கு பார்த்த வியாபார தொழிற்கூடங்களும், வடக்கு தெற்கு பார்த்த வீடுகளும் அமைத்துக் கொள்வது மிகவும் யோகம் தரும்.
விதிமுறை 18
வீடு வியாபார ஸ்தலம் தொழிற்கூடம் இவை அனைத்திலும் எல்லா பாகத்து அறையிலும் பூஜை அறைகள் அமைத்துக் கொள்ளலாம். சுவாமிகள் படம் கிழக்குப் பார்த்து அமைக்க வேண்டும். சுவாமியின் படத்திற்கு இடது பாகத்தில் விளக்கு வைக்க வேண்டும். வீடாக இருந்தாலும் வியாபார ஸ்தலமாக இருந்தாலும் தொழிற்கூடமாக இருந்தாலும் மாலை 5.45 க்கு மேல் சுத்தமான பசு நெய் தீபம் ஏற்றி 45 நிமிடங்கள் பாதுகாப்பாக தீபம் எரியும் வண்ணம் தினசரி வழிபட மஹாலட்சுமி யோகம் அமையும்.எந்த் கட்டிடமாக இருந்தாலும் புதுமனை புகும் போது கண்டிப்பாக கணபதி ஹோமம் செய்ய வேண்டும். பின்பு அதே மாதத்தில் ஆண்டுக்கொருமுறை கணபதி ஹோமம் செய்து வர பலவித யோகங்களை பெறலாம்.புதிய வீடு கட்டுபவர்கள் மேலே உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்தி 100% வாஸ்து பலமுள்ள வீட்டை அமைத்துக்கொள்ளவும்.பழைய வீட்டில் உள்ளவர்கள் இதில்உள்ள படி மாற்றம் செய்து கொள்ளவும்.
ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம், பார்க்கப்படும், ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம், பிரசன்னம் பார்க்கப்படும், ஜாதகம் கணித்து தரப்படும். கணபதிஹோமம், கிரகபிரவேசம், ருதுசாந்தி, நாமகரணம், ராகு-கேது, செவ்வாய், சனி, சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும், திருமணதடை, புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.
பூஜைக்குறிய யந்திரம்:
கணபதி யந்திரம், லட்சுமிகுபேர யந்திரம், சுதர்ஸன யந்திரம், ஷண்முக யந்திரம், அனுமான் யந்திரம், வியாபாரவிருத்தி யந்திரம், காரிய சித்தி யந்திரம், ஸ்ரீசக்கர யந்திரம், மஹாலட்சுமி யந்திரம், பைரவ யந்திரம், பிரத்தியங்கரா யந்திரம், வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்:
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து வழங்கப்படும்,
இந்த யந்திரம் பெறவிரும்பும் அன்பர்கள். கோத்ரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்

ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்

ஜோதிடர், புரோகிதர்.
G.V. மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
Mobile. 7092103071
Mobile. 7092103072
WhatsApp No 9444226039
https://neelamatrimony.wordpress.com/

தொடர்பு கொள்ளவும். மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனைகளை தெளிவாக குறிப்பிடுடவும்.


1 comment:

  1. பெரும்பாலும் கன்னி பாகத்தில் மேல்நிலை நீர் தொட்டிகள் அமைக்கிறார்கள்

    நீங்கள் கன்னி பாகத்தில் அமைக்க கூடாது என்று சொல்லி இருக்கிறீர்கள்

    ReplyDelete