Thursday 12 May 2016

எழுதுகோலின் வரலாறு...



எழுதுகோலின் வரலாறு...

எழுதுகோல் என்பது எழுத உதவும் ஒரு கருவி ஆகும். இதையே ஆங்கிலத்தில் பேனா (Pen) என்று கூறுவர். நம் மனதில் பதியும் எண்ணங்களை எழுத தேவைப்படுவது எழுதுகோல். அத்தகைய எழுதுகோலின் வரலாற்றை பற்றி தெரிந்து கொள்வோம்.

எழுதுகோலில் பலவகைகள் உண்டு. அவை
உருளைப்பந்து எழுதுகோல் (Rollerball pen)
ஊற்று எழுதுகோல் (Fountain Pen)
நனை எழுதுகோல் (Dip Pen)
மைப்பேனா (Ball Point)

தற்கால ஈராக் எனப்படும் மெசோப்பொட்டேமியாவில் கி.மு. 2900-வில் ஒரு பக்கம் கூராக்கிய முனை கொண்ட குச்சியால்> களிமண் பலகைகளில் எழுதினர். பின்பு முனையை முக்கோண வடிவில் சீவி மேம்படுத்தினர். இதுவே பேனாக்களின் முன்னோடி ஆகும். இது உருவாக்கிய எழுத்து ஆப்பெழுத்து எனப் பெற்றது.

எகிப்தியர் எழுத்துகளை முதலில் கல்லில் செதுக்கி எழுதினர். பிற்காலத்தில்பேப்பரஸ் என்ற செடியின் தண்டுகளிலிருந்து பேப்பர் தயாரித்து அதில் எழுதினர். ஏறத்தாழ 300-400 ஆண்டுகளுக்கும் முன் வரை கி.பி. 17-ம் நூற்றாண்டு வரைஇந்த நாணல்-போன்ற எழுதுகோல்கள் இருந்தன. ஒரு பக்கம் பிர் போல் நசுக்கிய முனை உடைய குச்சியை மையில் தோய்த்துப் பயன்படுத்தினர். அந்த மையை புகைக்கரிநீர்ஒரு விதப் பசை மூலம் கலந்து செய்தனர்.

பல நாடுகளில் செம்பில் வரையும் பழக்கம் பரவியபோது எழுத்தாணி என்னும் இரும்புக் கருவி உதவிற்று. தமிழகத்தில் ஓலைச் சுவடிகளில் எழுத எழுத்தாணியைத் தான் உபயோகித்தனர்.

பறவைகளின் இறகாகிய தூவல் எழுதுகோல் இசுரேல் - பாலசுத்தீனத்தில்மேற்குக் கரை என்னும் பகுதிக்கு அருகே உள்ள கும்ரான் என்னும் இடத்தில் இருந்து கிடைத்த செத்தக் கடல் சுருள்களால் எழுதப் பயன்படுத்தப்பட்டன. ஐரோப்பாவில் இப்பழக்கம் கி.பி.700-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

மையில் தோய்த்து எழுதுகிற எஃகு நிப்  (nib) கொண்ட பேனா 18-ம் நூற்றாண்டில் பயன்பாட்டுக்கு வந்தது. இது மூன்று பாகங்கள் உடையது.

1. அடிப்பகுதி: ஒரு நீளக்குழாய். இதில் மை ஊற்றி வைத்துக் கொள்ளலாம்.
2. நிப் செருகிய சிறு பகுதி: இதைத் திருகி மை ஊற்றிய குழாயை மூடிவிடலாம்.
3. மேல்மூடி: நிப்புக்குப் பாதுகாப்பு. திருகி மூடவும் திறக்கவும் முடியும்.

ஊற்று எழுதுகோல் என்பது காகிதத்தில் எழுதப் பயன்படும் ஓர் எழுதுகோல் ஆகும். இதன் முன்னோடி எழுதுகோல் நனை எழுதுகோல் ஆகும். நனை எழுதுகோலில் எழுத அடிக்கடி எழுதுகோலை மையில் நனைக்க வேண்டி இருந்தது. அதனால் 1884-ம் ஆண்டில் எல். . வாட்டர்மேன் என்ற அமெரிக்கர் இந்தப் புதிய முறையைக் கண்டுபிடித்தார்.

அங்கேரி நாட்டுப் பத்திரிகையாளர்லஸ்லோ பிரோ என்பவர் செய்தித் தாள்களை அச்சிடும் மைபேனா மையை விட விரைவாக உலர்வதைக் கவனித்தார். பின் அவர் அந்தக் கன மை நிப் வழியே சரளமாய் வராததால் எழுத இயலவில்லை. அதனால் நிப்புக்குப் பதிலாய் பால்பேரிங்கைப் பயன்படுத்தினார். இதுவே பால்பாயிண்ட் பேனா ஆகும். உலகம் முழுவதும் பரவிப் பயன்பாட்டில் உள்ள இதை 1938-ல் உருவாக்கி உரிமை பெற்றார்.

No comments:

Post a Comment