Sunday 1 May 2016

நோம்பி

நோம்பி

பொதுவாக நோம்பி என்றாலே பண்டிகை, திருவிழா என்று பொருள் விளங்கும். கடவுளுக்கு நாம் அன்னம் உண்ணாமல் நோன்பு இருப்பதே நோம்பி என்று சொல்வார்கள். பண்டிகை காலத்தில் நம் மக்கள் அன்னம் உண்ணாமல் நோன்பு இருந்து தீ மிதிப்பார்க்கள்.

நோம்பியின் முக்கியத்துவம் :

♠ நோம்பியின் போது வீடுகள் தோறும் சுத்தம் செய்து மாந்தோரணம் கட்டி அலங்கரிப்பார்கள்.

♠ அனைவரின் வீட்டிலும் கடவுள் வாசம் செய்ய இந்த மாதிரியான திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.

♠ பண்டிகை காலத்தில் அனைவரின் வீட்டிலும் உறவினர்கள் நிறைந்தபடி கலகலப்பும் மனநிறைவும் இருக்கும்.

♠ அம்மனுக்கு மாவிளக்கு செய்து படைப்பார்கள். இதன் மூலம் அம்பாள் என்றும் நம்முடன் ஒளியாய் இருப்பாள் என்பது ஐதீகம்.

♠ திருவிழாவில் முக்கிய நிகழ்வாக திகழ்வது தேரோட்டம் தான். இறைவனின் தேரை நாம் இழுப்பது புண்ணியம் தரும். தேரில் ஒய்யரமாக அமர்ந்து வரும் தெய்வத்தை பார்க்க காண கண்கோடி வேண்டும்.

♠ திருவிழாக்கள் பொதுவாக மூன்று நாட்கள் நடைபெறும். இந்த மூன்று நாளுமே ஊர் முழுவதும் சந்தோஷ வெள்ளத்தில் ஆழ்ந்து இருக்கும்.

♠ மக்கள் சந்தோஷத்தினால் இறைவனும் மகிழ்ச்சி அடைந்து மக்கள் குறையை தீர்த்து அவர்கள் வேண்டியதை நிறைவேற்றுவார்.

பண்டிகைகள் நேர்த்திக்கடன் :

♠ பொதுவாக மக்கள் தங்களின் நேர்த்திக்கடனை திருவிழாவின் போதுதான் நிறைவேற்றுவார்கள்.

♠ அப்போது கிடா வெட்டுதல் பொங்கல் வைத்தல் போன்று நிகழ்ச்சியும் நடைபெறும்.

♠ காது குத்துதல், மொட்டை அடித்தல், அன்னதானம் வழங்குதல், அழகு குத்துதல், போன்ற சிறப்பான நிகழ்ச்சிகள் திருவிழா காலங்களில் விமர்ச்சியாக நடைபெறும்.

♠ தீபவாளி, பொங்கல், ஆடி மாதம் தேங்காய் சுடும் நோம்பி என்று பல வகைகளாக நோம்பிகள் நம் மக்களிடையே இப்போதும் இருந்து வருகின்றன.

கேட்டை நட்சத்திர தோஷம் நீங்க..!

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் திருமணத்தை ஆனிமாதத்தை தவிர்த்து மற்ற மாதங்களில் செய்ய வேண்டும். கேட்டை நட்சத்திரத்தில் துர்க்கை அம்மனுக்கு நெய்விளக்கு ஏற்றி சிவப்பு அரளி மாலை அணிவித்து வழிபட வேண்டும் இவ்வாறு ஒன்பது மாதங்களுக்கு தொடர்ந்து வழிப்பட்டால் காரியதடைகள் நீங்கி வளமான வாழ்வு பெறலாம்.

No comments:

Post a Comment