Monday 25 April 2016

26-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்

26-04-2016 உலக வரலாற்றுச் சுவடுகள்

வில்லியம் ஷேக்ஸ்பியர்

✏ ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் மற்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக ஆசிரியருமான ஆங்கில இலக்கியமேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் அவர்கள் 1564 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி லண்டனில் பிறந்தார். ஷேக்ஸ்பியர் தனது பன்னிரெண்டாவது வயதில் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளிப்படிப்பை முடிந்தார்.

✏ அதன்பிறகு முறையான கல்வி கற்க முடியாமல் போனது. பன்னிரெண்டு வயது வரை இலத்தீன் மொழியில் இலக்கண, இலக்கியத்தை அவர் கற்றார். லண்டனை அலைக்கழித்த பிளேக் நோய்தான் பல அமரக் காவியங்களை படைக்கும் வாய்ப்பையும், கால அவகாசத்தையும் ஷேக்ஸ்பியருக்குத் தந்தது. அந்த காலங்களில் அவர் நிறைய நாடகங்களையும், கவிதைகளையும் எழுதிக் குவித்தார். சோனட் எனப்படும் புது வகை கவிதைகளையும் அவர் புனைந்தார்.

✏ அதன்பிறகு அவரது நாடகங்கள் புத்தகமாக வெளிவரத் தொடங்கின. 24 ஆண்டு இலக்கியப் பணியில் அவர் மொத்தம் 37 நாடகங்களை எழுதினார். துன்பியல், இன்பியல் என இரு பிரிவுகளாக அவரது நாடகங்களை வகைப்படுத்தப்படுகிறது. இப்படி கனமான கதாபாத்திரங்களுக்கு வலுவான வசனங்களால் உயிர் ஊட்டியதால்தான் இன்றும் அவை உயிரோவியங்களாக உலா வருகின்றன. தமது படைப்புகள்மூலம் இன்றும் நம்மிடையே உலா வரும் N~க்ஸ்பியர் 1616 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி இறந்தார்.

அறிவுசார் சொத்துரிமை தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 26 ஆம் தேதி அறிவுசார் சொத்துரிமை தினம் சர்வதேச ரீதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. மனித வாழ்வில் அன்றாட நடவடிக்கைகளில் ஒரு அங்கமாக அறிவுசார் சொத்துரிமையின் பங்களிப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சர்வதேச ரீதியில் கண்டுபிடிப்பாளர்கள், கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் சமூகத்துக்கு அளிக்கும் பங்களிப்புகளை கௌரவிக்கவும், அவர்கள் பற்றிய விளக்கங்களை மக்களுக்கு வழங்கவும் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது. சர்வதேச அறிவுசார் சொத்துரிமை தினம் அறிவுசார் சொத்துரிமை அமைப்பினால் 2000ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவின் படி, 2001ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதியிலிருந்து கொண்டாடப்பட்டு வருகின்றது.

கணித மேதை இராமானுஜர் அவர்கள் 1920 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி தனது 33வது வயதில் மறைந்தார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றிய மனோன்மணீயம் பெ.சுந்தரம் பிள்ளை அவர்கள் தனது 42வது வயதில் 1897 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி மறைந்தார்.

1865 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்த ஜோன் பூத் என்பவனை கூட்டணிப் படைகள் சுட்டுக் கொன்றது.

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் தேதி உக்ரைனில் செர்னோபில் அணுமின் உலையில் பெரும் விபத்து ஏற்பட்டது. இது உலகின் மிகப்பெரும் அணுவுலை விபத்தாகும்.

No comments:

Post a Comment