Friday 13 May 2016

பப்பாளி மரம்


பப்பாளி மரம் :
பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். இனிப்பாக இருக்கும். வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. இயற்கையாகவே வி~க்கிருமிகளை கொல்லும் தன்மை பப்பாளிக்கு உள்ளது.

பப்பாளி வளரிடம் :
பப்பாளி உலகின் வெப்ப மற்றும் மிதவெப்ப நாடுகளில் ஏராளமாக வளர்கிறது. இந்தியா முழுவதும் பரவலாகத் தோட்டப் பயிராக வளர்க்கப்படுகிறது.

பப்பாளியின் அமைப்பு :
மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. விதைகள் கசப்பாக இருக்கும். பார்ப்பதற்கு கரு மிளகு போன்று இருக்கும்.

பப்பாளியில் உள்ள சத்துகள் :
பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, போலிக்அமிலம், பொட்டாசியம், காப்பர், பாஸ்பரஸ், இரும்பு ,நார்ச்த்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன.

பப்பாளியின் மருத்துவப் பயன்கள் :
பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உடல் வளர்ச்சி துரிதமாகும்.

பப்பாளி பழத்தை சாப்பிட்டால் எலும்பு வளர்ச்சி சீராக இருக்கும்.

பப்பாளி பழத்தை சாப்பிட்டால் பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் நனைத்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூசினால் புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் குணமாகும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டால் கட்டிகள் உடையும்.

பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, வி~ம் இறங்கும்.

ஞாபக சக்தியை ஏற்படுத்தக்கூடிய தன்மை பப்பாளிக்கு உண்டு.

தோலில் உள்ள மருக்கள் மற்றும் கரும்புள்ளிகளைப் போக்குகிறது. இதன் விதைகளும் பூச்சிகளை அகற்றும் மருந்து தயாரிக்க பயன்படுகிறது.

பப்பாளி இலையின் மருத்துவப் பயன்கள் :
பப்பாளி இலையின் சாற்றை மலேரியா மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுகிறது.

பப்பாளி இலைச்சாறு அருந்துவதால் ரத்த தட்டு அணுக்கள் அதிகரிக்கிறது. கல்லீரல் பாதிப்பு நீங்கி, சீராக செயல்பட வைக்கிறது.

பப்பாளி இலைகளின் சாறு காய்ச்சலைப் போக்கும் மருந்தாக பயன்படுகிறது. இதய நோயைக் குணப்படுத்தவும் பயன்படுகிறது.

பப்பாளி காயின் பயன்கள் :
பப்பாளியின் காய்களில் இருந்து பப்பைன் என்ற புரதங்களை சிதைக்கும் நொதி, கைமோபப்பைன், மாலிக் அமிலம், பெக்டின் களிகள், புரதம், சர்க்கரை, க்ரிப்டோசாந்தின், வயலா சாந்தின், கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், தையமின், ரைபோபிளேவின், கார்ளப்பசமைன் போன்ற இரசாயனப் பொருட்கள் பிரித்தெடுக்கப்படுகிறது.

No comments:

Post a Comment