Tuesday 10 May 2016

10-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

10-5-2016 இன்றைய உலக வரலாற்றுச் சுவடுகள்

உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம்

உலகம் முழுவதும் பல்லுறுப்பு நோயால் 50 லட்சத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக செஞ்சரும பல்லுறுப்பு தினம் ஆண்டு தோறும் மே 10 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்த பல்லுறுப்பு நோயானது தோல் மட்டுமில்லாமல் சிறுநீரகம், மூளை, இதயம், நுரையீரல், கண்கள் போன்ற உள்ளுறுப்புகளையும் எலும்புகளையும் தாக்குகிறது. தேவையில்லாத சில மருந்துகளை உட்கொள்ளுதல், கிருமி தொற்று, உணவுப் பழக்கம் போன்ற காரணங்களாலும் மரபு ரீதியாகவும் இந்த நோய் ஏற்படுகிறது. ஆண்களைவிட பெண்களே இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆரம்பத்திலேயே நோயை கண்டுபிடித்து சிகிச்சை பெற்றால், அதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். தீராத காய்ச்சல், அதிகமாக முடி உதிர்தல், வாய்ப்புண்கள், சோர்வு நிலை, ரத்த சோகை, தோலில் புதிய சிவப்பு நிற தடிப்புகள் போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.

1612 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி முகலாயப் பேரரசர் ஷாஜகான் மும்தாஜ் மஹாலைத் திருமணம் செய்து கொண்டார்.

1774 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி 16ஆம் லூயி பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.

1857 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிரான சிப்பாய் கிளர்ச்சி ஆரம்பமானது.

1877 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி ருமேனியா துருக்கியிடம் இருந்து விடுதலை பெற்றது.

1946 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி ஜவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானர்.

No comments:

Post a Comment