WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Wednesday, 7 November 2018

ஷஷ்டி விரதம்

*ஷஷ்டி விரதம்*
(08.11.18 முதல் 13.11.18)

ஆரோக்கியம் வளர்க்கும் ஆறுநாள் !

வருடத்தில் 365 நாளும் நமது இரைப்பை இயங்கிக்கொண்டே இருக்கிறது. இதற்கு சற்று ஓய்வு கொடுத்தால் உடலின் இயக்கங்கள் சீராகும்.

நமது உடலை இயக்கும் 'உயிர்சக்தி' மூன்று சக்திகளாக பிரிந்து வேலை செய்து வருகிறது. உடல் ஒரு நேரத்தில் ஒரு வேலை தான் செய்யும், அதை துல்லியமாக செய்து முடிக்கும்.

*இது தான் அந்த மூன்று சக்தி*

*1 - செரிமான சக்தி*
*2 - இயக்க சக்தி*
*3 - நோய் எதிர்ப்பு சக்தி*

இதில் ஒவ்வொன்றாக எப்படி வேலை செய்கிறது என்று சிறிய உதாரணத்துடன் பார்க்கலாம்.

காய்ச்சலின் போது உங்களுக்கு பசிக்குமா ? பசிக்காது, உடலின் செரிமான சக்தி வேலை செய்யாது. காய்ச்சலின் போது உங்களால் வேலை செய்ய முடியுமா ? முடியாது, உடல் இயக்க சக்தியை குறைத்துக்கொள்ளும். எனவே இந்த இரண்டு சக்தியும், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி உங்கள் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றிவிடும்.

மதியம் அதிக உணவு எடுத்துக்கொண்டீர்கள், உடனடியாக வேலை செய்ய முடியுமா ? முடியாதல்லவா, உடல் இயக்கம் சக்தியை குறைத்துக்கொள்ளும், நோய் எதிர்ப்பு சக்தி வேலை செய்யாது. இப்பொழுது செரிமானம் மட்டுமே வேலை செய்யும்.

உண்ணா நோன்பு இருக்கிறீர்கள். செரிமான சக்திக்கு வேலை இருக்கிறதா ? இல்லை. இயக்க சக்தியையும் குறைத்துக்கொள்வோம். இப்பொழுது செரிமானம் மற்றும் இயக்க சக்திகளுக்கு வேலை இல்லாததால், இதன் சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகளாக மாறி நமது உடலில் உச்சி முதல் பாதம் வரை, எங்கு ? என்ன ? பிரச்சனை இருந்தாலும் குணப்படுத்திவிடும்.

இப்படி மூன்று சக்திகளும் அந்தந்த நேரத்தில், மற்ற இரண்டு சக்திகளிடம் இருந்து சக்தி பெற்று, மாறி மாறி வேலை செய்து கொண்டே இருக்கும்.

உடல் முதல் முக்கியத்துவம் செரிமானத்திற்கு கொடுப்பதால் ஒவ்வொறு முறை நாம் உணவு எடுக்கும் போது, உடல் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிட்டு, சக்தி செரிமானத்திற்கு வந்துவிடும். ஏனென்றால் வெளியில் இருந்து ஒரு பொருள் வருகிறது, அது என்ன ஏது என உடல் பார்த்து சீரமைக்க வேண்டும்.

உண்ணா நோன்பு இருக்கும் போது செரிமான சக்திக்கு அதிக வேலை இருக்காது, எனவே இதன் சக்தியும், ஓய்வில் இருத்தால் இயக்க சக்தியும் நோய் எதிர்ப்பு சக்திகளாக உருமாறும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து பிரச்சனைகள் அனைத்தும் சரி செய்யப்படுகிறது.

உண்ணா நோன்பு இருப்பதால், உடல் ஆரோக்கியம் பெறும் என்பது அறிவியல் உண்மை.

இதற்காக நமது முன்னோர்கள் வருடத்தில் ஆறு நாள் தேர்வு செய்து  வைத்துள்ளார்கள். அந்த ஆறு நாளும் ஆறுமுகனை மையப்படுத்தி அழகான ஒரு திருவிழாவாக வடிவமைத்து உள்ளார்கள்.

🕉ஆம், அது தான் தீபாவளி முடிந்து வரும் மறைமதியை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படும் 'கந்த சஷ்டி விழா'. கந்த சஷ்டி விழா என்றாலே நமது நினைவிற்கு வருவது 'சஷ்டி விரதம்' தான்.உண்ணா நோன்பு மற்றும் கந்தர் விழாவின் ஆறுநாள்.

*'செரிமான சக்தி' தான் 'முருகனின் தாய்'. 'நோய் எதிர்ப்பு சக்தி' தான் 'முருகன்'. 'நோய்' தான் 'அரக்கன்'. வெளியில் நடக்கும் அதே போர் உங்கள் உடலிலும் நடக்கிறது.*

*இந்த விழாவில் எப்படி 'முருகப்பெருமான்' தனது தாயிடம் இருக்கு சக்தி பெற்று அசூரனை வதம் செய்கிறாறோ, அதேப்போல் நமது உடலில் உள்ள 'நோய் எதிர்ப்பு சக்தி' தனது தாயான செரிமான சக்தியிடம் இருந்து சக்தி பெற்று நோய்களை வதம் செய்கிறது.*

*வெளியில் முருகனுக்கும்,அரக்கனுக்கும் நடக்கும் அதே போர் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், நோய்க்கும் நடக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்று உலகிற்கே தெரியும்.*

*எப்படி ஒவ்வொரு நாளும் 'முருகன்' சக்தி பெற்று ஆறாவது நாள் அசூரனை வதம் செய்கிராறோ, அதேப்போல் தான் ஒவ்வொரு நாளும் நமது 'நோய் எதிர்ப்பு சக்தி' வலிமையடைந்து 'டெங்கு போன்ற எந்த வைரஸ் கிருமிகள், நோய்கள்' இருந்தாலும் வதம் செய்துவிடும்.*

*உடலில் நடக்கும் இந்த அறிவியல் உண்மையை நமக்கு சூட்சமமாக சொல்லவோ என்னவோ, ஆறு நாட்களையும் 'உண்ணா நோன்புடன்' அழகான விழாவாக வடிவமைத்துள்ளார்கள்.*

*சரி, எப்படி உண்ணா நோன்பு இருப்பது ?*
-------------------------------------------------------

*1 - உங்கள் ஊர் வழக்கப்படி இருக்கலாம்.*
*2 - சமய முறைப்படி இருக்கலாம்.*
*3 - ஆறு நாளும் தண்ணீர் மட்டும் குடித்து இருக்கலாம்.*
*4 - ஆறு நாளும் பாலும், பழமும் மட்டும் உண்டு இருக்கலாம்.*
*5 - ஆறு நாளும் பழங்களை மட்டும் உண்டு இருக்கலாம்.*

*இதில் உங்களுக்கு பழக்கம் இருக்கும் முறை எதுவோ, அந்த முறைப்படி இருக்கலாம்.*

*சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நான் பரிந்துரைக்கும் எளிய முறை என்னவென்றால்.*

*பசித்தால் தண்ணீர் மட்டும் குடித்து வாருங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திரும்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும். திரும்ப பசித்தால் திருப்ப தண்ணீர் குடியுங்கள், பசி அடங்கிவிடும்.*

*இது தொடரட்டும் ஒரு கட்டத்தில் பசிக்கும் போது தண்ணீரை கண்டாலே உங்களுக்கு பிடிக்காது, குடிக்கவும் முடியாது, எதாவது சாப்பிட தோன்றும் அப்பொழுது உங்களுக்கு பிடித்த பழங்களை ரசித்து ருசித்து உமிழ்நீர் கலந்து சாப்பிடுங்கள்.*

*திரும்ப பசிக்கும் போது பழங்களை அதேப்போல் ரசித்து ருசித்து சாப்பிடலாம். வேளை கணக்கு எல்லாம் கிடையாது. பசிக்கும் போது சாப்பிடலாம். இதேப்போல் ஆறு நாட்களும் இறைவன் சமைத்த உணவை மட்டும் சாப்பிட்டு வரலாம்.*

*இறைவன் சூரிய அடுப்பை கொண்டு சமைத்த உணவான பழங்களை நாம் அதிகம் சாப்பிட இந்த ஆறு நாள் நமக்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைகிறது.*

*வேலைக்கு செல்வோருக்கு, வேறு உணவு தேவைப்பட்டால், தேங்காய், வேர்கடலை சாப்பிடலாம், இதனால் நீண்ட நேரம் வேலை செய்ய முடியும்.*

*எதையெல்லாம் நாம் சமைக்காமல் அப்படியே சாப்பிட முடியுமோ அதை எல்லாம் சாப்பிடலாம். பழங்கள், இளநீர், நாட்டு காய்கனிகள், தேங்காய், வேர்கடலை என பச்சையாக சாப்பிடக்கூடிய உணவுகளை மட்டும் ஆறு நாட்கள் எடுக்கலாம்.*

*உடலில் பல்வேறு பிரச்சனை உள்ளவர்கள், ஆங்கில மருந்து எடுப்பவர்கள், நோயாளிகள், ஆறு நாள் பழங்களை மட்டும் எடுக்க முடியாதவர்கள் எல்லாம் தேவைப்பட்டால் இதனுடன் பட்டை தீட்டப்படாத அரிசி கஞ்சி, நீராகாரம், அவல், நாட்டு பசும் பால் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.*

*நோன்பின் போது என்ன நடக்கலாம் ?*
----------------------------------------------

*ஆண்டுக்கணக்கில் தேங்கிய நச்சுக்கழிவுகள் வெளியேறலாம்.*

*1 - சிறுநீர் அடர்த்தி நிறமாக வெளியேறலாம்.*
*2 - மலம் கருப்பாக வெளியேறலாம்.*
*3 - சளி வெளியேறலாம்.*
*4 - உடல் ஓய்வு கேட்கலாம்.*
*5 - காய்ச்சல் வரலாம் (காய்ச்சல் ஒரு கொடை)*
*6 - வலிகளை உணரலாம்.*

*என்ன மாற்றங்களை எதிர்பார்க்கலாம் ?*
------------------------------------------

*1 - அதிக உடல் எடை சீராகும்*
*2 - முகம் பொழிவு பெறும்*
*3 - கண்ணில் ஒளி வீசும்*
*4 - சுறுசுறுப்பு அதிகரிக்கும்*
*5 - இரத்தம் தூய்மை பெறும்*
*6 - தோலின் நிறம் சீராகும்*
*7 - மன உளைச்சல் குறையும்*
*8 - கவலை, பயம், கோபம் குறையும்*
*9 - புத்துணர்வு கிடைக்கும்*
*10 - உடல் பலம் பெறும்*
*11 - மன அமைதி பெறும்*
*12 - ஆழ்ந்த தூக்கம் வரும்*

*ஆக மொத்தத்தில்*

*உடலில் ஆரோக்கியமும் !*
*எண்ணத்தில் அழகும் !*
*மனதில் நிம்மதியும் !*

*கிடைக்கும். நீங்கள் எதிர்பார்க்காத இன்னும் பல எண்ணிலடங்கா அதிசயங்கள் நிகழலாம்.*

*கந்தன், அரக்கனை அழிப்பது போல்*
*உடல், உங்கள் அனைத்து பிரச்சனைகளை அழித்துவிடும்.*

*நமது பண்பாட்டையும், உடல், மன ஆரோக்கியத்தையும் பிரித்தே பார்க்க முடியாது. இவை இரண்டும் ஒன்றிற்கொண்டு பின்னிபினைந்தவை. பினைக்கப்பட்டவை.*

*உடலின் பேராற்றலை புரிந்து, அதன் அற்புத புதையல் கொண்ட அறிவியல் உண்மைகளை, அழகான திருவிழாவாக நமக்கு வடிவமைத்து தந்த நமது முன்னோர்களுக்கு கோடி நன்றிகளை சொல்ல நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.*

Friday, 26 October 2018

காஞ்சீ காமகோடி ஜகத்குரு நாமாவளி...

ஓம் ஸ்ரீ காஞ்சீ காமகோடி ஜகத்குரு ஸ்ரீ மஹாஸ்வாமிகள் நாமாவளி...

ஸ்ரீ காயத்ரீ மஹா மந்திரம் இருபத்தி நான்கு அக்ஷரங்கள் ஓம் ஸ்ரீ காஞ்சீ காமகோடி ஜகத்குரு ஸ்ரீ மஹாஸ்வாமிகள் நாமாவளி...

ஸ்ரீ காயத்ரீ மஹா மந்திரம் இருபத்தி நான்கு அக்ஷரங்கள் கொண்டது. அதே எண்ணிக்கையில் அமைந்துள்ள இந்த நாமாவளி.

ஓம் ஸ்ரீ மஹா கணபதி ஸ்வரூபாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாத்மஜாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி கர்பத்ருதாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ அனுராதா பவாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ வைத்யனாதாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ அத்வைத சிகராய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ வேதமந்த்ர ப்ரியாய்a மஹாஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காஷ்ட மௌன ப்ரிய்aஅய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வராய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ நாராயண ஸ்மரணாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சச்சிதானந்தாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சரணாகத வத்ஸலாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ த்ரிகாலஞானாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ த்ரிபுரசுந்தரி பூஜா ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ க்ஷிப்ர ப்ரஸாதனாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ பாத யாத்ரா ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ துளசீ பில்வ ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ ப்ரத்யக்ஷ ப்ரம்ம ஸ்வரூபாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காமாக்ஷி ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காஞ்சி க்ஷேத்ரே நிவாஸாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காமகோடீஸ்வராய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி மஹா ஸ்வாமினே நமோ நம: நமோ நம: நமோ நம:
ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே சாந்த்த ரூபாய தீமஹி |
தன்னோ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||
ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ராய வித்மஹே சார்வ மபௌமாய தீமஹி |
தன்னோ ஜகத்குரு ப்ரசோதயாத்||
ஸ்ரீ ஜகத்குருப்யோ நம:

ஸ்ரீ மஹாபெரியவா சகல லோக ஜீவிதர்களுக்கும் பொதுவானவர் என்பதால்இந்த அற்புத நாமாவளிகளை உங்கள் அனைவரது மூலமாகவும் அனைத்து ஜீவிதர்களுக்கும் கிடைக்கச் செய்யும் பொருட்டு இங்கே பகிர்கிறேன்.

இந்த நாமாவளிகளை நாமும் பாராயனணம் செய்து அனைவருக்கும் கிட்டிட இதனை பகிர்ந்து சகல சௌபாக்கியங்களும் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்து ஸ்ரீ மஹா ஸ்வாமிகளின் க்ருபாகடாக்ஷத்திற்குப் பாத்திரமாவோமாக.

ஸ்ரீ மஹா பெரியவா சரணம்!தி ஸ்வரூபாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாத்மஜாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி கர்பத்ருதாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ அனுராதா பவாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ வைத்யனாதாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ அத்வைத சிகராய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ வேதமந்த்ர ப்ரியாய்a மஹாஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காஷ்ட மௌன ப்ரிய்aஅய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சந்த்ரமௌலீஸ்வராய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ நாராயண ஸ்மரணாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சச்சிதானந்தாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சரணாகத வத்ஸலாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ த்ரிகாலஞானாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ த்ரிபுரசுந்தரி பூஜா ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ க்ஷிப்ர ப்ரஸாதனாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ பாத யாத்ரா ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ துளசீ பில்வ ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ ப்ரத்யக்ஷ ப்ரம்ம ஸ்வரூபாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காமாக்ஷி ப்ரியாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காஞ்சி க்ஷேத்ரே நிவாஸாய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ காமகோடீஸ்வராய மஹா ஸ்வாமினே நம:
ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி மஹா ஸ்வாமினே நமோ நம: நமோ நம: நமோ நம:
ஓம் காஞ்சீ வாஸாய வித்மஹே சாந்த்த ரூபாய தீமஹி |
தன்னோ ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத் ||
ஓம் ஸ்ரீ சந்த்ரசேகரேந்த்ராய வித்மஹே சார்வ மபௌமாய தீமஹி |
தன்னோ ஜகத்குரு ப்ரசோதயாத்||
ஸ்ரீ ஜகத்குருப்யோ நம:

ஸ்ரீ மஹாபெரியவா சகல லோக ஜீவிதர்களுக்கும் பொதுவானவர் என்பதால்இந்த அற்புத நாமாவளிகளை உங்கள் அனைவரது மூலமாகவும் அனைத்து ஜீவிதர்களுக்கும் கிடைக்கச் செய்யும் பொருட்டு இங்கே பகிர்கிறேன்.

இந்த நாமாவளிகளை நாமும் பாராயனணம் செய்து அனைவருக்கும் கிட்டிட இதனை பகிர்ந்து சகல சௌபாக்கியங்களும் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்து ஸ்ரீ மஹா ஸ்வாமிகளின் க்ருபாகடாக்ஷத்திற்குப் பாத்திரமாவோமாக.

ஸ்ரீ மஹா பெரியவா சரணம்!

Tuesday, 16 October 2018

தீர்க்க சுமங்கலி பவா ...!

*தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.*

*#தீர்க்க_சுமங்கலி_பவா என்றல் என்ன?  -  அறிந்துகொள்வோம*்.

🌼 *தீர்க்க சுமங்கலி பவா ...! என்ற ஆசிக்கு மனைவி கணவனிடம் 5 மாங்கல்யம் பெற வேண்டும் என்று அர்த்தம்.*

🌼 *திருமணத்தில் ஒன்று,*
🌼 *60 வயது ஷஷ்டியப்த பூர்த்தியில் ஒன்று,*
🌼 *70 வயது பீமரத சாந்தியில் ஒன்று,*
🌼  *80 வயது சதாபிஷேகத்தில்* ஒன்று,
🌼 *96 வயது கனகாபிஷேகத்தில் ஒன்று !*

*#இவைகள் பற்றி ஒரு சிறு விளக்கம்:*

🌼 *ஷஷ்டியப்த பூர்த்தி, பீம ரத சாந்தி, சதாபிஷேகம், கனகாபிஷேகம் போன்ற சடங்குகளை நடத்திக்கொள்வது என்பது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.*

🌼 *பெரும் பாக்கியமும் பூர்வ புண்ணியமும் செய்தவர்களுக்கே இந்த மணவிழா காணும் பாக்கியம் அமைகிறது.*

🌼 *இது போன்ற வைபவங்கள் பொதுவாக ஆயுள் விருத்தியைப் பிரதானமாகக் கொண்டே அமைகின்றன.*

🌼 *சகல தேவர்களையும் மகிழ்விக்கும் பொருட்டு அன்றைக்கே வேத பாராயணங்களும், ஹோமங்களும் நடைபெறுகின்றன.*

🌼 *உறவு முறைகள் கூடி நின்று குதூகலப்படும் போது, ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியரின் மனம்மகிழும்.*

🌼 *நமக்கென்று இத்தனை சொந்தங்களா என்கிற சந்தோஷம் அவர்களின் மனதில் பரவசத்தை ஏற்படுத்தும்.*

🌼  *பூமி 360 பாகைகளாகவும் அந்த 360 பாகைகளும் 12 ராசி வீடுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.*

🌼 *இந்த 360 பாகைகளையும் கடந்துசென்று ஒரு வட்டப் பாதையை பூர்த்தி செய்வதற்கு*

⚜ *சூரியனுக்கு ஓர் ஆண்டும்,*
⚜ *செவ்வாய்க்கு ஒன்றரை ஆண்டும்,*
⚜ *சந்திரனுக்கு ஒரு மாதமும்,*
⚜ *புதனுக்கு ஒரு வருடமும்,*
⚜ *வியாழனுக்கு 12 வருடங்களும்,*
⚜ *வெள்ளிக்கு ஒரு வருடமும்,*
⚜ *சனி பகவானுக்கு 30 வருடங்களும்,*
⚜ *ராகுவுக்கு ஒன்றரை வருடங்களும்,*
⚜ *கேதுவுக்கு ஒன்றரை வருடங்களும், ஆகின்றன.*

🌼 *இந்த சுழற்சியின் அடிப்படையில் ஒருவர் ஜனித்து, அறுபது வருடங்கள் நிறைவடைந்த தினத்துக்கு அடுத்த தினம், அவர் பிறந்த நாளன்று இருந்த கிரக அமைப்புகளும் வருடம், மாதம் போன்றவையும் மாறாமல் அப்படியே அமைந்திருக்கும்.*

🌼 *மிகவும் புனித தினமான அன்றுதான், சம்பந்தபட்டவருக்கு ஷஷ்டியப்த பூர்த்தி வைபவம் மிகவும் ஆச்சாரமான முறையில் தெய்வாம்சத்துடன் நிகழ வேண்டும்.*

🌼  *ஷஷ்டியப்த பூர்த்தி தினத்தன்று வேத பண்டிதர்களின் முன்னிலையில் நிகழ்த்தப்படும்.*

🌼 *பூஜையின் போது 84 கலசங்களில் தூய நீரை நிரப்பி மந்திரங்களை உச்சரித்து ஹோமங்கள் நடைபெறும்.*

*🌼 அங்கே உச்சரிக்கப்படும் வேத மந்திரங்களின் சத்தம் மூலம் கலசத்தில் உள்ள நீர் தெய்வீக சக்தி பெற்று, புனிதம் அடைகிறது.*

*🌼 பின்னர், அந்தக் கலசங்களில் உள்ள நீரைக் கொண்டு ஷஷ்டியப்த பூர்த்தி தம்பதியினருக்கு அபிஷேகம் நடைபெறும்.*

🌼 *அபிஷேகத்துக்குப் பயன்படும் இந்த 84  கலசங்கள் எதைக் குறிக்கின்றன?*

*🌼 தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது என்பதை நாம் அறிவோம்.*

*🌼 இந்த அறுபது ஆண்டுகளுக்கான தேவதைகளையும், இந்த தேவதைகளின் அதிபதிகளாகிய...*

*⚜அக்னி, ⚜சூரியன்,*
*⚜சந்திரன்,.  ⚜வாயு,*
*⚜வருணன்,*
*⚜அஷ்ட திக் பாலகர்கள் பாலாம்பிகை,*
*⚜அமிர்த கடேஸ்வரர்,*
*⚜ *நவநாயகர்கள்..*
*சேர்த்து* *குறிப்பதற்காகத்தான் 84 கலசங்கள் என்பது ஐதீகம்.*

*🌼 பிரபவ முதல் விஷு வரையான 15 ஆண்டுகளுக்கு அக்னி பகவானும்,*

*🌼 சித்ரபானு முதல் துன்முகி வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சூரிய பகவானும்,*

*🌼 ஹேவிளம்பி முதல் விரோதிகிருது வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு சந்திர பகவானும்,*

*🌼 பரிதாபி முதல் அட்சய வரையுள்ள 15 ஆண்டுகளுக்கு வாயு பகவானும்..*
*அதிபதிகள் ஆவார்கள்.*

*🌼 தன்னுடைய 60-வது வயதில் ஐம்புலன்களால் வரும் ஆசையை வென்ற மனிதன் 60 வயதில் இருந்துதான், தனது என்ற பற்றையும் துறக்க முயல வேண்டும்.*

*🌼 தன்னுடைய மகன், மகள், சொந்த பந்தம் என்ற கண்ணோட்டம் மறைந்து உற்றார் உறவினர் அனைவரும் தன் மக்களே…. எல்லோரும் ஒரு குலமே என்கிற எண்ணம் 70 வயது நிறைவில் பூர்த்தி ஆக வேண்டும்.*

*🌼 தான், தனது என்ற நிலை மறந்து அனைவரையும் ஒன்றாகக் காணும் நிலை பெற்றவர்களே 70-வது நிறைவில் பீஷ்ம ரத சாந்தியைக் கொண்டாடும் தகுதியைப் பெறுகிறார்கள். *

*🌼 காமத்தை முற்றிலும் துறந்த நிலையே பீஷ்ம ரத சாந்திக்கான அடிப்படை தகுதியாகும்.*

*🌼 70-வது வயதில் இருந்து ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சுற்றி உள்ள எல்லா உயிர்களிலும் இறைவனைக் காண முயல வேண்டும். *

*🌼 ஒவ்வொரு உயிரிலும் உறையும் இறைவனுடன் உரையாடப் பழகிக் கொள்ள வேண்டும்.*

*🌼 அவனுக்கு ஜாதி, மதம், இன பேதம் எதுவும் இல்லை.*

*🌼 இப்படி அனைத்திலும் இறைவனை, அனைத்தையும் இறைவனாகக் காணும் நிலையை ஒரு மனிதன் 80 வயதில் பெறும் போதுதான் சதாபிஷேகம் (ஸஹஸ்ர சந்திர தர்ஸன சாந்தி – ஆயிரம் பிறை கண்டவன்) காணும் தகுதியை அவன் அடைகிறார். அப்போது சதாபிஷேகம் செய்துகொள்ள வேண்டும்.*

*🌼 இறையோடு இரண்டரக் கலந்து இறை சிந்தனை கொண்ட தம்பதிகளுக்கு 96 வயதில் கனகாபிஷேகம் செய்து இந்த ஜென்மாவின் ஐந்தாவது மாங்கல்யம் பூட்டி தீர்க்க சுமங்கலி பவா ஆசிக்கு உரியதாக அமைகிறது.*
🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉🕉

Saturday, 13 October 2018

இந்து தர்ம சாஸ்திரம்

இந்து தர்ம சாஸ்திரம் கூறும் பயனுள்ள அறிவுரைகள்...!

1. இடது கையால் ஆசனம் போட்டால் ஆயுள் குறைவு

2. இடது கையால் எண்ணெய் தேய்த்துக் கொண்டால் புத்திர நாசம்

3. இடது கையால் சாப்பாடு போட்டுக் கொண்டால் செல்வம் அழியும்

4. இடது கையால் படுக்கையை போட்டால் இருப்பிடம் சேதமாகும்.

5. ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சந்நியாசி முதலியவர்களுக்கு, அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும். இது மிகவும் புண்ணியம்.

6. சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையிலிருந்தால், அவர்களுக்கு உதவ வேண்டும்.

7. அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.

8. பசு, தேர், நெய்குடம், அரச மரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால், வலது புறம் சுற்றி செல்ல வேண்டும்.

9. குடும்பஸ்தன் ஒரு ஆடை மட்டும் அணிந்து உணவு உட்கொள்ள கூடாது.

10. ஒரு கையை தரையில் ஊன்றி சாப்பிடக் கூடாது.

11. துணியில்லாமல் குளிக்கக் கூடாது.

12. சூரியனுக்கு எதிரில் மலஜலம் கழிக்கக் கூடாது.

13. கன்றுக் குட்டியின் கயிறை தாண்டக் கூடாது. மழை பெய்யும் போது ஓடக் கூடாது. தண்ணீரில் தன் உருவத்தை பார்க்கக் கூடாது.

14. நெருப்பை வாயால் ஊதக் கூடாது.

15. கிழக்கு, மேற்கு முகமாக உட்கார்ந்து மலஜலம் கழிக்கக் கூடாது.

16. எதிர்பாராத விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ, பெண்கள் கற்பை இழந்து விட்டால், புண்ணிய நதியில், 18 முறை மூழ்கிக் குளித்தால் தோஷம் நீங்கும்.

17. திருமணம் ஆகாமலே ஒரு பெண்ணுடன் வாழ்பவனை சுபகாரியங்களில் முன்னிறுத்தக் கூடாது.

18. சாப்பிடும் போது, முதலில் இனிப்பு, உவர்ப்பு, புளிப்பு, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு, பின் நீர் அருந்த வேண்டும்.

19. சாப்பிடும் போது தவிர, மற்ற நேரத்தில் இடது கையால் தண்ணீர் அருந்தக் கூடாது.

20. கோவணமின்றி, வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.

21. இருட்டில் சாப்பிடக் கூடாது. சாப்பிடும் போது விளக்கு அணைந்து விட்டால், சூரியனை தியானம் செய்து, மீண்டும் விளக்கேற்றி விட்டு சாப்பிட வேண்டும்.

22. சாப்பிட்டவுடன் குடும்பஸ்தன் வெற்றிலை போட வேண்டும். வெற்றிலை நுனியில் பாவமும், முனையில் நோயும், நரம்பில் புத்திக் குறைவும் உள்ளதால் இவற்றை கிள்ளி எறிந்து விட வேண்டும்.

23. சுண்ணாம்பு தடவாமல் வெற்றிலையை வெறுமனேயோ, வெறும் பாக்கை மட்டுமோ போடக் கூடாது. வெற்றிலையின் பின்பக்கம் தான் சுண்ணாம்பு தடவ வேண்டும்.

24. மனைவி, கணவனுக்கு வெற்றிலை மடித்துக் கொடுக்கலாமே தவிர, கணவன், மனைவிக்கும், மகன், தாய்க்கும், பெண், தந்தைக்கும் மடித்துத் தரக் கூடாது.

25. குரு, ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கேயெல்லாம் செல்லும் போது வெறுங்கையுடன் செல்லக் கூடாது.

26. தலையையோ, உடம்பையோ வலக்கையினால் மட்டும் சொறிய வேண்டும். இரண்டு கைகளாலும் சொறியக் கூடாது.

27. இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.

28. தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ, தரையிலோ படுக்கக் கூடாது.

29. வானவில்லை பிறருக்கு காட்டக் கூடாது.

30. மயிர், சாம்பல், எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி, ஒட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்கக் கூடாது.

31. பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக் கூடாது.

32. ஈரக்காலுடன் படுக்கக் கூடாது.

33. வடக்கிலும், கோணத் திசைகளிலும் தலை வைத்து படுக்கக் கூடாது. நடக்கும் போது முடியை உலர்த்த கூடாது.

34. ஒரு காலால், இன்னொரு காலை தேய்த்துக் கழுவக் கூடாது.

35. தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது. பூமாதேவியின் சாபம் ஏற்பட்டு, பூமி, மனை கிடைக்காமல் போய் விடும்.

36. பகைவன், அவனது நண்பர்கள், கள்வன், கெட்டவன், பிறர் மனைவி இவர்களுடன் உறவு கொள்ளக் கூடாது.

37. பெற்ற தாய் சாபம், செய்நன்றி கொல்லுதல், பிறன் மனைவி கூடுதல் இவை மூன்றுமே பிராயச்சித்தமேயில்லாமல் அனுபவித்தே தீர வேண்டிய பாவங்கள்.

38. அங்கஹீனர்கள், ஆறு விரல் உடையவர்கள், கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையிலுள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக் கூடாது.

39. ரிஷி, குரு, ஜோதிடர், புரோகிதர், குடும்ப வைத்தியர், மகான்கள், கெட்ட ஸ்திரியின் நடத்தை இவர்களைப் பற்றி வீண் ஆராய்ச்சியில் ஈடுபடவோ, அவர்களிடம் உள்ள தவறுகளை விளம்பரப்படுத்துவதோ கூடாது.

40. பிறர் தரித்த உடைகள்,
செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்கக் கூடாது.

41. பிணப்புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக் கூடாது.

42. பசுமாட்டை காலால் உதைப்பது, அடிப்பது, தீனி போடாமலிருப்பது பாவம்.

43. பசு மாட்டை, "கோமாதா வாக எண்ணி, சகல தேவர்களையும் திருப்திப்பட வைப்பதற்கு, அம்மாட்டுக்கு, புல், தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக்கீரை கொடுப்பது புண்ணியம்.

44. தூங்குபவரை திடீரென்று எழுப்பக் கூடாது; தூங்குபவரை உற்றுப் பார்க்கக் கூடாது.

45. பகலில் உறங்குவது, உடலுறவு கொள்வது கூடாது.

46. தலை, முகம் இவற்றின் முடியை காரணம் இல்லாமல் வளர்க்கக் கூடாது.

47. அண்ணன் - தம்பி; அக்காள் - தங்கை; ஆசிரியர் - மாணவர்; கணவர் - மனைவி; குழந்தை- தாய்; பசு - கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.

48. வீட்டுக்குள் நுழையும் போது, தலைவாசல் வழியாகத் தான் நுழைய வேண்டும்.

49. நம்மை ஒருவர் கேட்காதவரையில், நாம் அவருக்கு ஆலோசனை கூறக் கூடாது...