Saturday 26 March 2016

27-03-2016 உலக முக்கிய நிகழ்வு

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின்

ரஷ்யாவின் மாஸ்கோவை சேர்ந்தவர் யூரி ககாரின். இவர் தான் விண்வெளிக்குப் பயணித்த முதல் மனிதராகக் கருதப்படுகிறார். அத்துடன் பூமியை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவர் தான் என்றுக் கூறப்படுகிறது. 1961ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி ரஷ்யாவின் வஸ்டொக் - 1 விண்கலத்தில், பூமியைச் சுற்றி 108 நிமிடங்கள் பயணித்தார். இதனால் உலகப் புகழ் பெற்றார். இவர் தொழிற்துறை பயிலும் போது பகுதி நேரத்தில் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டு வந்தார். விமான இயக்கத்தில் தேறிய இவர், ராணுவ விமானியாக தன் வாழ்கையை ஆரம்பித்தார். இவர் 1968ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி விலாடிமிர் செர்யோஜின் என்பவருடன் வழக்கமான விமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, விமானம் விபத்துக்குள்ளாகி இறந்தார். இவர் இறந்த போது இவருக்கு வயது 34.

உலக நாடக தினம்
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 ஆம் தேதி உலக நாடக தினம் மார்ச் கொண்டாடப்படுகிறது. நாடகப்பள்ளிகள், நிகழ் கலை சார்ந்த நிறுவனங்கள், நாடகக்குழுக்கள், தனித்த நாடகக் கலைஞர்களுக்கு என அனைவராலும் ஒரு பொது செய்தியுடன் இந்த நாடகத்தினம் அனுசரிக்கப்படுகிறது. நாடகம் அல்லது கலை உலகில் தொலைநோக்குப் பார்வையுடன் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்த ஒரு கலைஞரிடம் ஒவ்வொரு ஆண்டும் ஒரு செய்தி தரப்பட்டு இருபது மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஊடகங்களின் வழியாக வெளியிடப்படுகிறது. 1961ஆம் ஆண்டு சர்வதேச நாடக நிறுவனம் என்ற அமைப்பு நாடகக்கலை மற்றும் கலைஞர்கள் மீதுள்ள அக்கறையால் உலகநாடக தினத்தை ஆண்டுதோறும் அனுசரிக்க முடிவுசெய்தது.

இலங்கையில் பிறந்து தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பெரும் தொண்டாற்றிய ஸ்வாமி விபுலானந்தர் அவர்கள் 1892 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்தார்.

1845 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி எக்ஸ்ரே கண்டுபிடித்த ராண்ட்சென் அவர்கள் பிறந்தார்.

1977 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி அன்று கனாறி தீவு அருகே இரண்டு பயணிகள் விமானங்கள் மோதிக் கொண்டதில் 583 பயணிகள் பலியாகினர்.

1794 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி அமெரிக்க அரசு நிரந்தர கடற்படையை அமைத்தது.

No comments:

Post a Comment