Friday 22 April 2016

கேரளாவில் பந்தள மகாராஜா



கேரளாவில் பந்தள மகாராஜா
குழந்தையில்லாமல் மனம் வருந்தி வந்தார் அந்த சமயத்தில் மகிஷி என்ற அரக்கி ரிஷிகளை துன்புறுத்தி வந்தாள். அவர்களுக்கு உதவ சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த வர்தான் ஐயப்பன். விஷ்ணு மோகினியாக மாற, சிவனுக்கும் மோகினிக்கும் (விஷ்ணுவுக்கும்)ஐயப்பன் பிறந்தார்.

குழந்தையாக பிறந்த ஐயப்பனை மரத்திற்கு அடியில் விட்டுவிட்டு சென்று விட்டனர் ஹரியும், விஷ்ணுவும், தெய்வ செயல்கள் அனைத்திற்குமே ஒரு காரணம் உண்டல்லவா? பக்திமானான பந்தள மகாரஜாவின் பிள்ளையில்லா குறையைத் தீர்க்கவே பரந்தாமனும், பரம்பொரளும் குழந்தையை அங்கேவிட்டுச் சென்றனர்.
வேட்டைக்கு வந்த பந்தள மன்னன் குழந்தையின் அழுகுரல் கேட்டான். எங்கு குழந்தை அழுகிறது என பதைபதைத்து தேடி மரத்தடியில் ஜொலிக்கும்தேஜசுடன் குழந்தை ஐயப்பனைக் கண்டான். ஆண்டாவா! என் குழந்தையில்லா குறை தீர்க்கவே இந்த குழந்தை இங்கு இருக்கிறதா என மகிழ்ந்து அந்தகுழந்தையை அரண்மனை கொண்டு சென்றான்.
     அரசியும் மட்டிலா மகிழ்ச்சி அடைந்தாள். இருவரும் இறைவனுக்கு நன்றி செலுத்தினர். குழந்தையை கண்ட அனைவரும் சொக்கிப் போனார்கள்.ஜோதிடர்கள் இந்தக் குழந்தை தெய்வாம்சம் பொருந்திய குழந்தை எனக் கூறினர். கழுத்தில் மணியுடன் பிறந்ததால், குழந்தைக்கு மணிகண்டன் என்றுபெயரிட்டு ன பெயரிடலாம் என்று முடிவு செய்து மணிகண்டன் என பெயரிட்டு அன்போடு பாராட்டி சீராட்டி வளர்த்து வந்தனர்.

இந்நிலையில் மகாராணிக்கும் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. அரசனும் அரசியும் அடைந்த ஆனந்தத்திற்கு அளவில்லை. மணிகண்டன் வந்த நேரம் நமக்கும்குழந்தை பிறந்தது என ஆனந்தம் அடைந்தனர்.

ஆனால் எங்குமே நல் மனதைக் கெடுக்கும் புல்லுருவிகள் இருக்குமல்லவா? ஐயப்பன் உங்களுக்கு பிறந்த மகன் அல்ல. ஆனால் அவனையே தலைப்பிள்ளை போல் சீராட்டி வளர்க் கிறீர்கள். அதனால் அடுத்த மன்னனாக அவன் வரவே வாய்ப் பிருக்கிறது. உங்களுக்கு பிறந்த குழந்தையிருக்க வேறுயாரோ எப்படி அரசனாவது என அரசியின் மனதில் நஞ்சைக் கலந்தனர் சிலர்.

தீயபோதனைகளால் அரசியும் மனம் மாறினாள். தான் வயிற்று வலியால் அவதிப்படுவதாக பொய்யுரைத்தாள். அரசவை வைத்தியரை புலிப்பால் குடித்தால் மட்டுமே தன் வயிற்று வலி தீரும் என கூற வைத்தாள்.


ஐயப்பன் அறிய மாட்டானா உண்மையை. தாய்க்கு புலிப்பால் கொண்டு வர காடு நோக்கி புறப்பட்டான். வழியில் அரக்கி மகிஷி ஐயப்பனைத் தடுததாள்.வில்லெடுத்தான் வில்லாளி வீரன். வதம் செய்தான் மகிஷியை. அவன் அவதார மகிமை பூர்த்தி பெற்றது. தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

இந்திரனே புலியாக மாற, மற்ற தேவர்கள் புலியாக புடை சூழ புலிமேல் ஏறி நாடு சென்றான் ஐயப்பன்.
புலிமேல் வந்த மணிகண்டனைக் கண்டு பதறிப் போனாள் அரசி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு புலிகளை திருப்பி அனுப்புமாறு வேண்டினாள்.ஐயப்பனும் அவ்வாறே செய்து அருளினார்.

மேலும் தன் அவதார காரணம் பூர்த்தி பெற்றதால் தான் சபரிமலையில் தவமிருக்கப் போவதாகவும் தன்னை தரிசிக்க வேண்டுமானால் அங்குவருமாறும் கூறி சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் தவக் கோலத்தில் அமர்ந்தார் அருள்தரும் ஐயப்பன்.

இன்றும் நாம் ஐயப்பனை அங்கு அந்த தவக் கோலத்தில் காணலாம். ஐயப்பனின் இரு கால்களில் துண்டு கட்டியிருக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அதற்கும் ஒருகாரணம் கூறப்படுகிறது.

ஐயப்பனைக் காண பந்தள மகாரஜா ஒரு மூறை வந்த போது ஐயப்பன் தன் தந்தை என்ற காரணத்தால் எழ முயன்ற போது இறைவன் தனக்கு மரியாதைசெய்ய எழுந்திருக்கக் கூடாது என்பதற்காக தன் தோளில் போட்டிருந்த பட்டு அங்கவஸ்திரத்தை ஐயப்பனை நோக்கி அவர் தூக்கி போட்டபோது அந்தஅங்கவஸ்திரம் ஐயப்பன் காலைச் சுற்றிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. உற்று நோக்கினால் ஐயப்பன் அமர்ந்த கோலத்திலிருந்து சற்றேஎழுந்திருப்பது போல் தோன்றும் எனக் கூறுகிறார்கள்.

இனி கோவில் செல்லும் முறை பற்றியும், சன்னிதானம் திறந்திருக்கும் காலம் பற்றியும் அறிவோம்.

மற்ற கோவில்கள் போல் சபரிமலை ஐயப்பன் கோவில் வருடம் முழுவதும் திறநதிருக்கப்பட்டிருப்பதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாள்மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மலையாள மாதத்தின் 5-வது நாளன்று நடை சார்த்தப்படும்.
ஆண்டு தோறும் நடைபெறும் மண்டல பூஜை, மகர ஜோதி பூஜைகள் விசேஷமானவை




ஜோதிடம், புரோகிதம், எண்கணிதம், ராசிரத்தினம், பார்க்கப்படும், ஜாதகம் பார்க்க திருமண பொருத்தம், பிரசன்னம் பார்க்கப்படும், ஜாதகம் கணித்து தரப்படும். கணபதிஹோமம், கிரகபிரவேசம், ருதுசாந்தி, நாமகரணம், ராகு-கேது, செவ்வாய், சனி, சுக்கிர தோஷ நிவர்த்தி, ஹோமம் செய்து தரப்படும், திருமணதடை, புத்திர தோஷம் நிவர்த்திக்கு அணுகவும்.
பூஜைக்குறிய யந்திரம்:
கணபதி யந்திரம், லட்சுமிகுபேர யந்திரம், சுதர்ஸன யந்திரம், ஷண்முக யந்திரம், அனுமான் யந்திரம், வியாபாரவிருத்தி யந்திரம், காரிய சித்தி யந்திரம், ஸ்ரீசக்கர யந்திரம், மஹாலட்சுமி யந்திரம், பைரவ யந்திரம், பிரத்தியங்கரா யந்திரம், வாராஹி யந்திரம்,
இவை அனைத்தும் எங்கள்:
ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்.
அம்மன் அருள்லோடு பூஜைசெய்து வழங்கப்படும்,
இந்த யந்திரம் பெறவிரும்பும் அன்பர்கள். கோத்ரம், பெயர், நட்சத்திரம், ஜென்ம ராசி, தெரியப்படுத்தவும் கம்பெனி வைத்து இருப்போர் கம்பெனி பெயர் குறிப்பிடவும்

ஸ்ரீ பாலா திருபுரசுந்தரி ஜோதிடம்

ஜோதிடர், புரோகிதர்.
G.V. மணிகண்ட ஷர்மா
Mobile. 9962225358
Mobile. 7092103071
Mobile. 7092103072
WhatsApp No 9444226039
https://neelamatrimony.wordpress.com/

தொடர்பு கொள்ளவும். மேற்படி விபரம் தொடர்பு கொள்வோர் உங்கள் பிரச்சனைகளை தெளிவாக குறிப்பிடுடவும்.
 


No comments:

Post a Comment