Tuesday 21 October 2014

பாரம்பரிய மருத்துவம் ஆய்வில் பலவகை மரபணுக்கள் நாரரும்பற் கலங்களுள்




Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931


துடிக்கும் இதய உயிரணுக்கள் உருவாக்கம்
மருத்துவ ஆய்வாளர்கள் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட இதயத்தை மீளவும் ஆரோக்கிய நிலைக்கு கொண்டுவருவதற்கான செயற்பாட்டில் ஒரு படி வெற்றியைக் கண்டுள்ளனர்.
இன்றைய உலகில் மாரடைப்பால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம். இதயம் சுருங்கி விரியக் காரணமாக இருக்கும் இதயத்தசை சிறப்பான இதய உயிரணுக்களால் (இதயக்கலங்கள்) ஆனது. மாரடைப்பு என்று பொதுவாகக் கூறப்படும் இதயத்தசை இறப்பின் போது
இதயத்தசையில் உள்ள இதயக்கலங்கள் தமது துடிக்கும் செயற்பாட்டை இழந்து நாளடைவில் அவை இருந்த இடம் வடுக்களை உண்டாக்கும் வெறும் நார் இழையங்களாக மாற்றப்படுகின்றது. எனவே குறிப்பிட்ட பகுதியின் துடிக்கும் செயற்பாடு இன்மையால் பாதிக்கப்பட்ட  நபரின் இதயம் படிப்படியாக செயலிழக்கத் தொடங்கி இறுதியில் இதயச் செயலிழப்பு ஏற்படுகின்றது.
இதுவரையில் நிரந்தரமானது என்று நம்பிய இந்த நிகழ்வு தடுக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் (Gladstone Institutes ) தெரிவிக்கின்றனர். உருவாகிய வடு உயிரணுக்கள் மீண்டும் துடிக்கும் இதயக்கலங்களாக மாற்றப்படும் பட்சத்தில் இதயம் மீண்டும் முழுமையாக இயங்கத் தொடங்கும்.
சென்ற வருடம், இதே ஆய்வாளர்களால் வடுக்கள் உருவாகும் நாரரும்பற் கலங்கள் (fibroblasts) துடிக்கும் இதயத்தசைக் கலங்களாக உயிருள்ள எலியொன்றில் மாற்றப்பட்டிருந்தன. இன்று, அதே போன்ற செயற்பாடு மனித உயிரணுக்களுக்கு ஆய்வுகூடத்தில்  நிகழ்த்தப்பட்டு நாரரும்பற் கலங்கள் துடிக்கும் இதயத்தசைக் கலங்களாக மாற்றப்பட்டன.
இவ்வாய்வைத் தலைமை நின்று நடத்திய கிளாட்ஸ்டோன் இதயக்குழலிய மற்றும் குருத்தணு ஆய்வு மையத்தின் மேலாளர் பேராசிரியர் தீபக் சிறிவாஸ்தவா, “ஒரு நாள் இந்தச் செயன்முறை மூலம் புதிய தசைக் கலங்கள் இதயத்தில் உருவாக்கப்படும்என்று தெரிவித்தார்.
சென்றவருடம் (2012) நிகழ்த்திய ஆய்வில்,  சிறிவாஸ்தவாவும் அவருடைய சகபாடிகளும் இந்த மாற்றத்தை நிகழ்த்த ஜிஎம்டி (GMT) எனப்படும் மூன்று மரபணுக்கள் போதுமானவை என்று அறிவித்திருந்தனர். இந்த GMT உயிருள்ள எலியின் இதயத்தசையில் ஊசி மூலம் செலுத்தப்பட்டு பெறுபேறு கிடைத்தது. ஆனால் மனித நாரிழையக் கலங்களை இதே முறை மூலம் மாற்றத்துக்கு உட்படுத்துவதற்கு GMT மட்டும் போதாது என்று தெரிவித்தனர்.
ஆய்வில் பலவகை மரபணுக்கள் நாரரும்பற் கலங்களுள் செலுத்தப்பட்டு எந்த மரபணுக்கள் நாரரும்பற் கலங்களை மாற்றவல்லன என்பது அவதானிக்கப்பட்டது. இறுதியில் GMT எனப்படும் மூன்று மரபணுக்களுடன் மேலும் இரு மரபணுக்கள் ESRRG மற்றும்  MESP1 மாற்றத்தை ஏற்படுத்தப் போதுமானவை என்று அறிந்து கொண்டனர். மேலும் இரண்டு மரபணுக்கள் MYOCD மற்றும்  ZFPM2 இந்த நிகழ்வை மிகவும் முழுமைப்படுத்தவல்லன என்றும் தெரிந்து கொண்டனர்.



Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com

No comments:

Post a Comment