Wednesday 6 April 2016

07-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்.!

07-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்.!

உலக சுகாதார தினம்

உலக மக்களின் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை வலியுறுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் உலகெங்கும் அனுசரிக்கப்படுகிறது. 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார மையம் (றுழசடன ர்நயடவா ழுசபயயெளையவழைn) தொடங்கப்பட்டதை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதி உலக சுகாதார தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றில் இருந்து உலக நலவாழ்வு நிறுவனத்தால் முக்கியமான நலவாழ்வு தொடர்பான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது.

ஜப்பானின் யமாட்டோ போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட தினம்

மிகப்பெரிய போர்க்கப்பலாக கருதப்பட்ட ஜப்பானின் யமாட்டோ போர்க்கப்பல் 1945ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அமெரிக்கப்படையினரால், ஓக்கினாவா என்ற தீவுக்கு அருகில் மூழ்கடிக்கப்பட்டது. இந்தக் கப்பல் 72,800 டன்கள் எடை கொண்டதாகும். மேலும், இது 18.1 இன்ச் அளவு கொண்ட 9 பீரங்கிகளைக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாக்கி சான்

ஜாக்கி சான் 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி பிறந்தார். இவர் நடிகர், ஆக்~ன் இயக்குநர், திரைப்படத் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர், தற்காப்புக் கலைஞர், திரைக்கதையாசிரியர், பாடகர் மற்றும் சண்டைக் கலைஞர் என பன்முகம் கொண்டவர். இவரது திரைப்படங்களில் அவரது அக்ரோபாட்டிக் சண்டைப் பாணி, வேடிக்கையான நேர உணர்வுத் திறன், புதிய ஆயுதங்கள் மற்றும் புதிய முறை சண்டைகள் ஆகியவை மிகவும் பிரபலம். ஜாக்கி சான் 1970 ஆம் ஆண்டிலிருந்து நடித்துவருகிறார். அவர் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கலாச்சார பிரதிநிதியாக பல்வேறு பாப் பாடல்கள், கார்ட்டூன்கள் மற்றும் வீடியோ கேம்களிலெல்லாம் இடம்பெற்றுள்ளார்.

பிரபல இந்திய சிதார் இசைக்கலைஞர் ரவி சங்கர் 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி பிறந்தார்.

தமிழ்த் திரைப்பட இயக்குனர் எஸ். பி. முத்துராமன் 1935 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி பிறந்தார்.

1948 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று உலக சுகாதாரா நிறுவனம் (றுர்ழு) ஐக்கிய நாடுகள் அவையால் தொடங்கப்பட்டது.

1795 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று மீட்டர் அளவு முறையை பிரான்ஸ் அறிமுகப்படுத்தியது.

1927 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 ஆம் தேதி அன்று முதல் தொலைதூர தொலைக்காட்சி சேவை வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கிடையே ஆரம்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment