Wednesday 6 April 2016

கோடைக்காலத்தில் வாகனங்களுக்கான சில டிப்ஸ் !

கோடைக்காலத்தில் வாகனங்களுக்கான சில டிப்ஸ் !

✔ வாகனங்களுக்கு பெட்ரோல் போடுவதற்குச் சரியான நேரம் இரவு அல்லது அதிகாலை நேரம்தான். குளிர்ச்சியாக இருக்கும் இரவு நேரத்திலோ, அதிகாலையிலோ பெட்ரோல் போட்டால் அதன் அளவு சரியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். சில நேரங்களில் சற்று அதிகமாக இருக்கக் கூட வாய்ப்புள்ளது. நன்றாக வெயிலடிக்கும் நேரத்தில் பெட்ரோல் போட்டால் நிச்சயம் அளவு குறைவாக இருக்கும்.

✔ கோடை காலத்தில் இரு சக்கர வாகனங்களுக்கு புஃல் டேங்க் பெட்ரோல் போடுவதைத் தவிர்க்கவும். காரணம் வெயிலின் தாக்கத்தால் பெட்ரோல் ஆவியாகும். அப்போது டேங்க் முழுவதும் நிரம்பி இருந்தால் காற்று சுழற்சிக்கு இடமில்லாமல் டேங்க் சூடாகி டேங்க் வெடிக்கும் அபாயம் உண்டு. எனவே கோடையில் டேங்க் நிறைய பெட்ரோல் போடுவது நல்லதல்ல.

✔ மேலும், பெட்ரோலை டேங்க் முழுவதும் நிரப்பும்போது டேங்க்கின் உள்ளே காற்று இருக்காது. காற்று இல்லாத காரணத்தால் வெப்பம் அதிகமாகி பெட்ரோல் ஆவியாக ஆரம்பிக்கும். இதனால் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் வரை ஆவியாகி வீணாகிவிட வாய்ப்பு இருக்கிறது. பெட்ரோல் டாங்க்கின் பாதி அளவுக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டால் இந்த ஆவியாதலைத் தவிர்க்கலாம்.

✔ டயர்களில் காற்றழுத்தத்தை சரியான அளவில் பராமரிக்க வேண்டும். அளவுக்கு அதிகமாக காற்றழுத்தம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

✔ முடிந்த வரை டயர்களில் நைட்ரஜன் வாயுவை (Nitrogen Air) நிரப்புவது நல்லது. ஏனென்றால் சாதாரண காற்று வெப்பத்தினால் விரிவடையும் போது டயர் வெடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கோடைக்காத்தில் டயர்களில் நைட்ரஜன் காற்று நிரப்புவது நல்லது.

✔ கோடையில் அதிகமாக தேய்ந்த நிலையில் இருக்கும் டயர்களை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். முடிந்த வரை முன் பக்க டயர்கள் அதிக தேய்மானம் இல்லாமல் நல்ல நிலையில் உள்ளதைப் பயன்படுத்தவும், அதோடு கோடைக்காலத்தில் ரீ பில்ட் செய்த டயர்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

✔ கோடைக் காலத்தில் அதிகமாக பஞ்சர் போடப்பட்ட டியூப்களை பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. வெப்பத்தின் காரணமாக பஞ்சர் போடப்பட்ட இடங்களில் இருந்து காற்று வெளியேற வாய்ப்பு உள்ளது.

✔ அதிக தூரம் பயணிக்கும் போது, தொடர்ந்து பயணிக்காமல் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை வாகனத்தை நிறுத்தி டயரின் வெப்பம் தணிந்த பின் பயணத்தைத் தொடர்வது நல்லது.

கார்களை பராமரிக்க சில டிப்ஸ் !

✔ காரின் மதிப்பில் பெரும்பங்கு வகிப்பது பெயிண்ட்டும், அதன் பளபளப்பும்தான். ஆனால், இன்று பலர் காரை சாலையிலேயே நிறுத்திவைப்பதால், சூரிய ஒளி, தூசி போன்றவற்றால் பெயிண்ட்டின் பளபளப்பு குறையும் என்பதோடு, நாள் ஆக ஆக பெயிண்ட் கொஞ்சம் கொஞ்சமாக அதன் தரத்தை இழந்துவிடும். சிலவேளைகளில் பெயிண்ட் உரிந்துவிடும் அபாயமும் இருக்கிறது. எனவே, தரமான கார் கவரை வாங்கி மூடி வைப்பதுடன், சிரமம் பாராமல் பகலில் நிழலான இடத்தில் நிறுத்தி வைப்பதும் அவசியம்.

✔ கார் ஜன்னல்கள் மூடிய நிலையில் வெயிலில் நிறுத்தியிருக்கும்போது உட்புறத்தில் அபரிமிதமான வெப்பம் உண்டாகும். இதனால், டேஷ்போர்டு, இருக்கைகள், கண்ணாடிகளில் பாதிப்பு ஏற்படும். மேலும், காரின் தொழில்நுட்பங்களின் செயல்பாடுகளிலும் மாறுதல்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதற்கு சன் ஸ்கீரீன் வாங்கி ஜன்னல் மற்றும் விண்ட் ஸ்கிரீனில் வாங்கி பொருத்துவதும், தெர்மாகூல் அட்டையை உட்புறத்தில் மறைவாக வைப்பதும் பயன்தரும்.

✔ கோடை காலத்தில் வழக்கத்தைவிட இன்ஜின் விரைவாக சூடாகும். மேலும், நீண்ட நேர பயணங்களின்போது அதிகப்படியான சூடு காரணமாக, இன்ஜினில் பழுதும், இதர பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.

✔ பேட்டரியின் மின் முனைகள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துவிடவும். துரு பிடித்திருந்தால், அதனை சுத்தப்படுத்திவிடுவதுடன், ஒயரிங் சரியாக உள்ளதா என்பதையும் செக்கப் செய்யவும். பழைய கார்களில் பேட்டரி சரியில்லையெனில், மாற்றிவிடுங்கள்.

No comments:

Post a Comment