Wednesday 25 September 2013

அதிபத்த நாயனார் அறுபத்து மூவர் புராணம்

அதிபத்த நாயனார் அறுபத்து மூவர் புராணம்
அறுபத்து மூன்று நாயன்மார்களில் முதலில் நினைவுக்கு வருபவர் அதிபத்தர். அதிபத்தர் என்பதனை அதிபக்தர் என்று சொல்லின் மருவாக கொள்ளலாம். அளவுக்கு மிகுந்த பக்தியினை சிவபெருமான் மீது கொண்டவர் என்று பொருள்.
அதிபத்தர் வரலாறு
அதிபத்தர், சோழ நாட்டில் சிறந்து விளங்கிய நாகப்பட்டினம் துறைமுகத்தில் வாழ்ந்து வந்தவர். மீனவச் சமூகத்தை சேர்ந்தவர். எனவே தினமும் நண்பர்களுடன் சேர்ந்து மீன் பிடிக்கச் செல்லுவார். நடுக்கடலில் கிடைக்கும் முதல் மீனைஇது ஈசனுக்குஎன்று சொல்லி மீண்டும் கடலிலேயே விட்டு விடுவார்.
மீன்களே கிடைத்திடாத காலங்களிலும், மிக அரிதாக கிடைக்கும் மீனையையும் இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு பட்டினியாக கிடப்பார். தலையே போயினும் தலை மீனை இறைவனுக்கு அளிக்கும் செயலை விடவே இல்லை.
ஒரு முறை மிகுந்த பஞ்சம் வந்தது. உறவுகள், நண்பர்கள் என எவருக்கும் மீன் கிடைக்கவில்லை. எல்லோரும் வருந்தினர். அந்தச் சூழ்நிலையில் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றார் அதிபத்தர். கொண்ட கொள்கையை தவறவிடவில்லை. தினமும் ஒரு மீன் கிடைக்கும், அதை இறைவனுக்கு என்று சொல்லி கடலிலேயே விட்டுவிடுவார். இப்படி நாட்கள் சென்றாலும், தன்னுடைய பணியையும், பக்தியையும் அவர் விடவே இல்லை.
தினம் நிகழும் செயலைக் கண்ட சிவபெருமான், அன்று மீனுக்கு பதிலாக வைரம் போன்ற விலையுயர்ந்த மணிகள் பதித்த தங்க மீனை அதிபத்தருக்கு கிடைக்கச் செய்தார். அந்த மீனைக் கொண்டு உறவுகள், நண்பர்கள் என அனைவருக்கும் அதிபத்தர் உணவிடமுடியும். ஆனால் அதிபத்தர் தனக்கு கிடைத்த முதல் மீன் என்றே எண்ணினார். சிறிதும் தயங்காது அந்த பொன் மீனை கடலில் விட்டார்.
அடுத்தகனம் ஈசன் வானில் தோன்றிபக்தா, கொண்ட கொள்கையில் எந்நாளும் நின்று என்னை மகிழ்வித்தாய். இனி என்னோடு இருக்கும் சிவனடியார்களோடு வந்து இணைவாயாகஎன்று சொல்லி மறைந்து போனார்.
நீதி
பக்தர்கள் எத்தொழிலைச் செய்யினும், எவ்வளவு துன்பம் அடைந்தாலும் தாம் கொண்ட தொண்டினை மட்டும் கைவிட மாட்டார்கள்.
PROGITHAM , JATHAGAM PARKA, THIRUMANA PORUTHAM ,
JATHAGAM KANIKKA,   NUMEROLOGY,  GEMOLOGY
G.V. MANIKANDA SHARMA
1/267, MMDA Colony, J J Negar Mogappair East
Chennai – 600 037 , Tamil Nadu – India
Cell : +91 9962225358 9444226039

No comments:

Post a Comment