Thursday 7 April 2016

08-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்

08-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் மங்கள் பாண்டே

1857இல் சிப்பாய் கலகத்தை ஆரம்பிக்க முக்கிய காரணமாக இருந்த மங்கள் பாண்டே 1827ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி பிறந்தார். உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த மங்கள் பாண்டே, இந்திய கிழக்கிந்திய கம்பெனியின் இராணுவப் படையில் சிப்பாயாகப் பணி புரிந்தார். 22வது வயதில் இருந்தே கிழக்கிந்தியக் கம்பெனியின் இராணுவத்தில் இருந்த இவர், இராணுவத்தின் 34வது பிரிவு என்ற சிறப்புப் படையில் ஒரு அங்கமானார்.

கல்கத்தாவின் பராக்பூர் நகரில் மார்ச் 29, 1857ஆம் ஆண்டு, ஆங்கிலேயர்கள் மீதான வெறுப்பில், கண்ணில் படும் ஆங்கிலேயர்கள் அனைவரையும், சுட்டுத் தள்ளுவேன் என்று சூளுரைத்து கையில் துப்பாக்கி ஏந்திச் சென்றார். அதே வேளை இந்திய சிப்பாய்கள் பலர் ஆங்கிலேய ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழுந்தனர். இந்த வி~யம் கிழக்கிந்திய கம்பெனியின் லெப்டினண்ட் போ என்பவனது காதுகளை எட்ட, சிப்பாய்களை அடக்க அவ்விடத்திற்கு குதிரையில் விரைந்தான்.

துப்பாக்கியுடன் திரிந்த மங்கள் பாண்டேவைக் கண்டதும் லெப்டினண்ட் போ சுட ஆரம்பித்தார். இவர்கள் இருவருக்கு இடையேயான மோதலில், பாண்டே சிறை பிடிக்கப்பட்டார். இதனை அடுத்து மங்கள் பாண்டே விசாரணை செய்யப்பட்டு 1857 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். தூக்கிலிடப்பட்டபோது மங்கள் பாண்டேவின் வயது 29 ஆகும்.

பங்கிம் சந்திர சட்டர்ஜி

வந்தே மாதரம் பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டர்ஜி அவர்கள் 1838 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி பிறந்தார். இவர் ஒரு வங்காள எழுத்தாளரும், கவிஞரும் மற்றும் இதழியலாளருமாவார். இவர் எழுதிய ஆனந்த மடம் என்ற நூலில் இடம்பெற்ற வந்தே மாதரம் என்ற பாடல் இந்தியாவின் தேசியப் பாடலாக உள்ளது. இந்திய தேசிய இயக்கத்தில் பங்கு கொண்ட இவர் 13 புதினங்கள் உட்பட பல நூல்களை வங்காள மொழியில் எழுதியுள்ளார். இந்தியாவின் பிற மொழிகள் மற்றும் ஆங்கில மொழி நூல்களையும் இவர் மொழிபெயர்த்துள்ளார். உடல் நலக் கோளாறு காரணமாக இவர் தனது பணியிலிருந்து 1891 ஆம் ஆண்டு ஒய்வு பெற்றார். அதன் பின்னர் ஆன்மீகத்தில் ஈடுபட்டார். 1894ஆம் ஆண்டு ஏப்ரல் 8ஆம் தேதி தனது 56 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

சர்வதேச ரோமானிய தினம்

சர்வதேச ரோமானிய தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. ரோமானிய மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக இந்நாள் கொண்டாடப்படுகிறது.

1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி பஞ்சாபில் நுழையக்கூடாதென்ற தடையை மீறியதால் மகாத்மா காந்தி டில்லி செல்லும் வழியில் கைது செய்யப்பட்டு பம்பாய்க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று இந்தியாவும், பாகிஸ்தானும் லியாக்கட் நேரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

1867 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று உலகின் முதலாவது எக்ஸ்போ கண்காட்சி பாரிஸ் நகரில் ஆரம்பமானது.

ஐக்கிய நாடுகள் அவையின் ஏழாவது செயலாளராக இருந்தவர் கோபி அன்னான் அவர்கள் 1938 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் தேதி பிறந்தார்.

No comments:

Post a Comment