Wednesday 11 May 2016

இலக்கியம் - முத்தொள்ளாயிரம் மற்றும் தமிழ்விடு தூது

இலக்கியம் - முத்தொள்ளாயிரம் மற்றும் தமிழ்விடு தூது

1. மருப்பு என்பதன் பொருள் - தந்தம்

2. களிறு என்பதன் பொருள் - ஆண் யானை

3. எமதென்று என்பதனை பிரித்தெழுதுக - எமது + என்று

4. மார்போலை என்பதனை பிரித்தெழுதுக - மார்பு + ஓலை

5. வில்லெழுதி என்பதனை பிரித்தெழுதுக - வில் + எழுதி

6. தொண்ணூற்றாறு வகைச் சிற்றிலக்கியங்களுள் -------- ம் ஒன்று - தூது

7. கலிவெண்பாவில் உயர்திணைப் பொருளையோ அஃறிணைப்பொருளையோ தூது அனுப்புவதாகப் பாடுவது ----------------- - தூது இலக்கியம்

8. இளங்கனி என்பதனை பிரித்தெழுதுக - இளமை + கனி

9. விண்ணப்பமுண்டு என்பதனை பிரித்தெழுதுக - விண்ணப்பம் + உண்டு

10. மதுரையில் கோவில்கொண்டிருக்கும் சொக்கநாதர்மேல் காதல்கொண்ட பெண்ணொருத்தி, தன் காதலைக் கூறி வருமாறு தமிழ்மொழியைத் தூது விடுவதாகப் பொருளமைந்தது ------------- - தமிழ்விடு தூது

11. தமிழ்விடுதூதினை இயற்றிவர் - பெயர் அறிய இயலவில்லை

12. செவியறுத்து என்பதனை பிரித்தெழுதுக - செவி + அறுத்து

13. ஏர் என்பதன் பொருள் - அழகு

14. நாற்கரணம் என்பதனை பிரித்தெழுதுக- நான்கு + கரணம்

15. நாளிகேரம் என்பதன் பொருள் - தென்னை

16. போலிப்புலவர்களைத் தலையில் குட்டுபவர் ----------------------- - அதிவீரராம பாண்டியன்

17. நால்வகைப் பாக்களும் வயலுக்கு --------------- அமைந்துள்ளன - வரப்பாக

18. போலிப்புலவர்களின் தலையை வெட்டுபவர் ------------- - ஒட்டக்கூத்தர்

19. நாற்பொருள் என்பதனை பிரித்தெழுதுக - நான்கு + பொருள்

20. சீத்தையர் என்பதன் பொருள் - கீழானவர், போலிப்புலவர்

No comments:

Post a Comment