Wednesday 6 April 2016

டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் மற்றும் டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி

1. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பிறந்த ஆண்டு - 1883

2. மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் பெற்றோர் - கிரு~;ணசாமி, சின்னம்மாள்

3. தமிழகத்தைச் சேர்ந்த ஓர் பெண் சமூக சீர்திருத்தவாதியாகத் திகழ்ந்தவர் - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

4. முன்னாள் தேவதாசி மற்றும் திராவிட இயக்கத்தைச் சார்ந்த அரசியல் செயல்களில் ஈடுபட்டவர் - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

5. சென்னை மாகாணத்தில் தேவதாசி முறையை ஒழிக்கப் பாடுபட்டவர் - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

6. 1936-ல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் வெளிவந்த சுயசரிதப் புதினம் எது -தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்

7. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் சேர்ந்த ஆண்டு - 1925

8. 1930-ல் சென்னை மாகாணத்தில் தேவதாசிமுறை ஒழிப்பை சட்டமாகக் கொண்டுவர டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி அவருக்குத் துணை நின்றவர் - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

9. 1937 முதல் 1940 வரை நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டவர் - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

10. சி.என்.அண்ணாதுரை ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளராக இருந்தவர் - மூவலூர் ராமாமிர்தம் அம்மையார்

11. தமிழக அரசு மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் நினைவாக ஏற்படுத்திய சமூகநலத் திட்டம் - திருமண நிதியுதவித் திட்டம்

12. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக, எந்த ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார் - நவம்பர், 1938

13. அறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்தின் அன்னிபெசன்ட் எனப் புகழப்பட்டவர் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

14. பெண் உரிமைக்காக பாடுபட்ட விடிவெள்ளியாக திகழ்ந்தவர் - மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

15. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் இறந்த ஆண்டு - 1962

16. டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி பிறந்த ஆண்டு - ஜுலை, 1886

17. டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டியின் பெற்றோர் - நாராயணசாமி, சந்திரம்மாள்

18. இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றவர் -டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி

19. சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையைப் பெற்றவர் -டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி

20. சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றவர் -டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி

21. இந்தியாவில் ஒரு முன்னோடிப் பெண் மருத்துவர் - டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி

22. 1912-ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றியவர் - டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி

No comments:

Post a Comment