Sunday 27 March 2016

ஆயில்யம் நட்சத்திரம் குறிப்பு.!

ஆயில்யம் நட்சத்திரம்

இருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் ஒன்பதாவது இடத்தை பெறுவது ஆயில்யம் நட்சத்திரமாகும். இதன் அதிபதி புதன் பகவான் ஆவார். மேலும், இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இந்நட்சத்திரம் கடக ராசிக்குரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் டி, டு, டே, டோ, மெ, மை ஆகியவை ஆகும்.

நட்சத்திரத்தின் பொது பலன்கள் :

ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வேலை செய்யும் இடத்தில் நீதி, நேர்மை தவறாமல் நாணயத்துடன் நடப்பார்கள். மனசாட்சிக்கு மீறி எந்த பணியிலும் ஈடுபடமாட்டார்கள். குறிப்பாக கெட்டவர்களுக்கு துணை போக மாட்டார்கள். அதிக மன தைரியம் கொண்டவர்கள். இவர்களில் பலர் கல்லூரிகளில் பேராசியர்களாகவும், ஆய்வு கூடத்தில் அறிவியல் அறிஞர்களாகவும் இருப்பார்கள். எதிர் காலத்திற்கான திட்டங்களை தெளிவாக வரையறுத்துக் கொண்டிருப்பார்கள். தங்களது முயற்சி வெற்றியடைய கடுமையான உழைப்பை வெளிப்படுத்த தயங்கமாட்டார்கள். மற்றவர்களை போல நடித்து காட்டுவதிலும், பழமொழிகளை உதாரணமாக கொண்டு பேசுவதிலும் வல்லவர்கள். 40 முதல் 47 வயதுக்குள் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள். பெயர், புகழ், அந்தஸ்து யாவும் பெருகும். அதிகாரமிக்க பதவிகளிலும் அமர்வார்கள். பலரை நிர்வாகிக்கும் ஆற்றல், ஆலோசனை கூற கூடிய வல்லமையும் உண்டாகும்.

நட்சத்திரத்தின் திசை பலன்கள் :
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக புதன் திசை மொத்தம் 17 வருடங்கள் நடைபெறும். புதனின் பலமிருந்தால் கல்வியில் உயர்வு, நல்ல அறிவாற்றல், பேச்சாற்றல் ஆகியவை உண்டாகும். புதன் பலமில்லாமல் இருந்தால் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், கல்வியில் மந்த நிலையை கொடுக்கும்.

இரண்டாவதாக வரும் கேது திசையானது மொத்தம் 7 வருடங்கள் நடைபெறும். கேது திசை காலங்களில் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள், நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள், கல்வியில் மந்த நிலை ஆகியவை உண்டாகும்.

மூன்றாவதாக வரும் சுக்கிர திசை இருபது வருடங்கள் நடைபெறும். இத்திசை காலங்களில் சுக்கிரன் பலம் பெற்று அமைந்திருந்தால் எல்லா வகையிலும் மேன்மை, செல்வாக்கு சேரும் வாய்ப்பு, குடும்பத்தில் சுபிட்சம் ஏற்படும்.

சூரியன் 6 வருடம், சந்திரன் 10 வருடம், செவ்வாய் 7 வருடம் என நடைபெறும். இத்திசை காலங்களில் கிரகங்கள் பலம் பெற்று அமைந்திருந்தால் மேன்மையான பலன்களை பெற முடியும். பலமிழந்திருந்தால் அதற்கேற்றபடி நன்மை தீமை கலந்த பலன்களை தான் பெற இயலும்.
வழிபாட்டு ஸ்தலங்கள் :
கும்பகோணத்திற்கு வடமேற்கில் உள்ள புஜாங்க சயனராக காட்சி தரும் ஸ்ரீராமர் ஸ்தலம்.

திருவாரூரில் உள்ள அக்னீஸ்வரர் அருள் பாலிக்கும் ஸ்தலம்.

நாகபட்டினத்திற்கு வடக்கே உள்ள நாகநாதர், நாகவல்லி உள்ள ஸ்தலம்.

புத்திர தோஷம் நீங்க..!

உங்கள் நட்சத்திரமும் அமாவாசையும் கூடும் ஒருநாளில் கணவர் - மனைவி இருவரும் இராமேஸ்வரம் கடலில் 21 முறை மூழ்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒம்பவசிவ என்று 10 முறை செல்ல வேண்டும். பின்பு கோவில் பிரகாரத்தில் உள்ள 21 தீர்த்தத்திலும் மூழ்கி சுவாமி தரிசனம் செய்தால் புத்திர தோஷம் நீங்கும்.

No comments:

Post a Comment