Saturday 7 May 2016

7-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

7-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

இரவீந்திரநாத் தாகூர்

✑ இலக்கியத்துக்கான நோபல் பரிசு வென்றவரும் இந்திய தேசிய கீதத்தை இயற்றியவருமான இரவீந்திரநாத் தாகூர் 1861 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி கல்கத்தாவில் பிறந்தார். தனது எட்டாவது வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கினார். உலகப் புகழ்பெற்ற பலரின் சுயசரிதைகள், வரலாறு, வானியல், அறிவியல், சமஸ்கிருதம் ஆகியவற்றைப் பயின்றார்.

✑ ஒரு கவிஞராகவும் எழுத்தாளராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். 16வது வயதில் பானுசிங்கோ என்ற புனைப் பெயரில் முதல் கவிதையை வெளியிட்டார். 20 வது வயதில் வால்மீகி பிரபிதா என்ற நாடகத்தை எழுதினார். 2000 க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி மெட்டும் அமைத்துள்ளார். அவற்றில் ஒரு பாடல் இந்திய தேசிய கீதமாகவும், மற்றொரு பாடல் வங்க தேசத்தின் தேசிய கீதமாகவும் பாடப்பட்டு வருகிறது.

✑ இவரது இசைத்தட்டுகள் 'ரவீந்திரசங்கீத்" என்று பிரபலமடைந்தன. சுவாமி விவேகானந்தருடன் ஆழ்ந்த நட்பு கொண்டிருந்தார். விவேகானந்தர் தனது 'சங்கீத கல்பதரு" என்ற இசை நூலில் இரவீந்திரநாத் தாகூரின் பாடல்களைத் தொகுத்துள்ளார். 1921இல் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார். காந்திஜியை மகாத்மா என்று முதன் முதலாக அழைத்தது இவர்தான். சமூக சீர்திருத்தவாதி, இந்திய கலாசாரத்தின் அடையாளமாக திகழ்ந்த தாகூர் 1941 ஆம் ஆண்டு ஆகஸ்டு 7 ஆம் தேதி காலமானார்.

1946 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி, சோனி  நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது.

திராவிட மொழியியலின் தந்தை எனப் போற்றப்படும் இராபர்ட் கால்டுவெல் 1814 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி பிறந்தார்.

பிரபலமான தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்பட நடிகை ப.கண்ணாம்பா 1964 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி இறந்தார்.

No comments:

Post a Comment