Wednesday 6 April 2016

கம்பராமாயணம் - தொடர்பான செய்திகள்

இலக்கியம் - கம்பராமாயணம் - தொடர்பான செய்திகள் மேற்கொள்கள், பா வகை, சிறந்த தொடர்கள்

1. கம்பராமாயணம் என்ற நூலின் ஆசிரியர் யார் - கம்பர்

2. வழிநூல் எனப்படுவது - கம்பராமாயணம்

3. கம்பராமாயணத்தில் அமைந்துள்ள காண்டங்களின் எண்ணிக்கை - ஆறு (பால காண்டம், அயோத்தியா காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம்)

4. கம்பர் பிறந்த ஊர் --------------- - நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள தேரழுந்தூர்

5. இந்து என்பதன் பொருள் - நிலவு

6. கம்பரை ஆதரித்த வள்ளல் ------------------ -சடையப்ப வள்ளல்

7. கம்பர் வாழ்ந்த காலம் - கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு

8. கம்பர் இயற்றிய நூல்கள் - கம்பராமாயணம், சடகோபரந்தாதி, ஏரெழுபது, சிலையெழுபது, சரசுவதி அந்தாதி, திருக்கை வழக்கம்

9. தமிழுக்குக் கதி என புகழப்படும் நூல்கள் யாவை- திருக்குறள், கம்பராமாயணம்

10. அயோத்தியா காண்டத்தில் குகப் படலம் எத்தனையாவது படலம் - ஏழாம் படலம்

11. இடர் என்பதன் பொருள் - துன்பம்

12. குகப் படலத்தினை ---------------- எனவும் கூறுவர் - கங்கைப் படலம்

13. கம்பர் தாம் இயற்றிய நூலுக்கு ---------- எனப் பெயரிட்டார் - இராமவதாரம்

14. நாவாய் என்பதன் பொருள் - படகு

15. இறை என்பதன் பொருள் - தலைவன்

16.வடமொழியில் இராமாயணத்தை எழுதியவர் - வால்மீகி

17.கம்பர் காலத்து புலவர்கள் -சயங்கொண்டார், ஒட்டக்கூத்தர், புகழேந்தி புலவர்

18.கம்பராமாயணத்தில் அயோத்தியா காண்டம் --------- காண்டமாகும் - இரண்டாம்

19.காண்டம் என்பது ------------------- -பெரும்பிரிவு

20.படலம் என்பது ---------- - பெரும்பிரிவு

21.இராமாயணம் என்பதனை பிரித்தெழுதுக -இராம + அயனம்

22.பொய்கை என்பதன் பொருள் - குளம்

23.தாது என்பதன் பொருள் - மகரந்தம்

24. இயற்கை பரிணாமம் என்றழைக்கப்படுவது -கம்பராமாயணம்

25. கம்பர் தம்மை ஆதரித்த சடையப்ப வள்ளலை ---------- பாடல்களுக்கு ஒருமுறை பாடியுள்ளார் - 1000

No comments:

Post a Comment