WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Thursday 15 January 2015

ஆதிசங்கரர்


ஆதிசங்கரர்
இந்து மதத்தில் மட்டும் முன்பு 72 பிரிவுகள் இருந்தன. ஒவ்வொரு பிரிவினருக்கும் தாங்கள் விரும்பும் தெய்வமே முதற்கடவுள் என்கிற எண்ணம் இருந்தது. இதனால் இந்தப் பிரிவுகளிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்பட்டன. இந்தப் பிரச்சனைகளைக் குறைக்க முயன்றதுடன் 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பல பிரிவுகளை இணைத்தும், சில பிரிவுகளைத் தவிர்த்தும் முடிவில், “சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்என்று வகைப்படுத்தியதுடன், அத்வைதம் எனும் கொள்கையை வலியுறுத்திய ஆன்மிக மகான் ஆதிசங்கரர். இந்த மகானைப் பற்றி அறிந்து கொள்வோமா
கேரள மாநிலத்தின் பூர்ணா நதிக்கரையில் காலடிஎன்ற ஊரில் இறைவழிபாட்டிலும், தான தருமங்கள் செய்வதிலும் புகழ் பெற்று விளங்கிய சிவகுரு, ஆர்யாம்பாள் தம்பதிகளுக்கு, பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இருந்து வந்தது. இதனால் இத்தம்பதியர்கள் மன வருத்தமடைந்தனர்.
அவர்கள் திருச்சூருக்குச் சென்று வடுகநாதன்என்ற பெயரில் அங்கு குடிகொண்டிருக்கும் சிவபெருமானிடம் தங்களுக்குக் குழந்தை வரம் தர வேண்டி ஒரு மண்டலம் விரதம் இருந்தனர். இவ்விரதத்தில் மனம் மகிழ்ந்த சிவபெருமான் அவர்கள் முன்பு தோன்றினார். அவர்களிடம் உங்களுக்குத் தீய குணங்களுள்ள பல குழந்தைகள் வேண்டுமா அல்லது நற்குணமும் இறைபக்தியும் கொண்டு, பலருக்கும் வழிகாட்டியாய் விளங்கக் கூடிய ஒரு குழந்தை வேண்டுமா?” என்று கேட்டார். இதைக் கேட்ட தம்பதியர்கள் இருவரும் சேர்ந்தவாறு, “எங்களுக்கு நற்குணமுடைய ஒரு குழந்தை போதும்என்றனர். 
சிவபெருமானும், “உங்கள் விருப்பப்படியே நற்குணமுடைய ஒரு குழந்தை உங்களுக்குப் பிறக்கும். ஆனால் அந்தக் குழந்தை குறுகிய காலமே உயிர் வாழும். அந்தக் குறுகிய காலத்தில் உலகம் போற்றும் மகானாகவும் இருப்பார்.என்று சொல்லி மறைந்தார். 

சிவபெருமான் அளித்த வரத்தின்படி 788 ஆம் ஆண்டு வசந்த ருதுவில் வைசாக சுக்லபக்ஷத்தின் ஐந்தாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தில் அந்தத் தம்பதியருக்கு ஒரு குழந்தை பிறந்தது. அத்தம்பதியரும் அந்தக் குழந்தைக்கு சிவபெருமானின் திருநாமங்களில் ஒன்றான எல்லா நலனும் அளிப்பவர்என்கிற பொருளிலான சங்கரன்என்கிற பெயரைச் சூட்டினர். 
சங்கரன் சிறு குழந்தையாக இருந்த போதே மிகச்சிறந்த அறிவுத் திறனுடன் விளங்கினார். சங்கரனுக்கு ஏழு வயதான போது அவர் தந்தை காலமானார். தந்தை காலமான பின்பு அவரது தாய் அவருக்கு உபநயனம் செய்வித்து அக்கால வழக்கப்படி குருகுலத்திற்கு வேதபாடங்கள் கற்றுக் கொள்ள அனுப்பினார். குருகுலத்தில் படித்த போது, மாணவர்கள் தினமும் பிச்சை எடுத்து வந்து அதை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைத்து, அதன் பின்பு உண்பதுதான் வழக்கம்.
ஒரு முறை சங்கரர் ஏகாதசி விரதம் முடித்து விட்டு, மறுநாள் துவாதசி நாளில் பிச்சைக்குச் சென்றார். அயாசகன் என்னும் ஏழை அந்தணர் வீட்டின் முன்பு நின்று, “எனக்குப் பிச்சை இடுங்கள்என்று அழைத்தார். வீட்டிலிருந்து எந்தப் பதிலுமில்லை. பிச்சை எடுக்கும் போது மூன்றுமுறை அழைக்க சாஸ்திரம் அனுமதிக்கிறது. இதனால் மீண்டும் இருமுறை எனக்குப் பிச்சை இடுங்கள்என்று அழைத்தார். 
பிச்சை கேட்கும் குழந்தைக் குரலைக் கேட்டு, அந்த ஏழை அந்தணனின் மனைவி வாசலுக்கு வந்து பார்த்தார். அங்கு பச்சிளம் பாலகனான சங்கரர் பிச்சைப் பாத்திரத்துடன் நின்று கொண்டிருந்தார். பிச்சை கேட்கும் பாலகனைப் பார்த்த ஏழையான அவள், தன் கணவர் ஏகாதசி விரதமிருந்து விட்டு துவாதசியன்று விரதம் முடிப்பதற்காக சாப்பிட வைத்திருந்த நெல்லிக்கனியை எடுத்து வந்து அந்தப் பிச்சைப் பாத்திரத்தில் இட்டாள். 

தனக்காக, கணவனுக்கென வைத்திருந்த ஒரே ஒரு நெல்லிக்கனியையும் நல்ல மனதுடன் பிச்சை அளித்த அந்தப் பெண்மணியின் ஏழமை நிலை கண்டு வருந்திய சங்கரர் திருமகளை வேண்டி, “கனகதாரா ஸ்தோத்திரம்என்ற துதியை இயற்றிப் பாட ஆரம்பித்தார். அவர் பாடி முடித்ததும் அந்த வீட்டின் கூரையிலிருந்து தங்க நெல்லிக்கனிகள் பல அந்த வீடு முழுவதும் சிதறி விழுந்தன. 
அன்றிலிருந்து சங்கரரின் அற்புதச் செயல்கள் தொடங்கின. முதுமை அடைந்த அவரது தாயால் ஆற்றிற்குச் செல்ல முடியவில்லை. இதைக் கண்ட அவர் தன் தாய் இருக்கும்படி ஆற்றைச் செல்ல வைக்க நினைத்தார். அதன்படி பூர்ணா நதியை அவர் தாய் இருந்த வீட்டிற்குப் பின்புறமாகச் செல்லும்படி பணித்தார். பூர்ணா நதியும் தன் போக்கை மாற்றி சங்கரர் வீட்டின் பின்புறமாகச் செல்லத் தொடங்கியது. 
சங்கரரின் அற்புதச் செயல்களைப் போலவே, இளம் வயதிலேயே அவரது புலமையும் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது. இதையறிந்த அத்தேசத்து மன்னர் சங்கரரை தன் அரசவையில் புலவராக்க விருப்பம் கொண்டார். ஒரு யானை மற்றும் விலையுயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்து அவரை அரசவைக்கு அழைத்து வர தன் மந்திரியை அனுப்பி வைத்தார். அந்தப் பரிசுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ள மறுத்த சங்கரர் தனக்கு அரசவைப் பணியை விட ஆன்மிகப் பணியே விருப்பம். எனவே மன்னரின் விருப்பத்தை நிறைவேற்ற இயலாதுஎன்று சொல்லி மந்திரியைத் திருப்பி அனுப்பினார். 
மந்திரி மன்னரிடம் சங்கரர் சொன்ன பதிலைச் சொல்லவும், மன்னருக்கு சங்கரரை நேரில் காணும் ஆவல் ஏற்பட்டது. மறுநாள் அவர் சங்கரரைப் பார்க்கப் புறப்பட்டார். அவர் சங்கரரிடம் பத்தாயிரம் பொற்காசுகள் மற்றும் சில நூல்களைப் பரிசாக வழங்கினார். சங்கரர் நூல்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு பொற்காசுகள் அனைத்தையும் அவரிடமே திருப்பி வழங்கினார். மன்னர் அவருடைய ஆன்மிக எண்ணத்தையும், அதற்கான செயல்பாட்டையும் பாராட்டி விடை பெற்றுச் சென்றார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சங்கரர் வீட்டுச் சூழலிலிருந்து வெளியேற விரும்பினார். ஆனால் சங்கரரின் தாய் வயதாகிவிட்ட நிலையில், மகனுக்குத் திருமணம் செய்து வைக்க விரும்பினார். இதற்காக மகனைத் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார். ஆனால் சங்கரர் அதற்கு மறுப்பு தெரிவித்து தான் சந்நியாசத்தை விரும்புவதாகத் தெரிவித்து வந்தார். சங்கரரின் தாய் அதற்கு சம்மதிக்கவில்லை.
இந்நிலையில் ஒருநாள் பூர்ணா நதியில் சங்கரரும் அவரது தாயாரும் குளிக்கச் சென்றிருந்தனர். அப்பொழுது ஒரு முதலை சங்கரர் கால்களைக் கவ்வி நீரினுள் இழுக்கத் தொடங்கியது. இதைப் பார்த்த சங்கரரின் தாய் பயந்து மகனைக் காப்பாற்றும்படி கூச்சலிடத் தொடங்கினார். அப்பொழுது தாயை அமைதிப்படுத்திய சங்கரர் தன் தாயிடம் தாயே! நீங்கள் என்னை சந்நியாசம் ஏற்க அனுமதித்தால், இந்த முதலை என்னை விட்டு விடும், இல்லாவிட்டால் அதற்கு இரையாகி விடுவேன்,” எனக் கதறினார்.

தன் பிள்ளை உயிர் பிழைத்தால் போதும் என்ற எண்ணத்தில் அவர் தாயும் சந்நியாசத்திற்கு அனுமதித்தார். அதன் பிறகு அந்த முதலை அழகான கந்தர்வனாக மாறியது. அவன் சங்கரரை வணங்கினான். சங்கரர் அன்று முதல் வீட்டைத் துறந்து ஞானியாகக் கிளம்பினார். 
அப்போது அவரது தாய் மகனிடம், தான் உலகைத் துறக்கும் காலத்தில் (மரணமடையும் நிலையில்) சங்கரர் எங்கிருந்தாலும் தாயிடம் வந்து சேர வேண்டும் என்பதுடன் மகனாகத் தாயின் இறுதிச் சடங்குகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார். சங்கரரும் தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக உறுதியளித்து, தன் வாழ்வின் குறிக்கோளை நோக்கி, இமயமலை நோக்கிச் செல்லத் தொடங்கினார். 
சங்கரர் இமயமலை நோக்கிச் செல்லும் போது வழியிலிருந்த பல புனிதத் தலங்களுக்கும் சென்று வணங்கினார். இமயமலைக்குச் சென்ற அவர் பத்ரிநாத் பகுதியிலிருந்த கோவிந்த பகவத் பாதர் என்பவரைச் சந்தித்தார். அவர் மாண்டூக்ய, காரிக போன்ற உபநிடதங்களை எழுதிய கவுடபாதரின் சீடராவார். தனக்கென ஒரு குருவைத் தேடிக் கொண்டிருந்த சங்கரர் அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டு வேதபாடங்களைக் கற்றுக் கொள்ள முடிவு செய்தார்.
அவரிடம், தான் கேரளாவிலிருந்து வருவதாகவும், தன்னுடைய இளம் வயதில் தந்தை காலமான பின்பு தாயின் பராமரிப்பில் அருகிலுள்ள குருகுலத்திற்குச் சென்று வேதங்கள் சாஸ்திரங்கள் கற்றதையும் தெரிவித்தார். தனக்கு தாய் திருமணம் செய்து வைக்க விரும்பியதையும், தான் அதை மறுத்து ஆன்மிக வழியில் ஈடுபட விரும்பியதையும் தெரிவித்தார். இதற்காக ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த போது தன் காலை முதலை ஒன்று கடித்ததாகவும், அதிலிருந்து விடுபட அம்மாவிடம் அனுமதி பெற்று ஆபத்த சந்நியாசத்தை மேற்கொண்டதையும் தெரிவித்தார். தற்போது முழு சந்நியாச தீட்சை அளித்து வேதாந்தத்தைத் தனக்கு முழுமையாகக் கற்றுத் தரும்படியும் வேண்டினார். 
அவருடைய உண்மையான பேச்சைக் கேட்டு மகிழ்ச்சியுற்ற கோவிந்த பகவத் பாதர் அவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டு துறவறத்தில் உயர்ந்ததும், சிறந்ததுமான பரமஹம்ச சந்நியாச தீட்சைஅளித்து தாம் தம் குருவிடமிருந்து கற்றவற்றைப் போதித்தார். வேதங்கள் முழுவதையும் அவருக்குக் கற்றுக் கொடுத்ததுடன் அத்வைத சித்தாந்தத்தையும் எடுத்துச் சொன்னார். 
அத்வைத சித்தாந்தத்தில் உலகில் தத்தம் கர்ம வினையினால் தோன்றும் எல்லா உயிர்களுக்குள்ளும் உறையும் இறை தத்துவம் அல்லது ஆத்ம தத்துவம் ஒன்றே என்பதும், இறைவனும் ஆத்மாவும் ஒன்றே என்றும் கற்பிக்கப்படுகிறது. குருகுலவாசம் முடிந்த பின்னர் சங்கரரை பாரத நாடு முழுவதும் யாத்திரை மேற்கொண்டு அத்வைதக் கொள்கைகளை அனைவருக்கும் உணர்த்தும்படி கோவிந்த பகவத் பாதர் அறிவுறுத்தினார். 

குருவின் அறிவுறுத்தலுக்குப் பின்பு சங்கரர் காசி நோக்கிச் சென்றார். சங்கரர் காசியிலிருந்து தொடங்கி பாரதத்தில் பல சமயத் தலைவர்களுடன் சமயக் கருத்துக்களிலான விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி பெற்றார். அத்துடன் தன் குருவின் கட்டளைப்படி அத்வைதக் கொள்கைகளை நாடு முழுவதும் விளக்கிச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒருநாள் சங்கரர் ஆற்றுக்குக் குளிக்கச் சென்று கொண்டிருந்தார். அவரைப் புலையன் ஒருவன் பின் தொடர்ந்து வந்தான். அவன் பின்னால் நான்கு நாய்கள் வந்து கொண்டிருந்தன. அவனது கையில் கள் குடம் ஒன்று இருந்தது. கருப்பான அவன், குளித்து பலநாள் ஆனதால் அவனிடமிருந்து துர்நாற்றம் வீசியது. அவன் மாமிசத்தைச் சாப்பிட்டபடி சங்கரரை நெருங்கினான். 
இதைக் கண்ட சங்கரர், “டேய், விலகிப் போடா!என்று எச்சரித்தார். அவன் உடனே, “நீயும் கடவுள். நானும் கடவுள். எனக்குள்ளும் உனக்குள்ளும் ஒரே ஒளியே இருக்கிறது. நான் ஏன் உன்னைக் கண்டு விலக வேண்டும்?” என்று எதிர்க் கேள்வி கேட்டான். அப்போது சங்கரரின் உள்ளத்தில் ஞானஒளி தோன்றியது. இதையடுத்து மனீஷா பஞ்சகம்என்னும் பாடலைப் பாடினார். அப்போது அங்கு புலையன் வேடத்தில் வந்த சிவபெருமான் காசிவிஸ்வநாதராக மாறிக் காட்சியளித்தார். 
இந்நிகழ்ச்சியின் மூலம்தான் சங்கரருக்கு அத்வைத ஞானம் முழுமையாகக் கிடைத்தது. இதன் மூலம் சாதியும் பேதமும் கூடாது என்ற உண்மையையும், உருவத்தைக் கண்டு யாரையும் இகழக்கூடாது என்ற உண்மையையும் சங்கரர் மூலமாக இறைவன் உலகுக்கு உணர்த்தினார் என்று சங்கர விஜயம் போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஞானிக்கு பக்தி அவசியமா


ஒரு சமயம், ஆதிசங்கரர் ஆகாய வழியில் வானில் பறந்து சென்ற போது, மூவுலகிலும் இருப்பவரான நாரதர் எங்கோ வேகமாகச் செல்வதைப் பார்த்தார்.
அவசரமாக எங்கோ சென்று கொண்டிருக்கிறீர்களேஎன்று கேட்டார். 
இன்று ஏகாதசி. குருவாயூரப்பனை தரிசிக்க செல்கிறேன். நீங்களும் வாருங்களேன்என்று சங்கரரையும் அழைத்தார் நாரதர். 
விக்ரக ஆராதனை செய்வதும், நாமஜபமாக இறைவனின் பெயரை உச்சரிப்பதும் பாமரருக்குத் தான் தேவை. ஆத்மஞானம் பெற்றவர்களுக்கு தேவையல்லஎன்ற கருத்துடைய சங்கரர் அவருடன் செல்ல மறுத்துவிட்டு தன் ஆகாயப் பயணத்தைத் தொடர்ந்தார். 
குருவாயூர் கோயிலைக் கடந்து செல்லும் போது, சங்கரர் வானில் இருந்து கோயிலின் வடக்குவாசலில் போய் விழுந்தார். குருவாயூரப்பனின் லீலையை எண்ணி வியந்து, தன்னுடைய கருத்து தவறானது என்பதை உணர்ந்து வருந்தினார். பெருமாளிடம் தன்னை மன்னிக்கும்படி வேண்டினார்.
அவர் முன் தோன்றிய குருவாயூரப்பன், “ஞானிக்கும் பக்தி அவசியம்என்று எடுத்துக் கூறினார். நீலமணிவண்ணனான கண்ணனின் பெருமைகளை எண்ணி ஆதிசங்கரர் அவ்விடத்தில் 41நாட்கள் வரை தியானத்தில் ஆழ்ந்து குருவாயூரப்பனை வழிபாடு செய்தார். 
இன்றும் குருவாயூரப்பன் வீதி உலா வரும்போது ஆதிசங்கரர் வழிபட்ட இடத்தில் மேளதாளங்கள் இசைக்காமல் அமைதியாகக் கடந்து செல்கின்றனர். அப்போது குருவாயூரப்பனிடம் ஆதிசங்கரர் மன்னிப்பு கேட்பதாக ஐதீகம். (தொன்ம நம்பிக்கை). என்றும் சொல்கிறார்கள்.
அத்வைதம் மூலம் உலகிற்கு ஒரு புது ஒளி ஏற்றிய சங்கரர் தன் புலமையால் வேதாந்த சூத்திரங்களை எழுதிய பட்ட பாஸ்கராவை விவாதத்தில் வென்றார். இதுபோல் தண்டிக்கும், மயூராவிற்கும் வேதாந்தத்தைக் கற்பித்தார். அபினவ குப்தா, முராரி மிஸ்ரா, உதயணாசாரியர், தர்ம குப்தர், குமரில, பிரபாகரா போன்றோரையும் பல்வேறு இடங்களில் நடந்த விவாதங்களில் வென்றார். இப்படி நாட்டின் பல பகுதிகளிலும் தன் புலமையால் வெற்றியைப் பெற்று தன் கொள்கைகளை வலியுறுத்திச் சென்று கொண்டிருந்தார். அவருடன் விவாதத்தில் தோற்ற பலரும் அவருடைய சீடராக மாறினார்கள். 
இந்நிலையில் சங்கரர் மஹிஷ்மதியில் கர்மமீமாம்சத்தில் தேர்ந்தவரும், சந்நியாசிகளை வெறுப்பவருமான மண்டன மிஸ்ரர் என்பவரை சந்தித்தார். சங்கரர் மண்டன மிஸ்ரரை பொதுவான விவாதத்திற்கு அழைத்தார். விவாதத்திற்கு ஒப்புக்கொண்ட அவர் சகல சாஸ்திரங்களிலும் பண்டிதையான தம் மனைவி சரசவாணியை (பாரத தேவி என்றும் குறிப்பிடுவர்) நடுவராகக் கொள்ள சம்மதித்தார். சங்கரர் தோல்வியுற்றால் கிருகஸ்தாஸ்ரமத்தைத் தழுவி திருமணம் செய்து கொள்வதாகவும், மண்டன மிஸ்ரர் தோற்றால் தம் மனைவியிடமிருந்தே காஷாயம் பெற்று சந்நியாசியாக வேண்டும் என்றும் சபையோர் முன்னிலையில் இருவரும் ஒப்புக் கொண்டனர்.
இரவும், பகலுமாக மண்டன மிஸ்ரருக்கும், சங்கரருக்குமிடையே வாத விவாதம் பதினேழு நாட்களுக்கு தொடர்ந்தது. சரசவாணி இருவர் கழுத்திலும் மலர்ந்த புஷ்பங்களால் உருவாக்கப்பட்ட மலர் மாலைகளை அணிவித்து விட்டு தம் வேலைகளை கவனிக்கத் தொடங்கினார். கடைசியில் மண்டன மிஸ்ரர் அணிந்திருந்த மலர்மாலை முதலில் வாடத் தொடங்கியது. இதன் பின்பு மண்டன மிஸ்ரர் தம் தோல்வியை ஏற்றுக் கொண்டார். காஷாயம் தரித்து சங்கரரின் சீடரானார். 
இதைக் கண்ட சரசவாணி தம் கணவரின் பத்தினியான தம்மையும் வென்றால் தான் வெற்றி முழுமை அடையும் என்று கூறினார். முதலில் பெண்ணுடன் விவாதிப்பதா என்று சங்கரர் தயங்கினாலும், அவ்வம்மையார் சங்க கால மகளிரின் புலமையை பல மேற்கோள்களுடன் எடுத்துக்காட்ட பின்னர் சம்மதித்தார். சங்கரர் மேலும் பதினேழு நாட்கள் தொடர்ந்து விவாதித்து வெற்றி பெறும் நிலையில் இருந்தார். அப்பொழுது சரசவாணி பிரம்மசாரியான சங்கரரிடம் காம சாஸ்திரத்தைப் பற்றிக் கேள்வி கேட்டார். சந்நியாசியான சங்கரரால் அதற்குப் பதில் சொல்ல இயலவில்லை. 
சங்கரர் சரசவாணியிடம் தன் தோல்வியைத் தற்காலிகமாக ஒப்புக் கொண்டதுடன் தனக்கு ஒரு மாத காலம் அவகாசம் கொடுக்குமாறும் வேண்டினார். ஒரு மாத காலத்திற்குள் அவரின் கேள்விகளுக்குப் பதில் சொல்வதாகவும் கூறிச் சென்றார். சரசவாணியும் அதற்குச் சம்மதித்தார்.
அதன் பிறகு சங்கரர் தன் சீடர்களுடன் காசிக்குச் சென்றார். இல்லறவியலைக் கண்டறியவும், சிற்றின்பத்தின் எல்லையை அறியவும், மது, மங்கை, மோகம், காமம் போன்ற கலைகளை அறியவும், சந்நியாசியான தன் உடலால் இன்பம் எதுவும் அனுபவிக்கக் கூடாது என்றும் முடிவு செய்த அவர் பரகாய பிரவேசம் (கூடு விட்டுக் கூடு பாய்தல்) செய்ய முடிவு செய்தார். 

இதற்காகத் தான் பிரவேசிக்கப் போகும் உடல் கிடைக்கும் வரை காத்திருக்க முடிவு செய்து ஆத்ம யோகத்தில் அமர்ந்தார். சங்கரரின் யோக நிலையில் அந்த நாட்டு மன்னன் அமரூகன் என்பவன் அளவுக்கதிகமாக மது அருந்தியதால் மரணமடைந்தது தெரிந்தது. அவன் அதிகமாக மது அருந்துவதுடன் காமப்பித்து பிடித்து பல கன்னியர்களைக் கொண்டு வந்து இன்பம் அனுபவித்து வந்தவன் என்பதும் தெரிந்தது. 
உடனே தன் சீடர்களில் முக்கியச் சீடரான பத்மபாதர் என்பவரை அழைத்து, “இந்த நாட்டு மன்னன் காமுகன், பல கன்னியர்களுடன் இன்பமுற்றவன். மது அருந்துபவன். அளவுக்கதிகமாக மது அருந்தியதால் அவன் இன்று இறந்து விட்டான். அவன் உடலில் தான் பிரவேசிக்கப் போகிறேன்என்றார். 
இதைக் கேட்ட சீடர் பத்மபாதர், “தாங்கள் முற்றும் துறந்த சந்நியாசி மற்றும் ஞானி. தாங்கள் இறந்து விட்ட அந்த அரசன் உடலில் பிரவேசித்து அந்தப்புரத்து அழகிகளுடன் இருப்பதாலும், அரண்மனையில் கிடைக்கும் ஆடம்பர வாழ்க்கையில் வாழ்வதாலும் தங்கள் உண்மைத் தன்மைக்கு ஊறு ஏற்பட்டு விடாதா?” என்று கேள்விகளைக் கேட்டார்.
சங்கரர், “தேளாலும், பாம்பாலும் நமக்குப் பயம் உண்டாகிறது. நாமே தேளாகவும், பாம்பாகவும் மாறிவிடும் போது பயம் தேவையில்லை. நான் சரசவாணியின் கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டுள்ளேன். அதற்கு இதுவே சரியான வாய்ப்பு. அரசன் அமரூகன் உடலில் பிரவேசித்து அனுபவப்பூர்வமாக விடை அறிந்து கொள்வேன். ஒரு மாத காலத்திற்குள்ளாகவே என் உடலுக்குத் திரும்பி விடுவேன். அதுவரை இந்த உடலை அகோபில குகையில் பாதுகாப்பாக மறைத்து வைத்திருங்கள்என்று கூறியபடி கீழே படுத்தார். 
அந்த உடலிலிருந்து சங்கரரின் ஆவி பிரிந்து சென்று அரண்மனையில் இறந்து கிடந்த அரசன் அமரூகன் உடலுக்குள் பிரவேசித்தது. அமரூகன் உயிர் பெற்று எழுந்தான். அவனுக்குச் சிகிச்சையளித்த வைத்தியரும், அருகிலிருந்த அமைச்சரும் ஆச்சர்யமடைந்தனர். உடனே ராணி, அரசனும் தன் கணவனுமான அமரூகனைக் கட்டிப் பிடித்து ஆனந்தக் கண்ணீர் விட்டாள். அமரூகன் விரும்பும் மதுவை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக் கொடுத்தாள். அமரூகன் அதை வாங்கிக் கீழே ஊற்றி விட்டு இந்த விசத்தை இனி குடிக்க மாட்டேன் என்றான். ராணி மீண்டும் மீண்டும் ஊற்றிக் கொடுக்க அவனும் குடிக்க மாட்டேன் என்றவாறு கீழே ஊற்றிக் கொண்டேயிருந்தான்.
மரணத்துக்குப் பின்பு உயிர்த்தெழுந்த மன்னன் தன் எண்ணங்களாலும், குணநலன்களாலும் முற்றிலும் மாறியிருந்ததைக் கண்டு ராணிகளும், அமைச்சர்களும் மகிழ்ந்தனர். அரசனின் உடலில் இருப்பது அமரூகன் உயிரல்ல, வேறு ஏதோ ஒரு மகானின் உயிர் என்பதை உணர்ந்து கொண்டனர். மன்னனை அந்த மகானின் உயிருடன் அப்படியே வைத்துக் கொள்ள விரும்பினர். 
இதனால் சில தூதுவர்களை அனுப்பிச் சுற்றுப்புற காடுகளிலும், குகைகளிலும் யோக வல்லுனர், ஞானி ஒருவரின் உடல் எங்காவது ஒளித்து வைக்கப்பட்டுள்ளதா என்று தேடி அழிக்க உத்தரவிட்டனர். அவர்களும் உயிரற்ற உடல் எங்கிருந்தாலும் அழிக்கும் நோக்கத்துடன் சென்றனர். சர்வ சக்தி படைத்த மாயையின் வசமான சங்கரர் அரசிகளுடன் கூடி மகிழ்ந்து அம்ரூகன் பெயரால் அமரூகம் எனும் தனி காவியத்தையும் எழுதிக் கொண்டிருந்தார். இதனால் தாம் வந்த காரியத்தையும், தம் சீடர்களுக்கு அளித்த வாக்குறுதியையும் மறந்திருந்தார். 
சங்கரர் அமரூகனின் உடலில் பிரவேசித்து ஒரு மாத காலமாகக்கூடிய நிலையில் குரு வராமல் போகவே அவருடைய சீடர்கள் அரசவையை அடைந்தனர். அவர்கள் மன்னர் முன் சில தத்துவப் பாடல்களைச் சொல்ல சங்கரருக்கு பூர்வாசிரம நினைவுகள் திரும்பியது. தான் எழுதிக் கொண்டிருந்த அம்ரூத காவியத்தைச் சீடர்கள் கையில் கொடுத்து விட்டுத் தம் உடலைத் தேடிப் புறப்பட்டார். அம்ரூகன் உடல் கீழே விழுந்தது. இதற்குள் அரச தூதுவர்கள் அகோபில குகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சங்கரரின் உடலை எடுத்துச் சென்று எரியூட்டத் தொடங்கி இருந்தனர். இதையறிந்த சங்கரர் தன் யோக சக்தியினால் சிதையிலிருந்த தனக்குரிய உடலுக்குள் பிரவேசித்தார். அப்படியே சிதையில் எரிந்து கொண்டிருந்த தீ அணைந்திடவும் வேண்டினார். மழை பெய்து தீ அணைந்தது.
அதன் பிறகு சங்கரர் சிதையிலிருந்து எழுந்து வந்தார். தான் எழுதிய அம்ரூக காவியத்துடன் மீண்டும் மண்டன மிஸ்ரருடைய இல்லத்திற்குச் சென்று சரசவாணியின் எல்லாக் கேள்விகளுக்கும் தக்கவாறு பதிலளித்து வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்றதும் மண்டன மிஸ்ரர் மற்றும் அவரது மனைவி சரசவாணி இருவரும் சேர்ந்து தங்களுடைய செல்வம் அனைத்தையும் சங்கரருக்குக் கொடுத்தனர். தங்களைச் சீடராக ஏற்றுக் கொள்ளவும் வேண்டினர். சங்கரர் அதை அவ்வூரிலிருந்த ஏழை எளியவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் பகிர்ந்தளித்தார். மண்டன மிஸ்ரருக்கு சுரேஷ்வராச்சார்யா என்ற பெயரில் சந்நியாச தீட்சை அளித்து சிருங்கேரிக்கு அழைத்துச் சென்று அங்கு இருந்த மடத்திற்கு பீடாதிபதியாக்கினார். சரசவாணியை சிருங்கேரி மடத்தின் சாரதையாக இருக்கச் செய்தார். (மண்டன மிஸ்ரர், சரசவாணி ஆகியோர் பிரம்மா, சரசுவதி ஆகியோரின் அம்சம் என்று சொல்கின்றனர்) 
சங்கரர் என்றாலே அவர் சைவ அல்லது வைதிக மதத்திற்கு மட்டுமே ஆச்சார்யார் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் சங்கரரை ஷண்மத ஸ்தாபனாச்சார்யர்என்று சொல்வார்கள். அவர் காலத்தில் இந்து மதப் பிரிவுகளில் ஏகப்பட்ட வேற்றுமைகள் மற்றும் வேதத்தின் அடிப்படை ப்ரமாணத்தை ஏற்காத நிலையிருந்தது. மேலும் பெளத்த மற்றும் சமண சமயங்களால் பெருகிய வேற்றுமைகளால் இந்து மதம் அழிந்து போய்விடும் நிலையும் இருந்தது. இந்நிலையில் சங்கரர் இந்துமத பிரிவுகளிடையிலான சண்டை, சச்சரவுகளை குறைக்க முடிவு செய்தார். அவர் காலத்தில் இந்து மதத்தில் மட்டும் சுமார் 72 பிரிவுகள் இருந்தன. இந்த 72 பிரிவுகளையும் ஆராய்ந்து, பல பிரிவுகளை இணைத்தும், சில பிரிவுகளை ஒதுக்கியும் முடிவில், “சைவம், வைஷ்ணவம், காணாபத்யம், கெளமாரம், செளரம், சாக்தம்என்று முக்கியமான ஆறு வழிமுறைகளை வகைப்படுத்தினார். அவை;

1. சைவம் சிவனை வழிபடுபவர்கள் சைவர்கள் 
2. வைணவம் விஷ்ணுவை வழிபடுபவர்கள் வைணவர்கள் 
3. காணாபத்யம் கணங்களுக்கு எல்லாம் அதிபதியான கணபதிவழிபாடு செய்பவர்கள் காணாபத்யர்
4. கெளமாரம் முருகனை வழிபடுபவர்கள் கௌமாரர்கள்
5. சௌரம் சூரியனை வழிபடுபவர்கள் சௌரர்கள்
6. சாக்தம் சக்தியை வழிபடுபவர்கள் சாக்தர்கள்
இவ்வாறு வகைப்படுத்தப்பட்ட ஆறு பிரிவுகளும் சொல்லும் பல பெயர்களும் இறைவன் ஒருவனையே சாரும் என்றும் இவையனைத்தும் சேர்ந்து ஷண்மதம் என்றும் சொன்னார்.
ஒவ்வொருவரின் விருப்பமும் ஒவ்வொரு வகைப்படும். அதனால், “இவர் மட்டுமே உனக்குக் கடவுள்என்று எவரையும் கட்டாயப்படுத்தாமல், இந்த அறுவரில் எவரை விரும்பினாலும் அவரையே முழு முதற் கடவுளாகப் போற்றலாம்என்று வழி காட்டுகிறது சங்கரரின் அத்வைதம். இதுபோல், “உன்னுடைய விருப்ப தெய்வமே மற்ற கடவுளாகவும் வடிவம் தாங்கி இருக்கின்றது என்றும் இந்தச் சித்தாந்தம் சொல்கிறது. ஆறு விதமான தெய்வ வழிபாடுகளைக் காட்டித் தந்த சங்கரர், அந்தந்தத் தெய்வங்களைப் போற்றுவதற்கான துதிகளையும் தானே இயற்றித் தந்தார்.
இந்நிலையில், சங்கரரின் தாய் வாழ்நாளின் இறுதிப்பகுதியில் இருப்பதை சங்கரருக்கு சிலர் தெரிவித்தனர். இதைக் கேள்வியுற்றதும் தாம் தாய்க்கு அளித்த வாக்குறுதியின் படி தம் சீடர்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு காலடிக்குத் திரும்பினார். தாய்க்கு வாக்களித்த படி வெறுமனேவர முடிந்ததே தவிர,குறித்த காலத்தில் வந்து கோ தானம், மந்திர ஜபம் எல்லாம் செய்து வைக்க அவரால் முடியவில்லை. அவர் தன் தாயின் கால்களைத் தொட்டு வணங்கியபடி, “மாத்ரு பஞ்சகம்என்று உள்ளம் உருகும் ஐந்து பாடல்களைப் பாடினார்.
தாயின் வேண்டுகோளுக்கேற்ப சிவபெருமானிடம் தாயின் அந்திம காலம் சிரமமில்லாமல் இருக்க வேண்டினார். இவரின் வேண்டுதலை அறிந்த சிவபெருமான் சிவகணங்களை அனுப்பி வைத்தார். சிவகணங்களின் உருவங்களைக் கண்டு அஞ்சிய ஆர்யாம்பாள் சங்கரரிடம், தனக்குப் பயமாக இருக்கிறது சிவகணங்களுடன் கைலாசம் செல்ல முடியாது என்றும் மறுத்தார். உடனே சங்கரர் விஷ்ணுவை வேண்டினார். விஷ்ணுவின் தூதுவர்கள் அவரது தாயாரை வைகுண்டம் அழைத்துச் சென்றனர். 
பழமைவாதிகளான நம்பூதிரி பிராமணர்கள் சன்னியாசியான சங்கரரை இறுதிச் சடங்கு செய்யக் கூடாது என்று தடுத்தனர். நம்பூதிரி பிராமணர்களின் உத்தரவை மீறி அவருக்கு உதவவும் அங்கிருந்த பலரும் மறுத்தனர். அவருடைய தாயின் இறுதிச் சடங்கிற்கு நெருப்பைக் கூட அளிக்க மறுத்தனர். ஆனால் சங்கரர் தன் தாய்க்குக் கொடுத்த வாக்குறுதிப்படி தானே தனியாகத் தன் தாயின் உடலைப் புழக்கடைக்கு எடுத்துச் சென்று வைத்து, வாழைமரப் பட்டைகளைக் கொண்டு அடுக்கி அதைத் தன் யோக சக்தியினால் எரியூட்டினார். 
அதன் பின்பு சிருங்கேரிக்கு திரும்பிய சங்கரர் தன்னைப் பின்பற்றியவர்களுடன் சேர்ந்து அத்வைத தத்துவத்தைப் பிரசாரம் செய்தவாறு இந்திய தேசத்தின் கிழக்குக் கடற்கரையோரமாக தல யாத்திரை மேற்கொண்டார். பூரியில் கோவர்தன மடத்தை நிறுவினார். பின்னர் துவாரகைக்குச் சென்று அங்கு சங்கர மடத்தை நிறுவினார். 
மண்டன மிஸ்ரருக்கு சுரேஷ்வராச்சார்யாஎன்ற பெயரில் சந்நியாச தீட்சை அளித்து சிருங்கேரி மடத்திற்கு பீடாதிபதியாக்கியது போல் பிற சீடர்களான பத்மபாதர், ஹஸ்தாமலகர், தோடகாசார்யா என்ற மூவருக்கும் முறையே ஜகன்னாத மடம், துவாரகாமடம், ஜோஷியோ மடம் ஆகியவற்றின் பீடாதிபதிகளாக நியமித்தார்.
சங்கரரின் சந்நியாச தர்மத்தைப் பின்பற்றியவர்களில் முக்கியமான பத்து பிரிவுகளை ஏற்படுத்தினார். அவர்கள் தம் ஆசிரமப் பெயரின் பின்னால் சரஸ்வதி, பாரதி, புரி (சிருங்கேரி மடம்), தீர்த்தர், ஆசிரம (துவாரகா மடம்), கிரி, பர்வத, சாகர் (ஜோஷி மடம்), வன, ஆரண்ய (கோவர்தன மடம்) என்று இணைத்துக் கொள்ளுமாறு செய்து தசநாமி சந்நியாசிகள்என்ற அமைப்பையும் உருவாக்கினார். இவர்களில் ஆழமான வேதாத்தியானமும், தியானமும் செய்து தன்னை உணர்ந்தவர்கள் பரமஹம்சர்கள் என்றழைக்கப்பட்டனர். 
சிவானந்த லஹரிபாடி தம் பக்திப் பரவசத்தை அமுத தாரை வடிவில் உலகிற்கு வழங்கிய சங்கரர், உஜ்ஜயினிக்குச் சென்று மனிதர்களைக் கொன்று குவித்த பைரவர்களை வென்றார். காஞ்சிபுரத்திற்குச் சென்று சாக்தர்களை வென்று கோவில்களைப் புனிதப்படுத்தினார். திருவிடைமருதூருக்குச் சென்று அங்குள்ள ஈசன் கோவிலில் தம் சித்தாந்தத்தை நிலை நிறுத்தினார். திருப்பதிக்குச் சென்று ஏழுமலையான் மீது விஷ்ணு பாதாதி கேசாந்த ஸ்தோத்திரம்பாடி யந்திரங்களை கர்ப்பகிருகத்தில் பிரதிஷ்டை செய்து கோவிலை கணக்கற்ற பக்தர்கள் தேடி வருமாறு செய்தார்.
கொல்லூரில் மூகாம்பிகை கோவிலுக்கு சங்கரர் செல்கையில், காது கேட்காத, பேச முடியாத ஒரு அறிவு மிக்க அந்தணச் சிறுவனுக்கு நெல்லிக்கனி கொடுத்து ஹஸ்தாமலகன்என்று பெயரிட்டு தன்னுடைய முக்கியச் சீடர்களில் ஒருவராக்கிக் கொண்டார். கிரி என்ற சிறுவனை மந்தப் புத்தியுள்ளவன் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்க அவனை தோடகாஷ்டகத்தைசொல்ல வைத்து தோடகர்என்று பெயரிட்டார்.
இவர் எழுதிய சரீரிக் பாஷ்யா”, “சனட் சுஜாத்தியா”, “சஹஸ்ரநாம அத்யாயா”, “விவேக சூடாமணி”, “ஆத்ம போதா”, “அபரோக்ஷ அநுபூதி”, “ஆனந்த லஹரி”, “ஆத்ம அனாத்ம விவேக”, “த்ருக் த்ருஷ்ய விவேக”, “பஜகோவிந்தம்”, “உபதேச சஹஸ்ரபோன்ற பல நூல்கள் இன்றும் இந்து சமய ஆன்மிக ஈடுபாடுடைய பலருக்கும் வழிகாட்டியாக இருக்கின்றன.
இப்படி சங்கரரின் அற்புதங்கள் எத்தனையோ உண்டு. இந்தியா முழ்வதும் யாத்திரை சென்று பல அற்புதங்கள் நிகழ்த்திய மகான் சங்கரர் கடைசியாக இமயமலையை நோக்கிச் சென்று பத்ரியில் ஒரு கோவிலைக் கட்டினார். அங்கிருந்து உயர்ந்த இடத்தில் இருந்த கேதார்நாத்தில் ஒரு குகைக்குள் சென்ற சங்கரர் தன்னுடைய முப்பத்திரண்டாம் வயதில் ஈசனுடன் கலந்தார். முப்பத்திரண்டு வயதிற்குள் முக்தியடைந்த அவர் இன்றும் இந்து சமயத்தவர் பலராலும் நினைவில் கொள்ளப்படுகிறார்.

No comments:

Post a Comment