Wednesday 11 May 2016

திருமலை நாயக்கர் அரண்மனை

திருமலை நாயக்கர் அரண்மனை

மதுரை மாநகரை ஆண்ட நாயக்கர் மன்னர்களுள் ஒருவரான திருமலை நாயக்கரால் கி.பி.1636 ஆம் ஆண்டில் திருமலை நாயக்கர் அரண்மனை கட்டப்பட்டது.

அமைவிடம் :

மதுரை மாவட்டத்தில் மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் தென்கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது இந்த அரண்மனை.

தோற்றம் :

திருமலை அரண்மனையை வடிவமைத்தவர் ஒரு இத்தாலி நாட்டு கட்டடக் கலைஞர் என்று கூறப்படுகிறது. இது திருமலை நாயக்கர் காலத்தில் வடிவமைக்கப்பட்டது. இந்த அரண்மனையின் நான்கில் ஒரு பகுதி மட்டுமே தற்போது எஞ்சியுள்ளது. இந்து, முஸ்லிம் கட்டிடக் கலைப் பாணிகள் கலந்து அமைந்த இந்தோ சரசனிக் பாணி என அழைக்கப்படும் கட்டிடக்கலைப் பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அரண்மனையின் அமைப்பு :

அக்காலத்தில் இந்த அரண்மனை இரண்டு முக்கிய பகுதிகளைக் கொண்டதாக அமைந்திருந்தது. ஒன்று சொர்க்க விலாசம் என்றும், மற்றது ரங்க விலாசம் என்றும் அழைக்கப்பட்டன. சொர்க்க விலாசம் மன்னரின் வசிப்பிடமாகவும், ரங்க விலாசம் அவரது தம்பியான முத்தியாலு நாயக்கரின் வசிப்பிடமாகவும் இருந்தது.

இந்த அரண்மனைத் தொகுதியில், இசை மண்டபம், நாடக சாலை, பல்லக்குச் சாலை, ஆயுத சாலை, வழிபாட்டிடம், வேறு அரச குடும்பத்தினர்க்கும், பணியாளர்களுக்குமான வசிப்பிடங்கள், அந்தப்புரம், பூங்காக்கள், தடாகங்கள் போன்ற பல்வேறு பகுதிகள் அடங்கியிருந்தன.

முற்றத்தைக் கடந்து உள்ளே சென்றால், மிகப்பெரிய முற்ற வெளியும், அதனை சுற்றிலும் அழகான தூண்களும் காட்சி தருகின்றன. அதன் மேற்குப் பகுதியில் வேலைப்பாடு நிறைந்த கட்டடப்பகுதி உள்ளது.

இந்த அரண்மனையானது 58 அடி உயரம் கொண்டது. 248 பிரமாண்டமான பெரிய தூண்கள் தாங்கி நிற்கின்றன. கூரையில் வி~;ணு மற்றும் சிவன் பற்றிய புராணக்காட்சிகள் ஓவியமாய் சித்தரிக்கப்பட்டுள்ளன. அங்குள்ள பிரம்மாண்ட தூண்களே, அரண்மனையின் கம்பீரமான தோற்றத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது. அனைத்துப் பகுதிகளும் வெள்ளைச் சுண்ணாம்பினால் பூசப்பட்டுள்ளது.

தூண்களுக்கு மேற்புறம் யாழி உருவமும், மாடம் போன்ற தோற்றமும், மிக நுணுக்கமான வேலைப்பாடுகளும் அற்புதமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.

தமிழக அரசின் தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் கீழ் உள்ள இந்த அரண்மனை மேல் விமானங்கள் நமது கண்களுக்கு பிரம்மிப்பை ஏற்படுத்துகின்றன. அழகிய வேலைப்பாடுகள் மட்டும் அல்லாமல், அவ்வளவு உயரத்தில் அமைந்துள்ள அந்த கூரைகளை எப்படி அந்த காலத்தில் பொருத்தியிருப்பார்கள் என்று நினைத்தால் பிரம்மிப்பாக உள்ளது. பல இடங்களில் அமைந்துள்ள ஸ்தூபிகள் தங்கத்தால் வேயப்பட்டிருந்தது சிறப்பம்சமாகும்.

அரண்மைனையின் சிறப்பு :

1971ஆம் ஆண்டு தேசியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.

எவ்வளவு நீண்ட கைகளைக் கொண்டவராக இருந்தாலும், ஒரு தூணைக் கூட ஒருவரால் கட்டிப்பிடிக்க முடியாது என்பது நிஜம்.

சுற்றுலா வளர்ச்சியை கருத்தில் கொண்டு 1981 ஆம் ஆண்டுமுதல் ஒலி-ஒளி காட்சி அமைக்கப்பட்டு இன்றுவரை நடந்து கொண்டு இருக்கிறது. சுற்றுலா வளர்சிக் கழகம் சார்பில் நடைபெறும் இந்த ஒலி-ஒளி கட்சி நாள்தோறும் மலை 6.45 க்கு ஆங்கிலத்திலும், பின் இரவு 8 மணிக்கு தமிழிலும் நடைபெறுகிறது. இதன் மூலம் 2008-09 ஆண்டில் சுமார் 36 லட்சம் வரை வருவாய் ஈட்டப்பட்டது.

மேற்கண்ட தொகுப்பில் தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகள் :

அரண்மனை -
கட்டிடக் கலைஞர் -
சிற்பம் -
தேசியச் சின்னம் -

No comments:

Post a Comment