Friday 1 August 2014

கல்யாணமே வைபோகமே


கல்யாணமே வைபோகமே
பிராமணர்களும் கலப்புத் திருமணங்களும்.
திருமணம் என்பது இல்லரத்திற்கு மட்டும் அல்ல சாஸ்திரம், உட்பட்டது. கலாச்சாரம் சம்மந்தபட்டது திருமணத்திற்கு தயாரகிருக்கும் ஆண், பெண், இருபலரும், சமூகத்துக்கும், பெற்றோருக்கும் துரோகம் செய்யாத வாரக  இருக்கவேண்டும். காதல் திருமணம் சமூகம் ஒதுக்க வில்லை, காதலிப்பர்கள்தான் சமூகத்தை  மதித்து நடப்பதில்லை.  காதல் திருமணம் செய்து கொண்டர்கள் தன் பிள்ளைகளை சரியான பாதயில் கொண்டு செல்ல முடிவதில்லை. பள்ளி முதல் திருமணம் வரை தன்  பெற்ற குழந்தைகள் அவதிப்படுகிறார்கள், அவமானப்படுகிறார்கள். சமூகத்துடன் இருக்கும் காதல் பெற்றோர்கள் அங்கிகறிக்க வேண்டும். இதன் மூலம் கலப்பு திருமணம் குறையும். வாசதி குறைஇருந்தாலும் பெற்றோர்கள் அந்த காதல் ஆதரிக்கவேண்டும். இதன் மூலம் சமூகம் ஒன்றுபடும்.  சமூகம் ஒன்றுபட்டாள் தான் சாஸ்திரம் நிமிர்ந்து நிர்க்கும். சாஸ்திரம், சமூகம் கலந்த நம்வாழ்க்கை பிறர் அங்கிகறிக்க வேண்டும் என்றால் திருமணங்கள் உன்னதமாக இருக்கவேண்டும். என்பது எனது தின்னம்.


ஒன்பது வருடமாக நாம் தொடர்ந்து ஊதுகின்ற சங்கொலியின் நாதமாக விளங்கும் இம்மாத இதழ் முகப்பு தலைப்பு, பிராமணர்களின் கலப்புத்திருமணங்கள் பற்றியது ஆகும். இனிமேலும் சொல்வதற்கு இதில் என்ன இருக்கிறதுஎன்று நினைக்கும் கணிவான உள்ளங்களின் முனுமுனுப்பு, நாம் காதில் விழவே செய்கிறது. பணிவாக சொன்னாலும் பட பட வென பொறிந்தாலும் அணிஅணியாக ஆங்காங்கு நடந்து கொண்டுதான் இருக்கும் நம் சமூக கலப்பு திருமணங்களை துணிவாக எதிர்த்து எழுதுவதால் மட்டும் துளியும் பயன் கிடைக்கப்போவதில்லைஎன்ற கருத்தை தனியாக கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு இவ்விஷயத்தை பற்றிய மேலும் சில சிந்தனைகளை எடுத்துரைப்பதே இம்மாத கட்டுரையின் நோக்கமாகும்.
கட்டுரையை தொடர்ந்து எழுதி நம் சிந்தனைகளை வெட்ட வெளிச்சமாக்குவதற்கு முன்பு, இந்த விஷயத்தை ஒட்டி இணையத்தளத்தில் எழுதப்பட்ட ஒரு கருத்து பதிவை பற்றியும் அதற்கு மறுமொழி சொன்ன நமக்கு ஏற்பட்ட அனுபவங்களை பற்றியும் அதன் தொடர்பாக எழுந்த சில கருத்து பரிமாற்ற சர்ச்சைகளை பற்றியும் குறிப்பிடுவது அவசியம் என்று கருதுகிறோம்.
  சில காலம் முன்பு அதில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அந்தணராய் பிறந்திருந்தாலும் அதன் எந்த அடையாளத்தையும் ஏற்றுக்கொள்ள விரும்பாத இந்த சிந்தனையாளர் பிறப்பின் அடிப்படையில் அமைந்தல்ல சாதிகளின் துவக்கம்என்ற கருத்தில் அந்த பதிவை எழுதியிருந்தார். முழுவதும் ஏற்றுக்கொள்ள தக்கதாக இல்லாவிடினும், போற்றுதற்குரிய நல்ல நேர்த்தியான முறையில் அமைந்திருந்த அந்த கட்டுரையை நாம் பாராட்டி, “நல்லதொரு ஆராய்ச்சி கட்டுரைஎன்ற விமர்சனத்தை (Comments) இட்டிருந்தோம். அதன் தொடர்பாக எழுந்த சில கருத்துப் பரிமாற்றங்களுக்கு பிறகு கலப்புத் திருமணத்தை எதிர்த்து தொடர்ந்து உங்கள் பத்திரிக்கையில் எழுதி வரும் நீங்கள் இந்த கட்டுரையை பாராட்டுவதாயிருந்தால், அவ்வாறு செய்வதை {கலப்பு திருமணங்களை எதிர்த்து எழுதுவதை} விட்டுவிட வேண்டும்என்ற அளவில் நிகழ்வுகள் நடந்து முடிந்தன. நாம் இதை இத்தனை விரிவாக சொல்வதற்கு சில அழுத்தமான காரணங்கள் உள்ளன.
பிறப்பின் அடிப்படையில் ஜாதிகள் தோன்றியிருக்க முடியாது என்பதை ஏற்றுக்கொண்டாலும் கூட, அவை சார்ந்த கலாச்சார எச்சங்களை காப்பாற்றப்படுவது பிறப்பின் அடிப்படையில் அமைந்த ஜாதிகளை பேணுவதன் மூலமே சாத்தியமாகும் என்று நாம் கொண்டிருந்த கருத்து பற்றி இந்த நிகழ்வு நம்மை மேலும் சிந்திக்க வைத்தது.
கலப்புத் திருமணங்கள் கூடாதுஎன்று நாம் கட்சி கட்டும் கருத்துக்களின் அடிப்படையில் மேற்கொண்ட இந்த ஆத்ம பரிசோதனை, மேலும் ஆழமான சிந்தனை தேடல்களுக்கு நம்மை இழுத்து சென்றது.
1 ஜாதிகள் என்பதின் உண்மையான மற்றும் அடிப்படை பொருள் என்ன?
2 ஜாதிகளின் தனிப்பட்ட இயல்புகள், சிறப்புகள், குறைகள், சீரழிவுகள் என்று ஏதேனும் பிரத்யேகமாக இருப்பது சாத்தியமா?
3 அப்படி இருந்தால் அவற்றை பாதுகாப்பது அவசியமா?
4 ஆம் எனில் அந்த அவசியத்தை எப்படி செயபடுத்துவது?
5 கலப்புத் திருமணங்கள் இந்த பிரத்யேக தன்மைகளை எந்த அளவிற்கு அழிக்கின்றது அல்லது மாற்றுகின்றது?
இவை போன்ற எண்ணற்ற கேள்விகளை நம்மை நாமே கேட்க வைத்து இக்கருத்தின் விரிவை மேலும் அதிகப்படுத்திய திரு.ராஜன்குறை அவர்களுக்கு இம்மாத முகப்புக் கட்டுரையை சமர்பிக்க விரும்புகிறோம்.
கலப்புத் திருமணங்கள் கூடாது என்ற நமது மாற்றமில்லாத நிலைப்பாட்டின் துணை அம்சங்களாகவே ஜாதிகளின் ஆராய்ச்சியை முன்நிலைப்படுத்தி, நாம் இங்கே மொழியும் கருத்துக்கள் எடுத்து கொள்ளப்படவேண்டும் என்பதையும் இப்பதிவு ஒரு சுருக்கமான கேப்சியூல்வடிவமே என்பதையும் முதற்கண் தெரிவித்துக் கொள்கிறோம். ஒரு புத்தகமாக பின்னர் வெளியிட இருக்கும் இந்த கருத்துக்கள் பொதுவாக தொட்டு செல்லும் இயல்பு சார்ந்தவை மட்டுமே.
பிராமணத் தனித்தன்மைகள் அழிந்துவிடாமல் அடுத்த தலைமுறைக்கு சென்றடையும் பொருட்டுதான் நாம் கலப்புத் திருமணங்களை எதிர்க்கிறோம். பிராமண ஜாதி உயர்ந்தது என்றோ, அதன் கலாச்சாரம் மட்டுமே அக்மார்க் முத்திரை பெற்ற அசல் பழநி சித்தனாதன் விபூதி என்றோ நாம் கூறவில்லை. தனித்தன்மை என்பதற்கும் உயர்ந்தது என்பதற்கும் உள்ள வேறுபாட்டை நாம் உணர்ந்தே இருக்கிறோம்.
உலக சரித்திரத்தை உற்று நோக்கினால், அதன் ஒவ்வொரு பகுதியிலும், எல்லா காலகட்டத்திலும், சில குறிப்பிட்ட தனித்தன்மைகளை உடையவர்கள் ஒரு குழுவாக அல்லது அமைப்பாக, தமக்கென்று ஒரு தலைவன் அல்லது கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கி வருவது தெளிவாகும். இந்த குழு அல்லது பிரிவு, தற்கால மதங்கள் மற்றும் கலாச்சார மாறுதல்கள் தோன்றுவதற்கு வெகுகாலம் முன்பே இருந்து வந்திருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மொழி, உடை, உணவு பழக்கவழக்கம் மற்றும் புற தோற்றங்களின் சில அம்சங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மனிதர்களின் கூட்டங்கள் தனியான பெயர் மற்றும் அடையாளங்களுடன் இருந்து வந்திருப்பதை சரித்திரம் நமக்கு காட்டுகிறது. ரோமானியர்கள், செவ்வந்தியர்கள், மங்கோலியர்கள், ஆப்பிரிக்கர்கள் மற்றும் ஆரியர்கள் என்றழைக்கப்பட்ட ஆசிய கண்டத்து மக்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் இந்த தனிப்பட்ட குழுக்கள் இருந்து வந்திருக்கின்றன. இதை இன்னும் சற்று விரிவாக காண்போம்.
தொடக்க காலத்தில், இந்தியாவை போலவே, உலகம் முழுவதும் தாங்கள் செய்கின்ற தொழிலின் அடிப்படையில் சில குழுக்கள் ஒரு குறிப்பிட்ட பூகோள எல்லைக்குள், ஒரு தலைவன் அல்லது அரசன் கீழ் இருந்துவந்தன. Tribe என்ற ஆங்கில சொல்லின் லத்தீன் மூலம் Tribes என்பதாகும். இதன் பொருள் ஒரு குழு என்பதே ஆகும். கிறிஸ்துவ முகம்மதிய மதங்கள் தோன்றுவதற்கு முன்பே பின்பற்றுப்பட்டுவந்த இந்த குழுக்களின் அடையாளம் மற்றும் தனித்தன்மைகள், அந்த மதங்கள் தோன்றியதால் எந்த வித பெரிய மாற்றத்தையும் அடையவில்லை.
5000-ம் வருடங்களுக்கும் அதிகமாக தொடர்ச்சியான வரலாறு உடைய ஆப்கான் பிரதேச மக்களில் இருந்த குசுரு, பக்டூஸ், வாசி போன்ற குழுக்களின் மதம், பின்னர் இஸ்லாமாக மாறினாலும் அவர்களின் உணவு, உடை மற்றும் தோற்றங்கள் இன்றுவரை மாறாமல் பாதுக்காக்கப்பட்டு வருகின்றன. இதை போலவே, சமீபகாலம் வரை, அமெரிக்கா, கனடா மற்றும் ஜப்பான் நாட்டு மக்களிலும் இங்கு ஜாதிகள் என்று சொல்லப்படும் குழு அடையாளங்கள் பரவி இருந்தன. அமெரிக்காவின் ஆளுமைக்குள் வந்த பிறகு தங்கள் கலாச்சார அடையாளங்களை இழந்த ஜப்பானிய சமுதாயத்திலும்உயர்ஜாதி, தீண்டதகாதவர்என்ற ஜாதிபேத சமுதாய அமைப்பு ஆழமாக இருந்து வந்தது என்ற உண்மை பலருக்கு வியப்பு அளிக்கலாம். சாமுராய்என்று அழைக்கப்பட்ட ஜப்பானிய உயர்ஜாதி மக்கள், கோயில்களில் வழிபாடு செய்யும் பிரத்யேக உரிமை பெற்றிருந்தார்கள்.
ஜப்பானை போலவே, சீன மற்றும் அனைத்து தென்கிழக்கு ஆசிய கலாச்சாரங்களிலும் இம்மாதிரியான குழு அல்லது ஜாதி அமைப்பில் இயங்கிய சமூக கட்டமைப்பு சமீபகாலம் வரை இருந்து வந்திருக்கின்றன. அ இடைவிடாது உலகம் முழுவதும் நடைபெற்ற யுத்தங்கள் மற்றும் குடியேற்றங்கள் ஆகியவை எல்லாம் இந்த தனித்தன்மையை காப்பாற்றுவதற்கு அல்லது பிறர் மீது திணிப்பதற்கு காரணமாகவே நிகழ்ந்து வந்திருக்கின்றன. இவையெல்லாம் நாம் எடுத்துச்சொல்லும் நோக்கம் பிறப்பின் அடிப்படையில் ஜாதிகள் தோன்றி இருக்கலாம் என்ற கருத்தை வலியுறுத்துவதற்கே ஆகும்.
எது எப்படியாயினும் இம்மாதிரியான தனிப்பட்ட குழுக்கள் உலகெங்கும் Tribe என்றும் அவர்களது நடைமுறைகள் Tribal என்றும் அழைக்கப்படும் போது அதே தன்மைகளை உடைய இந்திய குழுக்களை மட்டும் ஒட்டுமொத்தமாக Tribal என்று எவரும் குறிப்பிடவில்லை. சில மலைவாழ்மக்களை மட்டும் Schedule Tribe என்றும் சிலரை Schedule Caste என்றும் அரசு அட்டவனைப் படுத்தியது ஒரு வரலாற்று மோசடி. இந்திய சமூக கட்டமைப்பின் இயலபுகள் எதையும் முழுமையாக புரிந்து கொள்ள இயலாத மேல் நாட்டு சரித்திர ஆராய்ச்சியாளர்கள் வர்ண பேதம் மற்றும் ஜாதி பேதம் இவற்றுக்கு இடையேயான வேறுபாட்டை அவதானிக்க முடியவில்லை. இதன் தொடர்ச்சியாகவே இந்தியாவில் பிறப்பின் அடிப்படையில் இயங்கி வந்த பல்வேறு குழுக்களை, ஜாதி என்ற பெயரில் வேற்றுமைப்படுத்தி, பின்னர் அதை ஒரு பிற்போக்குத்தன அடையாளமாக முன்நிறுத்தியதில் மேல் நாட்டு வரலாற்று ஆசிரியர்கள் முழு வெற்றி கண்டார்கள். இதைப்ப் பற்றிய நீண்ட ஆராய்ச்சி, யூகங்கள் மற்றும் Inference என்ற கருத்துக்கொணர்வு ஆகியவை மூலம் தற்போது நாம் எட்டியுள்ள நிலைப்பாட்டை இக்கட்டுரையின் இறுதி பகுதியாக்க விரும்புகிறோம். இனம், மொழி, தேசம், ஆகியவை பிறப்பின் அடிப்படையில் இயற்கையாக அமைவது போன்றே ஜாதி என்ற குழு அடையாளுமும் உருவானது.. ஆனால் இதற்கு மாறாக, வர்ணம் என்ற பிரிவு, பிறப்பின் அடிப்படையில் இல்லாமல் செய்யும் தொழிலின் தன்மையைப் பொருத்து ஏற்படுத்தப்பட்டது. ஆதியில் வேதம் கற்கும் எவரும் பிராமணனாகவும் மீதி தொழில் செய்வோர் மற்ற மூன்று வர்ணமாகவும் இருப்பது இதன் மூலம் சாத்தியமாக இருந்தது. நாளைடவில் மெல்ல மெல்ல, ஈடுபடும் தொழிலும் பிறக்கும் ஜாதியும் ஒன்றாகப் போனதால் பூஜை, வழிபாடு போன்ற தொழில் செய்பவர் உயர் ஜாதியாகவும் வயல் வேலை, வண்ணான் வேலை, செய்பவர் கீழ் ஜாதியாகவும் கருதப்பட தொடங்கினர். செயற்கையாக உருவாக்கப்பட்ட வர்ணங்களுக்கும் இயற்கையாக உருவான ஜாதிகளுக்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை தெரிந்து கொள்ள இயலாத மேலை நாட்டு மெத்தப் படித்தவர்களின் அந்த தவறால் இந்திய சரித்திரம் மட்டுமின்றி நம் சமூகப் பார்வையும் தடம் புரண்டு விட்டது. ஜாதிகள் என்பது ஒரு கேவலமான விஷயம் போலவும் எல்லா சமூகக் கொடுமைகளுக்கும் அடிப்படைக் காரனம் போலவும் சித்தரிக்கபட்டு நம் சிந்தையில் பதிக்கப்பட்டுள்ள பிழையை அகற்றிய பிறகே கலப்புத் திருமணங்கள் பற்றிய சரியான ஒரு அனுகுமுறையை நாம் ஏற்க முடியும்.
நம் ஜாதிக்குள் மட்டுமே திருமணங்கள் செய்து கொள்ளப்பட வேண்டும் என்ற நிலைப்பாடு இயற்கையாக நமக்கு அமைந்த குழு அடையாளத்ததைத் தக்க வைத்து கொள்ளும் ஒரு எளிய நடைமுறையே. பிறப்பின் அடிப்படையில் அமைந்த இந்த அடையாளம் உயர்வானது அல்லது அதே போல் அமைந்த மற்றவரின் இன்னொரு அடையாளம் தாழ்வானது என்பது இந்த நிலைப்பாட்டின் பொருள் மற்றும் நோக்கம் அல்ல.
ஜாதிகள் என்ற குழு அடையாளம், மதங்கள் என்ற இறை வழிபாட்டு முறைகள் வலுப்படுவதற்கு முன்பே ஆழமாக உலகெங்கும் வேரூன்றி இருந்து வந்திருக்கின்றது. மதங்கள் ஜாதியை ஒழிக்க முடியவில்லை. ஜாதி பேதம் இல்லாமல் எந்த மதமும் உலகத்தில் இல்லை. ஜாதிகள் அற்ற மதம் என்ற கொள்கையுடன் தோன்றிய கிருஸ்துவ மதத்தில் தற்போது 91 ஜாதிகள் இருக்கின்றன. இதனுடன் மதம் மாறிய இந்திய இந்துக்கள் தம்முடன் தக்க வைத்துகொண்ட ரெட்டி, நாடார், தலித் ஆகிய ஜாதிகள் மட்டுமின்றி கத்தோலிக் பிராமின் இவையெல்லாம் சேர்த்து கொண்டால் நம் கருத்து தெளிவாகும். இஸ்லாம் மத்ததில் லெப்பை, கான், ராவுத்தர், அன்சாரி பெய்க் போன்ற கிளை ஜாதிகள் மட்டுமின்றி கோஜா, அகமதியா, சன்னி, ஷியா, போன்ற பெரிய ஜாதிகளும் இருக்கின்றன. இவற்றுக்கு இடையே கலப்புத் திருமணங்கள் ஆதரிக்கப்படுவதில்லை.

பிராமணர்கள் ஜாதியை உருவாக்கவில்லை. பகுத்தறிவாள பட்டாக் கத்திகள் சொல்வதைப்போல், பிராமணர்களின் சுயலாப சூழ்ச்சியினால்தான் ஜாதிகள் உருவாகியிருந்தால் கிருஸ்துவ, இஸ்லாமிய, யூத, சீக்கிய புத்த மதங்களில் ஜாதிகள் இருக்ககூடாது. இயற்கையான இந்த அம்சத்தை அனுமதிக்க இயலாத காரணத்தினால்தான் இந்தியா முழுவதும் ஒரு சமயம் செல்வாக்குடன் பரவி இருந்த ஜைன மதம் இன்று இந்திய மக்கள் தொகையின் ஒரு சதவீதத்திற்கும் குறைவான மக்களுடைய மதமாக சுருங்கி விட்டது.
உலகத்தின் சிறந்த கோட்பாடுகள், கலைகள், கலாச்சார விழுதுகள், பழக்க வழக்கங்கள், மொழி, உணவுகள், உடை, காவியங்கள், கதைகள், ஓவியங்கள், ஆகிய தனித்தன்மை வாய்ந்த ஒவ்வொரு விஷயங்களும் தொடந்து காப்பற்றபடுவது, கூடியவரை அவை பிற ஒத்த அல்லது எதிர் அம்சங்களுடன் நிகழும் கலப்பை தவிர்ப்பதன் மூலமே எளிதாக சாத்தியபடும்.
எந்தவித துவேஷமும் எவரையும் துச்சமென நினைக்கும் இழிவும் இன்றி, நிந்தை, நிஷ்ட்டூரம் அகந்தை, ஆணவம் அறவே அகற்றி, அந்தந்த ஜாதியில் அவரவர் திருமணங்கள் செய்வதன் மூலம் முன்னோர்கள் தந்த தம் தம் தனி அடையாளத்தை சொந்தமாக்கி எந்தையும் தாயும் இருந்து குலவிய இந்த நாட்டைமேலும் இனிதாக்க வாரீர் என சொந்தங்களை அழைத்து இப்பதிவை நிறைவு செய்கிறோம்.








புரோகிதர், ஜோதிடர்
Manikanda Sharma G.V
Neela Matrimony
Neela Infomedia  ( WEBDESIGN )
Neela Computers Sales & Services
99 62 22 53 58
94 44 22 60 39

No comments:

Post a Comment