Sunday 1 May 2016

இராசகோபாலாச்சாரி

இராசகோபாலாச்சாரி

விடுதலைக்குப் பின்னர் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக பணியாற்றியவர். கர்நாடகம் இணைந்த பகுதிகளைக் கொண்ட சென்னை மாநிலத்தின் முதலமைச்சராகப் பணியாற்றியவர். சுருக்கமாக இராஜாஜி என்றும் சி.ஆர் என்றும் அழைக்கப்பட்டவர். வழக்கறிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவரான இராஜாஜியைப் பற்றி இங்கு காண்போம்.

ஆரம்பகால வாழ்க்கை :
தமிழகத்தில் கிரு~;ணகிரி மாவட்டத்தில் (அன்றைய சேலம் மாவட்டத்தில்) ஒசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி என்னும் கிராமத்தில் டிசம்பர் 10, 1878-ல் இராஜாஜி பிறந்தார். அவரது தந்தை சக்கரவர்த்தி வெங்கடார்யா, தாயார் சிங்காரம்மா ஆவார். இராஜாஜியின் கல்லூரிக் கல்வி பெங்கள+ரு சென்ட்ரல் கல்லூரியிலும், சென்னை மாகாணக் கல்லூரியிலும் படித்தார். 1898-ல் சித்தூர் திருமலை சம்பங்கி ஐயங்கார் மகள் அலர்மேலு மங்கம்மாளை மணந்தார். 1900-ல் தமது வழக்கறிஞர் தொழிலை நன்கு நடத்தி வந்தார். பின்னர் அரசியலில் ஈடுபட்டு 1917-ல் சேலம் நகராட்சி உறுப்பினராகவும், பின்னர் நகர தந்தையாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவர் வகித்த பதவிகள் :
1937ஆம் ஆண்டு மதராஸ் மாகாணத்தின் முதன்மை மந்திரியாக பொறுப்பேற்று 1940 வரை பதவி வகித்தார். 1947 முதல் 1948 வரை மேற்கு வங்க ஆளுநராகவும், 1948 முதல் 1950 வரை விடுதலை பெற்ற இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும், 1951 முதல் 1952 வரை உள்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சென்னை மாநிலத்தின் முதலமைச்சராக 1952 முதல் 1953 வரை பதவி வகித்தார். அவர் சுதந்திராக் கட்சியை நிறுவி 1962, 1967 மற்றும் 1972 பொது தேர்தல்களில் போட்டியிட்டார். 1967 சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிற்கு எதிரான அணியை ஒருங்கிணைத்து தமிழக அரசியலில் முதன்முறையாக காங்கிரசல்லாத ஆட்சி மலர துணை நின்றார்.

அவருடைய பணிகள் :
1937ஆம் ஆண்டில் இந்தி மொழி கட்டாயப்பாடத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இந்திய தேசிய காங்கிரசின் கொள்கைகளில் ஒன்றான மதுவிலக்குக் கொள்கையில் இராஜாஜி ஈடுபாடு உடையவராக இருந்தார். அவர் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக 1937ஆம் ஆண்டில் பொறுப்பேற்ற பின்னர், அன்றைய சேலம் மாவட்டத்தில் மதுவிலக்கை அமல்படுத்தினார். அதனால் ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட 1939ஆம் ஆண்டில் விற்பனை வரியை விதித்தார். 1946ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் தொழில், வழங்கல், கல்வி மற்றும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றினார். 1952ஆம் ஆண்டில் சென்னை மாகாண முதல்வராக இரண்டாம் முறை இருந்தபொழுது மாகாணம் முழுக்க மதுவிலக்கை அமல்படுத்தினார். காங்கிரசில் சேர்ந்து ரௌலத் சட்டத்திற்கெதிரான இயக்கம், ஒத்துழையாமை இயக்கம், வைக்கம் சத்தியாகிரகம் போன்றவற்றில் ஈடுபட்டார். இராஜாஜி தமது எழுத்தாற்றலால் ஆங்கில இலக்கியத்திற்கு சிறப்பாக பங்களித்துள்ளார். தமிழிலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் காவியங்களை மொழிபெயர்த்துள்ளார். 1954ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய குடிமையியல் விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கப்பட்டது.

இறப்பு :
25 டிசம்பர் 1972 ஆம் ஆண்டில் இறந்தார். அவரின் நினைவாக சென்னை கிண்டியில் நினைவு மண்டபமும் அமைத்துள்ளது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசுக்குச் சொந்தமான மண்டபத்திற்கு இராஜாஜி மண்டபம் என்று பெயர் சூட்டியுள்ளது.

மேற்கண்ட தொகுப்பில் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ள தமிழ் வார்த்தைகளுக்கு இணையான ஆங்கில வார்த்தைகள் :

No comments:

Post a Comment