Tuesday 29 March 2016

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்கள் !

எண்ணெய் தேய்த்து குளிப்பதன் பலன்கள் !

சில வருடங்களுக்கு முன்பு வரை எண்ணெய் தேய்த்து குளித்தல் என்பது நமது கிராமங்களில் சனிக்கிழமை அன்று எண்ணெய் குளியல் நிறைய வீடுகளில் நடக்கும். இன்று அது அரிதாகி விட்டது. தீபாவளி அன்று தான் நம் வீட்டில் எண்ணெய் தேய்த்து குளியல் நடக்கும். தலைக்கு எண்ணெய் தேய்ப்பதில் கூட சாஸ்திரங்கள் உண்டு.
ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் தேய்த்து நீராடினால் மன வருத்தம் குறையும்.

திங்கட்கிழமை உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

செவ்வாய்க்கிழமை உடல் நலக்குறைவையும் குறைக்கும்.

புதன்கிழமை செல்வத்தை பெருக்கும்.

வியாழக்கிழமை உடல் நலத்தை பாதுகாக்கும்.

வெள்ளிக்கிழமை அதிக செலவையும் குறைக்கும்.

சனிக்கிழமை விரும்பியவற்றை அடையலாம்.
எப்போது எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது?
சஷ்டி, ஏகாதசி, துவாதசி, சதுர்த்தி, அஷ்டமி, பிரதமை, பவுர்ணமி, அமாவாசை ஆகிய திதிகளிலும் உத்தரம், கேட்டை, திருவோணம், திருவாதிரை ஆகிய நட்சத்திரங்களிலும் எண்ணெய் நீராடக்கூடாது என்றும் அவ்விதம் செய்ய நேரிட்டால் சிறிது நெய் கலந்து எண்ணெய் தேய்த்து குளிக்கக்கலாம்.

பொதுவாக அறநூல்களில் காலை 8.30 மணிக்கு முன்பும், மாலை 5.00 மணிக்கு பின்பும் எண்ணெய் தேய்த்து நீராடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
எண்ணெய் தேய்த்து குளிப்பதன் நன்மைகள் :
எண்ணெய் தேய்த்து குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் பலன் கொடுக்கும். தீபாவளிக்கு முதல் நாள் இரவு நல்லெண்ணெயில் மிளகாய், மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தட்டிப்போட்டு காய்ச்சி தயார் செய்து கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலை தலை, உடல் எல்லாம் தேய்த்து குளிக்க வேண்டும்.

மிளகாய் வாயுவை அடக்கும். மிளகு, சீரகம் ஜீரணத்துக்கு உதவும். இஞ்சி பித்தத்தை தணிக்கும். மஞ்சள் குளிர்ச்சியை தரும். தலையில் எண்ணெய்யை அழுந்த தேய்த்து சீயக்காய் தேய்த்து குளிப்பது உஷ்ணத்தை நீக்கி குளிர்ச்சி தரும்.

இரண்டிலும் இயல்பிலேயே மிதமான கொழுப்பும் எண்ணெய் சுரப்பும் இருக்கும். அந்த இரண்டும் நம் சருமம் மற்றும் கூந்தலுக்குக் கவசம் போன்றவை. இதைத் தக்க வைத்துக்கொள்ள வெளியிலிருந்து எண்ணெய் தடவுவது, மசாஜ் செய்து குளிப்பது போன்றவை அவசியம்.

உங்களுக்கு எந்த எண்ணெய் பிடிக்குமோ அல்லது ஒப்புக் கொள்ளுமோ அதை தலை, உடல், கை, கால் என முழுக்கத் தடவுங்கள். எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு என்று நாட்கள் உள்ளன. ஆண்கள் புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும் செய்ய வேண்டும்.

சாஸ்திரங்கள் ஆண்கள் சனிக்கிழமைகளில் எண்ணெய் நீராடுவது நல்லது. விரைந்த செயல்பாடுகள், சடங்குகள், மங்கல நிகழ்ச்சிகள் சனிக்கிழமைகளில் செய்வது வழக்கமில்லை. எனவே ஓய்வை உண்டாக்கும் எண்ணெய் குளியலை சனியன்று செய்வது நல்லது.
எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு செய்ய கூடாதவை :
எண்ணெய் தேய்த்து குளித்த பின்பு தூங்கினால் பலன் இருக்காது. இரவு வரை தூங்க கூடாது. ஏன் என்றால் உங்கள் கண்களில் இருந்து வெப்பம் வெளியேறி கொண்டிருக்கும். அப்போது தூங்கினால் உடல் பாதிக்கும்.

உடல், தேய்த்து வைத்திருக்கும்போது கண்ணாடி பார்க்க கூடாது.

பழங்கள், மோர், தயிர், பால், ஜூஸ், ஐஸ்க்ரீம், போன்ற எந்த குளிர்ச்சி பொருட்களையும் உண்ணக் கூடாது.

ஓடி ஆடி வேலை செய்யவோ, விளையாடவோ கூடாது. முழுக்க முழுக்க ஓய்வாக இருக்க வேண்டும் ஆனால் தூங்கக் கூடாது.

No comments:

Post a Comment