Thursday 12 May 2016

தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும்



தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் - உணவே மருந்து தொடர்பான செய்திகள் மற்றும்நோய் தீர்க்கும் மூலிகைகள் தொடர்பான செய்திகள்

1. மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் முதன்மையானது --------------------- ஆகும் -உணவு

2. தமிழர் மருத்துவத்தில் உணவு என்பது அனைத்து நோய்களையும் தீர்க்கக்கூடிய -------------------------- மருந்தாகக் கருதப்படுகிறது -சஞ்சீவி

3. திருக்குறளில் -------------------------------- என்னும் அதிகாரத்தில் உணவே மருந்தாகும் தன்மையைத் திருவள்ளுவர் தெளிவாக விளக்கியுள்ளார் - மருந்து

4. உண்ட உணவு> செரித்தபின்னரே மீண்டும் உண்ண வேண்டுமென ------------------------ கூறுகிறது - தமிழ் மருத்துவம்

5. நெஞ்சிலுள்ள சளியை நீக்குவது எது -மஞ்சள்

6. கொத்துமல்லி ----------------------- போக்கும் -பித்தம்

7. பசியின் கொடுமையைப் பசிப்பிணி என்னும் பாவி என்று-------------------------காப்பியம் கூறுகிறது - மணிமேகலைக் காப்பியம்

8. குளிர்ச்சி உண்டாக்கிக் குருதியைத் தூய்மைப்படுத்துவது எது - வெங்காயம்

9. மீதூண் விரும்பேல் என்று கூறியவர் -ஒளவையார்

10. நொறுக்குத் தீனி வயிற்றுக்குக் கேடு என்பது ------------------------ ஆகும் - பழமொழி

11. உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என ------------------------- நூல்கள் கூறுகின்றன -புறநானூறு> மணிமேகலை

12. கண் குளிர்ச்சியும் அறிவுத்தெளிவும் உண்டாக்குவது - நல்லெண்ணெய்

13. சீரகம் பூண்டு கலந்த மிளகு நீர்> சூட்டைத் தணித்து --------------------- அதிகரிக்கும் -செரிமான ஆற்றல்

14. உடலுக்கு வலுவூட்டவும் கழிவு அகலவும் --------------------- நல்லது - கீரை

15. உட்கொள்ளும் உணவில் புரதம்> கொழுப்பு> மாச்சத்து> கனிமங்கள்> நுண்ணூட்டச் சத்துகள் சேர்ந்தது ------------------------ ஆகும் -சமச்சீர் உணவு

16. துளசி இலைகளை நீரிலிட்டுக் கொதிக்க வைத்து ஆவிபிடித்தால் ---------------------- நோய் நீங்கும் - மார்புச்சளி> நீர்க்கோவை> தலைவலி

17. துளசி விதைகளைப் பொடி செய்து ஒன்று அல்லது இரண்டு கிராம் அளவு உண்டால் --------------------------- நோய் அகலும் - உடற்சூடு> நீரெரிச்சல்

18. கீழ்க்காய்நெல்லியின் வேறு பெயர்கள் -கீழாநெல்லி> கீழ்வாய்நெல்லி

19. மஞ்சட்காமாலைக்கு எளிய மருந்தாகப் பயன்படுவது - கீழாநெல்லி

20. கிழாநெல்லி இலைகளைக் கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டால் ----------------------- நோய்கள் நீங்கும் - சிறுநீர்த் தொடர்பான நோய்கள்

21. தூதுவளையின் இலைகளை நல்லெண்ணெயில் சமைத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டால் ------------------------------- அகலும் - சுவாசகாசம்

22. தூதுவளை மூலிகையை வள்ளலார் ------------------------ எனப் போற்றுகிறார் - ஞானப்பச்சிலை

23. குரல்வளத்தை மேம்படுத்தும்> வாழ்நாளை நீட்டிக்கும் மூலிகை - தூதுவளை

24. நச்சுக்கடிகளுக்கு நல்ல மருந்தாக விளங்கும் மூலிகைச் செடி - குப்பைமேனி

25. குப்பைமேனியின் இலைகளைக் காயவைத்துப் பொடியாக்கிப் பூசினால் ----------------------- குணமாகும் - படுக்கைப் புண்

No comments:

Post a Comment