Wednesday, 11 May 2016

வாக்கு அளிப்பதற்கு தேவையான 11 ஆவணங்கள்

வாக்கு அளிப்பதற்கு தேவையான 11 ஆவணங்கள்

வாக்காளர் அடையாள அட்டையை தவிர வாக்கு அளிப்பதற்கு தேவையான 11 ஆவணங்கள் என்ன என்பது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்களை காண்போம்.

அடையாள அட்டை :

2016-ம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத்தேர்தலில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் 11 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும்.

11 ஆவணங்கள் :

♠ கடவுச்சீட்டு(பாஸ்போர்ட்)

♠ ஓட்டுனர் உரிமம்

♠ மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்

♠ வங்கி, அஞ்சலகக் கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடியது)

♠ நிரந்தர கணக்கு எண் அட்டை (பான்கார்டு)

♠ தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு

♠ மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை

♠ தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு

♠ புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்

♠ தேர்தல் நிர்வாகத்தினரால் வழங்கப்பட்ட, அனுமதியளிக்கப்பட்ட வாக்காளர் புகைப்பட சீட்டு

♠ பாராளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை.

வாக்காளர் பட்டியலில் பெயர் :

ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

வாக்களிப்பவரின் பெயர் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார்.

No comments:

Post a Comment