Tuesday 21 October 2014

பாரம்பரிய மருத்துவம் துளசியைச் சாறாகவோ, கஷாயமாகவோ




Neela Matrimony
Sri Bala Thirupurasuntari Jothidam
ஆன்மிகம், ஜோதிடம், சம்மந்தமான கேள்விகளுக்கு அணுகவும்
1/255, J. J. Nagar Mugappair East, Chennai-600037
Cell : 9600068631 - 9600068931


துளசி
துளசியை அறியாதார் இருக்க முடியாது. தோட்டங்களிலும் காடுகளிலும் உஷ்ணப்பாங்கான பூமிகளிலும் தானே வளர்ந்தும், பயிர் செய்யப்பட்டும், தெய்வமாகப் பூஜை செய்யப்பட்டும், தெய்வப்பூஜையில் சிறந்த சாதனமாகப் பயன்படுத்தப்பட்டும், தரித்து, முகர்ந்து, மென்று சாப்பிடப்பட்டும் ஒவ்வொரு இந்தியனுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டுள்ள தோட்டத்துப் பச்சிலையான துளசி நம் ஆரோக்கியத்திற்கு உகந்த பாதுகாப்பளிக்கும் மூலிகையாகவும் ஆகிறது. இயற்கைக்கு பூர்ணபக்கபலமாக நிற்பதே இதன் தனிப்பெருமை.
துளசியில் எத்தனை வகை? விளையும் நிலத்தையும் சூழ்நிலையையும் ஒட்டி நிறத்திலும் மணத்திலும் உருவிலும்தான் எத்தனை மாறுதல்கள்! எனினும் நமக்கு அதிகமாக எளிதில் கிடைப்பவை வெண்துளசியும், கருந்துளசியும்தான். மற்றும் துளசி இனத்தில் காட்டுத் துளசிப் பிரிவில் சேர்ந்த ருத்திரசடை (திருநீற்றுப்பச்சை)யும், ராமதுளசி (எலுமிச்சம்துளசி)யும், நமது பழக்கத்திலுள்ளவை.
வெள்ளைத்துளசியே அதிகமாக கிடைக்கும். இதன் இலை, தண்டு, காம்பு முதலியவை வெண்மை கலந்த பச்சை நிறத்துடனிருக்கும். துளசி என்ற பொதுப்பெயர் இதற்கே அதிகப் பழக்கத்திலுள்ளது. கருந்துளசியின் இலை, தண்டு, காம்பு முதலியவை கருஞ்சிவப்பு ஏறிய பச்சை நிறத்துடனிருக்கும். இரண்டுக்கும் குணத்தில் அதிக வேற்றுமை இல்லை. மணற்பாங்கான உஷ்ணபூமியில் உஷ்ணதேசத்தில் விளைவதில் காரம் அதிகம். நீர்ப்பாங்கானவிடத்தில் குளிர்ந்ததேசத்தில் விளைவதில் காரம் சற்று குறைவு.
இறைவன் வழிபாட்டிற்கு உரியதாதலால் இதை பெரும்கண்ணியத்துடன் உபயோகிப்பர். திருமாலின் பிரசாதமாகவும், பித்ருக்கள் ஸன்யாஸிகள் இவர்களது பூஜைக்கு பிறகும் இதை உட்கொள்வதும், முகர்வதும், காதில் தரிப்பதுமுண்டு. துளசி பயிரான இடத்தில் உள்ள சூழ்நிலையே காற்றும் தண்ணீரும் மண்ணுமே சுத்தமாகிவிடும். தன்னுடனகலந்தவைகளை அழுகவிடாது. மலேரியா, இன்ப்ளூயன்ஸா முதலிய தொற்றுநோய்கள் பரவும்போது துளசியின் மணத்தை நுகர்ந்துகொண்டேயிருக்கும்படி சூழ்நிலையை அமைத்துக்கொண்டால் நோய் மற்றவருக்கு தொத்தாது. வந்த நோயின் கடுமையும் குறையுமென்பர்.
இதன் சுவை காரம் கலந்த கசப்பு. உடம்பில் கதகதப்பைப் பாதுகாக்கவும், குறைந்தால் அதிகரிக்கச்செய்யவும் திறமை படைத்தது. இந்தக் கதகதப்பும் காரமும் காரணமாக மார்பு தொண்டை முதலிய இடங்களில் கட்டி உபத்திரவிக்கும் கபத்தை இளக்கி வெளியேற்றும். கபமும் உமிழ்நீரும் அழுகி ஏற்படும் வாய் துர்நாற்றத்தைப் போக்கும். நாக்கில் சேரும் குழகுழப்பையும் பூச்சையும் இளக்கி வெளியேற்றி வாயில் சுரசுரப்பையும், நல்ல சுவையுணர்ச்சியையும் அளிக்கும். பசியைத் தூண்டி நல்ல ஜீர்ணசக்தியை அளிக்கும். குளிருடன் ஏற்படும் ஜ்வரம், மார்பில் கபக்கட்டுடன் ஏற்படும் இருமல், மூச்சுத் திணறல், நுரையீரலில் கபம் நீர் நிரம்பி ஏற்படும் விலாவலி, குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றில் அஜீர்ணம், மார்பில் சளிக்கட்டு, தலையில் நீர்க்கோர்வை, இனந்தெரியாத வேதனையால் அழுகை, உடலை முறித்துக்கொள்ளுதல் முதலியவைகளில் அனுபானமாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.
பருவ மாறுதல்கள் தோறும் இன்ப்ளூயன்ஸா முதலிய விஷஜ்வரங்கள் மலேரியா முதலிய முறை ஜ்வரங்கள் இவைகள் பரவலாக ஏற்படும்போது, துளசிச் சாற்றை அடிக்கடி சாப்பிடுவது, துளசிபோட்ட வென்னீரைக் குடிப்பது, துளசியை அரைத்து வேதனையுள்ள இடங்களில் பூசுவது, துளசியை முகர்வது முதலியவை ஆச்சரியமான வகையில் வேதனையைக் குறைத்து நோயாளிக்கு மனத்தெம்பு ஊட்டுவதைக் காணலாம். உடலில் எப்பகுதியாவது அழுக ஆரம்பித்தாலோ, அழுகிக் கிருமிகள் உண்டானாலோ, துளசியைத் தொடர்ந்து உபயோகிக்க்க் கிருமிகள் உண்டானாலோ, துளசியைத் தொடர்ந்து உபயோகிக்கக் கிருமிகள் நசித்து அழுகல் நின்று புண் ஆறும். வயிற்றில் ஆகாரம் அழுகி ஏற்படும் கீரைப் பூச்சிகளையும் இது வெளியாக்கும். தேமல், படை, எச்சில் தழும்பு, காணாக்கடி இவைகளில் மேல் பூச மிகவும் நல்லது.
பச்சைத் துளசியைக் கசக்கிப் பிழிந்து சாறாகவோ, கஷாயமாகச் செய்தோ நிழலில் உலர்த்தித் தூளாக்கிக் கொண்டு சூர்ணமாகவோ, அதைக் கஷாயமாகவோ, டீயாகவோ செய்தும் உள்ளுக்குச் சாப்பிடலாம். துளசியைப் பச்சையாகவோ காய்ந்ததாகவோ அரைத்து மேல் பூசலாம்.

உபயோகமுறைகள்
துளசியைச் சாறாகவோ, கஷாயமாகவோ முன்சொன்ன நோய்களில் கொடுக்கலாம். துளசிச் சாறு குழந்தைகளுக்கு ½ - 2 டீஸ்பூன், பெரியோர்களுக்கு ¼ - ½ அவுன்ஸ். சூர்ணம் குழந்தைகளுக்கு 2 – 4 சிட்டிகை, பெரியோர்களுக்கு ½ - 1 டீஸ்பூன். ஒரு பிடி துளசியை (சுமார் 2 தோலா.) நான்கு அவுன்ஸ் ஜலத்திலிட்டு, ஒரு அவுன்ஸ் மீதமாகக் காய்ச்சிய கஷாயத்தில் பெரியோர்கட்கு ½ - 1 அவுன்ஸும், சிறியோர்கட்கு 1 – 2 டீஸ்பூனும் கொடுக்கலாம்.
நோய்களில் அனுபவமுள்ள பெரியோர்கள் துளசியை நூற்றுக்கணக்கான முறைகளில் உபயோகிப்பர். சில முக்கிய முறைகளை மட்டும் கீழே தருகிறோம். குளிர், கடுப்பு, வலி, தலைகனம், மார்ச்சளி முதலியவைகளுடன் ஏற்படும் ஜ்வரங்களிலும் முக்கியமாகக் குளிருடன் ஆரம்பிக்கும் முறை ஜ்வரத்திலும், யானைக்கால் ஜ்வரத்திலும் துளசியுடன் மிளகு சேர்த்து உபயோகிப்பர். ஜ்வரம் வரும் போலிருக்கும் போதே பத்து துளசி இலையையும் ஐந்து மிளகையும் வாயிலிட்டு மென்று சாப்பிட ஆரம்பநிலையிலேயே ஜ்வரம் தவிர்க்கப்பட்டுவிடும். உடல் கனம் குறைந்து வேதனைகள் நீங்கிவிடும். ஜ்வரம் வந்தபின் மிளகையும் துளசியையும் கஷாயமாக்கி தேன் சர்க்கரை கலந்து கொடுக்கலாம். துளசி, மிளகு, பழயவெல்லம் மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டு, தினமும் காலை ஒரு கழற்சிக்காயளவு தொடர்ந்து சாப்பிட்டு வர மலேரியா, யானைக்கால் ஜ்வரம் வராது. அவ்விதமே பத்து துளசியையும் ஐந்து அல்லது மூன்று மிளகையும் வாயிலிட்டு மென்று, தினமும் சாப்பிட்டு வரலாம். மிளகை துளசிச் சாற்றில் ஏழு அல்லது இருபத்தோரு  நாட்கள் ஊரவைத்து, பிறகு நிழலில் உலர்த்தி அதில் 5 – 10 மிளகுகள் சாப்பிட குளிர் ஜ்வரம், காணாக்கடி, முறைஜ்வரம் முதலியவைகள் நீங்கும். துளசி மிளகு இவைகளுடன் தும்பை இலையையும் சேர்த்துக் கஷாயமிட்டுச் சாப்பிட குளிர் ஜ்வரம், வாயுவால் ஏற்படும் குடைச்சல்வலி இவை நீங்கும். விஷஜ்வரங்கள் பரவும்போது இதைத் தடுப்பிற்காக உபயோகப்படுத்தலாம்.
துளசியுடன் மிளகுக்குப்பதில் ஓமத்தைச் சேர்த்துச் சாப்பிட வயிற்றில் அஜீர்ணத்தாலும், வாயுவாலும் ஏற்படும் பொறுமல், உப்புடம், வலி, அஜீர்ண பேதி, கீரைப் பூச்சிகள், பூச்சிகளால் ஏற்படும் பேதி, முதலியவைகளில் நல்ல குணம் கிடைக்கும். துளசியையும் ஓமத்தையும் சிறிது ஜலம் விட்டு அரைத்து ஸ்வரஸமாக்கியோ தேன் சர்க்கரை சேர்த்து உபயோகிக்கலாம். துளசி, ஓமம், பழைய வெல்லம் இம்மூன்றையும் சேர்த்து நன்கு இடித்து, சிறிது வெய்யிலில் காயவைத்து தினமும் சாப்பிட்டு வரலாம். சிசுக்களுக்கு ஏற்படும் வயிற்றுநோய்களிலும் கபக்கட்டிலும் இம்முறைகள் மிகவும் பயன்தரும். கபம் அதிகமாக இருக்கும்போது ஓரிரண்டு வெற்றிலையைக் கசக்கிப் பிழிந்த சாறும் சேர்த்துக் கொடுக்க நல்லது.
இதுமாதிரியே துளசியுடன் இஞ்சி சுக்கு திப்பிலி இவைகளில் ஒன்றைப் பக்குவப்படுத்தி எல்லா நிலைகளிலும் கொடுக்கலாம். துளசியையும் மருளையும் சாராகப் பிழிந்து சிறிது சூடாக்கிக் காதில் விட, காது நாற்றம், மந்தம், வலி இவை நீங்கும். துளசிச் சாற்றுடன் கிராம்புத் தூளும் கற்பூரமும் சேர்த்து, சொத்தையுள்ள பற்களிலும் ஈறு கொழுத்த இடங்களிலும் வைக்க வேதனை நீங்கும். துளசியை அரைத்து உடலில் பூசி சிறிது நேரத்திற்குப் பின் குளிக்க காணாக்கடி நீங்கும். துளசிச் சாற்றையும், எலுமிச்சம் பழச்சாற்றையும், கற்பூரமும் சேர்த்துத் தடவ தலையிலுள்ள பேன்களும், அரிப்பு, படை, தேமல், வரட்டுச் சொரி முதலியவைகளும் நீங்கும். கிராம்பையும் சுக்கையும் துளசியைக் காயவைத்துத் தூள் செய்து நஸ்யமாக இட மூக்கடைப்பு, தலைச்சளி, தலைவலி, தலைக் குடைச்சல் இவை நீங்கும்.
இவைகளைப் போல இன்னமும் எத்தனையோ உபயோகங்கள். அதைக் கைவைத்தியமாகப் பழகிய தலைமுறைகள் மறைந்து வருகின்றன

Matrimony, Jothidam, aanmegam
Tamil Monthly Books, Service 
Price Rs-20,  6-Month Rs-120,
1-Year Rs 240, Rupees Only
Matrimony, Register,
For  All Caste Service,
Single Price 300/- Only
E-mail, Books, Post, online, Cell, &
Facebook, Twitter, All Service,
Cell : 9600068631, 9600068931
E-mail ID : gmneelamatrimony@gmail.com
www.nmmanamalai.blogspot.in
www.neelamatrimony.com
 
.

No comments:

Post a Comment