Sunday 1 May 2016

இலக்கியம் - தேம்பாவணி

இன்று மே 01 அனைவருக்கும் இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்.!

இலக்கியம் - தேம்பாவணி

1. தேம்பாவணி என்பதன் பொருள் - வாடாத மாலை (தேம்பா + அணி), தேன்போன்ற பாக்களை அணியாக உடையது (தேன் + பா + அணி) என்றும் பொருள்படும்

2. தேம்பாவணி நூலின் ஆசிரியர் ----------- - வீரமாமுனிவர்

3. வீரமாமுனிவரின் இயற்பெயர் ----------------- - கான்ஸ்டாண்டின் ஜோசப் பெஸ்கி

4. நகை என்பதன் பொருள் - புன்னகை

5. வீரமாமுனிவர் ------------- நாட்டைச் சார்ந்தவர் - இத்தாலி

6. நிருபன் என்பதன் பொருள் - அரசன்

7. முகை என்பதன் பொருள் - மொட்டு

8. கான்ஸ்டாண்டின் என்னும் சொல்லுக்கு பொருள் - அஞ்சாதவன்

9. கோலமிட்டு என்பதனை பிரித்தெழுதுக - கோலம் + இட்டு

10. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி - சதுரகராதி

11. மேனி என்பதன் பொருள் - உடல்

12. திருக்குறளின் அறத்துப்பால் பொருட்பால் ஆகியவற்றை வீரமாமுனிவர் ------------- மொழியில் மொழிபெயர்த்துத் தந்தார் - இலத்தீன்;

13. மாலி என்பதன் பொருள் - சூரியன்

14. தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவர் - சூசைமாமுனிவர்

15. வெருவி என்பதன் பொருள் - அஞ்சி

16. தேம்பாவணியில் உள்ள காண்டங்களின் எண்ணிக்கை - மூன்று

17. ஓதை என்பதன் பொருள் - ஓசை

18. தேம்பாவணியில் உள்ள படலங்கள் ------------- - முப்பத்தாறு படலங்கள்

19. செல் என்பதன் பொருள் - மேகம்

20. தேம்பாவணி ------------- பாடல்கள் கொண்டது - 3615

21. அசனி என்பதன் பொருள் - இடி

22. தேம்பாவணி ------------ என அழைக்கப்படுகிறது - கிறித்தவச் சமயத்தாரின் கலைக்களஞ்சியம்

23. விளி என்பதன் பொருள் - சாவு

24. வீரமாமுனிவர் -------------- முதலிய நூல்களையும் இயற்றியுள்ளார்- திருக்காவலூர்க் கலம்பகம், கித்தேரியம்மாள் அம்மானை, வேதியர் ஒழுக்கம், பரமார்த்த குருகதை, செந்தமிழ் இலக்கணம், கொடுந்தமிழ் இலக்கணம், தொன்னூல் விளக்கம், சதுரகராதி

25. சிரம் என்பதன் பொருள் - தலை

26. வீரமாமுனிவரின் பெற்றோர் - கொண்டல் போபெஸ்கி - எலிசபெத்

27. வீரமாமுனிவர் தமிழ்நாட்டிற்கு வந்த ஆண்டு - 1710

28. உருமு என்பதன் பொருள் - இடி

29. வீரமாமுனிவர் ---------- ஆம் ஆண்டில் ----------- என்னும் இடத்தில் இயற்கையெய்தினார் - 1747, அம்பலக்காடு

30. வீரமாமுனிவர் வாழ்ந்த காலம் - 08.11.1680 முதல் 04.02.1747

No comments:

Post a Comment