Monday 25 April 2016

கொக்கலி ஆட்டம்


கொக்கலி ஆட்டம்

☘ கொக்கலிக்பட்டை ஆட்டத்தைக் கோக்கலிக்கட்டை ஆட்டம் என்றும் கூறுகின்றனர். உயர்ந்த குச்சியில் ஏறி அதனைக் காலாகப் பயன்படுத்தி ஆடும் ஆண்கள் நடனம் இது. இது பயிற்சி செய்து விளையாடப்படும் ஒரு கலைத்திற ஆட்டம்.

☘ கொக்கு ஒற்றைக்காலில் நிற்பதுபோல் ஒற்றைக் கொம்பில் இருகால்களையும் ஊன்றி நின்றும், இரண்டு கால்களையும் கொக்கு பயன்படுத்திக்கொள்வது போல் இரண்டு கழிகளில் ஏறி நின்றும் இது விளையாடப்படுகிறது.

☘ இந்த விளையாட்டுகள் எல்லாமே கோயில் திருவிழாக் காலத்தில் ஆடிக் காட்டப்படுகின்றன. மரத்தாலான நீண்ட கட்டைகளை காலில் கட்டிக் கொண்டு ஆடும் ஆட்டம் ஆகும்.

☘ கொக்கின் கால்களை போல உயரமான மர கட்டைகளை காலில் கட்டிக்கொண்டு ஆடுவது கொக்கலி ஆட்டம். இந்த மரக்கட்டைகள் ஆலம்விழுது, நுணாமரம், ஊனுமூக்கு மரம் ஆகியவைகளில் செய்யப்படுகின்றன.

☘ நான்கு புறங்களிலும் சதுர வடிவில் கட்டைகளை அமைத்து அதன் கீழ்புறம் ஒரு அங்குல உயர அளவில் இரும்பு தகடு பதித்து அடித்தளத்தை அமைக்கிறார்கள்.

☘ கட்டைக்கு மேல்புறப்பு சுமார் ஒன்றரை அடி உயரத்தில் கால்களில் கட்டைகளை கட்டுவதற்கு ஏற்றவாறு மரக்கட்டைகளை செதுக்கி கொள்கிறார்கள். இதை 5 மீட்டர் அளவுள்ள பட்டை நாடாவை கொண்டு கால்களில் கட்டிகொள்கிறார்கள்.

☘ கொக்கலிக்கட்டையை காலில் மாட்டி ஆடும் போது அதிக எடை இருக்க கூடாது. இந்த கொக்கலி ஆட்ட குழுவில் 15 முதல் 50 வரை இடம்பெறுவார்கள். 15 பேர்களை கொண்ட குழு என்றால் அதில் பத்துபேர் கால்களில் கட்டை கட்டிக் கொண்டு ஆடுவார்கள்.

☘ இரண்டு பேர் கால்களில் கட்டைகளை கட்டுவதற்கு உதவி புரிபவர்களாக இருப்பார்கள். மீதமுள்ள மூன்று பேர் ஆட்டத்திற்கு ஏற்ப மேளம் வாசிப்பார்கள். இது பிரமிக்க வைக்கும் ஆட்டமாகும்.

☘ ஆடுபவர்களின் எண்ணிக்கை பெரும்பாலும் இரட்டைப்படை எண்ணிக்கையிலேயே இருக்கும். தப்பு, சட்டி, டோலக் போன்ற இசைக்கருவிகள் இசைக்கப்படுகிறது.

☘ ஆட்டத்திற்கு பயன்படுத்தும் கட்டை 60 செ. மீட்டர் முதல் 150 செ. மீட்டர் வரை உயரம் உடையதாய் இருக்கும். சிலர் 200 செ. மீட்டர் உயரமுள்ள கட்டைகளையும் பயன்படுத்துகின்றனர். கோயில் என்று மட்டுமல்லாமல் பல்வேறு பொதுநிகழ்விற்கும் விளம்பரத்திற்கும் தற்போது ஆடப்படுகிறது.

No comments:

Post a Comment