WHATS APP
உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.
Wednesday, 29 April 2020
Sunday, 26 April 2020
Friday, 24 April 2020
Friday, 10 April 2020
இந்துக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.
*இந்துக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது.*
இந்துக்களாகிய நாம் பல தலபுராணங்களையும், பல இதிகாசங்களையும்... இந்துவாக பிறந்த நாம் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்...!!!
1.தமிழ் வருடங்கள்(60)
2.அயணங்கள்(2)
3.ருதுக்கள்(6)
4.மாதங்கள்(12)
5.பக்ஷங்கள்(2)
6.திதிகள்(15)
7.வாஸரங்கள்(நாள்)(7)
8.நட்சத்திரங்கள்(27)
9.கிரகங்கள்(9)
10.இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்(12)
11.நவரத்தினங்கள்(9)
12.பூதங்கள்(5)
13.மஹா பதகங்கள்(5)
14.பேறுகள்(16)
15.புராணங்கள்(18)
16.இதிகாசங்கள்(3)
இவை அனைத்தையும் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
*தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது அவை:*
1.ப்ரபவ 2.விபவ 3.சுக்ல 4.ப்ரமோதூத 5.ப்ரஜோத்பத்தி 6.ஆங்கீரஸ 7.ஸ்ரீமுக 8.பவ 9.யுவ 10.தாது(தாத்ரு) 11.ஈச்வர 12.வெகுதான்ய 13.ப்ரமாதி 14.விக்ரம 15.விஷு 16.சித்ரபானு 17.ஸுபானு 18.தாரண 19.பார்த்திப 20.வ்யய 21.ஸர்வஜித் 22.ஸர்வதாரி 23.விரோதி 24.விக்ருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வாரி 35.ப்லவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.க்ரோதி 39.விச்வாவஸு 40.பராபவ 41.ப்லவங்க 42.கீலக 43.ஸெளம்ய 44.ஸாதாரண 45.விரோதிக்ருத் 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ராக்ஷஸ 50.நள 51.பிங்கள 52.காளயுக்தி 53.ஸித்தார்த்தி 54.ரெளத்ரி 55.துன்மதி 56.துந்துபி 57.ருத்தோத்காரி 58.ரக்தாக்ஷி 59.க்ரோதன 60.அக்ஷய.
*அயணங்கள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:*
1.உத்தராயணம்
(தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
2.தக்ஷிணாயணம்
(ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை உள்ள ஆறு மாத காலம்).
இரண்டு அயணங்கள் சேர்ந்து ஒரு தமிழ் வருடமாகும்.
*ருதுக்கள் மொத்தம் ஆறு வகைப்படும்:*
1.வஸந்தருது
(சித்திரை,வைகாசி)
2.க்ரீஷ்மருது
(ஆனி,ஆடி)
3.வர்ஷருது
(ஆவணி,புரட்டாசி)
4.ஸரத்ருது
(ஐப்பசி,கார்த்திகை)
5.ஹேமந்தருது
(மார்கழி,தை)
6.சிசிரருது
(மாசி,பங்குனி)
இரண்டு தமிழ் மாதங்கள் சேர்ந்தது ஒரு ருது ஆகும்.
*தமிழ் மாதங்கள் பண்னிரண்டு ஆகும்
1.சித்திரை(மேஷம்)
2.வைகாசி(ரிஷபம்)
3.ஆனி(மிதுனம்)
4.ஆடி(கடகம்) 5.ஆவணி(சிம்மம்)
6.புரட்டாசி(கன்னி) 7.ஐப்பசி(துலாம்)
8.கார்த்திகை(விருச்சிகம்)
9.மார்கழி(தனுர்)
10.தை(மகரம்)
11.மாசி(கும்பம்)
12.பங்குனி(மீனம்).
*பக்ஷங்கள் இரண்டு வகைப்படும்
1.ஸுக்ல பக்ஷம்
(அமாவசை திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
2.க்ருஷ்ணபக்ஷம்
(பெளர்ணமி திதி முதல் சதுர்த்தசி திதி வரை)
சுக்ல பக்ஷத்தை பூர்வ பக்ஷம் என்றும் வளர்பிறை என்றும் கூறுவர்.
க்ருஷ்ண பக்ஷத்தை அமர பக்ஷம் என்றும் தேய்பிறை என்றும் கூறுவர்.
இரண்டு பக்ஷங்கள் சேர்ந்தது ஒரு தமிழ் மாதம் ஆகும்.
*திதிக்கள் மொத்தம் பதினைந்து வகைப்படும்
1.பிரதமை
2.துதியை
3.திருதியை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.சப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி 13.திரையோதசி 14.சதுர்த்தசி 15பெளர்ணமி(அ)அமாவாசை.
*வாஸரங்கள்(நாழ்) ஏழு ஆகும்
1.ஆதித்யவாஸரம்
2.சோமவாஸரம்
3.மங்களவாஸரம்
4.ஸெளமியவாஸரம்
5.குருவாஸரம்
6.சுக்ரவாஸரம்
7.மந்தவாஸரம்(அ)ஸ்திரவாஸரம்
*நட்சத்திரங்கள் மொத்தம் இறுபத்தி ஏழு ஆகும்:*
1.அஸ்வினி 2.பரணி 3.கர்த்திகை 4.ரோகினி 5.மிருகசீரிஷம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம் 10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்த்தம் 14.சித்திரை 15.சுவாதி 16.விசாகம் 17.அனுஷம் 18.கேட்டை 19.மூலம் 20.பூராடம் 21.உத்ராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27.ரேவதி.
*கிரகங்கள் ஒன்பது ஆகும்:*
1.சூரியன்(SUN)
2.சந்திரன்(MOON)
3.அங்காரகன்(MARS)
4.புதன்(MERCURY)
5.குரு(JUPITER)
6.சுக்ரன்(VENUS)
7.சனி(SATURN)
8.இராகு(ASCENDING NODE)
9.கேது(DESCENDING NODE)
*இராசிகள் மற்றும் இராசிஅதிபதிகள்:*
*இராசிகள் பண்ணிரெண்டு ஆகும் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பகுதியாக(பாகங்கள்) பிரிக்கப்படும், நட்சத்திரங்களின் ஒன்பது பகுதிகள்(பாகங்கள்) சேர்ந்த்து ஒரு இராசி ஆகும்.*
நட்சத்திரங்கள் , இராசி , இராசிஅதிபதி.
அஸ்வினி,பரனி,கர்த்திகை முன் ¼
மேஷம்
செவ்வாய்
கர்த்திகை பின்3/4,ரோகினி,மிருகசீரிஷம் முன்1/2
ரிஷபம்
சுக்கிரன்
மிருகசீரிஷம்பின்1/2,திருவாதிரை,புன
ர்பூசம்முன்3/4
மிதுனம்
புதன்
புனர்பூசம் பின் ¼,பூசம்,ஆயில்யம்
கடகம்
சந்திரன்
மகம்,பூரம்,உத்திரம் முன் ¼
சிம்மம்
சூரியன்
உத்திரம் பின்3/4,ஹஸ்தம்,சித்திரை முன்1/2
கன்னி
புதன்
சித்திரை பின்1/2,சுவாதி,விசாகம் முன்3/4
துலாம்
சுக்கிரன்
விசாகம் பின்1/4,அனுஷம்,கேட்டை
விருச்சிகம்
செவ்வாய்
மூலம்,பூராடம்,உத்திராடம் முன்1/4
தனுசு
குரு
உத்திராடம்பின்3/4,திருவோணம்,அவிட்டம் முன்1/2
மகரம்
சனி
அவிட்டம் பின்1/2,சதயம்,பூரட்டாதி முன்3/4
கும்பம்
சனி
பூரட்டாதி பின்1/4,உத்திரட்டாதி,ரேவதி
மீனம்
குரு
*சோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் குணம் எந்த தெய்வத்தின் குணத்தை ஒத்துள்ளது என கண்டறிந்து, அந்த தெய்வத்தை அதிதேவதையாக கூறியுள்ளனர்.*
*ஒவ்வொரு தெய்வமும் ஒவ்வொரு கிரகத்திற்கு அதிதேவதை.*
சூரியன் - சிவன், சந்திரன் - பார்வதி
பரமனும், பார்வதியும் படியளப்பவர்கள் என்ற வழக்கு உண்டு. அதுபோலவே அனைத்திற்கும் மூலகாரணாய் சூரியன் இருக்கிறான். அவன் கொடைக்கு நிகரில்லை. உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் அவன் உதவியின்றி பிராணன் கிடைப்பதில்லை. ஆகவே சூரியன் சிவனானார்.
பரமன் மனைவி பார்வதி, சந்திரனுக்கு அதிதேவதை. பூமியை தாயைப் போல் குளிரூட்டும் கிரகம். சூரியனிடத்தில் வெப்பத்தை பெற்று குளிர்ந்த ஒளியாய் தந்து நீர் நிலைகளை பொங்க வைக்கும்.
இந்த இரண்டுகிரகங்களின் நிலை சாதகத்தில் - நல்ல முறையில் இருந்தால், ஒரு ஜாதகர் தன் இன பந்துக்களுடன் இனிதே வாழ்வான் என்பது உறுதி.
செவ்வாய் :சுப்ரமண்யர்
ஜாதகத்தில் வீரத்திற்கு இன்றியமையாதது செவ்வாய் பலம். இரும்பு கிரகம். உடல் பலத்திற்கு இன்றியமையாதது செவ்வாயின் நிலை.
வீரத்தில் சிறந்த தெய்வம் முருகன். சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமும் இல்லை சுப்பிரமணியருக்கு மிஞ்சி தெய்வமும் இல்லை என்பது பழமொழி. அசுரர்களை தேவர்களுக்காக வதம் செய்த தெய்வம் முருகன். ஆதலால் செவ்வாய்க்கு அதிதேவதை சுப்பிரமணியர்.
புதன் :விஷ்ணு
ஒரே நேரத்தில் இருவேறு குணத்தைக் கொண்ட கிரகம். தற்சுழற்சி குறைவானது. தெய்வத்தில் இரு நிறம் கொண்ட தெய்வம் விஷ்ணு. அதுபோலவே ஒருபுறம் கடும் வெப்பமும் மறுபுறம் கடும் குளிரும் கொண்டது. எந்த கிரகத்தின் நேர்கோட்டில் 10 பாகைக்குள் உள்ளதோ அதன் குணத்தை பிரதிபலிக்க வல்லது. நியாயம் தவறாமல் கடமையை செய்வதற்கு இன்றியமையாதது இதன் நிலை.
குரு : பிரம்மா, தட்சிணாமூர்த்தி (குரு)
ஜாதகத்தில் கல்வி, கேள்வி, கீர்த்திக்கு வழிவகுக்கும் கிரகம். தற்சுழற்சி அதிகம் உள்ளது. இருக்கும் இடத்தைவிட பார்க்கும் இடமே விருத்தியாகும். ஆசிரியர் போன்ற குணத்தை உடையது.
சுக்ரன் : லக்ஷ்மி, இந்திரன்
ஒரு ஜாதகத்தில மற்ற கிரகங்கள் நிலை கெட்டிருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வல்ல கிரகம் சுக்ரன். களத்திர காரகன். லக்ஷ்மியை போல் ஐஸ்வர்யத்தை கொடுக்கக் கூடிய கிரகம். ராஜயோகத்தையும், சுகபோக வாழ்க்கையையும், மனைவி வழி சொத்து சேர்க்கையையும் மனைவியின் குண நலத்தையும் கொடுக்கும். 8ம் இடத்திற்கு உரிய கிரகம். இந்திரன் குணத்தைக் கொண்டது. மழைக்கு காரணமான குளிர்ந்த கிரகம்.
சனி : எமன், சாஸ்தா
உஷ்ணத்தை பிரதிபலிக்கும் கிரகம். ஜாதகத்தில் சனியின் நிலையே மரணத்தின் வகையை நிர்ணயிக்கும். சனி 0 பாகையில் குளிர்ச்சியை கொடுக்கும். அதனால் சாஸ்தாவிற்கு நிகராக சொல்லப்பட்து. ஆனால் பார்வை உக்கிரமானது. கொடுப்பதிலும், அழிப்பதிலும் சனிக்கு நிகர் சனியே வேறு கிரகம் இல்லை (ஆயுள் காரகன்).
ராகு: காளி, துர்கை
கருமாரியின் நிழல் கிரகம். சந்திரன் தவிர மற்ற கிரகங்கள் இதன் 0 பாகையில் சாதகத்தில் வரும்போது பலன் தருவது அரிது. கருமை நிறம் உடையது. ராகு, கேதுக்கு இடையில் மற்ற கிரகங்கள் உடைபட்டு விட்டால் கால சர்ப்ப யோகம், தோஷம் என்று கூறுவதுண்டு. சாதகனின் பிற்பட்ட காலங்களிலேயே பலன் கொடுக்கும். இளம் வயதில் அவதிகளை சந்திக்க நேரும். துஷ்ட குணத்துடன் கொடுக்க வல்ல கிரகம்.
கேது :விநாயகர், சண்டிகேஸ்வரர்
ஞானத்தை கொடுக்கும் கிரகம். ஒரு ஜாதகன் பிறக்கும்போது 0 பாகை ஜன்மத்திலிருந்தால் அந்த ஜாதகனுக்கு சித்தியையும் முக்தியையும் கொடுக்கும். நீண்ட நேரம் ஓரிடத்தில் அசையாமலிருந்து பணி செய்வதில் வல்லமையைத் தரும். சோம்பல் சேர்ந்த திடீர் மாற்றத்தை தரவல்ல கிரகம். (நிழல் கிரகம்).
*உடலுக்கு ஒன்பது வாசல்*
மனிதர்களுக்கு ஒன்பது வாசல் உள்ளது அவை ஒவ்வொன்றையும் கிரகம் ஆட்சி செய்கின்றது அவையானவன
1,சூரியன்-இடக்கண்
2,சுக்கிரன்-வலக்கண்வாசல்
3,சந்திரன்-வாய் வாசல்
4,புதன்-இடமூக்கு வாசல்
5,செவ்வாய்-வலமூக்கு வாசல்
6,வியாழன்-வலக் காதுவாசல்
7,சனி-இடக்காது வாசல்
8,இராகு-மலவாசல்
9,கேது-சிறுநீர் வாசல் ஆகும்
இவற்றுள் அடைக்கப்பட்ட வாயில் ஆகிய கொப்பூழை குளிகன் அல்லது மாந்தி ஆட்சி செய்கிறது! உயிர் பிரியும்போது எந்தத் திசை,எந்தப் புத்தி நடக்கிறதோ அதற்குரிய வாயில் வழியாக உயிர் பிரியும்!
*நவரத்தினங்கள்:*
1.கோமேதகம்
2.நீலம்
3.பவளம்
4.புஷ்பராகம்
5.மரகதம்
6.மாணிக்கம்
7.முத்து
8.வைடூரியம்
9.வைரம்.
*பூதங்கள் ஐந்து வகைப்படும்*
1.ஆகாயம்-வானம்
சப்தம்
ஓசை
2.வாயு-காற்று
ஸ்பர்ஷம்
தொடு உணர்வு
3.அக்னி-நெருப்பு(தீ)
ரூபம்
ஒளி(பார்த்தல்)
4.ஜலம்-நீர்
ரஸம்
சுவை
5.பிருத்வி-நிலம்
கந்தம்
நாற்றம்(மணம்)
*மஹா பாதகங்கள் ஐந்து வகைப்படும்
1.கொலை
2.பொய்
3.களவு
4.கள் அருந்துதல்
5.குரு நிந்தை.
*பெறுகள் பதினாறு வகைப்படும்:*
1.புகழ்
2.கல்வி
3.வலிமை
4.வெற்றி
5.நன்மக்கள்
6.பொன்
7.நெல்
8.நல்ஊழ்
9.நுகர்ச்சி
10.அறிவு
11.அழகு
12.பொறுமை
13.இளமை
14.துனிவு
15.நோயின்மை
16.வாழ்நாள்..
*புராணங்கள் பதினெட்டு* *வகப்படும்,இவைகளை*
*இயற்றியவர் வேத வியாசர் ஆவார்.*
1.பிரம்ம புராணம்
2.பத்ம புராணம் 3.பிரம்மவைவர்த்த புராணம் 4.லிங்க புராணம்
5.விஷ்ணு புராணம்
6.கருட புராணம்
7.அக்னி புராணம்
8.மத்ஸ்ய புராணம்
9.நாரத புராணம்
10.வராக புராணம்
11.வாமன புராணம்
12.கூர்ம புராணம்
13.பாகவத புராணம்
14.ஸ்கந்த புராணம்
15.சிவ புராணம்
16.மார்க்கண்டேய புராணம்
17.பிரம்மாண்ட புராணம்
18.பவிஷ்ய புராணம்.
*இதிகாசங்கள் முன்று வகைப்படும்:-*
*1.சிவரகசியம்.*
*2.இராமாயணம்.*
*3.மஹாபாரதம்.*
இந்துக்களாகிய நாம் பல புராண இதிகாசங்களை நாம் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டியது...!!!
*இந்து தர்மத்தையும் அதன் கலாச்சாரத்தையும் காப்பது இன்றைய இளைய தலைமுறை கடமையாகும்...!!!*
ஒருவன் இந்துவாக பிறப்பதற்க்கு புண்ணியங்கள் பல செய்திருக்க
வேண்டும்...
Friday, 3 April 2020
சித்தர்கள் கூறும் மருத்துவ குணம்
🌟 *சித்தர்கள் கூறும் மருத்துவ குணம் உடைய 50 பொருள்கள்* பற்றிய பதிவு
👇👇👇
*நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்!*
1. *நெஞ்சு சளி*
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
2. *தலைவலி*
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
3. *தொண்டை கரகரப்பு*
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
4. *தொடர் விக்கல்*
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
5. *அஜீரணம்*
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும். அல்லது கறிவேப்பிலை,சுக்கு,சீரகம்,ஒமம் சேர்த்து துவையல் அரைத்து சாப்பிட்டால் அஜுரணம் சரியாகும். அல்லது வெற்றிலை,4 மிளகு இவற்றை மென்று தின்றால் அஜுரணக்கோளாறு சரியாகும்.
சீரகத்தை நீரிலிட்டு கொதிக்க வைத்து,அந்த சீரக நீரைக் குடித்து வர நன்கு ஜுரணமாவதோடு,உடல் குளிர்ச்சியடையும்.அல்லது 1தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன்,சிறிது தேன் கலந்து பருகினால் ஜீரணசக்தி அதிகரிக்கும்.
6. *வாயு தொல்லை*
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
7. *வயிற்று வலி*
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
8. *சரும நோய்*
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
9. *மூக்கடைப்பு*
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
10. *கண் எரிச்சல், உடல் சூடு*
வெந்தயத்தை மட்டும் ஊற வைத்து நன்கு அரைத்து தலையின் முடி வேர்க் கால்களில் தடவி வைத்து நன்கு ஊறியபின் தலைமுடியை அலசினால் முடி நன்கு வளருவதுடன் கண் எரிச்சல், உடல் சூடு தணியும்.
11. *வயிற்றுக் கடுப்பு*
வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால் புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும், வெண்ணெயையும் கலந்து குடித்துவிடுங்கள். சிறிது நேரத்திலேயே குணம் தெரியும்.
12. *பற் கூச்சம்*
புதினா விதையை வாயில் போட்டு மென்றுக்கொண்டிருந்தால் பல்லில் ஏற்படும் கூச்சம் மறையும். அல்லது புதினா இலையை நிழலில் காய வைத்து தூள் உப்பு சேர்த்து பல் துலக்கினால் ஒரிரு நாளில் குணமாகும்.
13. *வாய்ப் புண்*
வாய்ப் புண்ணுக்கு கொப்பரைத் தேங்காயை கசகசாவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் குணமாகும். அல்லது கடுக்காயை வாயில் ஒதுக்கி வைத்தால் வாய்ப்புண் ஆறும்.
14. *தலைவலி*
பச்சை கொத்துமல்லித் தழைகளை மிக்ஸில் அரைத்து தினமும் காலையில் எழுந்தவுடன் குடித்துவர தலைவலி நீங்கும்.
15. *வயிற்றுப் பொருமல்*
வசம்பை எடுத்துச் சுட்டுக் கரியாக்கி அதனுடன நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகிய மூன்றையும் கலந்து அடிவயிற்றில் பூசினால் வயிற்றுப் பொருமல் நீங்கும்.
16. *அஜீரணம்*
ஒரு கப் சாதம் வடித்த நீரில், கால் ஸ்பூன் மஞ்சள் பொடியைக் கலந்து குடிக்க வயிற்று உப்புசம், அஜீரணம் மாறும். அல்லது சிறிது சுக்குடன் கருப்பட்டி,4 மிளகு சேர்த்து நன்கு பொடித்து 2 வேளை சாப்பிட்டால் அஜுரணம் குணமாகி பசி ஏற்படும்.
ஒமம்,கருப்பட்டி இட்டு கசாயம் செய்து பருகினால் அஜுரணம் சரியாகும்.
17. *இடுப்புவலி*
சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்புவலி நீங்கும்.
18. *வியர்வை நாற்றம்*
படிகாரத்தை குளிக்கும் நீரில் கலந்து குளித்தாலும் வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
19. *உடம்புவலி*
சாம்பிராணி, மஞ்சள், சீனி போட்டு கஷாயமாக்கி பாலும் வெல்லமும் சேர்த்து பருகினால் உடம்புவலி தீரும்.
20. *ஆறாத புண்*
விரலி மஞ்சளை சுட்டு பொடி செய்து தேங்காய் எண்ணெயில் குழப்பி காலையிலும் இரவிலும் ஆறாத புண்களுக்கு மேல் போட்டால் சீக்கிரம் குணமாகிவிடும்.
21. *கண் நோய்கள்*
பசுவின் பால் நூறு மில்லி தண்ணீரில் அதே அளவு விட்டு இதில் வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்வலி போன்ற நோய்கள் வந்த கண்ணில் படும்படி ப
ிடித்தால், கண் நோய்கள் அகலும்.
22. *மலச்சிக்கல்*
தினமும் குடிநீரைக் காய்ச்சும் போது ஒரு கைப்பிடி சுக்கைத் தட்டிப் போடலாம். தேவைப் பட்டால் குடிநீரை வடிகட்டிக் கொள்ளலாம். மருத்துவ குணங்களைக் கொண்ட இப்பொருள், ஜீரணத்துக்கு உதவும், வாயுவை அகற்றும், அல்லது இரவில் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம்.
அதிகாலையில் இலேசான சுடுநீரில் அரை டீஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்துக் குடித்து விட்டால் பதினைந்து நிமிடங்களில் குடல் சுத்தமாகி விடும். தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.
மலச்சிக்கல் இருக்காது. தண்ணீரும் குடிக்கச் சுவையாக இருக்கும்.
23. *கபம்*
வால்மிளகின் தூளை சீசாவில் பத்திரப்படுத்தி வேளைக்கு ஒரு சிட்டிகை தேனில் குழப்பிச் சாப்பிட கபம் நீங்கும்.
24. *நினைவாற்றல்*
வல்லாரைக் கீரையை நிழலில் காயவைத்து பொடித்து தினமும் ஒரு தேக்கரண்டி உண்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.
25. *சீதபேதி*
சீதபேதி கடுமையாக உள்ளதா? ஊறவைத்த வெந்தயத்தை அரைத்து தயிரில் கலந்து 3 வேளை கொடுக்க குணமாகும்.
26. *ஏப்பம்*
அடிக்கடி ஏப்பம் வருகிறதா? வேப்பம்பூவை தூள் செய்து 4 சிட்டிகை எடுத்து இஞ்சி சாறுடன் கலந்து உட்கொண்டால் குணமாகும்.
27. *பூச்சிக்கடிவலி*
எறும்புகள் போன்ற பல்வேறு பூச்சிகள் கடித்து வலி, வீக்கம் போன்றவை ஏற்பட்டால் வெங்காயத்தை நறுக்கி அந்த இடத்தில் தேய்க்கவும்.
28. *உடல் மெலிய*
கொழு கொழுவென குண்டாக இருப்பவனுக்கு, உடல் இறுகி மெலிய, கொள்ளுப் பயறு (Horsegram) கொடுக்க வேண்டும்.
29. *வயிற்றுப்புண்*
பீட்ருட் கிழங்கின் சாற்றுடன் சிறிது தேனும் கலந்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.
30. *வயிற்றுப் போக்கு*
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப் போக்கு நிற்கும்.
31. *வேனல் கட்டி*
வேனல் கட்டியாக இருந்தால் வலி அதிகமாக இருக்கும். அதற்குச் சிறிதளவு சுண்ணாம்பும் சிறிது தேன் அல்லது வெல்லம் குழைத்தால் சூடு பறக்க ஒரு கலவையாக வரும் அதை அந்தக் கட்டியின் மீது போட்டு ஒரு வெற்றிலையை அதன் மீது ஒட்டி விடவும்.
32. *வேர்க்குரு*
தயிரை உடம்பில் தேய்த்துக் குளித்தால் வேர்குருவை விரட்டி அடிக்கலாம்.
33. *உடல் தளர்ச்சி*
முட்டைக் கோசுடன் பசுவின் வெண்ணெய் கலந்து பாகம் செய்து சாப்பிட்டால் உடல் தளர்ச்சி விலகும்.
34. *நீர்ச்சுருக்கு/நீர்க்கடுப்பு*
நீர்ச்சுருக்கு வெயில் காலத்தில் முக்கியமாக பெண்களுக்கு நீர்க்கடுப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் வெயில் காலத்தில் அதிகமாகத் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் நீர்ச்சுருக்கு ஏற்படும். தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசி ஒரு கைப்பிடி எடுத்து 8 தம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து ஆறிய பிறகு குடிப்பது நல்லது. இளநீரில் வெந்தயப் பொடி கலந்து குடிக்கலாம்.
35. *தாய்ப்பால் சுரக்க*
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
36. குழந்தை வெளுப்பாகப் பிறக்க
கர்ப்பிணிப் பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணி பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
37. *எரிச்சல் கொப்பளம்*
நெருப்பு சுடுநீர் பட்ட இடத்தில் பெருங்காயத்தை அரைத்துப் பூசினால் எரிச்சல் குறையும் கொப்பளமும் ஏற்படாது.
38. *பித்த நோய்கள்*
கேரட் சாறும் சிறிது தேனும் கலந்து பருகி வர கர்ப்பினி பெண்கள் வாந்தி நிற்கும் உடல் வலுவாகும். பித்த நோய்கள் தீரும்.
39. *கபக்கட்டு*
நெருப்பில் சுட்ட வெங்காயத்தை சாப்பிட்டு வர இருமல் கபக்கட்டு முதலியன நீங்கும்.
40. *நெற்றிப்புண்*
நெற்றியில் குங்குமம் வைத்துப் புண்ணாகி உள்ள இடத்தில் வில்வமரத்துக் கட்டையுடன் சந்தனமும் சேர்த்து இழைத்துத் தடவி வந்தால், புண் குணமாகி விடும்.
41. *மூக்கடைப்பு*
இரவில் மூக்கடைப்புக்கு மின் விசிறியின் நேர் கீழே படுக்க வேண்டாம். சற்று உயரமான தலையணை பயன்படுத்தவும். மல்லாந்து படுக்கும் போது மூக்கடைப்பு அதிகமாகும். பக்கவாட்டில் படுக்கவும். காலையில் பல் தேய்க்கும் போது நாக்கு வழித்து விட்டு மூன்று முறை மாறி மாறி மூக்கைச் சிந்தவும். சுவாசப் பாதையைச் சுத்தப் படுத்த நமது முன்னோர் காட்டிய வழி இது.
42. *ஞாபக சக்தி*
வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும் உண்டாகும்.
43. *மாரடைப்பு*
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத் தடுக்கலாம்.
44. ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல்
வெள்ளைப் பூசனிக்காயை பூந்துருவலாக துருவி, உப்பு சேர்த்து இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி, கருவேப்பிலை, கடுகு, தாளித்து தயிரில் கலந்து தயிர்ப் பச்சடியாக சாப்பிட்டால் மிகவும் ரு
சியாக இருக்கும். பூசணிக்காய் ரத்தக்கொதிப்பு, கொலஸ்ட்ரால் தலைசுற்றல் எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும்.
45. *கை சுளுக்கு*
கை சுளுக்கு உள்ளவர்கள் நீரில் மிளகுத் தூளும், கற்பூரத்தையும் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைத் துணியில் நனைத்துச் சுளுக்கு உள்ள இடத்தின் மீது போடுங்கள். அல்லது டர்ப்பன்டைன் எண்ணெயைத் தடவினாலும் சுளுக்கு விட்டு விடும்.
46. *நீரிழிவு*
அருகம்புல் சாறை மோருடன் குடித்தால் நீரிழிவு குறையும்.
47. மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய்
உலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீரில
அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும்.
48. கக்குவான், இருமல் மலச்சிக்கல் உடல் பருமன்
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் தேவையில்லாத உடல் பருமன் குறையலாம்
49. *உடல் வலுவலுப்பு*
ஒரு டம்ளர் அளவு பட்டாணியை தண்ணீரில் வேகவைத்து குளிர்ந்ததும் தக்காளி சாறு சேர்த்துத் தினமும் சாப்பிட்டு வர உடல் வலுவலுப்பு பெறும்.
50. குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டிய நாளில் மட்டும் கீரை சாப்பாட்டுக்கு கொடுக்கக் கூடாது.
கேரட் சாறும் சிறிது தேனும் பருகி வந்தால் கர்ப்பிணிப் பெண்களுக்கு வாந்தி மட்டுப்படும்.
எலுமிச்சை பழச் சாற்றில் ரசம் செய்து சாப்பிட்டால் உஷ்ணம் குறையும்.
நுரையீரல் சம்பந்தமான நோய்கள் குணமாக வெற்றிலைச் சாற்றில் இஞ்சி சாற்றை சேர்த்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எள், எள்ளில் இருந்து வரும் நல்லெண்ணெய்யைக் கொடுக்க உடல் இளைந்துக் காணப்படுபவர்கள் தேறி, உடல் எடை அதிகரிக்கும்.
கடுகை அரைத்து வலியுள்ள பகுதியில் போட்டால் வலி குறைந்து விடும் நலமாகட்டும் வாழக்கை நன்றி
Saturday, 28 March 2020
ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர மாலா ஸ்தோத்திரம்:
ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திரத்திற்கு ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நட்சத்திர மாலா ஸ்தோத்திரம்:
இந்த ஸ்லோகத்தை அவரவர் நட்சத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.
ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்
1. அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய
2. பரணி
கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய
3. கிருத்திகை
இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய
4. ரோஹிணி
ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய
5. ம்ருகசீர்ஷம்
வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய
6. திருவாதிரை
ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய
7. புனர்பூசம்
காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய
8. பூசம்
ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய
9. ஆயில்யம்
யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய
10. மகம்
தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய
11. பூரம்
ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய
12. உத்திரம்
தீனமான வாளி காம தேனவே நம: சிவாய
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய
13. ஹஸ்தம்
ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய
14. சித்திரை
ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய
15. ஸ்வாதி
ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய
16. விசாகம்
பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய
17. அனுஷம்
மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய
18. கேட்டை
ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய
19. மூலம்
திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய
20. பூராடம்
அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய
21. உத்தராடம்
கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய
22. திருவோணம்
விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய
23. அவிட்டம்
அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய
24. சதயம்
ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய
25. பூரட்டாதி
புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய
26. உத்தரட்டாதி
அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய
27. ரேவதி
சூலினே நமோ நம:
கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய
Friday, 27 March 2020
கொல்லி மலையில் வாழ்ந்த சித்தர் இவர்
பல ஆண்டுகள் முன் கொல்லி மலையில் வாழ்ந்த சித்தர் இவர். இப்போது சமாதியாகிவிட்டார்.
வியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார். பெயர் KS ராவ். கர்நாடகாகாரர். ஒரு நாள் லேசாக வயிற்று வலி எடுக்கவே ஸ்கேன் செய்துள்ளார். பார்த்தால் மூன்றாம் நிலையில் புற்று நோய் கட்டிகள் பெரிதாக மூன்று இருந்தது. இன்னும் 15 முதல் 30 நாட்களில் மரணம் என்று தெரிந்துவிட்டது. இறப்பது என்று தீர்மானமென்றால் என் தாய்நாட்டில் இறக்க விரும்புகிறேன் என்றுள்ளார். உடனடியாக தனி விமானம் மூலம் இந்தியாவில் கொண்டு வந்து இறங்கிவிட்டது அமெரிக்க படை. என்ன உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார்கள்.
வீடே இருளில் மூழ்கியது. யாரோ சொல்லப்போய் கொல்லி மலையில் வாழும் சித்தரை பார்க்கலாம், எப்படியோ இறக்கப்போகிறோம், யார் மருந்து தந்தால் என்ன, தராவிட்டால் என்ன என்று எண்ணி புறப்பட்டார். வாய் வழியாக உணவும், நீரும் இறங்கவில்லை. வெறும் ட்ரிப்ஸ் மட்டும்தான். வயிற்றில் அவ்வளவு பெரிய கட்டி இருக்கிறதே!!!!!
மலைவரை வண்டியில் போய்விட்டு பின் முடியாமல் ஏறி இவர் இருக்கும் இடத்துக்கு போய்விட்டார்கள். இவரை பார்த்ததுமே 'வா சிவா வா, உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்' என்றுள்ளார். இவருக்கு ஆச்சரியம். எல்லோருக்கும் இவரை 'ராவ்' என்றுதான் தெரியும். சிவா என்று சிறுவயதில் அழைத்ததோடு சரி. பின், பல பத்து ஆண்டுகளாக KS ராவ்தான்.
எதுவும் பேசவில்லை யாரும். ட்ரிப்ஸ் ஏற்பாட்டை பார்த்து, 'இதையெல்லாம் கழற்றிப்போடு, போய் குளிச்சுட்டு வா' என்றார். செய்தாயிற்று. ஒரு டம்பளரில் பாதி நீர் எடுத்து ஏதோ ஒரு பொடியை போட்டு, ஆற்றிக்கொண்டே அதை பார்த்து ஏதோ செய்தார். குடிக்க சொன்னார். குடித்தார். பல நாட்களாக தூங்கவில்லை. அன்று இரவு சரியான தூக்கம்.
மறுநாள் காலை மீண்டும் அதே பொடி போட்ட தண்ணீர். கொஞ்ச நேரத்தில் சிறுநீர் வந்தது. போனால், கன்னங்கரேல் என்று வருகிறது. யோசித்து பாருங்கள். கருப்பாக சிறுநீர் வந்தால் எப்படி இருக்குமென்று.
'என்ன சாப்பிடறே'
'நீங்க என்ன தந்தாலும் சாப்பிடறேன் சாமி'
'கீரை கடைஞ்சு தர்றேன். சாதத்துல போட்டு சாப்பிடு'
'சரி சாமி' சாப்பிட்டாச்சு.
அடுத்து, மீண்டும் அந்த பொடி தண்ணீர். மறுபடியும், இரவு சரியான தூக்கம். மறுநாள் காலை மீண்டும் கருப்பு சிறுநீர். மலமே கழிக்கவில்லை பல நாட்களாக. அன்று போனார். சிறிது நேரத்தில் வயிற்றில் இருந்த வலி, பாரம், சிரமம் எதுவுமில்லாமல் நிம்மதியாக இருந்தது. ஏதோ வித்தியாசம் இருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. பல நாட்கள் கழித்து அன்றுதான் பசித்தது.
'இன்னிக்கு இட்லி சாப்பிடறியா'
'என்ன வேணும்னாலும் தாங்க சாமி'. சாப்பிட்டாச்சு. 'ம்ம்ம்ம்... சரி நீ போகலாம்'.
'என்ன சாமி?'
'உனக்கு சரியா போச்சுப்பா. நீ போகலாம்.'
ஒன்றும் பேசமுடியவில்லை. நேராக வந்தார். சோதித்து பார்த்தார். பூரண ஆரோக்கியம் என்று வந்தது. உடனடியாக அமெரிக்காவுக்கு தகவல் போனது. அடுத்த விமானம் வந்தது. அங்கு பார்த்தபோதும் இவருக்கா புற்றுநோய் என்று கூறி சிரித்தார்கள். விஷயமறிந்தவர்கள் அதிர்ந்தார்கள், இது எப்படி சாத்தியமென்று. அவரிடம் என்ன மருந்து இருக்கிறதென்று கேட்டு வாங்கி வாருங்கள். மருத்துவ உலகில் புரட்சி செய்யலாம் என்றார்கள்.
வந்தார். கொல்லி மலை சென்றார். கேட்டார். 'அந்த வெள்ளை கொரங்குக்கேல்லாம் தரமாட்டேன். அவன் காசுக்கு விப்பான்.' என்று கூறிவிட்டு 'இங்க இருந்து வேலை செய்' என்று கூறிவிட்டு போய்விட்டார். இவரும் பாரதத்தில் தங்கி அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க தொடங்கினார். இன்னமும் மைசூருவில் உயிரோடு இருக்கிறார்.
என்னுடைய மாமாவும் அந்த ராவ் என்பவரும் பின்னாளில் நண்பர்களாக ஆனார்கள். அவர் இவரிடம் சொல்ல, இவர் என்னிடம் சொல்ல, நான் உங்களிடம் சொல்கிறேன்.
இவரது படத்தை நீங்களும் வைத்துக்கொள்ளுங்கள். நண்பர்களுக்கு பரிமாறுங்கள். பூஜை அறையில் இவர் படத்தை வைத்து, உங்கள் நோய்கள் பற்றி தினம் இவரோடு பேசி வாருங்கள். இவர் பார்த்துக்கொள்வார். இவர்பெயர் தெரியாது.
Subscribe to:
Posts (Atom)