Saturday 23 April 2016

பிறமொழிச் சொற்களை நீக்குதல

இலக்கணம் - பிறமொழிச் சொற்களை நீக்குதல் மற்றும் சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடராக்குதல்

1. நான் மெடிக்கல் ஷாப் போனேன் - நான் மருந்துக் கடைக்கு போனேன்.

2. குடிக்க ஜலம் கொண்டு வா - குடிப்பதற்கு தண்ணீர் கொண்டு வா

3. பஸ்ஸில் ஏறியதும் முதலில் டிக்கெட் வாங்கினேன் - பேருந்தில் ஏறியதும் முதலில் பயணச்சீட்டு வாங்கினேன்

4. டீப் போர்வெல் அமைத்துத் தருக - ஆழ்துளைக் கிணறு அமைத்துத் தருக

5. இந்த செஞ்சுரி டென்ஷன் நிறைந்தது - இந்த நூற்றாண்டு மன அழுத்தம் நிறைந்தது

6. ரெயின் வாட்டர் ஹார்வெஸ்ட் பற்றி எல்லார்க்கும் சொல்வோம் - மழை நீர் சேகரிப்பு பற்றி எல்லோருக்கும் சொல்வோம்

7. குற்றாலத்து ஜலம் ஜில்லென்று இருக்கும் - குற்றாலத்து தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கும்

8. அவர் கோயிலுக்குச் சென்று பூஜை செய்தார் - அவர் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்

9. கண்ணன் ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிறான் - கண்ணன் மருத்துவமனையில் பணியாற்றுகிறான்

10. பெண்கள் கோயிலில் தீபம் ஏற்றினர் - பெண்கள் கோயிலில் விளக்கு ஏற்றினர்

11. எங்கள் ஊரின் நடுவில் போலீஸ் ஸ்டேஷன் உள்ளது - எங்கள் ஊரின் நடுவில் காவல் நிலையம் உள்ளது

12. கும்பாபிஷேக வைபவம் பூர்த்தியாயிற்று - திருக்குட முழுக்கு நிகழ்ச்சி முடிவடைந்தது

13. ஸ்கூல் விட்டதும் டீச்சர் லைனில் போகச் சொன்னார் - பள்ளி விட்டதும் ஆசிரியர் வரிசையில் போகச் சொன்னார்

14. தற்போது கிராமங்களிலும் டெலிபோன் இணைப்பு உள்ளது - தற்போது கிராமங்களிலும் தொலைபேசி இணைப்பு உள்ளது

15. பெரியவர்களைக் கண்டால் நமஸ்காரம் செய்ய வேண்டும் - பெரியவர்களைக் கண்டால் வணங்க வேண்டும்

16. காலையில் கந்தன் எழுந்தவுடன் சென்றான் வேலைக்கு - கந்தன் காலையில் எழுந்தவுடன் வேலைக்குச் சென்றான்.

17. மொழியில் தமிழ் சிறக்க வேண்டும் சிந்தனை - தமிழ் மொழியில் சிந்தனை சிறக்க வேண்டும்.

18. பரணியைக் கலிங்கத்துப் பாடியவர் செயங்கொண்டார் - கலிங்கத்துப் பரணியைப் பாடியவர் செயங்கொண்டார்.

19. வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும் நிலத்தடி நீர் - நிலத்தடி நீர் வளமான வாழ்க்கைக்கு ஆதாரமாகும்.

20. முக்கிய காரணிகள் மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு - மரம் செடி கொடிகள் மழை பெய்வதற்கு முக்கிய காரணிகள்.

21. இலக்கியம் பிள்ளைத்தமிழ் என்னும் பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடுவது - பத்துப் பருவங்களாக வகுத்துப் பாடுவது பிள்ளைத் தமிழ் என்னும் இலக்கியம்.

22. நான் படித்தேன் தமிழில் தாய்மொழித் - நான் தாய்மொழித் தமிழில் படித்தேன்.

23. பெரியார் என்று வீரர் வைக்கம் அழைக்கப்பட்டார் - வைக்கம் வீரர் என்று பெரியார் அழைக்கப்பட்டார்.

24. பெற்ற தெங்கம் பழம் நாய் - நாய் பெற்ற தெங்கம் பழம்.

25. குளிர்மழை ஏந்தி குன்றம் காத்தவன் - குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன்.

26. நமதிரு கண்கள் மொழியும் நாடும் - நாடும் மொழியும் நமதிரு கண்கள்.

27. தனியாக வாழ என்றுமே முடியாது தமிழன் - தமிழன் என்றுமே தனியாக வாழ முடியாது.

28. கடமையைச் செய்க காலை வேளையில் - காலை வேளையில் கடமையைச் செய்க.

குறிப்பு:
ஞாபகமறதியா? சிறியவர்கள் முதல் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் ஆட்டிப்படைக்கும் ஞாபக மறதிக்கு தீர்வு

No comments:

Post a Comment