Wednesday 4 May 2016

கோடையில் உடலை தணிக்கும் நன்னாரி!

கோடையில் உடலை தணிக்கும் நன்னாரி!

  கோடை வந்ததும், நம் உணவில் இடம்பிடிக்கும் சில பொருள்களில் நன்னாரியும் ஒன்று. நன்னாரி சர்பத் அருந்தியவர்ளுக்குத்தான் தெரியும், அதன் சுவையும் இதமும்! அடிக்கும் கொடூரமான வெப்பத்தில் இருந்து நம்மைக் காத்து, உடலுக்குக் குளிர்ச்சி தரும் ஆற்றல் நன்னாரிக்கு உண்டு.

✩ நன்னாரி வேர் இனிப்பும், சிறு கசப்பும் சேர்ந்த சுவையானது. குளிர்ச்சியான தன்மை கொண்டது.

✩ வியர்வை, சிறுநீர் ஆகியவற்றைப் பெருக்கும். தாது வெப்பத்தை அகற்றும். உடலைத் தேற்றும். உள் உறுப்புகளின் புண்களை ஆற்றும். வண்டு கடி, நீரழிவு, கிரந்தி, காய்ச்சல் போன்றவற்றையும் குணமாக்கும்.

✩ நன்னாரி கொடி வகையைச் சார்ந்தது. எதிர் அடுக்கில் குறுக்கு மறுக்காக அமைந்த நீளமான அகலத்தில் குறுகிய இலைகளைக் கொண்டது. கம்பி போன்ற வளைந்து படரும்.

✩ நன்னாரி மலர்கள், மஞ்சள் அல்லது கருஞ்சிவப்பு நிறமானவை. நன்னாரி செடிச்சாறு பால் போன்றது. நன்னாரி வேர்கள் நறுமணமுள்ளவை. மருத்துவத்தில் பயன்படுபவை.

✩ பசுமையான நன்னாரி வேரை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து, நன்கு காய்ச்சிய பசும்பாலுடன் கலந்து, தினமும் காலை, மாலை என இருவேளை உட்கொள்ளலாம். இளநரை, பித்த நரை வருவதைத் தடுத்து, உ~;ணத்தால் உண்டாகும் வறட்டு இருமலையும் குணமாக்கும்.

✩ ஒரு மண் பானையில் நீர் நிரப்பி, அதில் உலர்ந்த நன்னாரி வேரைப் போட்டு வைக்கலாம். அந்த நீரைக் குடித்து வந்தால் உடல் உ~;ணம் தணிந்து குளிர்ச்சி பெறும்.

✩ வெம்மையால் ஏற்படும் உடல்சூடு, தலைவலி, வேர்க்குரு, வேனல்கட்டி, அதிக தாகம், நாவறட்சி போன்றவற்றைக் குணப்படுத்துவதில் நன்னாரி பெரும்பங்கு வகிக்கிறது

✩ நன்னாரி வேரை நீர் விட்டு அரைத்து விழுதாக்கிக் கொள்ள வேண்டும். அந்த விழுதை வீக்கம், மூட்டுவலி, வெப்பக்கட்டி, புண் இருக்கும் இடங்களில் பற்றுபோட்டால் நோய் நீங்கி நிவாரணம் பெறலாம்.

நன்னாரி சர்பத் செய்வது எப்படி?

தேவையானவை :

நன்னாரி வேர் - 1 சிறிய கொத்து

சர்க்கரை - 200 கிராம்

சிட்ரிக் ஆசிட் - 5 கிராம்,

சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்

மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்.

செய்முறை :

✩ தண்ணீரில் சர்க்கரை சேர்த்துக் கொதிக்க விடவும். கொதி வந்ததும், சிட்ரிக் ஆசிட் சேர்த்து, அடுப்பை அணைத்து, ஆற விடவும். ஆறியதும் சுக்குப் பொடி, மிளகுத் தூள் சேர்க்கவும். நன்னாரி வேரை நன்கு அலசி, பத்து நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைக்கவும். மறுபடி அலசி, வேர் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் விட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டுக் கொதிக்க விடவும்.

✩ அது திக்காக மாறியதும், அடுப்பை அணைத்து, வடிகட்டி, சர்க்கரைக் கரைசலுடன் சேர்த்துக் கிளறி, பாட்டிலில் நிரப்பி வைக்கவும். தேவைப்படும் போது, இந்த சிரப்பில் கால் பங்கு எடுத்து, முக்கால் பங்கு குளிர்ந்த தண்ணீர் விட்டுப் பரிமாறவும்.

No comments:

Post a Comment