Sunday 1 May 2016

ஷஷ்டி திதி சிறப்பு

திதி : சஷ்டி

சஷ்டி என்பது சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட காலக் கணிப்பு முறையில், 15 நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாளைக் குறிக்கிறது. இந்த நாட்கள் பொதுவாகத் 'திதி" என்னும் பெயரால் அழைக்கப்படுகின்றன. அமாவாசை நாளுக்கும், பௌர்ணமி நாளுக்கும் அடுத்து வரும் ஆறாவது திதி சஷ்டி ஆகும். ஷட் எனும் வடமொழிச் சொல் ஆறு எனப் பொருள்படும். 15 நாட்களைக் கொண்ட காலக் கணிப்பில் ஆறாவது நாளாக வருவதால் இந்த நாள் சஷ்டி என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அமாவாசையை அடுத்துவரும் சஷ்டியைச் சுக்கில பட்சச் சஷ்டி (அ) வளர்ப்பிறை சஷ்டி என்றும், பௌர்ணமியை அடுத்தவரும் சஷ்டி கிருஷ்ண பட்சச் சஷ்டி (அ) தேய்ப்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.

சஷ்டியின் சிறப்புகள் :
✡ சஷ்டி முருகனுக்குரிய சிறப்பு நாளாகும். ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் சஷ்டி கந்த சஷ்டி ஆகும். இந்த கந்த சஷ்டி விழாவானது முருகக்கடவுள் சூரனை அழித்த பெருமையை கொண்டாடும் ஒரு விழாவாகும்.

✡ சஷ்டி திதியில் வேலைக்கு சேருதல், வீடு வாகனம் வாங்குதல், மருந்துவ தொழிலில் தொடங்குதல் போன்றவை செய்ய உகந்த நாளாகும்.

✡ சஷ்டி விரதம் விரதங்களுள் மிகச்சிறப்புடையது. இந்த விரதத்தை மனதில் கொண்டே 'சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்" என்ற பழமொழி எழுந்தது.

✡ சஷ்டி விரதம் இருந்தால் குழந்தை பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வார்.

✡ கார்த்திகை மாதம் தேய்ப்பிறை சஷ்டி விநாயகருக்கு உகந்த தினமாகும். இந்நாளில் விநாயகருக்கு விரதமிருப்பது நல்லது.
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம் நெஞ்சிற்
பதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்து ஒங்கும்
நி~;டையுங் கைகூடும், நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந் தனை.

No comments:

Post a Comment