WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Wednesday, 19 December 2018

.ஸ்ரீ ரங்கம் 7-இன் சிறப்பு.

ஸ்ரீரங்கம் 7இன் சிறப்பு.
✳✳✳✳✳✳✳✳✳✳
1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯

2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபரி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருலுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ரா உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
17. திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார். (1) நவராத்ரி மண்டபம் (2) கருத்துரை மண்டபம் (3) சங்கராந்தி மண்டபம் (4) பாரிவேட்டை மண்டபம் (5) சேஷராயர் மண்டபம் (6) சேர்த்தி மண்டபம் (7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
18. திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
19. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப்பெற்றுள்ளன.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
20. திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி உள்ளது. (1) ராமானுஜர் (2) பிள்ளை லோகாச்சாரியார் (3) திருக்கச்சி நம்பி (4) கூரத்தாழ்வான் (5) வேதாந்த தேசிகர் (6) நாதமுனி (7) பெரியவாச்சான் பிள்ளை
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
21. சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக ஏழு முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார். (1) விருப்பன் திருநாள், சித்திரை மாதம் (2) வசந்த உற்சவம் வைகாசி மாதம், (3) பவித்ரோத்சவம் ஆவணி மாதம், (4) ஊஞ்சல் உற்சவம் ஐப்பசி மாதம், (5) அத்யயன உற்சவம் மார்கழி மாதம், (6) பூபதி திருநாள் தை மாதம், (7) பிரம்மோத்சவம். பங்குனி மாதம்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
22. நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் வாகனங்கள் (1) யானை வாஹனம் - தை, மாசி, சித்திரை (2) தங்க கருடன் வாஹனம் - தை, பங்குனி சித்திரை (3) ஆளும் பல்லக்கு - தை, பங்குனி சித்திரை (4) இரட்டை பிரபை - தை, மாசி, சித்திரை (5) சேஷ வாஹனம் - தை, பங்குனி, சித்திரை (6) ஹனுமந்த வாஹனம் - தை, மாசி, சித்திரை (7) ஹம்ச வாஹனம் - தை, மாசி, சித்திரை
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாகனங்களில் மட்டும் உலா வருவார்.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
24. கற்பக விருட்சம், ஹனுமந்த வாஹனம், சேஷ வாஹனம், சிம்ம வாஹனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாகனங்கள் தங்கத்திலும் யாளி வாஹனம், இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் - ஆகிய ஏழு வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளி மற்றும் தங்கத்திலும் உள்ளன.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
25. மற்ற கோவில்களில் காண முடியாதவை (1) தச மூர்த்தி (2) நெய் கிணறு (3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில் (4) 21 கோபுரங்கள் (5) நெற்களஞ்சியம் (6) தன்வந்தரி (7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி

கொடுக்கப்பட்டுள்ள 25ல் 2 மற்றும் 5 இரண்டையும் கூட்டினால் வருவது 7.
🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯🔯
பூலோகஆஊ வைகுண்டத்தில் அரங்கனை தரிசிக்க வாரீர்.🔯
✡✡✡✡✡✡✡✡✡✡✡✡

Sunday, 16 December 2018

காஞ்சி மகான்!


*காஞ்சி மகான்!*

*சந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்!*

1)இவர் மிக இளம் வயதிலேயே சந்நியாசம் மேற்கோண்ட காஞ்சி சங்கர மடாதிபதியாவார்.

2)பத்து வயதிலேயே அப்பொறுப்பிற்கு வந்தவர்.

3)நான்கு வேதம், ஆறு சாஸ்த்திரம், புராணங்களை சுயமாக கற்றுத் தேர்ந்தவர்.

4)சுமார் 18 மொழிகளில் பேச எழுத படிக்கத் தெரிந்தவர்.

5)தமிழ் மொழி குறிப்பாக கல்வெட்டு மொழிகளில் இலக்கணத்தோடு விவாதிக்கும் ஆற்றல் பெற்றவர்.

6)இந்து மத வேதங்கள் உபநிடதங்கள் தழைக்க அருளியவர்.

7)எண்ணற்ற வசதிகள் அருட்கொடையாளர்கள் வழங்கிய போதும் கால்நடையாகவே இந்தியா முழுவதும் மும்முறை வலம் வந்து ஒவ்வொரு 15 கிலோ மீட்டர் தூரத்தில்  அருகிலுள்ள கிராமத்தில் தங்கி பக்தி நெறி பரப்பியவர்.

8)எவ்வளவு வவசதிகளிருப்பினும் மாட்டுத்தொழுவத்தில் கொசுக்கடியில் படுத்துறங்கியவர்.

9) எண்ணற்ற உணவுகள் வந்தும் அதைத் தவிர்த்து நெல் பொறி போன்ற ஆகாரம் அதுவும் ஒருவேளை மட்டும் உண்டு வாழ்ந்தவர்.

10)எளிமையான மக்களுக்கு பக்தி நெறியே சிறந்தது என அருளிய அருட்கொடையாளர்.

11)99 வருடங்கள் வாழ்ந்து 100 ஆண்டில் சில மாதங்கள் வாழ்ந்தவர்.

12)அதிகப்படியான 88 சாதூர்மாஸ்யம் என சந்திர பிறையை பார்த்தவர் (சந்யாசிகளின் வயதை கணக்கிடும் முறை)

13)உலகம் முழுவது உள்ள இந்துக்களின் ஆன்மீக குரு. மேலும் எண்ணற்ற மனிதர்களின் சாதி மதம் கடந்த ஆதர்ஸன குரு.

14)போப் ஜான் பால் 2, முகம்மது கொமேனி, தலாய் லாமா, மேல் மருவத்தூர் போன்ற ஆன்மீக பிற மத குருமார்கள் இவருடன் பேசி தொடர்பிலிருந்தார்கள்.

15)இவர் சமாதி அடைந்த நேரத்தில் எண்ணற்ற முஸ்லீம்கள்/கன்யாஸ்த் ரிகள் சிந்திய கண்ணீரைப்பார்த்து இந்து மதத்தினர் கூட ஆச்சர்யபட்டார்கள்.

16)Queen elizabath /canadian president முதல் உள்ளூர் அரசியல் பிரமூகர் வரை இவரிடம் தனி மதிப்பு வைத்திருந்தனர்.

17) கடவுள் நம்பிக்கையற்ற M.R. ராதா; ப்ளீட்ஸ் ஆசிரியர் கரஞ்சியா கண்ணதாசன் போன்றோரும் பின்னாளில் இவரை சந்தித்து ஆன்மீகவாதியானார்கள்.

18)கலைஞர் அவர்களின் காஞ்சியிலே ஒரு பெரியவருண்டு என்ற பேச்சு இவரது உள்ள அன்பை வெளிப்படித்திய கட்டுரையாகும். முனி வாழ்க்கை வாழ்ந்தார் எனவும் பேசியுள்ளார்.

19)காஞ்சி சங்கரமடத்திற்கு ஒட்டியுள்ள சிறு மசூதி தாமே மனம் வந்து வழங்க வந்த போது அதை மறுத்து உங்களின் பாங்கொலியில் அல்லாவிடமிருக்கிறேன் என பகர்ந்தவர்... ஐந்து வேளை தொழுக முஸ்லீம்களை வலியுறுத்தியவர்.

20)உலகப் புகழ் வாய்ந்த கிறிஸ்தவ பாடகர் இந்து மதம் தழுவ அவரிடம் சென்ற போது "உன் மதத்தில் என்ன இல்லை என இங்கு வருகிறாய் "என வினவி இன்றளவும் அப்பாடகர் தன் கிருத்தவ மதத்திலேயே இருக்கச் செய்தவர்.

21)நீதியரசர் மூ.மூ.இஸ்மாயில் அவர்களின் எண்ணற்ற சந்தேகங்களுக்கு அறிவு விளக்கமும் சிக்கலான தீர்ப்புகளில்
"உள்முகமாக" உதவியவர் என அவர் வாயிலாகவே வெளிப்படுத்தியுள்ளார்.

22)சுதந்திர போராட்டத்தில் தானும் கலந்து, சாத்வீகமான அவர் முறையில் மக்களை கலந்து கொள்ளச்செய்தவர்.

23)ரமண பகவான் புகழ் வெளியுலகுகத் தெரிய காரணமாயிருந்த "பால் பிரண்டன் "என்ற ஐரோப்பிய பயணி ஞானம் தேடி இவரை அணுகிய போது உனக்கான குரு திருவண்ணாமலையில் இருக்கிறார் என சிஷ்யனுக்கு குருவைக்காட்டிய ஞான குரு.

24)தன்னை நாடி இன்றளவும் வரும் எண்ணற்ற ஆத்மாக்களுக்கு அற்புதங்கள் நிகழ்த்திக்கொண்டிருப்பவர்.

25)தர்க்க சாஸ்திரம் ஜோதிடம் மருத்துவம், வான சாஸ்திரம் போன்றவற்றில் அத்துறையில் வல்லுவர்களோடு உரையாடும் அளவு ஆழ்ந்த ஞானமுள்ளவர்.

26) எண்ணற்ற நூல்களுக்கு வியாக்கியானம் எழுதியவர்.

27)திருப்பாவை, திருவெம்பாய், திருப்பள்ளி எழுச்சி, தேவாரம், திருவாசகம், திவ்விய பிரபந்தம் போன்றவை இன்று எழுச்சியோடு கோவில்களில் பாடப்படுவதற்கு இவரது எழிச்சீயூட்டலே காரணமாகும்.

28)இன்றளவும் நாகப்பட்டினம் மற்றும் சுற்று வட்டாரத்தில் விளையும் முதல் சாகுபடி நாகூர் ஆண்டவருக்கே அற்பணியுங்கள் என்று கூறியவர்.

29)டாடாவிலிருந்து பிர்லா நாட்டுக்கோட்டையார் ஆற்காடு நவாப்கள் VGP போன்ற அனைத்து மதத்தினருக்கும் "மக்கள் சேவையே மகேசன் சேவை" என உணர்த்தி அப்பாதையில் இவர்களை திருப்பச் செய்து இழுத்து வந்தவர்.

30)இன்று பிராதோஷம் போன்ற கூட்டங்கள் சேர்வதற்கு இவரே காரணம்.மூன்று லட்சம் ஆலயங்களில் இன்று ஒரு வேளை பூஜையாவது நடைபெறுவதற்கு இவரே காரணம்.

31) இசைஞானி இளையராஜா இவர் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர்.

32)விமான விபத்தில் 300 பேர் இறந்த போது கூட்டுபிரார்த்தனை என ஒன்றை ஏற்படுத்தி மோக்ஷ தீபம் என்ற முறையை ஏற்படுத்தியவர். வேதாத்ரி மகரிஷி, விசிறி சாமியார், ரவிசங்கர் குருஜி, தலாய் லாமா, போன்றோர் இவரிடம் தனிப்பட்ட முறையில் மரியாதை வைத்திருந்தனர்.

இப்படி சிறுவராக இளைஞராக மனிதராக தனி ஒருவராக ஞானியாக அவதரித்த அற்புத மஹான்
உலகிலுள்ள அனைத்து மத நல்லுள்ளங்களாலும்
"காஞ்சிப் பெரியவர்" ,"பெரியவா" , "நடமாடும் காமாக்ஷி" என போற்றப் படுபவரின் பெயர்🤘🤘🤘
         

ஒரு பசுவின் சாபம்

உடலுறவைப் பற்றி படித்த  நீங்கள் ஏன் இவற்றை உணர்வதில்லை..?

ஒரு பசுவின் சாபம்:-புணர்வதற்குக் காளை தேவை…!
         
         உடலுறவைப் பற்றி மெத்தப் படித்த மனிதர்களாகிய நீங்கள் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை.
நான் ஒரு மாடு. எனக்கு ஐந்தறிவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என்னையும் என் இனத்தவரையும் பொறுத்தவரை, உடலுறவு கொள்வது மிகுந்த இன்பம் தரும் செயல்.
         
          பிள்ளை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ‘கடமை’ என்று உங்களில் சில மேதாவிகள் உடலுறவைப் புரிந்துகொள்வது எனக்குத் தெரியும்.
நான் கன்று ஈன்று நான்கு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன.

          இன்னும் சில நாட்களில் எனக்கு உடலுறவுகொள்ள வேண்டிய தேவை உருவாகிவிடும். இப்போதே எனது முலைகளில் பால் சுரப்பு குறைகிறது, முலை மடி இறுகத் துவங்கிவிட்டது, பிறப்புறுப்பு அவ்வப்போது துடிக்கத் துவங்கிவிட்டது.

           இந்த அறிகுறிகளை எல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டிய நிலையில் நானும் என்போன்ற மாடுகளும் இருக்கிறோம்.

            பால் சுரப்பு நிற்கும் காலத்தில் எங்கள் அடிவயிறு பிசையும் உணர்ச்சி அதிகரிக்கும். அவ்வாறான உணர்ச்சி நிலைகளில் எங்களை அறியாமல் அடி வயிற்றிலிருந்து கத்தத் துவங்குவோம். பசியில் கத்துவதற்கும் காமத்தில் கத்துவதற்கும் எங்கள் குரலில் வேறுபாடுகள் இருக்கும். காமம் மிகும்போது எங்கள் கண்கள் வெறித்து, வால் மயிர்கள் சிலிர்த்து, பிறப்புறுப்பு புடைத்து இருப்பதை உங்களில் எத்தனைப் பேர் பார்த்திருப்பீர்களோ தெரியவில்லை.

              சில காலம் முன்புவரை இவ்வாறான அறிகுறிகளைப் பார்த்ததும் எங்களை வளர்ப்பவர்கள் எங்களை ஏதேனும் ஒரு காளையிடன் ஓட்டிச் செல்வார்கள்.
காமம் தீரத் தீர எங்களுக்கு புணர்ச்சி கிடைக்கும்.

               காடுகளில் மேயும்போது கிடைக்கும் புணர்ச்சிகள் இன்னும் சிறப்பானவை. பசுக்களாகிய எங்கள் குரலில் எழும் காமம் மனிதர்களிடன் உதவி கேட்பதற்கானது அல்ல, காளைகளை சுண்டி இழுப்பதற்காக என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இப்போதெல்லாம் எங்களுக்குக் காமம் மிகுந்தால் காளைகளிடம் ஓட்டிச் செல்வதில்லை; மருத்துவர்களிடம் கூட்டிச் செல்கிறார்கள்.

            மருத்துவர்கள் மெத்தப் படித்தவர்கள், அறிவாளிகள், நாகரிகம் தெரிந்தவர்கள், விலங்கியல் பயின்றவர்கள், மேதைகள். காமம் எனும் உணர்வு, கன்று போடுவதற்காக மட்டுமே தோன்றுகிறது என்ற அதி புத்திசாலித்தனமான புரிதல் மருத்துவர்களுக்கு உள்ளது.

              மருத்துவர்கள் எங்கள் காமத்தில் இரசாயனக் கழிவுகளைக் கொட்டி அழித்துவிட்டு, விந்தணுக்களை பிறப்புறுப்பில் பீச்சிவிடுகிறார்கள்.
காளை செய்ய வேண்டிய வேலையை மருத்துவர்கள் செய்கிறார்கள்.

               ஆனாலும் காளையைப் போன்ற வேலையை அவர்கள் செய்வதில்லை, செய்யவும் முடியாது. அந்தக் காளைகளுக்கு பசுக்களின் யோனி மறுக்கப்படுகிறது. பசுக்களாகிய எங்களுக்கு காளைகளின் ஆண்குறிகள் மறுக்கப்படுகின்றன.

                இவ்வாறு ஆண்குறி,
பெண்குறிகளுக்கிடையில் கூட அறிவியலைப் புகுத்தும் நாகரிக மனிதர்களின் காலத்தில் பிறந்ததை எண்ணி நானும் என் சக மாடுகளும் அவமானமும் துக்கமும் கொள்கிறோம்.

                எங்கள் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டு, நீங்கள் மட்டும் நன்றாக வாழ்ந்துவிடலாம் என நம்புகிறீர்கள்.
ஆண்குறி நுழையாத எங்கள் யோனிகளின் சாபம், முலைக்காம்புகளில் வழியும் பாலின் வளத்தைச் சீரழித்துக்கொண்டுள்ளது.

                 காளையைப் புணர்ந்து பெற்ற கன்றுக்காகச் சுரக்கும் பால் வேறு, மருத்துவர் செலுத்தும் விந்துவில் பிறக்கும் கன்றுக்கான பால் வேறு.
பிறப்புறுப்பு மரத்துப் போன பசுக்களின் எண்ணிக்கைதான் இப்போது அதிகம்.

                அவற்றின் பாலைத்தானே அருந்திக் களிக்கிறீர்கள். அவற்றில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்று ஆய்வு செய்து முடித்தாயிற்று அல்லவா. அவற்றில் உயிர் உருவாக்கும் ஆற்றல் இருக்கிறதா எனப் பாருங்கள் மேதைகளே.

                சத்தியமாகச் சொல்கிறேன், காய்ந்த யோனிப் பசுக்களின் பாலில் உயிராற்றல் இருக்காது.

                புணர்ச்சி என்பது பிள்ளை பெறும் ‘வேலை’ அல்ல. மனங்கள் கூடிக் களித்து, உடலுக்குள் மழை பொழிந்து, கருப்பை நனைந்து, உயிர் வளரும் படைப்புத்தொழில்.
அந்தப் படைப்புத் தொழிலில் குறுக்கிட்டு விந்தணுக்களை பீச்சிவிட்டால் கன்று பிறக்கும். அந்தக் கன்று இயற்கையான உடல் வலுவுடன் வாழாது, அக்கன்றுக்காகச் சுரக்கும் பாலில் உயிர் ஆற்றல் இருக்காது.

                 இவ்வாறு பிறக்கும் கன்றுகள் யாவும் மருத்துவமனைகளையும் இரசாயன தீவனங்களையும் நம்பித்தான் வாழ்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

        நீங்கள் எப்படி மருத்துவமனைகளையும், இரசாயனம் கலந்த உணவுகளையும் நம்பி வாழ்கிறீர்களோ அதேபோல, செயற்கைக் கன்றுகள் வாழ்கின்றன.
                  எங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை உங்களுக்கும் வழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.
நீங்கள் புத்திசாலிகள் என்பதால் உங்களுக்கு இந்தத் தகவல் வந்து சேரவில்லை. இப்போதும்கூட உங்களில் பலர் இந்தத் தகவலை நம்பப்போவதில்லை. உங்களுக்கு ஆய்வறிக்கைகள் தேவை, சோதனைகள் தேவை.

            எங்களுக்கோ காளைகளின் விறைத்த குறிகள் தேவை.

             பசுக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு மேதாவிக் கூட்டம் காளைகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. காளைகளுடன் மனிதர்கள் ஆடும் விளையாட்டுகளைத் தடை செய்தது அக்கூட்டம்.

              இப்போது காளைகளை வளர்ப்பது தேவையற்ற செயலாக மாறிவிட்டது.
ஒருபக்கம், விந்து ஊசிகள் மறுபக்கம் காளை விளையாட்டுகளுக்குத் தடை.

              பசு என்றால், உயிர் என்றும் பொருள். மாடு என்றால், செல்வம் என்றும் பொருள். உயிரின் ஆதி, செல்வத்தின் உருவம் நாங்கள்தான். காளை என்றால் உயிர்களின் குறியீடு. காளை மீது இறைவன் அமர்கிறான் என்பது, எல்லா உயிர்களையும் அடக்கி ஆள்பவன் என்ற விரிந்த கருத்தின் உருவகம்.

            உங்களில் மனசாட்சியை விற்றுவிடாத ஒரு சிலரை நோக்கி இக்கடிதம் வழியாக நான் உதவி கேட்கிறேன்.

             காளை மாடுகள் யாவும் இப்போது இறைச்சிக்காக விற்கப்படுகின்றன.
ஏர் இழுத்த எங்கள் காளைகள், மலைமலையாகக் குவிந்த நெல்லைப் போர் அடித்த எங்கள் காளைகள், செக்குகளை இழுத்து எண்ணெய் வளம் பெருக்கிய எங்கள் காளைகள், வண்டிகளை இழுத்து கோடானு கோடி மக்களுக்கான வாகனங்களைத் தந்த எங்கள் காளைகள், ஏறு தழுவலில் ஓடி விளையாண்டு இன்புற்ற எங்கள் காளைகள், காடுகளில் எங்கள் மீது ஏறி விழுந்து தடித்த குறிகளால் எங்கள் யோனிகளை விரித்துப் புணர்ந்து பெருமழை பெய்த எங்கள் காளைகள், இப்போது கசாப்புக்கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

          மாட்டிறைச்சி உண்பதும் உண்ணாததும் உங்கள் கொள்கை, உங்கள் உரிமை. பசுக்களாகிய நாங்கள் பால் கறப்பதால் தப்புகிறோம். காளைகளுக்கென வேலை ஏதும் உங்கள் நாகரிக சமூகத்தில் இல்லை. ஆகவே, ஆணாகப் பிறக்கும் எல்லா மாடுகளும் கறிக் கடைகளுக்கு மட்டுமே அனுப்பப்படுகின்றன.

             ஒருகாலத்தில், உழைத்துக் களைத்து இளைத்த மாடுகளைக் கறிக்கு வெட்டினார்கள். இப்போது கொழுத்துத் திரியும் காளைகளாகத் தேடித் தேடி வெட்டுகிறார்கள்.
          
             உங்கள் சமூகத்தின் மேதைகளுக்கு பசுக்கள் வேண்டும், காளைகள் வேண்டாம். மாடுகளாகிய எங்களுக்கோ புணர்வதற்குக் காளைகள் வேண்டும். இதில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைக்கிறீர்களா?
இன்னும் சில நாட்களில் எனக்குப் புணர்ச்சி தேவைப்படும்.
            
              நான் வாழும் ஊரில் காளைகள் இல்லை, மருத்துவர்கள் இருக்கிறார்கள். எனக்குக் காளையுடன் புணரும் வேட்கை எழுகிறது, மருத்துவர்களின் விந்து ஊசிகள் மீது வெறுப்பு மிகுந்துகொண்டுள்ளது.

              என்னை வளர்ப்பவர் என்னிடம் இது பற்றிப் பேசினார். எ்ப்படியாவது காளை தேடித் தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக அவர் இறையிடம் வேண்டிக் கொண்டும் இருக்கிறார்.

                என்னைப் புணர்வதற்காகவேனும் ஒரு காளை மாட்டை விலைக்கு வாங்கவும் அவர் தயாராக இருக்கிறார்.
என்னைப் போன்ற பசுக்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களுக்கெல்லாம் புணரும் உரிமை வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தின் வழியாக நான் உரையாடுகிறேன்.

               இந்தப் பூமியில் மனிதர்கள் இல்லாத காலம் மிக அதிகம். மாடுகள் இல்லாத காலம் மிகக் குறைவு. நேரடியாகச் சொல்வதானால், பூமிக்கு மனிதர்களைவிட மாடுகளை அதிகம் பிடிக்கும்.

               உங்கள் மலம் கூட புழுக்களுக்கு உணவாகாத வகையில், இரசாயனத்தில் கழுவி புதைக்கிறீர்கள். எங்கள் சாணத்தில் ஒவ்வொரு நாளும் கோடானு கோடி புழுக்கள் வாழ்ந்து மடிகின்றன.
புணராத கோழிகளிலிருந்து முட்டைகள் பெறுகிறீர்கள், மலட்டு விதைகளைத் தூவி பழங்கள் அறுக்கிறீர்கள், விதையற்ற பயிர்களை உணவாகக் கொள்கிறீர்கள்.

              உங்களோடு பழகும் எல்லா உயிர்களிடமிருந்தும் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டீர்கள்.   எல்லா உயிரினங்களின் அடி வயிற்று சூட்டிலிருந்து கூறுகிறேன், ‘இதற்கெல்லாம் நீங்கள் அனுபவிப்பீர்கள்’

இப்போதும் அனுபவித்துக்கொண்டுதானிருக்கிறீர்கள்.

             படும்பாடுகளுக்கெல்லாம் நாம் செய்த பாவம்தான் காரணம் என்று உணராமல், அனுபவிக்கிறீர்கள்.

      "இப்போதும் உங்களால் மாற முடியும்."

       மலட்டுத் தன்மை கொண்ட எல்லா உணவுகளையும் நிராகரியுங்கள். விந்து ஊசிகளுக்கு எதிராகப் பேசுங்கள், செயலாற்றுங்கள். காளைகளைப் பாதுகாக்க ஏதேனும் செய்யுங்கள்.

         பசுக்களை மட்டும் பாதுகாப்போரின் எண்ணிக்கை உயர்கிறது, காளைகளைக் காப்பவர்கள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். காளைகளைப் பாதுகாப்பதற்கென கூடிப் பணியாற்றுங்கள்.

         உங்கள் புள்ளிவிவரங்களை விட எங்கள் உணர்ச்சிக் குமுறலுக்கு வலிமை அதிகம்.
நாங்கள் அப்படி என்ன பெரிதாகக் கேட்கிறோம்? எங்களுடன் புணர்வதற்குக் காளை வேண்டும் என்கிறோம். கேவலம், நாங்கள் மாடுகள்தானே!
(இந்த பசுவின் கேள்வி நியாயம்தானே ? )…