Tuesday 10 May 2016

10-5-2016 இன்றைய இராசி பலன்கள்

10-5-2016 இன்றைய இராசி பலன்கள்

மேஷம் ராசிபலன்  10 May 2016
உங்களை மூடிக் கொண்டு வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் இருளை விலக்குங்கள். சந்தேகத்துக்கு இடமான பண திட்டங்களில் மயங்கிவிடாதீர்கள் - முதலீடுகளை மிக கவனமாகக் கையாள வேண்டும். வீட்டில் சில மாற்றங்கள், நேசத்துக்கு உரியவருடன் பிரச்சினைக்கு வழிவகுக்கும். இலையுதிர்காலத்தில் மரத்தில் இருந்து விழும் இலையைப் போன்றது உங்களின் காதல் வாழ்க்கை. புதிதாக எடுக்கும் வேலைகள் எதிர்பார்ப்புகளுக்கு குறைவானதாக இருக்கும். வாக்குவாதத்தில் சிக்கினால் கோபமான கமெண்ட்களை கூறிவிடாமல் இருப்பதில் கவனமாக இருங்கள். உங்கள் துணை உண்மையிலேயே ஒரு தேவதை தான். அதனை நீங்கள் இன்று உணர்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 6
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
ரிஷபம் ராசிபலன்  10 May 2016
வாழ்க்கையில் தாராளமான மனப்போக்கை உருவாக்குங்கள். உங்கள் வாழ்க்கை நிலைமைகள் பற்றி புகார் சொல்லுவதும் மனம் உடைந்து போவதும் எந்தப் பயனையும் தராது. பிச்சைக்காரனைப் போன்ற சிந்தனைதான் வாழ்வின் நறுமணத்தை அழித்து, போதும் என்ற எண்ணத்துடன் வாழ்வதையும் அழிக்கிறது. நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். சரியான கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பு துணைவருடன் உறவை மேம்படுத்தும். உமது காதலருக்குப் பிடிக்காத துணிகளை அணியாதீர்கள், அவர் வருத்தப்படலாம். எதைச் செய்தாலும் பூரணமாக செய்வீர்கள் - நீங்கள் எவ்வளவு செயல்திறன் மிக்கவர் என்பதைக் காட்டி, உங்களை சுற்றியுள்ளவர்களுக்கு நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள். நீங்களாக முடிவெடுத்து, தேவையில்லாத செயல்களை செய்தால் இது அப்செட்டாக்கும் நாளாக இருக்கும். தொடர்ச்சியான ஒப்புதல் இல்லாத நிலையால் பிரச்சினை ஏற்படும். உங்கள் துணைவருடன் ஒத்துப் போக ரொம்பவும் கஷ்டப்படுவீர்கள். அதிர்ஷ்ட எண்: 5
🏀🏀🏀🏀🏀🏀🏀🏀🏀
மிதுனம் ராசிபலன்  10 May 2016
மன அமைதிக்காக டென்களை தீர்த்திடுங்கள். குழுவாக ஈடுபடுவது பொழுதுபோக்காக இருக்கும். ஆனால் செலவு மிக்கதாக இருக்கும் - குறிப்பாக பிறருக்காக செலவு செய்வதை நீங்கள் நிறுத்தாத போது. ஒரே மாதிரியான வேலை அட்டவணையில் இருந்து விடுபட்டு இன்று நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள். ஒருதலை மோகம் உங்கள் மகிழ்ச்சியை அழிக்கும். இன்று ஆபிசில் உங்கள் மொபைல் போனால் சில ப்ரச்சனைகள் தோன்றலாம். எனவே அதனை அதிகம் இன்று பயன்படுத்த வேண்டாம். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். உங்கள் துணையின் தேவைகள் இன்று உங்களை சலிப்படைய செய்யலாம். அதிர்ஷ்ட எண்: 3
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
கடகம் ராசிபலன்  10 May 2016
வழக்கத்தைவிட சக்தி குறைவாக இருப்பதை உணர்வீர்கள் - கூடுதல் வேலையை இழுத்துப் போட்டுக் கொள்ளாதீர்கள் - சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு, அப்பாயின்மெண்ட்களை வேறொரு நாளுக்கு தள்ளிப் போடுங்கள். நிதி நிலைமை நிச்சயமாக மேம்படும். வீட்டில் நிலவும் சூழ்நிலையால் நீங்கள் அப்செட் ஆகலாம். திடீரென ரொமாண்டிக் அனுபவம் உங்களை குழப்பமடையச் செய்யும். புதிய சிந்தனை உள்ளவர்களை டீல் செய்யும்போது, இன்று நீங்கள் பெறும் கூடுதல் அறிவு உதவி செய்யும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் திருமண வாழ்விலேயே இன்று மிக இணக்கமான நாள். அதிர்ஷ்ட எண்: 7
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
சிம்மம் ராசிபலன்  10 May 2016
உங்கள் பரந்த மனது மற்றும் சகிப்புத்தன்மையை ஒரு நண்பர் சோதிக்கக் கூடும். ஒவ்வொரு முடிவு எடுக்கும்போதும் உங்கள் நிலையை விட்டுக் கொடுக்காமல் இருக்கவும், நியாயமாக இருக்கவும் கவனம் செலுத்த வேண்டும். நீங்களாக முன்வந்து செலவு செய்யாதீர்கள் அல்லது நீங்கள் வீட்டுக்கு காலி பாக்கெட்டுடன் செல்வீர்கள். வீட்டு வேலைகளை முடிக்க உகந்த நாள். வீட்டில் நின்று போயிருந்த வேலைகளை முடிப்பீர்கள். உங்கள் இதயதுடிப்பு உங்கள் துணையின் துடிப்புடன் இணைந்து இன்று இனிய தாளம் போடும். சிலருக்கு தொழில் முன்னேற்றம் கிடைக்கும். உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்களுடன் சேர்ந்திருப்பதைத் தவிர்த்திடுங்கள். சிறிய விஷயங்களுக்காக நீங்களும் துணைவரும் சண்டையிட்டுக் கொள்வீர்கள். ஆனால் இது நீண்டகால அடிப்படையில் திருமண வாழ்வை பாதிக்கும். மற்றவர்கள் சொல்வதை நம்பாதிருப்பதில் கவனமாக இருங்கள். அதிர்ஷ்ட எண்: 5
🍩🍩🍩🍩🍩🍩🍩🍩🍩
கன்னி ராசிபலன்  10 May 2016
சாலையைக் கடக்கும்போது, குறிப்பாக சிவப்பு விளக்கு எரியும்போது கவனமாக இருக்கவும். யாரோ ஒருவருடைய கவனக்குறைவு உங்களுக்கு காயத்தை ஏற்படுத்தலாம். முந்தைய முதலீட்டில் இருந்து வருமானம் அதிகரிக்கும் வாய்ப்பு எதிர்நோக்கப்படுகிறது. தூரத்து உறவினரிடம் இருந்து வரும் எதிர்பாராத தகவல் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் உற்சாகத்தை ஏற்படுத்தும். காதலுக்கு உரியவர் வெறுத்தாலும் உங்கள் காதலைக் காட்டுங்கள். முக்கியமான பிசினஸ் முடிவுகள் எடுக்கும்போது பிறருடைய நெருக்குதலுக்கு பணியாதீர்கள். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்கள் திருமண வாழ்வில் இன்று மிக அழகான நாள். உங்கள் துணையுடன் இனிமையான மாலை நேரத்தை செலவிட திட்டமிடுங்கள். அதிர்ஷ்ட எண்: 3
🌍🌍🌍🌍🌍🌍🌍🌍🌍
துலாம் ராசிபலன்  10 May 2016
வேலைக்கு நடுவே ரிலாக்ஸ் செய்ய முயற்சி செய்யுங்கள். இரவு தாமதம் செய்வதை தவிர்த்திடுங்கள். இன்று முதலீட்டை சேர்த்து - நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் - அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். கல்வியை விட்டுக் கொடுத்து வெளிப்புற செயல்களில் அதிகம் ஈடுபடுவது பெற்றோரின் கோபத்துக்கு ஆளாக்கிடும். விளையாட்டைவிட, எதிர்காலத்துக்கு திட்டமிடுவது முக்கியம். உங்கள் பெற்றோரை திருப்திப்படுத்த இரண்டையும் சமமாக பாவித்திடுங்கள். அதிக உணர்ச்சியால் இந்த நாள் கெடலாம் - குறிப்பாக உங்கள் அன்புக்குரியவர் மற்றவர்களுடன் அதிக நட்பாக இருப்பதைக் காணும்போது. உத்வேகம், நம்பிக்கையுள்ளவர்களுடன் பார்ட்னர்ஷிப் சேருங்கள். உங்கள் நசைச்சுவை உணர்வுதான் மிகப் பெரிய சொத்து. இன்று உங்கள் துணை ஒரு ஸ்பெஷலான பரிசை உங்களுக்கு அளிப்பார். அதிர்ஷ்ட எண்: 6
🍟🍟🍟🍟🍟🍟🍟🍟🍟
விருச்சிகம் ராசிபலன்  10 May 2016
அழுத்தம் காரணமாக சிறிது நோய் ஏற்படலாம். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் அமர்ந்து ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். நீண்டகால சிந்தனையுடன் முதலீடுகள் செய்யப்பட வேண்டும். காதலுக்கு உரியவர்களுடன் வாக்குவாதத்தை ஏற்படுத்தக் கூடிய சர்ச்சையான விஷயங்களை நீங்கள் தவிர்க்க வேண்டும். உங்கள் காதல் வாழ்க்கை இன்று மிக அழகாக பூத்து குலுங்கும். வேலையில் உங்களது கடின உழைப்பு இன்று நல்ல பலனை தரும். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். அதிகம் செலவானதால் உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். அதிர்ஷ்ட எண்: 7
🔔🔔🔔🔔🔔🔔🔔🔔🔔
தனுசு ராசிபலன்  10 May 2016
மாலையில் சிறிது நேரம் ரிலாக்ஸ் பண்ணுங்கள். ஊகங்களால் லாபம் கிடைக்கும். பிள்ளைகள் படிப்பின் மீது கவனம் செலுத்தி எதிர்காலத்துக்குத் திட்டமிட வேண்டும். செக்ஸியான அப்பீல் எதிர்பார்த்த ரிசல்ட்டை கொடுக்கும். மார்க்கெட்டிங் துறையில் நுழைய வேண்டும் என்ற நீண்டகால நோக்கம் நிறைவேறலாம். அது உங்களுக்கு அபரிமிதமான ஆனந்தத்தைத் தரும். இந்த வேலையைப் பெறுவதற்கு சந்தித்த எல்லா தடைகளையும் நீக்கிவிடும். உங்கள் பிளான்களில் கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படக் கூடிய நாள். உங்கள் துணை தனது வாழ்க்கையில் நீங்கள் எத்தகைய வித்த்தில் முக்கிய பங்கு வகிக்கிறீர்கள் என்பதை இனிமையான சொற்களுடன் உங்களை தேடி வருவார். அதிர்ஷ்ட எண்: 4
🌳🌳🌳🌳🌳🌳🌳🌳🌳
மகரம் ராசிபலன்  10 May 2016
அதிக ஆதிக்கம் செலுத்தக் கூடியவரின் ஆதரவு உங்கள் நன்னடத்தைக்கு ஊக்கமாக அமையும். உங்கள் கடமை உணர்வும் கடின உழைப்பும் கவனிக்கப்படும். இன்று அதற்கு பண வெகுமதியும் கிடைக்கும். துணைவரின் ஆரோக்கியம் உங்களுக்கு மன அழுத்தம் மற்றும் கவலை ஏற்பட காரணமாக இருக்கலாம். காதலும் ரொமான்சும் உங்களை மகிழ்வான மனநிலையில் வைத்திருக்கும். சிலருக்கு தொழில் முன்னேற்றம் கிடைக்கும். உங்களை தவறாக வழிநடத்தக் கூடிய அல்லது உங்களுக்கு ஏதாவது ஊறு செய்யக் கூடிய வகையிலான ஒருவரை சந்திக்கக் கூடும், ஜாக்கிரதை. இன்று உங்கள் உறவு உங்கள் துணை மன ரீதியாக காயப்பட்டிருப்பதால் பாதிக்கும். அதிர்ஷ்ட எண்: 4
🍅🍅🍅🍅🍅🍅🍅🍅🍅
கும்பம் ராசிபலன்  10 May 2016
உடல் நல பிரச்சினைகளுக்காக நீங்கள் மருத்துவமனைக்கு செல்ல நேரிடலாம். வங்கி டீலிங்கை மிக கவனமாக கையாள வேண்டும். வீட்டில் வாக்குவாதம் செய்வது குடும்பத்தினரிடையே மகிழ்ச்சிக் குறைவை ஏற்படுத்தும். பார்ட்னர் மீது சரியாக கவனம் செலுத்தாவிட்டால் அவர் அப்செட் ஆவார். அபீசில் இன்று அனைத்து வேலையிலும் உங்கள் கை மேலோங்கியிருக்கும். பிசினஸ் தேவைக்காக மேற்கொள்ளும் பயணம் நீண்டகால அடிப்படையில் பயன் தரும். மழைக்கும் ரொமான்ஸுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அது போல உங்கள் வாழ்கை துணையின் அன்பு மழையில் இன்று நீங்கள் நனைந்து மகிழ்வீர்கள். அதிர்ஷ்ட எண்: 2
🎄🎄🎄🎄🎄🎄🎄🎄🎄
மீனம் ராசிபலன்  10 May 2016
காயத்தைத் தவிர்ப்பதற்காக அமர்ந்திருக்கும் போது விசேஷ அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நேராக உட்காருவது உங்கள் பர்சனாலிட்டியை மேம்படுத்துவது மட்டுமின்றி, ஆரோக்கியம் மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும் முக்கியமானது. கூட்டு முயற்சிகளிலும் சந்கேகமான நிதி திட்டங்களிலும் ஈடுபடாதீர்கள். நாளின் பிற்பகுதியில் எதிர்பாராத நல்ல செய்தி வந்து மொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சி மற்றும் உற்சாகத்தைத் தரும். எல்லைகளற்றது காதல், தடைகளற்றது காதல் என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஆனால் அதனை நீங்கள் அனுபவித்து உணரும் நாளிது. சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு நல்ல நாள் நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு - மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். இன்று படுக்கையறையில் உங்களுக்கோ அல்லது உங்கள் துணைக்கோ காயம் ஏற்படலாம். எனவே மென்மையாக அணுகவும். அதிர்ஷ்ட எண்: 9
💐💐💐💐💐💐💐💐💐
பஞ்சாங்கம்
செவ்வாய்க்கிழமை 10
Tuesday, May 10, 2016
ராகு காலம்: பிற்பகல் 3.00 - 4.30
எம கண்டம்: காலை 9.00 - 10.30
நல்ல நேரம்: காலை 8 - 9, மாலை 5 - 6.

இன்றைய ராசிபலன்
    மேஷம்  :  ஆக்கம்
    ரிஷபம்  :  சுகம்
    மிதுனம்  :  வெற்றி
    கடகம்  :  பாசம்
    சிம்மம்   :  உதவி
    கன்னி  :  மறதி
    துலாம்  :  போட்டி
    விருச்சிகம்  :  சினம்
    தனுசு  :  ஆர்வம்
    மகரம்   :   பக்தி
    கும்பம்  :  ஓய்வு
    மீனம்  :  பாராட்டு

பஞ்சாங்கம்...

துர்முகி வருடம், சித்திரை 27ம் தேதி. கரணம்: 7.30 - 9.00 நக்ஷத்ர யோகம்: மரண /சித்த யோகம். சந்திராஷ்டமம்: கேட்டை

திதி: சதுர்த்தி மாலை 5.43 வரை, பிறகு பஞ்சமி. நட்சத்திரம்: திருவாதிரை பின்னிரவு 3.55 வரை, பிறகு புனர்பூசம்.
குளிகை: 12.00 - 1.30
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

இன்றைய விசேஷம்
சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். ராமானுஜர் ஜெயந்தி. மதுராந்தகம், திருக்கம்பை, ஸ்ரீபெரும்புதூர் உடையவர் சாற்று முறை. குடியாத்தம் ஸ்ரீகங்கையம்மன் திருக்கல்யாணம். மயிலை ஆதிகேசவப் பெருமாள் அவதார உற்ஸவம். காரைக்குடி கொப்புடையம்மன் உற்ஸவம் ஆரம்பம், வெள்ளி சிம்ம வாகனங்களில் திருவீதிவுலா.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
பூஜைக்குறிய யந்திரம்

ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம்,
ராசிரத்தினம், பார்க்கபடும்,
ஜாதகம் பார்க்க திருமணபொருத்தம்,
பிரசன்னம் பார்க்கப்படும்,
ஜாதகம் கணித்து தரப்படும் .

கணபதிஹோமம்,
கிரகபிரவேசம்,
ருதுசாந்தி,
நாமகரணம்,
ராகு-கேது,
செவ்வாய், சனி,
சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும்,
திருமணதடை,
புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.

பூஜைக்குறிய யந்திரம்-
கணபதி யந்திரம்,
லட்சுமிகுபேர யந்திரம், 
சுதர்ஸன யந்திரம்,
ஷண்முக யந்திரம், 
அனுமான் யந்திரம்,
வியாபரவிருத்தி யந்திரம், 
காரிய சித்தி யந்திரம்,
ஸ்ரீசக்க யந்திரம், 
மஹாலட்சும் யந்திரம், 
பைரவ யந்திரம், 
பிரத்தியங்கிரா யந்திரம், 
வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து  வழங்கப்படும்,
இந்த யந்திரம்
பெறவிரும்பும் அன்பர்கள்.  கோத்திரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம் மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
WhatsApp No 9444227039
Email : manisharmajothidam@gmail.com
http://neelajothidam.blogspot.in/
தொடர்பு கொள்ளவும்
மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனை தெளிவாக குறிப்பிடுடவும்.

No comments:

Post a Comment