Sunday 24 April 2016

பார்கோடு பற்றிய தகவல்கள்

பார்கோடு பற்றிய தகவல்கள்

♣ கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களின் பேக்கிங் மீது பட்டை பட்டையாக கறுப்பு, வெள்ளை வரிகள் அச்சிடப்பட்டு அதன் கீழ் எண்கள் குறிக்கப்பட்டிருப்பதை அனைவரும் பார்த்திருப்போம். இதனை “பார் கோடுகள்” என்பர்.

♣ பார்கோடுகளின் முதல் பயன்பாடு இரயில்பாதை வண்டிகளின் விவரக்குறிப்பைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. பார் கோடுகள் வெவ்வேறு அளவுகளில் உள்ள கறுப்புக் கோடுகள் ஆகும். இவை பல்வேறு இடைவெளியுடன் தொடராக அமைந்து இருக்கும். தற்போது பிஸ்கட் பாக்கெட் முதல், புத்தகங்கள் வரையில் பல்வேறு வகையான பொருட்களில் இந்த பார் கோடுகள் பயன்படுத்தப்படுகின்றன.

♣ பார்கோட் என்பது பொருட்களைப் பற்றிய தகவல்களை அறிய பயன்படுத்தும் கணினி குறியீட்டை உள்ளடக்கிய டிஜிட்டல் குறியீட்டு (digital coding) முறையாகும். இதில் உள்ள கோடுகள், இணைக்கோடுகள், இவற்றிக்கிடையேயுள்ள இடைவெளிகள் ஆகியவற்றின் மூலம் பொருட்களைப் பற்றியத் தகவல்களை அறியும்படி உருவாக்கப்படுகிறது. பார்கோடுகள் 1D. 2D முறையில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

♣ பார்கோடுகளுக்கு இடையே உள்ள வெள்ளைப் பகுதியை, ஸ்கேனர் கருவி எண்களாகக் கணக்கிட்டு கொள்கிறது. இதை வைத்து கம்ப்யூட்டர் மூலம் பொருள் மற்றும் அதன் விலையை அறிய முடியும்.

♣ நீங்கள் வாங்கும் பொருட்களில் உள்ள பார்கோட் பட்டையில் உள்ள முதல் மூன்று எழுத்துக்களை வைத்து, அப்பொருள் எந்த நாட்டின் தயாரிப்பு என்பதை கண்டறிய முடியும். ஒவ்வொரு நாட்டிற்கான பார்கோடும், நாட்டின் பெயரையும் ஒரு பட்டியலிடப்பட்டுள்ளது.

♣ முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம், 471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களில் உள்ள பார்கோட் 890 எனத் தொடங்கும்.

♣ இந்த பார்கோட் முறையை நோர்மன் ஜோசப் வூட்லான்ட் அவருடைய நண்பர் பேர்னாட் சில்வர் உதவியுடன் 1940 ஆம் ஆண்டு கண்டுபிடித்தார்.

♣ தற்பொழுது ஆன்லைன் மூலமும் பார்கோட் உருவாக்க முடியும். உதாரணமாக கூகிள் தளத்தில் online barcode  என தட்டச்சிட்டு பெறும் முடிவுகளில் கிடைக்கும் தளங்களைப் பயன்படுத்தி உங்களுடைய தகவல்களுக்கான பார்கோட்டினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும்.

♣ உதாரணமாக இந்த barcode generator online  தளத்தின் மூலம் மிக எளிதாக உங்களுடைய பார்கோட்டை உருவாக்க முடியும்.

No comments:

Post a Comment