Wednesday 30 March 2016

உலக வரலாறு சுவடுகள் 31-3-2016 இன்று

உலக வரலாறு சுவடுகள் 31-03-2016 இன்று
நவீன தத்துவவியலின் தந்தை ரெனே டேக்கார்ட்ஸ்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கணித மேதை மற்றும் தத்துவ மேதை ரெனே டேக்கார்ட்ஸ் 1596 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி பிறந்தார். பாய்ட்டி யேர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். ஆனால் வழக்கறிஞர் தொழிலில் விருப்பம் இல்லாததால் கணிதம், இயற்பியல், மெய்யியல், மருத்துவம் பயின்றார். கணிதம் தவிர வேறு எதிலும் நம்பகமான தகவல்கள் இல்லை என்று கருதினார்.

உலகப் புத்தகத்தைப் புரட்ட ஐரோப்பா முழுவதும் பயணம் செய்தார். 1626இல் சுரடநள கழச வாந னுசைநஉவழைn ழக வாந ஆiனெ என்ற நூலை எழுதினார். ஒளியியல், வானியல், கணிதம் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். கணிதத்தின் முக்கிய கண்டுபிடிப்புகளான கார்ட்டீசியன் ஆயமுறை, பகுப்பாய்வு வடிவியல் ஆகியவற்றைக் கண்டறிந்தார். மனித உடல் எந்திரவியல் விதிகளுக்கு உட்பட்டது என்றார். இது பின்னாளில் நிரூபிக்கப்பட்டு, நவீன உடலியலின் அடிப்படைக் கொள்கையாக அமைந்தது. நவீன தத்துவவியலின் தந்தை என்று புகழப்பட்ட ரெனே டேக்கார்ட் 54 வயதில் 1650 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி மறைந்தார்.

ஈபிள் டவர்

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவர் 1887 முதல் 1889 வரையான காலப்பகுதியில், பிரெஞ்சுப் புரட்சியின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, எக்ஸ்பொசிசன் யூனிவர்செல் என்னும் உலகக் கண்காட்சி விழாவுக்கு, நுழைவாயில் வளைவாகக் கட்டப்பட்டது. 1889 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி தொடக்கவிழா நடைபெற்று, மே 6 ஆம் தேதி திறந்து விடப்பட்டது. 300 வேலையாட்கள், 5 இலட்சம் ஆணிகளைப் பயன்படுத்தி, 18,038 உருக்குத் துண்டுகளை ஒன்றுடனொன்று பொருத்தி உருவாக்கப்பட்டது. கடந்த 1889ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஈபிள் டவர் 1,062 அடி உயரம் கொண்டது.

1917 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி டானிஷ் மேற்கிந்தியத் தீவுகளை டென்மார்க்கிடமிருந்து 25 மில்லியன் டாலருக்கு வாங்கிய அமெரிக்கா அதை வேர்ஜின் தீவுகள் என பெயர் மாற்றம் செய்தது.

1990 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி இந்திய அமைதிப்படை இலங்கையில் இருந்து வெளியேறியது.

No comments:

Post a Comment