Friday 8 April 2016

இன்று உகாதி பண்டிகை 08-04-2016 வெள்ளிக்கிழமை

இன்று உகாதி பண்டிகை
08-04-2016 வெள்ளிக்கிழமை

தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்களின் வருடப்பிறப்பான உகாதி புத்தாண்டு தமிழ்நாட்டிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. உகாதி என்ற சொல் "யுகா" என்ற வடமொழி சொல்லிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் புதிய யுகத்தின் ஆரம்பம் என்பதாகும். இந்த நாளில் வீட்டை மாவிலை தோரணங்களால் அலங்கரித்து அழகு படுத்துகிறார்கள். இந்த நாள் படைக்கும் கடவுள் பிரம்ம தேவனின் திருநாளாக கொண்டாடப்படுகிறது. இந்த புத்தாண்டு தினத்தை உகாதி என தெலுங்கு, கன்னடம் மக்கள் கொண்டாடுகின்றனர். குடி பாடுவா என மகாரா~;டிர மாநில மக்களும், சிந்தி மக்கள் செட்டி சந்த் எனவும் புத்தாண்டு திருநாளை கொண்டாடுகின்றனர்.

உகாதி வரலாறு :

சைத்ர மாதத்தின் முதள் நாள் தான் பிரம்மன் உலகத்தை படைத்தார் என்று பிரம்ம புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே இந்த நாளில் புதிய செயல்கள் செய்ய நல்ல நாளாக கருதப்படுகிறது. இந்த நாள் வசந்தகாலத்தில் பிறப்பதால் கொண்டாடப்படுகிறது.

உகாதி பண்டிகை கொண்டாட்டம் :

உகாதி பண்டிகையை ஒட்டி தமிழ்நாட்டில் வசிக்கும் தெலுங்கு, கன்னடம் பேசும் மக்கள் தங்கள் வீடுகளை மாவிலை தோரணங்களால் அலங்கரித்திருந்தனர். அதிகாலை எழுந்து தலைக்கு குளித்து புத்தாடை அணிந்துகொண்டு வீட்டில் பெரியவர்களிடம் ஆசி பெற்றனர். பின்னர் உகாதி இனிப்புகளை அக்கம் பக்கத்தினருக்கு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வார்கள்.

உகாதி பண்டிகை சிறப்புகள் :

பானாக்கம் என்பது இனிப்பு, புளிப்பு, லேசான காரம் என மூன்று சுவைகளும் ஒன்றாகக்கலந்த ஒரு பானம் ஆகும். இதனை உகாதி நாளன்று செய்யப்பட்டு விருந்தினர்களுக்கு அளிக்கப்படுவது சிறப்பம்சமாகும்.

உகாதி விருந்தில் இடம் பெறும் முக்கிய உணவு உகாதி பச்சடி. இதில் மாங்காய், வெல்லம், மிளகாய், புளி, வேப்பம்பூ, உப்பு, என அறுசுவையும் கலந்து செய்யப்படுகிறது. வாழ்க்கையானது இன்பம், துன்பம் நிறைந்தது என்பதை உணர்த்தவே இதுபோன்ற உணவுகளை வருடத்தின் முதல்நாள் செய்யப்படுகிறது.

அனைவருக்கும் இனிய உகாதி நல்வாழ்த்துக்கள்..!

No comments:

Post a Comment