Thursday 21 April 2016

22-04-2016 இன்றைய வரலாற்றுச் சுவடுகள்

22-04-2016 இன்றைய வரலாற்றுச் சுவடுகள்

பூமி தினம்

  ☘ பூமி தினமானது ஆண்டு தோறும் ஏப்ரல் 22 ஆம் தேதியன்று பூமியின் சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, அச்சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கத்தோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது. 1969ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் கலந்து கொண்டவர்களுள் ஒருவரான ஜான் மெக்கானெல் என்பவர் உலக அமைதிக்காகக் குரல்கொடுத்தார்.

☘ மனிதரும் பிற உயிரினங்களும் வாழ்கின்ற பூமியின் அழகைச் சிறப்பிக்கவும், பூமியின் இயற்கைச் சூழலைக் குலைத்து மாசுபடுத்தாமல் காக்கவும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், ஆண்டுதோறும் புவி நாள் என்றொரு நாளைக் கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

☘ அதே சமயத்தில், ஐக்கிய அமெரிக்காவில் சுற்றுச்சூழலியல் நிபுணரும், மேலவை உறுப்பினருமான கேலார்ட் நெல்சன் என்பவர் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்ப 1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்த அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று 20 மில்லியன் மக்கள் இந்நிகழ்வில் பங்கெடுத்தார்கள். அன்றிலிருந்து ஆண்டுதோறும் பூமி தினம் 175 நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

விளாதிமிர் லெனின்

விளாதிமிர் லெனின் ஏப்ரல் 22, 1870இல் ரஷ்யாவில் உள்ள சிம்பெர்ஸ்கில் பிறந்தார். இவர் ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சியை நிறுவிய தலைவர்களில் ஒருவர் ஆவார். கார்ல் மார்க்ஸின் பொதுவுடமை கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அரசுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டதாக சைபீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டார். 1917ம் ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட புரட்சியின் விளைவாக லெனின், ர~;யாவின் முதல் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கார்ல் மார்க்சின் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதால் நிலம், பொருள், பணம், உழைப்பு, மனிதன் என எல்லாமே அரசின் உடைமையானது. லெனின் தனது 54வது வயதில் 1924 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி உடல் நல குறைவால் மரணமடைந்தார்.

1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி தீண்டாமை ஒழிப்பு போரில் பெரியார் கைது செய்யப்பட்டார்.

1970 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி முதலாவது பூமி நாள் கொண்டாடப்பட்டது.

அமெரிக்காவின் 37வது அதிபரான ரிச்சர்ட் நிக்ஸன் 1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி காலமானார்.

No comments:

Post a Comment