Thursday 21 April 2016

வேத பாடசாலைகளில் வேதம் கற்றுத்தரும்

”மாமா, வேத பாடசாலைகளில் வேதம் கற்றுத்தரும் விதத்தை சற்று எங்களுக்கு புரியும்படியாக சொல்லமுடியுமா?”

பேஷாக. வேதபாடசாலைகளில் பல சட்டதிட்டங்கள் உண்டு. முதலில் ஒன்றை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.. பாடசாலைகளில் சிக்ஷை என்பது மற்ற நவீன ‘ரெசிடென்ஷியல் கோர்ஸ்’ மாதிரி இதுவும் ஒரு ’கோர்ஸ்’ என நாம் நினைத்துவிடக் கூடாது. முற்றிலும் மாறுபட்டது. போஜன நியமம், கால நியமம், குரு பக்தி, அனுஷ்டானங்கள் என பலவற்றோடுத்தான் வேதத்தை  குழந்தைகளுக்கு சற்றும் கவணம் சிதறாமல் குருமுகமாக கற்றுத்தரப்படுகின்றது..

அடிப்படையில் வேதத்தில் வரும் பதங்களை லக்ஷண சாஸ்திர ரீதியாக உச்சரிக்க கற்றுத் தரப்படும், இதில் ’சுத்த வர்ணக்ரமம்’, ’ஸ்வர வர்ணக்ரமம்’, ’மாத்ரா வர்ணக்ரமம்’ என பலவற்றில் கவணம் செலுத்தப்படும்.

குறிப்பாக ஸ்வர வர்ணக்ரமத்தை பார்த்தோமென்றால் யஜுர்வேதத்தை எடுத்துக்கொண்டால் அதில் நான்கு ஸ்வரம் உள்ளது. உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம் ப்ரசயம் என்பவைகளே அவைகளின் பெயர்கள்.  இம்மாதிரி  எல்லா லக்ஷணங்களுக்கு உட்பட்டு வேதமானது  கற்றுத்தரப்படுகின்றது. வேதம் கற்றுதந்த வாத்யார் சரி என்று சொன்னபிறகுதான் சிஷ்யன் தனிமையில் சொல்லவேண்டும் என கட்டுப்பாடும் உண்டு.

கற்றுத்தரும் விதத்தையும் சற்று பார்ப்போம். வாத்யார் குறைந்தது 10 சந்தை, ஒரு இரட்டை முதலில் சொல்லித் தருவார். பிறகு அதை 10 தினங்கள் ஒவ்வொரு பஞ்சாதியையும் சிஷ்யன்10 உரு போடவேண்டும். இம்மாதிரி தொடர்ந்து அப்யாஸம் செய்யவேண்டும். இப்படி செய்வதால் மனதில் அவை த்ருடமாக பதிந்துவிடும்.

நான் சொன்ன இவைகள் எல்லாம் ஒரு மேலோட்டமான விஷயங்கள்தாம். பாடசாலைகளில் மிக கடினமான சிக்ஷை இருக்கும்.

பல சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வேதத்தை உச்சரித்தால்தான் அதன் சம்பூர்ண பலன் கிடைக்கும்.

வேதம் ஈஸ்வரனின் மூச்சுகாற்று. இதை முறைப்படி அப்யாஸம் செய்வதானல் செய்பவருக்கு புண்ணியம் கிடைப்பதோடு உலகமும் க்ஷேமமாக இருக்கும்.

வேதம் ஸ்திரப்படுவதற்கு வேதத்தை விக்ருதி செய்து அப்யாஸம் பண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். (விக்ருதி என்றால் திருப்பி மாற்றி ஸ்வர, அக்ஷர சுத்தத்துடன் விதிப்படி பாராயணம் செய்வது). விக்ருதிவல்லீ என்ற க்ரந்தம் எட்டுவிதமான வேத விக்ருதிகளை எடுத்துரைக்கின்றது.

பொதுவாக க்ரமாந்தம் வரையில் வேதம் நேராகத்தான் பாராயணம் செய்யப்படுகின்றது. அதற்கு பிறகுதான் விக்ருதம் வருகின்றது.

இப்படி கன பர்யந்தம் அப்யாஸம் ஆதிகாலத்திலிருந்தே செய்து வந்ததால், வேதத்தில் ஒரு அக்ஷரம் கூட ஒருவர் மாற்றிவிடவோ, இடைச்செறுகல் செய்யவோ சம்பவிக்கவில்லை. இவ்வாறு மூல ஸம்ஹிதையை காலங் காலமாக ரக்ஷித்து வந்துள்ளார்கள்.

இவற்றில் க்ரமம், மற்றும் கன பாடம் பற்றி சுறுக்கமாக விளக்கம் இதோ:
1. க்ரமம்: வேத சம்ஹிதையில் இரண்டு பதங்களை எடுதுக்கொண்டு அந்த இரண்டு பதங்களை சேர்க்குமிடம்சம்ஹிதை போலவும் (அதாவது நேராக) இரண்டாவது பதத்தின் முடிவு பதம் போலவும் சொல்லவேண்டும். அதாவது 1-2, 2-3, 3-4, 4-5, என இப்படியே வேதம் முழுவதும் க்ரமத்தில் பாராயணம் செய்யவேண்டும். வேதம் முழுக்க இம்மாதிரி அத்யயனம செய்தவர்களை க்ரமபாடி என்று அழைப்பார்கள்.

2. கனம்: இது மிகவும் கடினம் ஆகும். நிறைய அப்யாசம் தேவை. இந்த கடினமான பாடத்தை படித்தவர்களைத்தான் கனபாடிகள் என அழைப்பார்கள். இதில் சந்தி செய்து சொல்லவேண்டும். அதவது இங்கு தனிப் பதங்களே வராது, வாக்யம் முதல், கடசி பதங்களைத் தவிர மற்ற அனைத்து பதங்களும் முன்னும் பின்னுமாக 13 தடவை வரும்.இந்த முறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களைத்தான் கனபாடிகள் என அழைப்பார்கள்.

No comments:

Post a Comment