WHATS APP

உலகம் முழுவதும் தமிழ் பேசும் அன்பர்கள், நண்பர்கள் இணையதள சேவை பெற்று வரும் தங்கள் என் WhatsApp No : +91-9444226039 தொடர்பு கொண்டு அவ்வப்போது செய்தி கைபேசிலும் தெறிந்து கொள்ளவும். தாங்கள் எண் பதிவு செய்யும் போது பெயர்,மற்றும் ஊர் பெயர் பதிவு செய்யவும். நிறைய வெளியூர் நண்பர்கள் இருப்பதால் பெயர் குறிப்பிடும் போது ஊர் பெயரையும் குறிப்பிடவும். WhatsApp-ப்பில் இணைந்து கொள்ளவும்.

Bala's Jothidam

CONTACT INFORMATION

BALA'S THIRUPURASUNTHARI JOTHIDAM

நேரடி ஜோதிடத்தை அணுகுவதால் கிடைக்கும் நன்மைகள்
    1. உங்கள் பிரச்சனைகள், சந்தேகங்கள் பற்றி முழு ஆலோசனைகள் கொடுக்கப்படும்.
    2. இதன் மூலம் உங்கள் வாழ்க்கை சிறந்து விளங்க நல்ல முடிவுகள் கொடுக்கப்படும்.
    3. உங்கள் எதிர்காலத்தை திறமை பட செயலாற்ற ஒரு புத்துணர்வு கொடுக்கப்படும்..
    4. உங்கள் சந்தேகங்களை போக்கி வாழ்க்கை வளம்பெற வாய்ப்பு கொடுக்கப்படுகிறது..
    5 - உங்கள் ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் நிலைமையை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
    6. இதன் மூலம் செயல் முறையில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். மகிழ்ச்சியும் நிலைக்கும்..
    பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
    G.V. Manikanda Sharma
    No.1/404, J.J. Nagar
    Mugappair East, Chennai - 600037.
    Tamil Nadu, India.
    Telephone:+91-9962225358, 9444226039.
    WhatsApp No : +91-9444226039.
    E-mail: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    எங்கள் முகவரி .
    1 / 404, ஜெ.ஜெ.நகர்.
    முகப்பேர் கிழக்கு,
    சென்னை – 600 037.
    செல் : +91-9962225358, 9444226039.
    தமிழ்நாடு – இந்தியா.
    E-mail ID: manisharmajothidam@gmail.com.
    www.neelajothidam.blogspot.in.
    12 - எங்கள் சேவை .
    Website: E-mail, Facebook, Books, Mobike SMS, Twitter, Pinterest.
    மூலம் சேவை செய்து தருகிறோம். .

Mani Sharma

Sri Bala's Thirupurasunthari Jothidam
  • இது தமிழர்களுக்கான சிறந்த ஆன்லைன் திருமணத் தகவல் மையம் ஆகும். பதிவு இலவசம். பதிவு செய்ய வரனின் பெயர், வயது, பிறந்த தேதி,பிறந்த நேரம், தந்தை பெயர், தாயர் பெயர், படிப்பு, தொழில், மாத வருமானம், பிறந்த ஊர், மொபைல் எண், ராசி, நட்சத்திரம், இலக்கினம், செவ்வாய் தோஷம், ராது-கேது தோஷம், உள்ளதா, தங்களின் வசதி மற்றும் எதிர்பார்ப்பு ஆகிய விபரங்களுடன் தங்களுடைய புகைப்படம் ஒன்றினையும் இணைத்து அனுப்பி வைத்தால் தங்களின் விபரங்கள் எங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு வரணுக்கும் ரூபாய் 50/- மட்டுமே கட்டணமாகும். நீங்கள் தேர்ந்தடுக்கும் வரனின் அடையாள எண் மற்றும் மொத்த வரண்களின் எண்ணிக்கையை கட்டாயம் மணி ஆர்டரில் குறிப்பிட வேண்டும். மேலும் மொத்தக் கட்டணத்துடன் ரூபாய். 30 மட்டும் கூரியர் கட்டணமாக சேர்த்து அனுப்பவும். தாங்கள் விரும்பிய வரங்களின் விபரங்கள் மறு தினமே கூரியர் தபால் மூலம் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். விலாசம் பெற மணிகண்ட ஷர்மா தொடர்பு கொள்ளலாம்.
  • திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்றும், சிறந்த துவக்கமே பாதி வெற்றி என்றும் நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆயிரம் ஆண்டுகள் வாழக்கூடிய ஒரு பரம்பரையின் மூலகாரணமாக திருமணத்தை, மிகச்சிறப்பாக அமைத்துத் தரவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் துவங்கப்பட்டதே இந்த நீலா மேட்ரிமோனி திருமண தகவல் மையம் கமிஷன், தரகு ஏதும் இன்றி இருமண வீட்டார்களிடமும் உண்மையான தகவல்களைக் கொடுத்து மிகச்சிறப்பான இல்வாழ்க்கை அமைய உதவ வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோளாகும். எங்கள் தகவல் மையத்தில் பதிவுக் கட்டணம் குறைவாதே பதிவு செய்வதற்கு தங்களின் பயோ-டேட்டா, ஜாதகம், போட்டா மட்டும் போதுமானது. தங்கள் தகவல்களைத் தமிழிலேயே பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்து ஒருவாரத்திற்குள் தங்களது பதிவு எண்ணை மறக்காமல் கேட்டு பெற்றுக் கொள்ளவும். தங்களுக்கு பொருத்தமான ஒரு வரனை தேர்ந்தெடுக்க ரூ.50 மட்டுமே. வேறு எந்த கட்டணமும் கிடையாது. மணமக்கள், மண வீட்டார்கள் பற்றிய தகவல்களை நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும். எங்களது சேவை தகவல்கள் தருவது மட்டுமே. திருமணம் நிச்சயம் செய்தவுடன் தகவல் மையத்திற்கு தெரியப்படுத்தவும். மேலும் எங்களது சேவை அனைத்து மதத்தவர்க்கும், அனைத்து இனத்தவர்க்கும் உண்டு. எங்களது சேவயை மேலும் சிறப்புடன் செய்யவும், சேவையில் குறைபாடுகள் எதுவும் இருந்தாலும் தங்களது மேலான கருத்துக்களை தெரிவிக்க விரும்பினாலோ கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளவும். நீலா மேட்ரிமோனி திருமண தகவல் தொடர்பு மையம் 1 / 255, ஜெ.ஜெ.நகர் முகப்பேர் கிழக்கு, சென்னை – 600 037 செல் : 9962225358, 9444226039 தம்ழ்நாடு – இந்தியா E-mail ID: gmneelamatrimony@gmail.com www.neelamatrimony.com

Jothidam

    ஜாதகம் கணிக்க ரூ 700/- மட்டுமே

    ஒரு ஜாதகம் பார்க்க ரூ 300/- மட்டுமே

    திருமணபொருத்தம் ஜாதகம் ஒன்றுக்கு ரூ 250/- மட்டுமே

    நேரில் பிரசன்னம் பார்க்க ரூ 500/- மட்டுமே

Thursday, 31 October 2013

2014 வருஷ பலன் விருச்சிகம்



2014  வருஷ பலன் விருச்சிகம்
விருச்சிகம் எதிலும் நெஞ்சுரத்துடன் போராடி வெற்றிகளைக் குவிக்கும் விருச்சிக ராசி வாசகர்ளே!
நீங்கள் எடுத்த முடிவை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள  தயங்குவீர்கள். உங்களுக்கென்று ஒரு குறிக்கோளுடன் வாழ்வீர்கள். உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம் ?

கிரகநிலை
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு 6ம் இடத்தில் கேதுவும், ராசிக்கு 7ம் இடத்தில் குருவும், விரையஸ்தானத்தில் சனி ராகுவும்   இருக்கிறார்கள். அஷ்டமஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.

மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவான சிந்தனைகள் குடிகொள்ளும். கடன் பிரச்னை தீர வழிகளைக் காண்பீர்கள். வீடு கட்டும் முயற்சியில்  இருந்த தடைகள் தீர்ந்து மீண்டும் வேலைகள் துவங்கும். இல்லத்தில் சுபச் செலவுகள் உண்டாகும். வங்கிகளிடமிருந்து எதிர்பார்த்த கடன் கிடைக்கும்.  ஆனால் விளையாட்டாக பேசும் வார்த்தைகள் வீண் வம்புக்கு வழி வகுக்கும். எனவே கவனமாக இருக்கவும். மறதியால் முக்கிய விஷயங்களில்  தாமதம் ஏற்படலாம். சிலருக்கு பல், அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றி மருத்துவச் செலவுகள் உண்டாகும். கடினமாக உழைத்து வெற்றி  பெறுவீர்கள்.

உங்களின் செல்வாக்கு உயரத் தொடங்கும். விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை முறையாகச் செய்து  குடும்ப வளத்தைப் பெருக்கிக் கொள்வீர்கள். இடம், பொருள், ஏவல் அறிந்துபேசி மற்றவர்களைக் கவர்வீர்கள். போட்டியாளர்களின் நெருக்கடிகளைத்  தாண்டி வேலைகளை சரியாக முடிப்பீர்கள்.
குடும்பத்தினருடன் இனிமையான பயணங்களைச் செய்வீர்கள். ஆக்கபூர்வமான எண்ணங்களை  நடைமுறைப்படுத்தி முன்னேறுவதற்கான வாய்ப்புகளைத் தேடுவீர்கள். வீட்டிற்கு பராமரிப்பு செலவுகளும், வாகனங்களை பழுது பார்க்கும் செலவுகளும்  உண்டாகும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்களின் விமர்சனங்களை பெரிதுபடுத்தாமல் நடந்துகொள்வீர்கள்.
பொது வாழ்வுப் பணிகளில்  ஈடுபட்டிருப்பவர்கள் கிடப்பில் கிடந்த நல்ல திட்டங்களை மன உளைச்சல் இல்லாமல் செய்யத் தொடங்குவீர்கள். குடும்ப உறுப்பினர்களின்  ஆலோசனைகளுடன் முக்கிய விஷயங்களை செயல்படுத்தி குடும்பத்தில் அமைதி கெடாமல் பார்த்துக்கொள்வீர்கள். வீண் வதந்தி, வீண் வம்பு இரண்டும்  வளராதவாறு இந்த ஆண்டு பார்த்துக்கொள்வது அவசியம்.
உத்யோகஸ்தர்கள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும்.  திட்டமிட்ட வேலைகளை உடனுக்குடன் முடிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களைப் பற்றி  வெளிப்படையாகப் பேச வேண்டாம். மேலும் உங்களின் கோரிக்கைகள் சற்று தாமதமாகப் பரிசீலிக்கப்படும். மற்றபடி அலுவலக ரீதியான பயணங்கள்  அனுகூலமான பலன்களைக் கொண்டு வந்து சேர்க்கும். புதிய பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.
வியாபாரிகள் இந்த நந்தன ஆண்டில் எதிர்பார்த்த  லாபத்தைக் காண முடியாது. தீயவர்களை இனம் கண்டு அவர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது. போட்டிகள் நியாயமற்றவையாக இருக்கும்  என்பதால் வியாபாரத்தில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. கூட்டாளிகள் உங்கள் முடிவுகளை ஆமோதிப்பதுபோல் தெரிந்தாலும் முதுகுக்குப் பின்னால்  தவறாகப் பேசுவார்கள். இதனால் அவர்களிடம் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம். மற்றபடி கொடுக்கல், வாங்கலில் நஷ்டங்கள் ஏற்படாது.
விவசாயிகளுக்கு விளைச்சல் நன்றாக இருக்கும். கொள்முதலில் லாபத்தைக் காண்பீர்கள். கால்நடைகளாலும் நன்மை அடைவீர்கள். பாசன வசதிகளைப்  பெருக்கிக் கொள்வதற்கான செலவுகளை செய்வீர்கள். கையிருப்புப் பொருட்கள் மீது அக்கறை காட்டவும். மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்து கூடுதல்  வருமானத்தைப் பெற முயல்வீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்காக செலவு செய்வீர்கள்.
அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான  திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இதனால் உங்களை புதிய பதவிகள் தேடி வரும். எதிரிகள் உங்களிடம்  அடங்கி நடப்பார்கள். மக்களின் ஆதரவு எதிர்பார்த்த அளவுக்குக் கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கலைத்துறையினர் சிறப்பான புதிய  ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். இதனால் உங்கள் பெயரும், புகழும் உயரும். உங்களின் திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்களுடன் ஒற்றுமையாகப்  பழகுவீர்கள். அவர்களிடமிருந்து நல்லுதவிகளைப் பெறுவீர்கள். புதிய வாகனங்களின் சேர்க்கை உண்டாகும். அனாவசிய பயணங்களை செய்ய  வேண்டாம்.
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். உறவும், சுற்றமும் அனுகூலமாக இருக்கும். அவர்களுக்கு உங்களால்  இயன்ற உதவிகளைச் செய்வீர்கள். விருந்து, கேளிக்கைகளில் ஈடுபட்டு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பீர்கள். தாய்வீட்டுச் சீதனம் வந்து சேரும்.  உங்கள் பெயரில் அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விரும்பிய  பாடப்பிரிவுகளைப் பெற்று மகிழ்வீர்கள். விளையாட்டில் பரிசுகளைப் பெறுவீர்கள். பெற்றோர் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள்.

பரிகாரம் : செவ்வாய்தோறும் அருகிலிருக்கும் அம்மன் கோவிலுக்குச் சென்று வலம் வந்து வணங்கி வரவும். நல்லெண்ணெய் விளக்கு ஏற்றலாம்.

சொல்ல வேண்டிய மந்திரம்:
தினசரி சியாமளா தண்டகம் பாராயணம் செய்யலாம்.

மலர் பரிகாரம்: செவ்வாய்தோறும் எலுமிச்சைமாலையை அம்மனுக்கு அர்ப்பணித்து வலம் வந்து வணங்குங்கள். அவள் உங்களுடன் இருந்து அனைத்து  காரியங்களிலும் வெற்றிகளை தேடித் தருவாள்.

2014 வருஷ பலன் துலாம்



2014  வருஷ பலன் துலாம்
துலாம் எதிலும் எந்த இடத்திலும் நியாயத்தையும் நீதியையும் நிலைநாட்டுவதற்காக போராடும் துலா ராசி வாசகர்களே!
நீங்கள் அனைவராலும்  விரும்பப்படுவீர்கள். அதிகம் சுமைகளை எடுத்துக் கொள்வீர்கள். அதே நேரம் சின்ன சின்ன பிரச்சனைகளில் தலையிட்டு வெளியில் வர தள்ளாடுவீர்கள். உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம் ?

கிரகநிலை
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசியில் சனி ராகுவும், 7ம் இடத்தில் கேதுவும், ராசிக்கு 8ம் இடத்தில் குருவும் இருக்கிறார்கள்.  பாக்கியஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.

ஏற்ற இறக்கமாக பொருளாதாரத்தில் இருந்த பாதிப்புகள் படிப்படியாக விலகும். புதிய தொழில்களில் கால் பதிக்க போராடிக் கொண்டிருந்தவர்கள்  எதிர்பார்த்த மாற்றத்தைக் காண்பார்கள். நண்பர்களுடன் இருந்த பிரச்னைகள் தீர்வுக்கு வருவதால் அலுவலகச் சூழல்களில் இருந்த இறுக்கம் மறைந்து  சகஜ நிலை உருவாகும். உங்களின் தகுதிக்கேற்ற புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். யோகா, ப்ராணாயாமம்  போன்றவற்றை செய்து உடல் நலத்தையும், மன வளத்தையும் பெருக்கிக்கொள்வீர்கள்.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் திறமைசாலிகளை தங்கள்  அருகில் வைத்துக் கொண்டு காரியமாற்றி நலமடைவார்கள். வழக்கு விவகாரங்களில் நிதானமாகவும், விட்டுக்கொடுத்தும் நடந்துகொண்டு வெற்றி  பெறுவீர்கள். சகோதர, சகோதரிகள் சட்டென்று உங்களை எடுத்தெறிந்து பேசிவிடலாம். அதனால் உங்களின் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள  வேண்டாம். மேலும் அரசுத் துறையிலிருந்து சலுகைகளைப் பெற குறுக்கு வழிகளைத் தேட வேண்டாம். நேர்வழியிலேயே எதையும் சாதித்துக்  கொள்ளுங்கள்.
பொது வாழ்வில் இருப்பவர்கள் தங்களின் புகழைத் தக்க வைத்துக் கொள்ள சிறிது சிரமப்பட வேண்டியிருக்கும். தொழிலில் புதிய  திருப்பங்களைக் காண்பீர்கள். வேறு ஊருக்குச் சென்று தொழில் செய்யும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்கும். சமுதாயத்தில் உயர்ந்தவர்கள் உங்களுக்கு  பாதுகாப்பாக இருப்பதால் மறைமுகமான போட்டிகளால் பாதிப்புகள் ஏற்படாது. இல்லத்திற்குத் தேவையான நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.  உடலில் ஏற்படும் சிறிய உபாதைகளுக்கு உடனுக்குடன் வைத்தியம் செய்து கொண்டால் மருத்துவச் செலவுகளைக் குறைக்கலாம்.
மற்றபடி பங்குச்  சந்தை விஷயங்களில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு தேவையான அறிவுரைகளையும், ஆலோசனைகளையும்  வழங்குவீர்கள். கவலைகொள்ள வைத்த கடன் தொல்லைகள் குறைவதால், உங்களின் மனதில் தைரியம் பிறக்கும். ஆனாலும் புதிய நண்பர்களிடம்  கவனமாக இருக்கவும். பூர்வீகச் சொத்தில் இருந்த இழுபறியான நிலைமை மாறும். தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றி வெற்றி நடைபோடுவீர்கள். 
சகோதர, சகோதரிகளிடம் உள்ள கருத்து வேறுபாடுகளைக் களைந்து குடும்ப ஒற்றுமையை பேணிக் காப்பீர்கள். உத்யோகஸ்தர்கள் விரும்பிய  இடமாற்றங்களைப் பெறுவீர்கள். உங்கள் வேலைகள் அனைத்தும் திட்டமிட்டபடியே குறித்த காலத்திற்குள் முடிவடையும். உங்களின் வேலைகளில்  தெளிந்த மனநிலையுடன் ஈடுபடுவீர்கள். மேலதிகாரிகளிடம் சுமுகமான உறவு நிலை உண்டாகும். சக ஊழியர்களின் குறைகளை முன்னின்று தீர்த்து  வைப்பீர்கள்.
புதிய முயற்சிகளை நன்கு ஆலோசித்த பிறகே செயல்படுத்தவும். கூட்டாளிகளும், நண்பர்களும் அனுசரணையாக இருப்பார்கள். கடன்  கொடுக்காமல் முடிந்தவரை தவிர்க்கவும். பழைய கடன்களை சீரிய முயற்சியின் பேரில் படிப்படியாக திருப்பிச் செலுத்தி விடுவீர்கள்.
விவசாயிகள் நூதன யுக்திகளைப் புகுத்தி விவசாயத்தைப் பெருக்குவீர்கள். வங்கிகளிடமிருந்தும், கூட்டுறவு சங்கங்களிடமிருந்தும் எதிர்பார்த்த கடன்  மானியத்துடன் கிடைக்கும். மனச் சோர்வு நீங்கி, எதையும் சாதிக்கும் அளவுக்கு தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள். பழைய குத்தகை பாக்கிகள்  வசூலாகும். கருப்பு நிற பயிர்களை உற்பத்தி செய்தால் மேலும் நன்மை அடையலாம்.

அரசியல்வாதிகள் பொறுப்புடனும், கவனத்துடனும்  செயல்படுவீர்கள். மேலிடத்தின் கருணைப் பார்வை உங்களுக்கு உந்து சக்தியாக அமையும். சில நேரங்களில் உட்கட்சிப் பூசல்களில் சிக்கி மன  வருத்தத்துக்கு ஆளாவீர்கள். பிறருக்கு வாக்கு கொடுக்கும்போது நன்றாக யோசிக்கவும். மற்றபடி தொண்டர்களின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும்.  பயணங்களால் நன்மை உண்டாகும்.
கலைத்துறையினர் தேவைக்கேற்ப வருமானத்தைக் காண்பீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்பட்டு  பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதிய கலைஞர்கள், நண்பர்கள் ஆவார்கள். புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். பெண்மணிகளுக்கு இந்த நந்தன ஆண்டில்  புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆதரவு நிறைந்திருக்கும்.
பொருளாதாரத்தில் சிறப்புகளைக் காண்பீர்கள்.  குடும்பத்தில் உங்கள் கௌரவத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகளுக்கு பெற்றோர் மற்றும்  ஆசிரியர்களின் அன்பு கிடைக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும். உங்களின் முயற்சிகள் தடைகளைத் தகர்த்து தாமதமின்றி வெற்றி பெறும்.  விளையாட்டில் சாதனைகளைச் செய்வீர்கள்.

பரிகாரம் : வெள்ளிதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகருடனை வணங்கி வரவும். நெய் விளக்கு ஏற்றலாம். முடிந்தவரி  கருட தரிசனம் செய்யவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி நமசிவய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லவும். ராமஜெயமும் எழுதலாம்.

மலர் பரிகாரம்: சனிக்கிழமைதோறும் வில்வ இலையை சிவனுக்கு சாத்தி வழிபட்டு வர உங்கள் துக்கங்கள் சந்தோஷமாக மாறும். உணர்ச்சிகளை  அடக்க யோகா செய்யுங்கள்..

2014 வருஷ பலன் கன்னி



2014  வருஷ பலன் கன்னி
கன்னி எதிலும் தங்களது உழைப்பையும் தன்னார்வத்தையும் வெளிப்படுத்தும் கன்னி ராசி வாசகர்களே !
குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்கள் நீங்கள். அதீதமான உணர்வுகள் கொண்டவர்கள். கௌரவத்தை அனைத்து இடத்திலும் எதிர்பார்ப்பீர்கள். சிக்கனத்தை கடைபிடிப்பதிலும் வல்லவர்கள். உலகம் முழுவதும் சுற்றிவர வேண்டும் என்று விருப்பம் கொண்டவர்கள். உங்களுக்கு
எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம் ?

கிரகநிலை
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தனகுடும்ப வாக்குஸ்தானத்தில் சனி ராகுவும், ஆயுள்ஸ்தானத்தில் கேதுவும், பாக்கியஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு தொழில்ஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.

இந்த ஆண்டு, உங்களின் கிரகநிலைகளை வைத்து பார்க்கும் போது  நீங்கள் பொறுமையுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் முழுமையாகக் கைகூடும். உங்களை வாட்டிய உடல் உபாதைகளும் நீங்கிவிடும். மனப்புழுக்கத்திலிருந்து விடுபட்டு நிம்மதியாக சுவாசிப்பீர்கள். உங்களைப் பகடைக்காயாக பயன்படுத்தி வந்த உற்றார், உறவினர்களின் உள்மனதைப் புரிந்துகொண்டு அவர்களிடமிருந்து விலகிவிடும் சந்தர்ப்பங்கள் உண்டாகும். உங்கள் அருகிலேயே இருந்து சதி செய்தவர்கள் ஓடி ஒளிவார்கள்.

அரசாங்கத்தில் உங்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். எதிர்பார்த்த பொருளாதார முன்னேற்றத்தைக் காண்பீர்கள். காத்திருந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வாசல் கதவைத் தட்டும். நெடுநாட்களாக இழுபறியாக நடந்துவந்த வழக்குகள் சட்டென்று சாதகமாக முடியும். இல்லத்தில் களவு போன பொருட்கள் திரும்பவும் கை வந்து சேரும். இயல்பான காரியங்களைக்கூட மாற்று வழிகளில் சிந்தித்து செயல்படுத்துவீர்கள். உங்களின் தோற்றத்தில் பொலிவும், நடையில் மிடுக்கும் உண்டாகும்.
உங்கள் சகோதர, சகோதரிகள் தக்க சமயத்தில் உதவிக்கரம் நீட்டுவார்கள். புதிய மந்திரங்கள் கற்பீர்கள். குடும்பத்தில் நல்ல பெயர் வாங்குவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உங்களின் தெய்வ பலத்தால் சோர்வடையாமல் பணியாற்றுவீர்கள். மற்றபடி எவருக்கும் உங்கள் பெயரில் பணம் வாங்கித் தர வேண்டாம். மேலும் அவசியமான பயணங்களையே மேற்கொள்ளவும். புதிய நண்பர்களை ஓரளவுக்கு மேல் நம்ப வேண்டாம்.
பொதுக்காரியங்களில் ஈடுபட மனம் விழையும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள். சிலருக்கு ரியச் எஸ்டேட் துறைகளின் மூலம் ஆதாயங்கள் கிடைக்கும். உத்யோகஸ்தர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு குறைவாக இருப்பதால் அவர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சக ஊழியர்களிடம் உங்கள் மனதில் உள்ளவற்றைக் கூற வேண்டாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்கிற நிலையில் இருப்பதே சிறப்பு. மற்றபடி அலுவலக ரீதியான பயணங்களால் நன்மை உண்டாகும். உங்கள் திறமையில் குறைவு ஏற்படாது. வியாபாரிகளின் முயற்சிகளுக்கு ஏற்ற லாபம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சிரமங்கள் குறையும். தடை ஏற்பட்டாலும் அனைத்துச் செயல்களும் வெற்றி பெறும். வாடிக்கையாளர்களைக் கவர புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பெரிய முதலீடுகளில் தொழிலை விரிவுபடுத்த நினைக்க வேண்டாம். இருப்பதை நேர்த்தியாகச் செய்து முடிப்பதே சிறப்பு. புதிய கடன்கள் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவும். விவசாயிகளுக்கு பயிர் விளைச்சல் நன்றாக இருக்கும். புதிய நிலங்களை வாங்குவீர்கள். கணக்கு, வழக்குகளை சரியாக வைத்துக்கொண்டு வங்கிகளிடம் சலுகைகளைப் பெறுவீர்கள். காலம் கனிந்து வருவதால் முயற்சிகளைத் தீவிரப்படுத்தி வருமானத்தைப் பெருக்குவீர்கள். சொத்து தொடர்பான சண்டைகளில் ஈடுபட வேண்டாம். கால்நடைகளை கவனத்துடன் பராமரிக்கவும். வருங்காலத்திற்கான சேமிப்புகளில் கவனம் செலுத்துவீர்கள். அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவிகளைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். மற்றபடி முக்கியப் பிரச்னைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளையும் தவிர்க்கவும்.
கலைத்துறையினர் உழைப்புக்கேற்ற பலனை அடைவீர்கள். "உழைப்பே உயர்வு' என்கிற ரீதியில் பணியாற்றுவீர்கள். ஒப்பந்தங்களைச் சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்தாலும் பண வரவுக்கு தாமதம் ஏற்படலாம். ஆனாலும் ரசிகர்களின் உற்சாகமான ஆதரவு உங்கள் மன வருத்தத்தைக் குறைக்கும் மருந்தாக அமையும். வரவேற்புகள் குறைந்தாலும் நிலைமை போகப் போக மாறிவிடும். பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். ஆனாலும் கணவர் வழி உறவினர்கள் பாசத்தோடு பழகுவார்கள். உற்றார், உறவினர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும். தெய்வ வழிபாட்டைக் கூட்டிக்கொண்டு ஆன்ம பலம் பெறவும். மாணவமணிகள் உழைப்புக்கேற்ற மதிப்பெண்களைப் பெறுவீர்கள். கடுமையாக உழைத்துப் படிக்கும் மாணவர்கள் சாதனை புரிவார்கள். பெற்றோரின் ஆதரவு உங்களுக்கு நன்றாகவே அமையும். உள்ளரங்கு விளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.


பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்கு சென்று தேங்காய் நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் ஸ்ரீஉப்பியப்பன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வரலாம்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி ஸ்ரீவிஷ்ணு ஸகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம்.

மலர் பரிகாரம்: “துளஸி”யை பெருமாளுக்கு சாத்தி அர்ச்சனை செய்து வணங்கி வர தடைகள் விலகி நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். சொத்துக்களில் இருந்தவந்த பிரச்சனைகள் மாறும்.

2014 வருஷ பலன் சிம்மம்



2014 வருஷ பலன் சிம்மம்
சிம்மம் எதிலும் தங்களது தனித்தன்மையை வெளிப்படுத்தும் சிம்ம ராசி வாசகர்களே !
நீங்கள் தர்ம சிந்தனை உடையவர்கள். அனைவரும் எல்லா வளமும் நலமும் பெற வேண்டும் என்று விரும்புவீர்கள். பழமையையும் கலாசாரத்தையும் மதித்து நடப்பீர்கள். முன்னோர்களின் ஆசீர்வாதங்களை முழுமையாக பெற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்
கிரகநிலை
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு தைரியவீர்யஸ்தானத்தில் சனி ராகுவும், பாக்கியஸ்தானத்தில் கேதுவும், தொழில்ஸ்தானத்தில் குருவும் இருக்கிறார்கள். உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.

இந்த ஆண்டு, உங்களின் ராசியிலும் பின் தனவாக்கு குடும்பஸ்தான ராசியிலும் சஞ்சரிக்கிறார் குரு பகவான். நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றியுடன் முடியும். சிறிய அளவு முயற்சிகள்கூட பெரிய பலனைத் தரும். திருமணம் போன்ற சுப காரியங்கள் சுலபமாக நடக்கும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். உடல் உபாதைகளுக்கு மாற்று சிகிச்சை முறைகளை மேற்கொள்வீர்கள். அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள். மழலைச் செல்வம் கிடைக்கும். மனதிற்கினிய தொலைதூரப் பயணங்களை மேற்கொள்வீர்கள். ஆனாலும் புதியவர்களுடன் கூட்டு சேர வேண்டாம். மேலும் உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் உங்களின் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

மற்றபடி சமுதாயத்தில் புகழ் பெற்ற பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்களின் அந்தஸ்து உயரும். சகோதர, சகோதரிகளுடன் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு உங்களின் காரியங்களை சாதித்துக்கொள்வீர்கள். அனாவசியச் செலவுகளுக்காக கடன் வாங்க வேண்டாம். வரவுக்குத் தகுந்த செலவுகளைச் செய்யவும். மேலும் மனதில் எதையோ இழந்துவிட்டது போன்ற உணர்வு தோன்றும். எனவே சான்றோர்களின் நூல்களைப் படித்து மனதை தெளிவாக வைத்துக் கொள்ளவும்.

குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்த உறவினர்கள் மறுபடியும் ஒன்று சேர்வார்கள். வருமானம் படிப்படியாக உயரும். பழைய கடன்களைத் திருப்பிச் செலுத்துவீர்கள். கடினமான உழைப்பை மேற்கொள்வீர்கள். உங்களின் போட்டியாளர்களை திடமான நம்பிக்கையுடன் வெற்றிகொள்வீர்கள். நூதனத் தொழிலில் ஈடுபட்டு வெற்றிவாகை சூடுவீர்கள். உங்களின் செயல்களில் வேகத்துடன், விவேகத்தையும் கூட்டிக்கொள்வீர்கள். உங்களுக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக்கொள்வீர்கள். உங்களுக்கு எதிராக தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்குகளை சம்பந்தப்பட்டவர்களே திரும்பப் பெறுவார்கள். உங்களின் பழக்க வழக்கங்களில் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். குடும்பத்தாருடன் இனிய சுற்றுலா சென்று வருவீர்கள். நேர்வழியில் சிந்தித்து உங்களின் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

உத்யோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். கடின உழைப்பை தாரக மந்திரமாகக் கொண்டு உழைக்கவும். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகவும். சிலர் உங்களுடன் பகைமை பாராட்டுவார்கள். ஆனாலும் வருமானத்திற்குக் குறைவு இருக்காது. அலுவலக ரீதியான பயணங்களால் நல்ல அனுபத்தைப் பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
வியாபாரிகளுக்கு வியாபாரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தாலும் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். திட்டமிட்டபடி செய்யும் செயல்களில் வெற்றி காண்பீர்கள். பழைய கடன்களை அடைத்த பிறகே புதிய கடன்களைப் பெற முயற்சி செய்யவும். மற்றபடி வாடிக்கையாளர்களின் வருகை நல்லமுறையிலேயே இருக்கும். ஆனாலும் புதிய முதலீடோ அல்லது விரிவாக்கலோ இருந்தால் தகுந்த ஆலோசனைகளைப் பெறவும்.
விவசாயிகள் கொள்முதல் லாபத்தைக் காண்பீர்கள். பாசன வசதிகளுக்காக அதிக செலவு செய்ய நேரிட்டாலும் அதனால் நன்மையே ஏற்படும். கறவை மாடுகள் வாங்கி பால் வியாபாரம் செய்தும், மரங்கள் வளர்த்தும் லாபம் பெறுவீர்கள். புதிய நிலங்களை வாங்குவீர்கள்.
அரசியல்வாதிகள் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். அதனால் கட்சி மேலிடத்தின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்களின் வேலைகளை சிரமம் இல்லாமல் செய்து முடிப்பீர்கள். தொண்டர்களின் ஆதரவும், கட்சி மேலிடத்தின் ஆதரவும் இருப்பதால் உங்களின் எண்ணங்கள் நிறைவேறி புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். ஆனாலும் மாற்றுக் காட்சியினர் உங்கள் பேச்சில் குறை காண முயல்வார்கள். எனவே அனாவசிய விவகாரங்களில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பது நல்லது.

கலைத்துறையினர் சுமாரான வாய்ப்புகளையே பெறுவீர்கள். மற்றபடி உங்களின் பெயரும், புகழும் உயரும். சக கலைஞர்களின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். சக கலைஞர்களுடன் நல்ல உறவை வைத்துக்கொள்வீர்கள். பெண்மணிகளின் மதிப்புக்கும், மரியாதைக்கும் குறைவு வராது. உங்களின் பிரார்த்தனைகள் வீண் போகாது. பண வரவு அதிகரிக்கும். குழந்தைகள் உதவிகரமாக இருப்பார்கள். சுபகாரியங்கள் நடத்துவதில் ஏற்பட்ட தடைகள் விலகும். உற்றார், உறவினர்களுடன் ஒற்றுமை தொடரும்.
மாணவமணிகளின் படிப்பில் சிறு தடங்கல்கள் ஏற்பட்டாலும் பெற்றோரின் உதவியுடன் நன்றாகப் படித்து வெற்றி பெறுவீர்கள். சோம்பேறித்தனத்தை தள்ளி வைத்துவிட்டு ஆசிரியர் நடத்திய பாடங்களை அன்றைய தினமே படித்து மதிப்பெண்களை அள்ளுங்கள். உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொண்டு உடலையும், மனதையும் நன்றாக வைத்துக்கொள்ளுங்கள்.

பரிகாரம் : ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும். முடிந்தவர்கள் ஸ்ரீசூரியனார் கோவில் சென்று வழிபட்டு வரலாம். காலையில் சூரியன் உதிக்கும் போது தரிசம் செய்வதும் நன்மையைத் த்ரும்.

சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி ஆதித்யஹ்ருத்யம் அல்லது புருஷஸூக்தம் பாராயணம் செய்யலாம்.

மலர் பரிகாரம்: “எருக்க மலரை” சிவனுக்கு அல்லது கணபதிக்கோ அர்ப்பணம் செய்து வணங்கி வர நன்மைகள் கிடைக்கப் பெறுவீர்கள். மேலும் கோமாதாவிற்கு துவாதசி தோறும் அகத்திக்கீரையும் கொடுக்கலாம். உங்களுக்கு அனைத்து காரியங்களும் தங்குதடையின்றி நடக்கும்.