Wednesday 4 May 2016

குளிர்ச்சியை தரும் மோர் !

குளிர்ச்சியை தரும் மோர் !

கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதனால் ஏற்படும் நோய்களில் இருந்து விடுபட மோர் ஒரு சிறந்த நிவாரணி எனலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் தன்மை கொண்டதும், சோர்வை போக்க வல்லதும், தோல் நோய்களில் இருந்து பாதுகாக்க கூடியதுமான மோரின் மருத்துவ குணங்கள், மோரை பயன்படுத்தி நீராகாரம் தயாரிக்கலாம்.

வயிற்றை குளிர்ச்சியடையச் செய்ய: நன்கு காரசாரமான உணவை உட்கொண்ட பின்னர் வயிறு எரிய ஆரம்பமாகும். அப்படி வயிறு எரியும் போது, ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வயிறு குளிர்ச்சியடையும்.

கொழுப்பைக் கரைக்கும்: மதியம் நன்கு வயிறு நிறைய சாப்பிட்டுள்ளீர்களா? அசௌகரியமாக உணர்கிறீர்களா அப்படியெனில் ஒரு டம்ளர் மோர் குடியுங்கள். இது வயிற்றை சுற்றி எண்ணெய் மற்றும் நெய்யினால் ஏற்பட்ட படலத்தை நீக்குவதோடு, கொழுப்பையும் கரைக்கும்.

உடல் வறட்சியைத் தடுக்கும்: மோரானது உப்பு, தண்ணீர், தயிர் மற்றும் சில மசாலா பொருட்களை சேர்த்து செய்யப்படுவதாகும். இதில் எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் தண்ணீர் அதிகமாக இருப்பதால், இதனை கோடையில் குடித்து வந்தால் உடல் வறட்சி அடைவதைத் தடுக்கலாம்.

பி காம்ப்ளக்ஸ் மற்றும் மற்ற வைட்டமின்கள்: மோரில் வைட்டமின்களான வைட்டமின் பி காம்ப்ளர்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது. தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், வைட்டமின் குறைபாடு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் : ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷ்ன் வெளியிட்ட அறிக்கையின் படி, மோரில் இரத்த அழுத்ததைக் குறைக்கும் தனித்துவமான பயோஆக்டிவ் புரோட்டீன், ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-கேன்சர் பொருள் நிறைந்துள்ளதாக தெரிவிக்கிறது. மேலும் நிபுணர்களும் தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்கின்றனர்.

No comments:

Post a Comment