Sunday 1 May 2016

பொது அறிவு - இந்திய அரசியல் - மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சிகள்

பொது அறிவு - இந்திய அரசியல் - மத்திய மற்றும் மாநில அரசியல் கட்சிகள்

1.பாரதீய ஜனதாக் கட்சியின் முன்னோடியாகப் பழைய ------------------ உள்ளது - பாரதீய ஜன சங்கம்

2.-------------- ல் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜத்தை நிறுவினார் - 1875

3.1925ல் ----------------- என்பவர் ரா~;டிரிய சுயம் சேவச் சங்கத்தை (ஆர்.எஸ்.எஸ்) ஒரு கலாச்சார அமைப்பாக அமைத்தார் - கேசவ் ஹெட்கேவார்

4.---------------- என்பவர் 1951ஆம் ஆண்டில் ஜனசங்கத்தை அமைத்துக் கொடுத்தார் - ~pயாம பிரசாத முகர்ஜி

5.ஜனசங்கம் --------------- ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றது - இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ்.

6.ஜனதா கட்சி 1977ஆம் ஆண்டு மார்சுத் திங்கள் அன்று மக்களவை தேர்தலில் 170 இடங்களில் வெற்றி பெற்று ----------------- ஐ பிரதம அமைச்சராகக் கொண்டு அரசாங்கத்தை ஆரம்பித்தது - மெரார்ஜி தேசாய்

7.ஜனதா கட்சி --------------ல் பிளவுபட்டது - 1980

8.ஜனசங்கத்தின் தலைவர்கள் தமது கட்சியைப் புனரமைத்து --------------- கட்சியாகப் பெயர் மாற்றம் செய்தனர் - பாரதீய ஜனதா

9.பாரதீய ஜனதா கட்சி பிற அரசியல் கட்சிகளுடன் சேர்ந்து -----------------ல் மத்தியில் அரசாங்கம் அமைத்தது - 1998

10.---------------- பாரதீய ஜனதாக் கட்சியின் தேர்தல் சின்னமாகும் - தாமரை மலர்

11.ஜனதா தளம் ---------ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் அமையப் பெற்று மக்களாட்சித் தன்மையைக் கொண்டுள்ளது - 1988

12.--------------- மற்றும் சிலரால் 1912ல் திராவிடச் சங்கம் அமைக்கப்பட்டது - நடேச முதலியார்

13.பின்னர் திராவிடச் சங்கம் -------------- என்று அழைக்கப்பட்டது - நீதிக்கட்சி

14.------------ல் பெரியார் திரு.ஈ.வெ.ராமசாமி தலைமையில் திராவிடர் கழகம் அமைக்கப்பட்டது - 1944

15.இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு, பெரியாருக்கும், அண்ணாவுக்கு இடையே தோன்றிய கருத்துவேறுபாட்டின் விளைவாக --------------- ம் நாளன்று திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா துவக்கி வைத்தார் - 1949ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 17

16.------------------ தி.மு.க.வின் தேர்தல் சின்னமாகும் - உதயசூரியன்

17.-----------ல் முதன் முறையாகத் தி.மு.க தேர்தலில் போட்டியிட்டது - 1957

18.-------------ஆம் ஆண்டின் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அண்ணா முதலமைச்சரானார் - 1967

19.அண்ணா ----------------- வரை பதவியில் நீடித்திருந்தார் - 1969ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 3ஆம் நாள்

20.---------------- ஆம் நாளன்று, அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியை எம்.ஜி.ஆர் நிறுவினார் - 1972ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 18

21.------------------- ஆம் நாளன்று, எம்.ஜி.ஆர். தனது கட்சியின் பெயரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மாற்றினார் - 1976ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 12

22.எம்.ஜி.ஆர் அவர்கள் தனது கட்சி ----------------- கொள்கைகளை பின்பற்றும் என அறிவித்தார் - திரு. சி.என். அண்ணாதுரை

23.எம்.ஜி.ஆர் அவர்கள் ------------------- அன்று மறைந்தார் - டிசம்பர் திங்கள் 1987ஆம் ஆண்டு

24.அ.தி.மு.க வின் அடிப்படை கருத்தியல் ------------------ ஆகும் - அண்ணாயிசம்

No comments:

Post a Comment