Wednesday 6 April 2016

வெயிலுக்கு இயற்கை மருந்து.!

வெயிலுக்கு மருந்து...!

கீழ்க்காணும் வழிமுறைகளைப் பின்பற்றினால், கோடை வெயிலுக்கு அஞ்ச வேண்டியதில்லை:

☝ காலை எழுந்தவுடன் 200 மி.லி. குளிர்ந்த நீரைக் குடிக்க வேண்டும்.

☝ பழைய சோறு, நீராகாரம் மிகச் சிறந்தது.

☝ இளநீர், பதநீர் குடிக்கலாம்.

☝ தர்பூசணி, திராட்சை, வெள்ளரி, நுங்கு சாப்பிடலாம்.

☝ எலுமிச்சை சாறு, நன்னாரி சர்பத் (இயற்கையானது, வெறும் சர்க்கரைக் கலவை அல்ல) அருந்தலாம்.

☝ கார வகை உணவு, தின்பண்டங்கள், அசைவ உணவைத் தவிர்க்கலாம்.

☝ கேக், பப்ஸ், துரித உணவைத் தவிர்க்கலாம்.

☝ குளிர்பானங்களைத் தவிர்த்துக் குளிர்ந்த நீரை, மண்பானை நீரைக் குடிக்கலாம்.

☝ காலை, இரவு இரு வேளை குளிக்கவும்.

☝ உடலில் சந்தனம் பூசிக் குளியுங்கள்.

☝ கை, கால் முகத்தை ஒரு நாளைக்கு நான்கு, ஐந்து முறை குளிர்ந்த நீரால் கழுவிக்கொள்ளவும்.

☝ தயிரைக் கடைந்து வெண்ணெய் நீக்கப்பட்ட மோரை நிறைய குடிக்கலாம்.

☝ இறுக்கமாக ஆடை அணிவதைத் தவிருங்கள்.

☝ பருத்தி ஆடைகளை அணியுங்கள்.

☝ மது, புகையிலைப் பொருட்களைத் தவிருங்கள்.

☝ பொதுவாகவே வீடும் அலுவலகமும் காற்றோட்டமாக இருக்க வேண்டும், குறிப்பாக ஹாலும் படுக்கை அறையும்.

☝ பிளாஸ்டிக், இரும்பு, ஃபோம் இருக்கை, படுக்கைகளைப் பயன்படுத்தாதீர்கள்.

☝ தலைக்கு தினமும் எண்ணெய் வைத்துக்கொள்ளுங்கள்.

☝ வாரம் இரண்டு முறை எண்ணெய் தேய்த்துக் குளியுங்கள். உடல் சூடு கட்டுப்பாட்டில் இருக்கும்.

☝ எண்ணெய் தேய்த்து குளிக்கும் நாளில் தயிர், குளிர்பானம், மீன், இறால் சாப்பிட வேண்டாம்.

☝ மலக்கட்டு இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

☝ இரவில் நீண்ட நேரம் கண் விழிக்காதீர்கள்.

☝ பட்டினி, விரத முறைகளைத் தவிருங்கள்.

☝ மனதை லேசாக வைத்துக்கொண்டு, கோடை வெயிலைக் கட்டுப்படுத்தி நலமாக வாழுங்கள்.

No comments:

Post a Comment