WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Saturday, 28 March 2020

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர மாலா ஸ்தோத்திரம்:

ஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திரத்திற்கு ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நட்சத்திர மாலா ஸ்தோத்திரம்:

இந்த ஸ்லோகத்தை அவரவர் நட்சத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

1. அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம:சிவாய 
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி

கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய 
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை

இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய 
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய 
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி

ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய 
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய 
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்

வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய 
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய 
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை

ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய 
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய 
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்

காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய 
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய 
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

8. பூசம்

ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய 
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய 
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்

யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய 
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய 
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்

தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய 
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய 
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்

ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய 
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய 
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்

தீனமான வாளி காம தேனவே நம: சிவாய 
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய 
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்

ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய 
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய 
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை

ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய 
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய 
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி

ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய 
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய 
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்

பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய 
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய 
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்

மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய 
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய 
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை

ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய 
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய 
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்

திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய 
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய 
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்

அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய 
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய 
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்

கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய 
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய 
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்

விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய 
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய 
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்

அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய 
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்

ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய 
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி

புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய 
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய 
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி

அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய 
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய 
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி

சூலினே நமோ நம: 
கபாலினே நம: சிவாய 
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய 
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

Friday, 27 March 2020

கொல்லி மலையில் வாழ்ந்த சித்தர் இவர்

பல ஆண்டுகள் முன் கொல்லி மலையில் வாழ்ந்த சித்தர் இவர்.  இப்போது சமாதியாகிவிட்டார்.  

வியட்னாம் போரில் இந்திய தரப்பில் ஒரு மருத்துவராக அமெரிக்க தரப்பில் போர்முனையில் பணியாற்றி இருந்திருக்கிறார். பெயர் KS ராவ்.  கர்நாடகாகாரர்.  ஒரு நாள் லேசாக வயிற்று வலி எடுக்கவே ஸ்கேன் செய்துள்ளார்.  பார்த்தால் மூன்றாம் நிலையில் புற்று நோய் கட்டிகள் பெரிதாக மூன்று இருந்தது.  இன்னும் 15 முதல் 30 நாட்களில் மரணம் என்று தெரிந்துவிட்டது.  இறப்பது என்று தீர்மானமென்றால் என் தாய்நாட்டில் இறக்க விரும்புகிறேன் என்றுள்ளார்.  உடனடியாக தனி விமானம் மூலம் இந்தியாவில் கொண்டு வந்து இறங்கிவிட்டது அமெரிக்க படை.  என்ன உதவி வேண்டுமானாலும் சொல்லுங்கள் என்று கூறிவிட்டார்கள்.  

வீடே இருளில் மூழ்கியது.  யாரோ சொல்லப்போய் கொல்லி மலையில் வாழும் சித்தரை பார்க்கலாம்,   எப்படியோ இறக்கப்போகிறோம், யார் மருந்து தந்தால் என்ன, தராவிட்டால் என்ன என்று எண்ணி புறப்பட்டார்.    வாய் வழியாக உணவும், நீரும் இறங்கவில்லை.  வெறும் ட்ரிப்ஸ் மட்டும்தான்.  வயிற்றில் அவ்வளவு பெரிய கட்டி இருக்கிறதே!!!!!

மலைவரை வண்டியில் போய்விட்டு பின் முடியாமல் ஏறி இவர் இருக்கும் இடத்துக்கு போய்விட்டார்கள்.  இவரை பார்த்ததுமே 'வா சிவா வா, உனக்காகத்தான் காத்துகிட்டு இருக்கேன்' என்றுள்ளார்.  இவருக்கு ஆச்சரியம். எல்லோருக்கும் இவரை 'ராவ்' என்றுதான் தெரியும்.  சிவா என்று சிறுவயதில் அழைத்ததோடு சரி.  பின், பல பத்து ஆண்டுகளாக KS ராவ்தான்.  

எதுவும் பேசவில்லை யாரும்.  ட்ரிப்ஸ் ஏற்பாட்டை பார்த்து, 'இதையெல்லாம் கழற்றிப்போடு, போய் குளிச்சுட்டு வா' என்றார்.  செய்தாயிற்று.  ஒரு டம்பளரில் பாதி நீர் எடுத்து ஏதோ ஒரு பொடியை போட்டு, ஆற்றிக்கொண்டே அதை பார்த்து ஏதோ செய்தார்.  குடிக்க சொன்னார்.  குடித்தார்.  பல நாட்களாக தூங்கவில்லை.  அன்று இரவு சரியான தூக்கம்.  

மறுநாள் காலை மீண்டும் அதே பொடி போட்ட தண்ணீர்.  கொஞ்ச நேரத்தில் சிறுநீர் வந்தது. போனால், கன்னங்கரேல் என்று வருகிறது.  யோசித்து பாருங்கள்.  கருப்பாக சிறுநீர் வந்தால் எப்படி இருக்குமென்று.  
'என்ன சாப்பிடறே' 
'நீங்க என்ன தந்தாலும் சாப்பிடறேன் சாமி' 
'கீரை கடைஞ்சு தர்றேன்.  சாதத்துல போட்டு சாப்பிடு' 
'சரி சாமி'  சாப்பிட்டாச்சு.  

அடுத்து, மீண்டும் அந்த பொடி தண்ணீர்.  மறுபடியும், இரவு சரியான தூக்கம்.  மறுநாள் காலை மீண்டும் கருப்பு சிறுநீர்.  மலமே கழிக்கவில்லை பல நாட்களாக.  அன்று போனார்.   சிறிது நேரத்தில் வயிற்றில் இருந்த வலி, பாரம், சிரமம் எதுவுமில்லாமல் நிம்மதியாக இருந்தது.  ஏதோ வித்தியாசம் இருக்கிறது என்று மட்டும் தெரிந்தது.  பல நாட்கள் கழித்து அன்றுதான் பசித்தது.  
'இன்னிக்கு இட்லி சாப்பிடறியா' 
'என்ன வேணும்னாலும் தாங்க சாமி'.  சாப்பிட்டாச்சு.  'ம்ம்ம்ம்...  சரி நீ போகலாம்'.  
'என்ன சாமி?'  
'உனக்கு சரியா போச்சுப்பா.  நீ போகலாம்.'  

ஒன்றும் பேசமுடியவில்லை.  நேராக வந்தார்.  சோதித்து பார்த்தார்.  பூரண ஆரோக்கியம் என்று வந்தது.  உடனடியாக அமெரிக்காவுக்கு தகவல் போனது.  அடுத்த விமானம் வந்தது.  அங்கு பார்த்தபோதும் இவருக்கா புற்றுநோய் என்று கூறி சிரித்தார்கள்.  விஷயமறிந்தவர்கள் அதிர்ந்தார்கள், இது எப்படி சாத்தியமென்று.  அவரிடம் என்ன மருந்து இருக்கிறதென்று கேட்டு வாங்கி வாருங்கள்.  மருத்துவ உலகில் புரட்சி செய்யலாம் என்றார்கள்.  

வந்தார். கொல்லி மலை சென்றார்.  கேட்டார்.  'அந்த வெள்ளை கொரங்குக்கேல்லாம் தரமாட்டேன்.  அவன் காசுக்கு விப்பான்.' என்று கூறிவிட்டு 'இங்க இருந்து வேலை செய்' என்று கூறிவிட்டு போய்விட்டார்.  இவரும் பாரதத்தில் தங்கி அனைவருக்கும் இலவசமாக மருத்துவம் பார்க்க தொடங்கினார்.  இன்னமும் மைசூருவில் உயிரோடு இருக்கிறார். 

என்னுடைய மாமாவும் அந்த ராவ் என்பவரும் பின்னாளில் நண்பர்களாக ஆனார்கள்.  அவர் இவரிடம் சொல்ல, இவர் என்னிடம் சொல்ல, நான் உங்களிடம் சொல்கிறேன். 

இவரது படத்தை நீங்களும் வைத்துக்கொள்ளுங்கள்.  நண்பர்களுக்கு பரிமாறுங்கள்.  பூஜை அறையில் இவர் படத்தை வைத்து, உங்கள் நோய்கள் பற்றி தினம் இவரோடு பேசி வாருங்கள்.  இவர் பார்த்துக்கொள்வார்.  இவர்பெயர் தெரியாது.

மகாலட்சுமி ஸ்துதி

சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதிகே சரண்யேத்ரியம்பகே கௌரி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே.

தேடினாலும் கிடைத்தற்கரிய அற்புதமான பழைய  ஓலைச்சுவடிகளில் சமஸ்கிருதத்தில்  எழுதப்பட்ட மகாலட்சுமி ஸ்துதிகளை படிக்க  ஏதுவாக எளிமைப்படுத்தி  இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.தினம் கூறிவழிபட அனைத்து லஷ்மி ரூபங்களையும் ஒரேநேரத்தில் வழிபட்ட பலன் கிடைக்கும். குறிப்பாக பெண்களுக்கு மிகவும் முக்கியமானதாகும்.தினமும் பூஜை  அறையில் மனமுருகி 11முறை கூறி வழிபட சகல சம்பத்துகளும் பெருகிடும்.
(பலபேர் பயன்படுத்தி பலன் பெற்றது. )

மகாலட்சுமி ஸ்துதி 

1. சுத்தலக்ஷ்ம்யை புத்திலக்ஷ்ம்யை வரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சௌபாக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

2. வசோலக்ஷ்ம்யை காவ்யலக்ஷ்ம்யை காநலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ச்ருங்காரலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

3. தநலக்ஷ்ம்யை தான்யலக்ஷ்ம்யை தராலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஷ்டைச்வர்ய லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

4. க்ருஹலக்ஷ்ம்யை க்ராமலக்ஷ்ம்யை ராஜ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸாம்ராஜ்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

5. சாந்திலக்ஷ்ம்யை தாந்திலக்ஷ்ம்யை க்ஷேமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வாத்மாநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

6. ஸத்யலக்ஷ்ம்யை தயாலக்ஷ்ம்யை ஸெளக்கிய லக்ஷ்ம்யைநமோ நம:
நம: பாதிவ்ரத்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

7. கஜலக்ஷ்ம்யை ராஜலக்ஷ்ம்யை தேஜோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸர்வோத்கர்ஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

8. ஸத்வலக்ஷ்ம்யை தத்வலக்ஷ்ம்யை போதலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே விஜ்ஞானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

9. ஸ்தைர்யலக்ஷ்ம்யை வீர்யலக்ஷ்ம்யை தைர்ய லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே அஸ்த்வெளதார்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யைநமோ நம:

10. ஸித்திலக்ஷ்ம்யை ருத்திலக்ஷ்ம்யை வித்யாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கல்யாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

11. கீர்த்திலக்ஷ்ம்யை மூர்த்திலக்ஷ்ம்யை வர்ச்சோலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்வநந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

12. ஜபலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை வ்ரதலக்ஷ்ம்யை லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைராக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

13. மந்த்ரலக்ஷ்ம்யை தந்த்ரலக்ஷ்ம்யை யந்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே குருக்ருபாலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

14. ஸபாலக்ஷ்ம்யை ப்ரபாலக்ஷ்ம்யை கலாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே லாவண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

15. வேதலக்ஷ்ம்யை நாதலக்ஷ்ம்யை சாஸ்த்ரலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வேதாந்தலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

16. சேத்ரலக்ஷ்ம்யை தீர்த்தலக்ஷ்ம்யை வேதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே ஸந்தானலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

17. யோகலக்ஷ்ம்யை போகலக்ஷ்ம்யை யக்ஞலக்ஷ்ம்யை நமோ நம:
க்ஷீரார்ணவ புண்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

18. அன்னலக்ஷ்ம்யை மநோலக்ஷ்ம்யை ப்ரக்ஞாலக்ஷ்ம்யை நமோ நம:
விஷ்ணுவக்ஷேபூஷலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

19. தர்மலக்ஷ்ம்யை அர்த்தலக்ஷ்ம்யை காமலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே நிர்வாணலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

20. புண்யலக்ஷ்ம்யை சேமலக்ஷ்ம்யை ச்ரத்தாலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே சைதன்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

21. பூலக்ஷ்ம்யை தே புவர்லக்ஷ்ம்யை ஸுவர்லக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரைலோக்யலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

22. மஹாலக்ஷ்ம்யை ஜனலக்ஷ்ம்யை தபோலக்ஷ்ம்யை நமோ நம:
நம: ஸத்யலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

23. பாவலக்ஷ்ம்யை வ்ருத்திலக்ஷ்ம்யை பவ்யலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே வைகுண்டலக்ஷம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

24. நித்யலக்ஷ்ம்யை ஸத்யலக்ஷ்ம்யை வம்சலக்ஷம்யை நமோ நம:
நமஸ்தே கைலாஸலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

25. ப்ரகிருதிலக்ஷ்ம்யை ஸ்ரீலக்ஷ்ம்யை ஸ்வஸ்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே கோலோகலக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

26. சக்திலக்ஷ்ம்யை பக்திலக்ஷ்ம்யை முக்திலக்ஷ்ம்யை நமோ நம:
நமஸ்தே த்ரிமூர்த்தி லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

27. நமச்சக்ராரஜ லக்ஷ்ம்யை ஆதிலக்ஷ்ம்யை நமோ நம:
நமோ ப்ரும்மானந்த லக்ஷ்ம்யை மஹாலக்ஷ்ம்யை நமோ நம:

                         "சுபமஸ்து"

அருள்மிகு மாசாணியம்மன் 108 போற்றி

அருள்மிகு மாசாணியம்மன் மற்றும் 108 போற்றி  பதிவு செய்து வணங்குகின்றோம் 

மாசாணியம்மன்  108  போற்றி

ஓம் அன்பின் உருவே போற்றி

ஓம் அருளின் பொருளே போற்றி

ஓம் அகிலம் ஆள்பவளே போற்றி

ஓம் அக்கினி ரூபமே போற்றி

ஓம் அன்னை மாசாணியே போற்றி

ஓம் ஆனைமலைத் தெய்வமே போற்றி

ஓம் ஆசாரக காவலே போற்றி

ஓம் ஆனந்தத் திருவே போற்றி

ஓம் அமாவாசை நாயகியே போற்றி

ஓம் அலங்காரி சிங்காரி (10) போற்றி

ஓம் ஆங்காரி மாசாணியே போற்றி

ஓம் ஆரவாரம் செய்தோம் போற்றி

ஓம் ஆயிரம் கண்ணுடையாளே போற்றி

ஓம் ஆதரவு தருவாய் போற்றி

ஓம் ஆதியும் அந்தமும் ஆனாய் போற்றி

ஓம் ஆக்ஞான சக்தியே போற்றி

ஓம் ஆகாய ரூபமே போற்றி

ஓம் ஆதிபகவதியே போற்றி

ஓம் ஆனை மலைக்கு அரசியே போற்றி

ஓம் இகம்பர சுகம் தருவாய் (20) போற்றி

ஓம் இம்மையிலும் துன்பம் போக்குவாய் போற்றி

ஓம் இதயத்தில் உனை வைத்தேன் போற்றி

ஓம் இமயம் போல் உனை நம்பினேன் போற்றி

ஓம் இன்பம் அருளும் இனியவளே போற்றி

ஓம் இன்றும் என்றும் நீயே துணை போற்றி

ஓம் இருகரம் கூப்பி நின்றேன் போற்றி

ஓம் இருளை நீக்கும் ஒளியே போற்றி

ஓம் இளம் கன்னி வடிவெடுத்தாய் போற்றி

ஓம் இசைக்குள் இசையானாய் போற்றி

ஓம் இடுகாட்டு சாம்பலில் உதித்தவளே (30) போற்றி

ஓம் இன்னல்களை போக்கிடுவாய் போற்றி

ஓம் இன்னல்களை போக்கிடுவாய் போற்றி

ஓம் இரவும் பகலும் ஆனாய் போற்றி

ஓம் ஈஸ்வரித் தாயே போற்றி

ஓம் ஈகை உள்ளம் கொண்டோய் போற்றி

ஓம் ஈன்றெடுக்கும் அன்னையே போற்றி

ஓம் ஈசனுக்கும் சக்தியே போற்றி

ஓம் உலகத்தைக் காப்பவளே போற்றி

ஓம் உடுக்கையை சுமந்தவளே போற்றி

ஓம் உண்மைப் பொருளே (40) போற்றி

ஓம் உத்தமித் தெய்வமே போற்றி

ஓம் உள்ளும் புறமும் ஆனாய் போற்றி

ஓம் உயிரே போற்றி உணர்வே போற்றி

ஓம் உக்கிரப் பாவை உடையவளே போற்றி

ஓம் உள்ளத்தை விளக்காய் மாற்றினேன் போற்றி

ஓம் உயிரைத் திரியாய் ஆக்கினேன் போற்றி

ஓம் உதிரத்தை நெய்யாய் ஊற்றினேன் போற்றி

ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி

ஓம் ஊக்கம் அளித்துக் காப்பாய் போற்றி

ஓம் ஊழியம் உனக்கே செய்தேன் (50) போற்றி

ஓம் ஊர்க்காவலே மாசாணியே போற்றி

ஓம் எளியோரும், வலியோரும் வணங்குவார் போற்றி

ஓம் எந்தை அடியே போற்றி

ஓம் எங்கும் நிறைவாய் போற்றி

ஓம் எட்டுத்திக்கும் ஆட்சி செய்வாய் போற்றி

ஓம் என்றும் துணையாய் இருப்பாய் போற்றி

ஓம் எழில் உருவே போற்றி

ஓம் எண்ணத்தில் உறைபவளே போற்றி

ஓம் என் அறிவுக்கு எட்டாத தத்துவமே போற்றி

ஓம் எண்ணை காப்பு பிரியாளே (60) போற்றி

ஓம் என் குறை தவிர்ப்பாய் போற்றி

ஓம் எலுமிச்சை மாலை ஏற்பாய் போற்றி

ஓம் எங்கள் தெய்வமே மாசாணி போற்றி

ஓம் ஏக்கம் போக்குவாய் போற்றி

ஓம் ஏற்றங்கள் தருவாய் போற்றி

ஓம் ஏகப் பரம்பெருள் சக்தியே போற்றி

ஓம் ஏழைக்கு இரங்குவாய் போற்றி

ஓம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி

ஓம் எமனை அழித்தாய் போற்றி

ஓம் ஏமத்தில் சாமத்தில் நீயே துணை (70) போற்றி

ஓம் ஏவல், சூனியம் எடுப்பவளே போற்றி

ஓம் ஐயம் தவிர்ப்பாய் போற்றி

ஓம் ஐஸ்வர்யங்கள் தருவாய் போற்றி

ஓம் ஐம்பொற் சிலையே போற்றி

ஓம் ஐக்கியம் உன்னுள் ஆனேன் போற்றி

ஓம் ஐந்து உலகம் ஆள்வாய் போற்றி

ஓம் ஒளிர்பவளே போற்றி

ஓம் ஒருபோதும் உனை மறவேன் போற்றி

ஓம் ஒப்பிலா மணியே போற்றி

ஓம் ஒருபொருள் தத்துவமே (80) போற்றி

ஓம் ஓங்காரப் பொருளே போற்றி

ஓம் ஓதுவார் உள்ளத்து உறைபவள் போற்றி

ஓம் சக்தி தாயே போற்றி

ஓம் ஓமெனும் உட்கருவே போற்றி

ஓம் நீதியின் உருவே போற்றி

ஓம் நிம்மதி தருவாய் போற்றி

ஓம் மலை வடிவானவளே போற்றி

ஓம் சிலை வடிவானவளே போற்றி

ஓம் மங்களம் அருள்வாய் போற்றி

ஓம் பூக்குழி நாயகியே (90) போற்றி

ஓம் மயான நாயகியே போற்றி

ஓம் மன அமைதி தருவாய் போற்றி

ஓம் குங்குமக்காரியே போற்றி

ஓம் மனுநீதித் தராசே போற்றி

ஓம் மாற்றங்கள் மகிழ்வுடன் தருவாய் போற்றி

ஓம் மண்ணின் மணியே மந்திரமே போற்றி

ஓம் மசக்கையோடு இருந்தவளே போற்றி

ஓம் மாங்கனி உண்ட மங்கையே போற்றி

ஓம் மாங்கல்ய பாக்கியம் தருவாய் போற்றி

ஓம் எல்லாப் பிணிகளையும் போக்குவாய் (100) போற்றி

ஓம் மயானக் கொள்ளை பிரியாளே போற்றி

ஓம் தாரகனின் மகள் தரணியே போற்றி

ஓம் தரணியை ஆள தவமிருந்தோய் போற்றி

ஓம் நந்தவன நாயகியே மாசாணி போற்றி

ஓம் மகப்பேறு உபாதைகள் போக்குவாய் போற்றி

ஓம் சக்தியான சங்கரியே போற்றி

ஓம் சந்ததிகளை காக்க சடுதியிலே வருவாய் போற்றி

ஓம் அம்மா அழகே மாசாணியே போற்றி

அன்னையே சமயபுரத்தாயே ஆதி சக்தியே

அன்னையே சமயபுரத்தாயே ஆதி சக்தியே,, 

உங்களை அம்மனாக, காளிதேவியாக அகிலம் அறியும். ஆனால் நீங்கள் அதிஅற்புத மருத்துவச்சி என்பதனை கடையன் அறிவேன் அம்மா. உங்களுக்கு தெறியாத மருத்துவமா இல்லை மருந்தா..?? 

ஏன் தாயே மௌனம் காக்கின்றீர்கள்,, மனிதர்களை பார்க்க கூட மனமில்லையா உங்களுக்கு,, 

உயிர்களுக்காக பச்சைபட்டினி இருக்கும் பரமசிவன் பத்தினியாரே,  பாரில் மக்கள் படும் துன்பங்கள் தெறியலயோ,, 

அங்கே பெற்ற பிள்ளையையும்,  கருவுற்ற மனைவியையும் மருத்துவன் எட்டிநின்று பார்த்த ககைசீ தருணங்கள் ஈரக்குலை நடுங்குதம்மா,, 

இன்னல் தீர்க்கும் மகமாயியே,, மயில்வாகனன்  தாயாரே,, மக்களுக்கெல்லாம் நீயே தாயம்மா,, 

உன்பிள்ளைகளை காவந்துசெய்வது உன் பொறுப்பல்லவா தாயே,, 

பிள்ளைகள் கதறல் பெற்றவளுக்கு கேட்களயோ,   வேப்பிழையின் மகிமையும் மஞ்சளின் மகிமையும் வெளிப்படும் நேரமன்றோ,, 

போதும் போதும் பொறுத்தது போதும்,  அங்கம் நடுங்க, ஆகாசம் நடுங்க, சிங்க வாகனமேறி எழுந்துவாருமம்மா, ஆதி சக்தியே,  அகிலத்தின் தாயே,, கண்ணபுர நாயகியே, அரங்கன் தமையாளே,  ஆதிசிவனின் சரிபாதியே...!!!

Tuesday, 5 November 2019

இழந்த செல்வம் மீட்டு தரும் தென்குரங்காடுதுறை

கும்பகோணம் நகரைச் சுற்றியுள்ள ஆலயங்கள் பற்றிய கட்டுரை இது. 

இழந்த செல்வம் மீட்டு தரும் " தென்குரங்காடுதுறை " 

சம்பந்தரும், நாவுக்கரசரும் பாடிய ஆடுதுறை எனப்படும் தென்குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் " ஆபத்சகாயேஸ்வரர் " இழந்த செல்வங்களை மீட்டுத் தருபவர். வாலியால், துரத்தப்பட்ட சுக்ரீவன், இத் தல நாயகனை வேண்ட, ஸ்ரீராமரின் அருள் கிடைத்து, தான் இழந்தசெல்வங்கள் அனைத்தையும் பெற்றான். வானராமகிய சுக்ரீவனால் பூஜிக்கப்பட்டதால், இத் தலம் " தென்குரங்காடுதுறை " என்றானது. கும்பகோணமிருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார் 25 கி.மீ. தொலைவில் இத் திருக்கோயில் அமைந்துள்ளது. 

செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் "திருவாடுதுறை" 

கும்பகோணம் - மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ. தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் "திருவாடுதுறை". ஞானசம்பந்தரிடம் அவர் தந்தை யாகம் செய்ய தேவையான பொருள் கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட, பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.

செல்வ வளம் பெருக சம்பந்தர் அருளிய பதிகம் 
இடரினும் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்!
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!

இதுவோ எமைஆளுமாறு ஈவதொன்று எமக்கில்லையேல்
அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே!
🗣🗣🗣🗣🗣
கடன், சங்கடங்கள் போக்கும் " திருபுவனம் சரபேஸ்வரர் "

தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற, கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள "திருபுவனம் " சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் "சரபேஸ்வரரை" வழிபடலாம். பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம். வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர். சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம். 
🗣🗣
வறுமை நீக்கும் கடன் நிவர்த்தி தலமாம் "திருச்சேறை"

ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன. முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள " ரிண விமோஷன லிங்கேஸ்வரர் ". கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம். ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும். இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள். மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது தனி சிறப்பு

பிரிந்துள்ள தம்பதியர் ஒன்று சேர "வாஞ்ஸ்ரீசியய்ம்"

மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்". காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம். ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும். இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும். இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது. இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்

டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.
🗣🗣🗣🗣

பிதுர் தோஷம் நீக்கும் " ஆவூர் பஞ்ச பைரவர்கள் "கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோயில். இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி. வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. ( ஆ என்றால் பசு ). 
இத் திருத் தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது. இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த "பிதுர் தோஷ நிவர்த்தியாகும்".
சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள். ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர். ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் "பிதுர் தோஷமே ". பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம். 
🗣🗣🗣🗣🗣🗣
மரண கண்டம் நீக்கும் " திருநீலக்குடி "
ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக் கோயில், கும்பகோணம் - காரைக்கால் சாலயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் "திருநீலக்குடியாகும்". மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது. எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும். ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத் தலத்தில் தானம் செய்ய வேண்டும். எம, மரண பயங்கள் நீங்க இத் தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

மாங்கல்ய தோஷம் நீக்கும் " பஞ்சமங்கள ஷேத்திரம் திருமங்கலக்குடி"
நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்". இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும். முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான். 

இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான். அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள். மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி. இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர் " எனவும் வழிபடலாயினர். மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத் தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும். வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர். அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம். எனவே, இத் தலம் " பஞ்ச மங்கள ஷேத்திரம் " எனப்படுகிறது.

கிரக தோஷங்கள் விலக்கும் " சக்கரபாணி "

ஆயுதமேந்திய எட்டு திருக்கரங்களுடன், சக்கர வடிவ தாமரை பூவுடன் கூடிய அறுகோண யந்திரத்தில், நின்ற திருக் கோலத்தில் காட்சி தரும் " சக்ககரபாணி " வழிபாடு கிரக தோஷங்கள் நீக்கும். நவக்கிரக நாயகனான சூரிய தேவனே வழிபட்டு தன் தோஷம் நீக்கியதால், இத் தலம் கிரக தோஷ பரிகாரத் தலமாக விளங்குகிறது. சனி திசை, ராகு திசை கேது புத்தி போன்ற நவக்கிரக தோஷங்களால் அவதிப்படுபவர்கள் இத் தல நாயகனுக்கு, செவ்வரளி, செம்பருத்தி, துளசி மற்றும் குங்குமம் கொண்டு அர்ச்சனை செய்வது மிகுந்த பலன் அளிக்கும். சக்கரபாணி, ருத்ராம்சம் கொண்டு விளங்குவதால், வன்னி மற்றும் வில்வ இலைகள் அர்ச்சனையும் சிறப்பே. 
🗣🗣🗣🗣
பெண் பாவம் தீர்க்கும் " திருவிசநல்லூர் " 
திருவியலூர் எனப்படும் " திருவிசநல்லூரில் "சிவயோகி நாதராய், அய்யன் குடிகொண்டுள்ளார். இவரை வணங்கினால், முற் பிறவியிலோ அல்லது இப் பிறப்பிலோ, தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் அகன்றுவிடும். பெண்களின் பாவதிற்க்கும், பழிக்கும் ஆளாகி அல்லல் படுவோர் சுகம் பெறுவர்.நந்தி தேவர், எம தர்மனை விரட்டி அடித்த இத் தலம் " மரண பயம் " நீக்கும் திருத் தலமாகும்.
[24/10, 22:47] ssudarsan2004: தேவாரம்  பெற்ற தலங்கள்

1. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய தலங்கள் --- 44
2. சம்பந்தரும், திருநாவுக்கரசரும் பாடிய தலங்கள்           --- 52
3. சம்பந்தரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                   --- 13
4. அப்பரும், சுந்தரரும் பாடிய தலங்கள்                     ----  2
5. சம்

பந்தர் மட்டும் பாடிய தலங்கள்                        ---- 111
6. அப்பர் மட்டும் பாடிய தலங்கள்                           ---- 28
7. சுந்தரர் மட்டும் பாடிய தலங்கள்                          ----- 25

                                                                   மொத்தம்              275
               இவற்றுள்
மாணிக்கவாசகர் பாடிய தலங்கள்                             25

                சிவஸ்தலத்   தொகுதிகள்

       வீரச் செயல்கள் புரிந்த தலங்கள்         

1.            அட்ட வீரட்டத் ஸ்தலங்கள்

1. திருக்கண்டியூர்          ---- பிரமன் சிரம் கொய்தது
2. திருக்கோவலூர்         ---- அந்தகாசுரனைச் சங்கரித்தது
3. திருஅதிகை             ---- திரிபுரத்தை எரித்தது
4. திருப்பறியலூர்          ---  தக்கன் சிரங்கொய்தது
5. திருவிற்குடி            ----  சலந்தராசுரனைச் சங்கரிதத்து
6. வழுவூர் (வைப்புத்தலம்) --- யானையை உரித்தது
7. திருக்குறுக்கை         --- காமனை எரித்தது
8. திருக்கடவூர்           ---- யமனை உதைத்தது

2.            பன்னிரு ஜோதிலிங்கத் ஸ்தலங்கள்

1. கேதாரம் (இமயம்)         ---- கேதாரேஸ்வர்ர்
2. சோமநாதம் (குஜராத்)      ---- சோமநாதேஸ்வரர்
3. மகாகாளேசம் (உஜ்ஜயினி) ---- மகாகாளேஸ்வரர்
4. விசுவநாதமே (காசி)       ---- விஸ்வநாதேசுவரர்
5. வைத்தியநாதம்  (மகாராஷ்டிரம்)  ---- வைத்திநாதேசுவரர்
6, பீமநாதம் (மகாராஷ்டிரம்)       ---- பீமநாதேசுவரர்
7. நாகேஸ்வரம் (மகாராஷ்டிரம்)   ---- நாகநாதேசுவர்ர்
8. ஓங்காரேஸ்வரம் (மத்தியப் பிரதேசம்) -- ஓங்காரேசுவரர்
9. த்ரயம்பகம் (மகாராஷ்டிரம்)           --- த்ரயம்பகேசுவரர்
10. குசமேசம் (மகாராஷ்டிரம்)          ---- குஸ்ருணேச்சுவர்ர்
11. மல்லிகார்சுனம் ஸ்ரீசைலம் (ஆந்திரம்) --- மல்லிகார்ச்சுனர்
12. இராமநாதம் (அராமேஸ்வரம்)        ---- இராமநாதேஸ்வரர்

            முக்தி அளிக்கும் ஸ்தலங்கள்

1. திரு ஆரூர்          ---- பிறக்க முக்தி தருவது
2. சிதம்பரம்           ----- தரிசிக்க முக்தி தருவது
3. திருவண்ணாமலை  ---- நினைக்க முக்தி தருவது
4. காசி                ---- இறக்க முக்தி தருவது

                 பஞ்சபூத ஸ்தலங்கள்

1. திரு ஆரூர் அல்லது காஞ்சிபுரம்    ---- பிருதிவி (நிலம்)
2. திரு ஆனைக்கா                   ----- அப்பு (நீர்)
3. திருவண்ணாமலை                ----- தேயு (தீ)
4. திருக்காளத்தி                      ----- வாயு (வளி)
5. சிதம்பரம்                          ---- ஆகாயம் (விசும்பு)

                 நடராஜருக்கான பஞ்ச சபைகள்

1. திருவாலங்காடு     --- இரத்தின சபை
2. சிதம்பரம்           --- கனகசபை (பொன்னம்பலம்)
3. மதுரை             --- ரஜதசபை (வெள்ளியம்பலம்)
4, திருநெல்வேலி      --- தாமிர சபை
5, திருக்குற்றாலம்     --- சித்திர சபை

               (வியாக்ரபாதர் வழிபட்டவை)  புலியூர்கள்

1. பெரும்பற்றப்புலியூர் (சிதம்பரம்)
2. திருப்பாதிரிப்புலியூர்
3. ஓமாம்புலியூர்
4. எருக்கத்தம்புலியூர்
5. பெரும்புலியூர்

                  சப்த (ஏழு)விடங்க ஸ்தலங்கள்

முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரன் அளித்த தியாகராஜர் உருவங்களை நிறுவிய தலங்கள்.

இந்தத் தியாகர் உருவங்கள் தனிப் பெயர்களைப் பெற்றுத் தனிப்பட்ட நடனங்களை யாடுவார்கள்.

1. திருஆரூர்  -- வீதிலிடங்கள் --- அசபா நடனம்
2. திருநள்ளாறு -- நகர (நசு) விடங்கர் --- உன்மத்த நடனம்
3. திருநாகைக்ரோணம் --- சுந்தரவிடங்கர் --- வீசி நடனம்
4. திருக்காறாயில் --- ஆதிவிடங்கர் --- குக்குட நடனம்
5. திருக்கோளிலி  -- அவனிவிடங்கர் --- பிருங்க நடனம்
6. திருவாய்மூர்   ---- நீலவிடங்கர்  --- கமல நடனம்
7. திருமறைக்காடு --- புவனிலிடங்கர் --- கம்சபாத

           சிறப்புத் தாண்டவத் ஸ்தலங்கள்

1. தில்லைச் சித்திரக் கூடம், பேரூர்  ---- ஆனந்த தாண்டவம்
2. திரு ஆரூர்                       ---- அசபா தாண்டவம்
3. மதுரை                           ---- ஞானசுந்தர தாண்டவம்
4. புக்கொளியூர்                     ----. ஊர்த்துவ தாண்டவம்
5. திருமுருகன் பூண்டி              ---- பிரம தாண்டவம்

                சிவராத்திரி வழிபாட்டுக்கு ஏற்ற ஸ்தலங்கள்

1. கச்சி ஏகம்பம்
2. திருக்காளத்திங
3. கோகர்ணம்
4. திருப்பருப்பதம் (ஸ்ரீ சைலம்)
5. திருவைகாவூர்

                 காசிக்கு ஈடான ஸ்தலங்கள்

1. திருவெண்காடு
2. திருவையாறு
3. மயிலாடுதுறை
4. திருவிடை மருதூர்
5. திருச்சாய்க்காடு
6. திருவாஞ்சியம்

                        நந்தியுடன் தொடர்புடைய ஸ்தலங்கள்

1.            நந்தி சங்கம தலம்             --- கூடலையாற்றூர் திருநணா (பவா நிகூடல்)
2.            நந்தி விலகியிருந்த தலங்கள்  ---- பட்டீச்சுரம் (சம்பந்தருக்காக), திருப்புன்கூர் (நந்தனாருக்காக), திருப்பூந்துருத்தி(அப்பர்,சம்பந்தருக்காக).
3.            நந்திக்குக் கொம்பு ஒடிந்த தலம் --- திருவெண்

பாக்கம்
4.            நந்திதேவர் நின்ற திருக்கோலம் --- திருமாற்பேறு
5.            நந்தி தேவருக்குத் திருமணம் நடக்கும் தலம் --- திருமழபாடி
6.            திருக்கீழ்வேளூர் – ஒரு பக்தையின் பொருட்டு
7.            திருநள்ளாறு – ஒரு இடையனுக்காக

             
          சப்த ஸ்தான (ஏழூர் விழா)  தலங்கள்

1. திருவையாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிகுடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்
திருவையாற்றைச் சுற்றியமைந்துள்ளன.

             திருமால் சந்நிதி உள்ள சிவாலயங்கள்

1. திருவோத்தூர்    --- ஆதிகேசவப் பெருமாள்
2. கச்சி ஏகம்பம்    ---- நிலாத்துண்டப் பெருமாள்
3. கொடிமாடச் செங்குன்றூர் --- ஆதிகேசப் பெருமாள்
4. சிதம்பரம்       --- கோவிந்தராஜப் பெருமாள்
5. திருநணா       --- ஆதிகேசவப் பெருமாள்
6. சிக்கல்          --- கோலவாமனப் பெருமாள்
7. திருநாவலூர்    --- வரதராஜப் பெருமாள்
8. திருநெல்வேலி  --- நெல்லை கோவிந்தர்
9. திருப்பழனம்    --- கோவிந்தர்
10.பாண்டிக் கொடுமுடி --- அரங்கநாதர்
11. திருப்பத்தூர்     --- அரங்கநாதர்
12. திருவக்கரை     --- அரங்கநாதர்

        ஒரே கோயிலில் இரு பாடல் பெற்ற கோயில்கள்

     உட்கோயில்                            கோயில்

1. திருவாரூர் அரநெறி                 ----   திருவாரூர்
2. திருப்புகலூர் வர்த்தமானீச்சுரம்       ---    திருப்புகலூர்
3. மீயச்சூர் இளங்கோயில்             ----  மீயச்சூர்

               காயாரோகணத் தலங்கள்

1. கச்சிக்காரோணம் (வைப்புத் தலம்)
2. சூடந்தைக் காரோணம்
3. நாகைக் காரோணம்

              மயானத் தலங்கள்

1. கச்சி மயானம்
2. கடவூர் மயானம்
3. நாலூர் மயானம்

              கைலாயத் தலங்கள் தெட்சண கைலாசம்

1. திருக்காளத்தி
2. திருச்சிராப்பள்ளி
3. திரிகோணமலை (இலங்கை)

             பூலோக கைலாசம்

1. திருவையாறு
2. திருக்குற்றாலம்
3. சிதம்பரம்

       அழகிற் சிறந்த கோயில்கள்

1. தேரழகு     ---    திருவாரூர்
2. வீதி அழகு  ---    திருஇடை மருதூர்
3. மதிலழகு   ---    திருவிரிஞ்சை
4. விளக்கழகு  ---    வேதாரண்யம்
5. கோபுரமழகு --    திருக்குடந்தை
6. கோயிலழகு – காஞ்சி

        பூசாகாலத்தில் சிறப்பு வழிபாடு

1. திருக்குற்றாலம்  -- திருவனந்தல் சிறப்பு
2. இராமேச்சுரம்    --- காலை பூசை சிறப்பு
3. திருஆனைக்கா  --- மத்தியான பூசை சிறப்பு
4. திரு ஆரூர்     --- சாயுங்கால பூசை சிறப்பு
5. மதுரை         --- இராக்கால பூசை சிறப்பு
6. சிதம்பரம்       --- அர்த்தசாம பூசை சிறப்பு

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் காலத்து வாழ்ந்த நாயன்மார்கள்

குங்கிலியக்கலயர், முருகர், குலச்சிறை, அப்பூதி, நீலநக்கர், சிறுத்தொண்டர், நின்றசீர் நெடுமாறர், மங்கையர்க்கரசி, திருநீலகண்டயாழ்பாணர்.

நடராசர் அபிஷேக நாட்கள் 6

மார்கழி = ஆதிரை , சித்திரை = ஓணம், ஆனி = உத்திரம் மாசி = ஆவணி
புரட்டாசி ஆகிய மூன்றும் நட்சத்திர அடிப்படையிலானவை.  ஏனைய மூன்றுக்கும் சதுர்த்தசி திதி அடிப்படை.

ஆயிரங்கால்  மண்டபங்கள் உள்ள சிலஸ்தலங்கள்

மதுரை, சிதம்பரம், இராமேஸ்வரம்.

ஒரே ஆவுடையாரில் இரண்டு பாணங்கள் அமைந்து காணப்பெறும் ஒரே தேவாரத் திருத்தலம் 

திருநல்லூர்த் திருத்தலம்.

அமர்ந்த நிலையிலான அர்த்தநாரீஸ்வர வடிவம்

“திருகண்டியூர் வீரட்டம்” என்னும் திருத்தலத்தில் மட்டுமே அமையப்பெற்றுள்ளது.

திருஞான சம்பந்தருக்காக நந்தி விலகிய தலங்கள் இரண்டு.

திருப்பட்டீச்சரம், திருப்பூந்துருத்தி.

சிவன் சிறப்புத் தேவாரத் தாண்டவத் தேவாரத்தலங்கள் ஆறு

1.            மயூர தாண்டவம்  - மயிலாடுதுரை
2.            அஞ்சிதபாத கரண தாண்டவம்- செங்காட்டங்குடி
3.            கடிசம தாண்டவம்- திருவக்கரை
4.            சதுர தாண்டவம்- திருநல்நூர்
5.            சுந்தரத் தாண்டவம்- கீழ்வேளூர்
6.            லதா விருச்சிக தாண்டவம்- திருமழபாடி

அறுபத்து மூன்று நாயன்மாரில் குருவருளால் முக்தி பெற்றோர்.

சம்பந்தர், நாவுக்கரசர், திருமூலர், நின்றசீர் நெடுமாறன், அப்பூதி, சோமாசிமாறர், மங்கையர்கரசி, நீலகண்டயாழ்பாணர், மிழலைக்குறும்பர், கணநாதர், குலச்சிறை என 11 பேர் ஆவார்.

              பெரிய கோபுரத் தலங்கள்

திருவண்ணாமலை
மதுரை
தில்லை
திருமுதுகுன்றம்
திருச்செந்தூர்
இராமேஸ்வரம்
குடந்தை
காளையார் கோவில்
தென்காசி

மண்டபங்கள் சிறப்பு

வேலூர் - கல்யாண மண்டபம்
கிருஷ்ணாபுரம் - சபா மண்டபம்
பேரூர் -  கனக சபை
தாரமங்கலம் – குதிரை மண்டபம்
புகழ் பெற்றவை மட்டுமில்லாமல் இம்மண்டபங்கள் கலைச் சிறப்புக்கு சிறந்த எடுத்துக்காட்டானவைகளாகும்.

யானை ஏறாத மாடக் கோயில்கள் சில

1.     திருவானைக்காவல்
2.    ஆக்கூர்
3.    திருத்தேவூர்
4.    திருக்கீழ்வேளூர்
5.    சிக்கல்
6.    வலிவலம்
7.   அம்பர்மகாளம்
8.   தண்டலை நீள் நெறி
9.   திருநறையூர்
10. பழையாரை
11. திருமருகல்
12. வைகல்மாடக் கோயில்
13. நன்னிலம்(மதுவனம்)
14.

குடவாசல்
15. புள்ளமங்கை
16. திருத்தலைச்சங்காடு
17. நல்லூர்
18. திருநாலூர்
19. திருச்சாய்க்காடு
20. திருவக்கரை
21. திருநாங்கூர்
22. திருப்ராய்த்துறை
23. ஆவுர்
24. திருவெள்ளாறை
25. திருவழுந்தூர்
26. நாகப்பட்டினம்
27. பெருவேளூர்
28. கைச்சின்னம்
29. சேங்கனூர் இவ்விதம் எழுபதுக்கும் மேல்…….

                    பெரிய லிங்கம்

 கங்கை கொண்ட சோழபுரம் – இங்குள்ள மூலஸ்தான மூர்த்திக்கு இலிங்கத் திருஉருவைச் சுற்ற 15 முழமும், ஆவுடையார்க்கு 54 முழமும் பரிவட்டம் வேண்டும்.

திருப்புனவாயில் – இத்தலத்து மூல லிங்கம் மிகப் பெரியது. இலிங்க வடிவிற்கு மூன்று முழப் பரிவட்டமும், ஆவுடையாருக்கு முப்பது முழம் பரிவட்டமும் தேவை “மூன்று முழம் ஒரு சுற்று; முப்பது முழமும் ஒரு சுற்று ”என்பது பழமொழி.
            

                       பெரிய நந்தி

தஞ்சை நந்தி மிகப் பெரியது தான். அதனினும் பெரியது லேபாட்சி வீரபத்திரர் சுவாமி கோயிலில் உள்ள நந்தியாகும்.

                   புகழ்பெற்ற கோயில்கள்

             கோயில் – சிதம்பரம்
             பெரியகோயில்- தஞ்சை
             பூங்கோயில் – திருவாரூர்
             திருவெள்ளடை- திருக்குருகாவூர்
             ஏழிருக்கை-சாட்டியக்குடி
             ஆலக்கோயில்-திருக்கச்சூர்
             கரக்கோயில்- திருக்கடம்பூர்
             கொகுடிக் கோயில்- திருப்பறியலூர்
             மணிமாடம்- திருநறையூர்
             தூங்கானைமாடம்- திருப்பெண்ணாடகம்
             அயவந்தீச்சரம்-திருச்சாத்தமங்கை
             சித்தீச் சுரம்- திருநறையூர்

நால்வர் இறையருளில் கலந்த தலங்கள்

1.            திருஞானசம்பந்தர் - ஆச்சாள் புரம்
2.            திருநாவுக்கரசர் - திருப்புகலூர்
3.            சுந்தரர் - திருவஞ்சைக்களம்
4.            மாணிக்கவாசகர் – தில்லை

சந்தானக்குரவர் அவதரித்த தலங்கள்

1.            மெய்கண்டார்- திருப்பெண்ணாடகம்
2.            அருள் நந்திதேவ நாயனார் – திருத்துறையூர்
3.            மறைஞானசம்பந்தர்- பெண்ணாடகம்
4.            உமாபதி சிவம்- சிதம்பரம்.

சந்தானக்குரவர் முக்தி அடைந்த தலங்கள்

1.            மெய்கண்டார்- திருவண்ணாமலை
2.            அருள் நந்திதேவ நாயனார் – சிர்காழி
3.            மறைஞானசம்பந்தர்- சிதம்பரம்
4.            உமாபதி சிவம்- சிதம்பரம்

       பக்தர்கள் பொருட்டு

திருவிரிஞ்சியுரம்- பக்தனுக்காக இறைவன் தன் முடியை சாயத்து அபிஷேகத்தை ஏற்றுக்கொண்டார்.

திருப்பனந்தாள் – பக்தைக்காக இறைவன் தன் முடியை சாய்த்து பூமாலையை ஏற்றிக் கொண்டருளினார்.

Sunday, 3 November 2019

கோபாஷ்டமி மஹிமை



*ராதேக்ருஷ்ணா !*
*கோபாஷ்டமி !*
4.11.19, திங்கட்கிழமை...

*கோபாஷ்டமி மஹிமை !*

1⃣ க்ருஷ்ண பலராமர்கள் 5வயது முடிந்தபிறகு, இன்றைய தினத்தில்தான் மாடுகள் மேய்க்க நந்தகோபர் அனுமதித்தார். அதற்கு முன் தினம் வரை கண்ணனும் பலராமனும் கன்றுகளையே மேய்த்தார்கள். அதுவரை அவர்களுக்கு *வத்ஸபாலன்(வத்ஸ என்றால் கன்றுகள் என்றும், பாலன் என்றால் பாலனம் செய்கிறவன் என்றும் அர்த்தம்)*. கோபாஷ்டமி அன்று மாடுகளுக்கு விசேஷ பூஜை செய்து, கண்ணனையும் பலராமனையும் *கோபாலன்* என்று அழைத்து ஆசீர்வதித்தனர். அதனால் கண்ணன் பலராமனை பூஜிப்பதும், கோமாதாக்களை பூஜிப்பதும் விசேஷம்.

2⃣ தீபாவளி மறுதினம் இந்திர பூஜையைக் கெடுத்து க்ருஷ்ணன் *கோவர்த்தன பூஜை* செய்தான். அதனால் வெகுண்ட இந்திரன் பயங்கரமான மழையைக் கொட்டினான். பகவான் க்ருஷ்ணனும் கோவர்த்தன மலையைத் தூக்கி 7நாள் அன்ன ஆகாரமின்றி எல்லோரையும் காத்தான். தீபாவளிக்கு பிறகு வரும் அஷ்டமியன்று (எட்டாம் நாள்) இந்திரன் கர்வம் அடங்கி மழையை நிறுத்தினான். க்ருஷ்ணனும் எல்லோரையும் மலையின் கீழிருந்து வெளியேறச் சொல்லி, மலையை மீண்டும் கீழே வைத்த நாளே *கோபாஷ்டமி*

3⃣ க்ருஷ்ணன் 7நாள் மலையைத் தூக்கிக்கொண்டிருந்த சமயத்தில் யாருக்கும் பசியோ, தாகமோ களைப்போ இல்லை. க்ருஷ்ண தரிசனத்தில் எல்லோரும் மயங்கியிருந்ததால் அத்தனையும் மறந்தார்கள். கண்ணனும் ஒரு வாரம் ஒன்றும் சாப்பிடவில்லை. ஆனால் கோபிகைகளின் மனசு கேட்கவில்லை. ஏனெனில் கண்ணன் ஒரு நாளைக்கு 8தடவை சாப்பிடுவான்.
அதனால் கோபிகைகள் வேகவேகமாக வீட்டிற்குச் சென்று, கண்ணனுக்கு விதவிதமான விருந்து தயார்செய்தார்கள்.

7 நாளுக்கும் சேர்த்து 56விதமாக அன்னங்கள், பக்ஷணங்கள், சுவையான பழச்சாறுகள் என்றெல்லாம் செய்து கண்ணன் வயிராற சாப்பிடுவதைக் கண்டு
ஆனந்தித்தனர். அதனால் பிருந்தாவனம், துவாரகை போன்ற இடங்களில் கோபாஷ்டமி அன்று 56நிவேதனங்கள் உண்டு. நாமும் நம் இல்லங்களில் 56வகையான நிவேதனங்கள் கண்ணனுக்கு கொடுக்கலாம். 56வகை நிவேதனங்களுக்கு *சப்பன்போக்* என்று பெயர். இன்றும் புரி ஜகந்நாதனுக்கு தினமும் சப்பன்போக் நிவேதனம் உண்டு.

4⃣ கர்வமழிந்த இந்திரனும் கண்ணனிடம் மன்னிப்பு கேட்டு, ஆகாச கங்கை ஜலத்தாலும், காமதேனுவின் பாலாலும் கோவிந்த பட்டாபிஷேகம் செய்தான். கண்ணனுக்கு *கோவிந்தன்* என்னும் திருநாமம் கிடைத்த நாள் கோபாஷ்டமி !

அதனால் இந்த புண்ணியமான தினத்தில்,
🐄 *கோமாதா பூஜை செய்யுங்கள் !*🐄
‼ *கோவிந்த நாமம் ஜபியுங்கள்* ‼
🦚 *கண்ணனுக்கு 56விதமாக நிவேதனங்கள் செய்யுங்கள்*🦚m

*ராதேக்ருஷ்ணா !*





*56 நிவேதனங்கள் !*
(சப்பன்போக்)

கோபாஷ்டமிக்கு பகவான் க்ருஷ்ணனுக்கு நிவேதனங்கள் செய்ய
ஒரு வழிமுறை...
உங்களுக்குத் தோன்றியபடியும் நிவேதனம் செய்யலாம் !

(சிலவகை சித்திரான்னம்)
1. நெய்சாதம்
2. பருப்புசாதம்
3. தேங்காய்சாதம்
4. எலுமிச்சை சாதம்
5. புளியோதரை
6. எள்ளுஞ்சாதம்
7. பருப்புப்பொடி சாதம்
8. சாம்பார் சாதம்
9. ரசம் சாதம்
10.  தயிர்சாதம்

(சில பச்சடிகள்)
11. தயிர்பச்சடி
12. வெல்லப்பச்சடி
13. வெள்ளரிக்காய் பச்சடி
14. காரட் பச்சடி
15. தக்காளி பச்சடி

(சிலவகை பொரியல்)
16. கோஸுமல்லி
17. கத்தரிக்காய் பொரியல்
18. வெண்டைக்காய் பொறியல்
19. உருளைக்கிழங்கு
20. கோவைக்காய்
21. சுண்டைக்காய்
22. காராமணி
23. வாழைக்காய்

(சில பழங்கள்)
24. வாழைப்பழம்
25. சீத்தாப்பழம்
26. கொய்யா
27. சப்போட்டா
28. ஆரஞ்சு
29. ஆப்பிள்
30. அன்னாசிப்பழம்

(சில பருப்புகள்)
31. முந்திரி
32. பாதாம்
33. பிஸ்தா
34. வேர்க்கடலை
35. வால்நட்
36. உலர் திராட்சை

(சிலவகை பால்)
37. பாதாம் பால்
38. பிஸ்தா பால்
39. குங்குமப்பூ பால்

(சிலவகை பாயசம்)
40. வெல்லப்பாயசம்
41. தேங்காய் பாயசம்
42. அவல் பாயசம்
43. சேமியா பாயசம்
44. ஜவ்வரிசி பாயசம்

(சில பழச்சாறுகள்)
45. ஆப்பிள் சாறு
46. இளநீர்
47. மாதுளம்
48. சாத்துக்குடி
49. திராட்சை
50. ஆரஞ்சு

51. அப்பளம்
52. வடாம்
53. ஊறுகாய்
54. வடை
55. வெற்றிலை பாக்கு
56. ஏலக்காய்

இவையில்லாமல் உங்கள் ஊரில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், இவையெல்லாம் கூட நிவேதனம் செய்யலாம்...

பலவிதமான இனிப்புகள் செய்தும் நிவேதிக்கலாம்..

எல்லாம் உங்கள் ஆசைப்படி.
அன்போடு பக்தியோடு பக்தர் தருவதை நான் உள்ளன்போடு ஏற்கிறேன் என்று பகவான் க்ருஷ்ணன் கீதையில் சொல்லியிருக்கிறானே...

ஆனந்தமாய் கண்ணனுக்கு 56வகை பிரசாதங்களை நிவேதனம் செய்வோமே...

ராதேக்ருஷ்ணா