Wednesday 6 April 2016

குருவாரம் இன்று 7-4-2016 வியாழக்கிழமை நாளில்...அமாவாசை!  வருவது சிறப்பு.       

குருவாரம் இன்று 7-4-2016 வியாழக்கிழமை நாளில்...அமாவாசை!  வருவது சிறப்பு.            

பித்ருக்களை வணங்குவதும் ஆராதிப்பதும் அவர்களை மகிழ்விக்கும். முன்னோர்களின் ஆசி கிடைத்துவிட்டால், இன்று இப்போது இந்தப் பிறவியில் நாம் நம் கடமையைச் செய்தவர்களாவோம். நம் கடமை பித்ருவை வணங்குவதுதான்! மாதாபிதா குருவெனில்... நம் மூதாதையரும் நமக்கு குருவே.

அதனால்தான் ஆதிகாலத்தில்,.ரிஷிகளைக் கொண்டு கோத்திரம் உருவாக்கினார்கள். அதனால்தான், இன்னாரின் பேரன், இன்னாரின் மகன் என அடையாளப்படுத்தி, வம்சாவளியை  உண்டுபண்ணினார்கள். அதுமட்டுமா... அமாவாசை என்பது முன்னோர்களுக்கான நாள். அவர்களை ஆராதித்து, நமஸ்கரித்து பூஜிக்கவேண்டிய நன்னாள். மேலும் குருவாரம் எனப்படும் வியாழனில், அமாவாசையும் வருவது சிறப்பு.

எனவே அமாவாசையில் முன்னோர்களை வணங்குவோம். குரு பகவானைப் பிரார்த்திப்போம். முக்கியமாக, குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை, போற்றி மகிழ்வோம். குரு தட்சிணாமூர்த்தியை, குரு சொரூப சிவனை வழிபடுவதும் பலப்படுத்தும். வளப்படுத்தும்!

No comments:

Post a Comment