Sunday 1 May 2016

முதுகு வலியும் மருத்துவமும்

முதுகு வலியும் மருத்துவமும்

முதுகு வலிக்கு முக்கிய காரணம் முதுகெலும்பு பாதிப்புகள். அதிகபட்ச எடையை முதுகெலும்பின் கீழ்ப்பகுதி தான் சுமக்கிறது. எனவே கீழ்பகுதி எலும்பு தசை, தசை நாண்கள் பாதிக்கப்பட்டால் வலி உண்டாகும். முதுகு வலி அனைவரையும், குறிப்பாக 45லிருந்த 65 வயதுகளில் உள்ளவரை தாக்கும். முதுகு வலியை எளிய முறையில் நாம் குணபடுத்த இங்கே பார்ப்போம்.

உடற்பயிற்சி :

☆ கீழ் முதுகு வலியால் அவதிப்படுவோர், மூட்டு வலிகள் இல்லாத பட்சத்தில் தரையில் மண்டியிட்டு அவ்வப்போது உட்காருங்கள், எப்போதும் இப்படி உட்காருவது சிறந்த முறையாகும். இப்படி உட்கார்ந்த நிலையில், உங்கள் உள்ளங்கயை தரையில் வைத்து நேராக அமர்ந்து உங்கள் முதுகு தண்டை உணருங்கள்.

☆ அடுத்த பயிற்சி, நாற்காலியில் உட்கார்ந்த நிலையில், மூட்டு மற்றும் கால்களை நேராக வைத்தப்படி கீழே குனிந்து உங்கள் கால் விரல்களை தொட வேண்டும். 20 முறை இதே வாக்கில் இருக்கவும். நாள்தோறும் 2 நிமிடங்கள் வரை செய்யலாம்.

☆ நெடுநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பணி செய்கின்ற போது முதுகெலும்பு அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறையாவது இருக்கையை விட்டு கொஞ்ச நேரம் நின்று சிறிது தூரம் நடந்து பின்னர் வந்து அமருங்கள்.

☆ நீண்ட நடைப்பயிற்சியில் ஈடுபடுங்கள். உடல் எடையை இயன்ற அளவு கட்டுக்குள் வையுங்கள். சூடான நல்லெண்ணை மற்றும் உப்பு சேர்த்து - மசாஜ் செய்தால் வலி குறையும். மசாஜ் அழுத்தி செய்யாமல், மிதமாக செய்யவும்.

உணவு முறை:

☆ பூண்டு, இஞ்சி, மஞ்சள் போன்ற நம் உணவுகளில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களை சேர்க்க மறக்காதீர்கள்.

☆ கொழுப்பு இல்லாத இறைச்சி வகைகள், மீன், பழங்கள், பேரிச்சை, பச்சை காய்கறிகளை உணவின் முக்கிய பங்காக வைத்து கொள்ளுங்கள்.

☆ கால்~pயம் எலும்பிற்கு முக்கிய தேவை, உணவில் உள்ள கால்~pயத்தை உடல் தக்கவைத்து கொள்ள வைட்டமின் டி அத்தியாவசியம். வைட்டமின் டி இல்லாமல், நீங்கள் எடுத்துகொள்ளும் கால்~pயம் உணவுகளை உடல் ஏற்காது.

☆ அதே போல வைட்டமின் பி 12, எலும்பு மஜ்ஜையின் வாழ்நாள் உறுதி செய்ய இந்த வைட்டமின் முக்கியம் வாய்ந்தவை. ஈரல், மீன், பாலாடையில் வைட்டமின் பி 12 அதிகம். இதை தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியவை எலும்பு தேய்மானத்தை தடுக்க கூடிய வல்லமை பெற்றவை.

☆ சில ஆரோக்கிய பழக்கவழக்கங்களை மேற்கொள்ளும் போது உடலுக்கு சத்தும் கிடைக்கும். கொய்யாப் பழத்தை சாப்பிட எலும்புகளும் பலம் பெறும். முருங்கை வேரில் இருந்து சாறு எடுத்து அதில் சம அளவு பால் சேர்த்துச் சாப்பிட்டால் உள் உறுப்புகளில் உள்ள வீக்கம், முதுகு வலி குணமாகும்.

☆ குளிர் உணவு ஃ பானங்களை தவிர்க்கவும். ஐஸ்கீரிம், குளிர்பானங்களை தவிர்க்கவும். பழைய உணவுகளை தவிர்க்கவும்.

☆ கத்தரிக்காய், முளைகட்டிய பீன்ஸ், வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசி, வறுத்த உணவு, கடல் உணவு, இனிப்புகள், தயிர், ஊறுகாய் - இவற்றை தவிர்க்கவும்.

☆ நல்ல உணவு அதனுடன் தேவையான சில மருத்துவ ஆலோசனையின்படி மருந்துகள் எடுத்துக் கொள்வது. புளிச்சாறெடுத்து, உப்பு போட்டு கொதிக்க விட்டு, களிம்பு போல் தயாரித்து தடவலாம். இந்த முறையினை தவறாமல் தொடர்ந்துவர முதுகுவலியினை குறைக்க முடியும்.

No comments:

Post a Comment